ராமதாஸ் அவர்கள் அரசியலுக்கு வராமல் டாக்டர் தொழில் செய்தால்????
உள்ளாட்சி தேர்தல் ரிசல்ட்டை பார்த்த பிறகு மனநிலை குன்றிய கருப்பு எம்ஜியாரும் Youngகோவன் என்பவரும் கீழ்பாக்க ஹாஸ்பிடலில் அனுமதிக்க பட்டு டாக்டர் ராமதாஸ் அவர்களின் மேற்பார்வையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. ஒரு நாள் மருத்துவமனையில் இருவரும் காலையில் நடந்துவந்த போது Youngகோவனன் திடீரென நீச்சல் குளத்தில் குதித்து விட்டார். நீச்சல் தெரியாத அவர் குளத்தில் மூழ்கி தவிப்பதை பார்த்த நம்ம கருப்பு எம்ஜியார் குளத்தில் குதித்து அவரை காப்பாற்றினார்.
இந்த செய்தியை அறிந்த டாக்டர் ராமதாஸ் அவர்கள் கருப்பு எம்ஜியாரின் ஹீரோ செயலை பார்த்து வியந்து அவருக்கு மனநிலை குறைபாடு சரியாகிவிட்டது என்று கருதியதால் அவரை ஹாஸ்பிடலில் இருந்து டிஸ்சார்ஜ் செய்ய ஏற்பாடு செய்தார்.
அன்று மாலை நேரம் கருப்பு எம்ஜியாரை கூப்பிட்டு சொன்னார். உன்னிடம் ஒரு நல்ல தகவலையும் ஒரு கெட்ட தகவலையும் சொல்ல போகிறேன் என்றார் .முதலில் நல்ல செய்தி நீ எப்போது குளத்தில் விழுந்தவனை உடனே காப்பாற்ற வேண்டும் என்று நினைத்து அதற்கான முயற்சியில் ஈடுபட்டாயோ அப்போதே நீ நார்மல் நிலைக்கு வந்து குணமாகி விட்டாய் அதனால் நீ இன்று வீட்டிற்கு செல்லலாம். கெட்ட செய்தி நீ யாரை காப்பாற்றினாயோ அவன் பாத்ரூமில் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டான் என்றார்.
உடனே அதற்கு கருப்பு எம்ஜியார் அப்படியா டாக்டர் நான் அவனை காப்பாற்ற மட்டும் செய்யவில்லை. அவன் உடம்பு முழுவதும் நனைந்து இருந்தால் நான் தனியாளாக அவன் உடலில் உள்ள ஈரம் காயட்டும் என்று ஒரு கயிற்றில் கட்டி அவனை தொங்கவிட்டேன். பாவம் சார் அவன், நான் கஷ்டப்பட்டு காப்பாற்றியும் அற்ப ஆயுளில் போய்விட்டான் என்றான்.
இதனால்தான் என்னவோ ராமதாஸ் அவர்கள் டாக்டர்கள் தொழிலை செய்யாமல் அரசியலில் புகுந்து காமெடி தொழிலை பண்ணிக் கொண்டிருப்பதாக நான் கருதுகிறேன். நீங்கள் என்ன நினைக்கிறிர்கள் என்பதை நேரம் இருந்தால் தெரிவிக்கவும்
///******தமிழகத்தின் மிகப் பெரிய தலைவர் எழுதிய கடிதம் நாளை இங்கு வெளியிடப்படும். இந்த கடிதம் எனக்கு வேண்டியவர் ஒருத்தரால் மிக ரகசியமாக எனக்கு கிடைத்தது. இந்த கடிதம் வெளியிடப்பட்டதும் தமிழகத்தில் எல்லோராலும் படிக்கபட்டு பரபரப்பாக பேசப்படும். மறக்காதீர்கள் மறந்தும் இருந்து விடாதீர்கள்.மீண்டும் வாருங்கள் அல்லது ஃப்லோவராக சேருங்கள்******//////
///******தமிழகத்தின் மிகப் பெரிய தலைவர் எழுதிய கடிதம் நாளை இங்கு வெளியிடப்படும். இந்த கடிதம் எனக்கு வேண்டியவர் ஒருத்தரால் மிக ரகசியமாக எனக்கு கிடைத்தது. இந்த கடிதம் வெளியிடப்பட்டதும் தமிழகத்தில் எல்லோராலும் படிக்கபட்டு பரபரப்பாக பேசப்படும். மறக்காதீர்கள் மறந்தும் இருந்து விடாதீர்கள்.மீண்டும் வாருங்கள் அல்லது ஃப்லோவராக சேருங்கள்******//////
மருத்துவர் ராஜ சேகர் ரெட்டிக்கு டாக்டர் பட்டம் கொடுக்கும் முன் ஒரு நிபந்தனையுடன் தான் அந்த டீன் கொடுத்தாராம். நீ ஒரு நோயாளியைக் கூடப் பார்ப்பதில்லை என்று உறுதி கொடுக்க வேண்டும் என்று.
ReplyDeleteநல்ல வேலை தமிழக நோயாளிகள் பிழைத்தார்கள். அரசியல் வாதிகள் சாகட்டுமே, நல்லது தானே !
மாப்ள Follower ஆக சேருங்கறீங்களா சேராதங்கறீங்களா டவுட்டு!
ReplyDeleteஹா ஹா ஹா செம மேட்டர் அண்ணா
ReplyDeleteநல்ல நகைச்சுவை, இன்னும் பட்டை தீட்ட வேண்டும்..
ReplyDeleteநல்ல இருக்கே கதை
ReplyDeleteதொடர வாழ்த்துக்கள்
த.ம 3
@தமிழன் உங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.
ReplyDelete@விக்கி உங்கள் வருகைக்கும் டவுட்டுக்கும் நன்றி.நான் சொல்லவருவது யாரையும் நான் கட்டாயபடுத்தி சேர சொல்லவில்லை விருப்பம் உள்ளவர்கள் மட்டும் சேரலாம் என்று பட்டும் படாமலும் சொல்லி இருக்கிறேன். விக்கி சார் ஸ்மார்டான உங்களுக்கே டவுட் வந்ததால்தான் இந்த நீண்ட விளக்கம்.
ReplyDelete@ரமேஷ் பாபு உங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி. என்னை அண்ணா என்று கூப்பிட்ட முதல் ஆள் நீங்கள் தான் சந்தோசம். எல்லோருக்கும் தம்பியாக இருந்த நான் இன்று முதல் அண்ணாக என்னை பிரோமோட் பண்ணியதற்கு நன்றி
ReplyDelete@சூர்ய ஜீவா உங்களுக்கு நன்றி என்று சொல்லுவதை தவிர வேறு என்ன சொல்லி உங்களை திருப்தி படுத்துவது என்று எனக்கு தெரியவில்லை. என்னுடைய வலைத்தளம் மட்டுமல்லாமல் எல்லோருடைய வலைத்தளத்துக்கும் சென்று உங்கள் ஆதரவையும் கருத்தையும் சொல்லி எல்லோரையும் சந்தோஷப்படுத்தும் உங்கள் அன்பை என்ன வென்று சொல்லவது........... வாழ்க வளமுடன்
ReplyDelete