Saturday, October 29, 2011


ஜெயலலிதாவின் ஆட்டம் ஆரம்பம் ஏமாற்றிய ஜெயலலிதா ஏமாந்த தமிழ் மக்கள்

  


உள்ளாட்சி தேர்தலிலும் ஜெயலலிதாவுக்கு கிடைத்த வெற்றியின் மூலம் அவரிடம் கொஞ்சம் நஞ்சம் இருந்த மனத் தடைகளும் நீங்கியதால் அவரின் "துக்ளக் தர்பார்" ஆட்டம் தொடங்கிவிட்டது. அதன் ஆரம்பம்தான்  இந்த செய்தி

உச்ச நீதி மன்றத்தில் விசாரணைக்கு வந்த மூன்றுபேரின் மரண தண்டனை வழக்கில் தமிழக அரசு தாக்கல் செய்த பதில் மனுவில் ஜெயலலிதாவின் உண்மையான மனபூர்வமான நிலைப்பாடு மிகத் தெளிவாக எடுத்து வைக்கபட்டுள்ளது. மூவரின் கருணை மனுக்களையும் பரிசீலிப்பதில் குடியரசுத் தலைவர் நீண்டகாலம் தாமதம் செய்வதாக கூறப்படுவது பற்றி தமிழக அரசு கருத்து ஏதும் கூறவிரும்பவில்லை என்றும் அதேபோல அவர்களது தூக்குத் தண்டனையை குறைக்க தமிழகம் முழுவதும் ஆதரவு எழுந்ததாக கூறப்படுவது குறித்தும் தமிழக அரசு எந்தக் கருத்தையும் கூறவில்லை என்றும் எனவே இந்த மனுக்களை தள்ளுபடி செய்யவேண்டும் என்றும் அந்த மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

உள்ளாட்சித் தேர்தலுக்கு முன்பு மரண தண்டனையை ரத்து செய்யவேண்டும் என்று அவருடைய அமைச்சரவைத் தீர்மானம். தேர்தலில் பெற்ற ஆமோக  வெற்றிக்குப் பிறகு மனுக்களை ரத்து செய்து தூக்கில் போடவேண்டும் என்று மாறியது. வெகு சீக்கிரம் கூடங்குளம் விவகாரத்திலும் ஜெயலலிதாவின் உண்மையான நிலை என்னவென்று  தெரிந்துவிடும்.

எந்த கொம்பனாலும் வரும் ஐந்து ஆண்டுகளுக்கு அவரை ஓன்றும் செய்ய முடியாது. இந்த தமிழக மக்களை நினைத்தால் தான் மிகவும் பாவமாக இருக்கிறது. பாம்புக்கு பயந்து பாம்பு புற்றில் கைவிட்டது போல ஆகிவிட்டது.

தீபாவளி அன்று எல்லோரும் தலை முழுகுவார்கள். ஆனால் அன்று இந்த அம்மா தமிழக மக்களையே தலை முழுகிவிட்டார். கலைஞரோ ஈழத்தமிழரை மட்டும் கைவிட்டார் என்று சொல்வார்கள்  ஆனால் இந்த அம்மாவோ ஈழத்தமிழர் மட்டுமல்லாமல் இந்திய தமிழரையும் கைவிடுவார் என்பதில் எந்தவித சந்தேகமில்லை.

வரும் ஐந்து ஆண்டும் "சுதந்திர இந்தியாவில்" தமிழகம் மட்டும் "சுதந்திரம் இல்லாத மாநிலமாக " இருக்கும் என்பதில் எந்த வித மாற்றமுமில்லை.

"அறிவில்லாத" லிபியா மக்கள் தன் தலையில் மண்ணை அள்ளி போட்டு  கொண்டு ஏதோ புரட்சி ஏற்படுத்தி விட்டோம் என்று ஆனந்த கூத்தாடுகின்றனர். அது போல "அறிவுள்ள" தமிழ் மக்கள் தமிழகத்தில் மாற்றத்தை ஏற்படுத்தி விட்டோம் என்று ஆனந்த மடைகின்றனர். அந்த ஆனந்தம் எவ்வளவு நாள் செல்லும் என்று பார்ப்போம்.


ரஜினி சொன்ன பொன்னான வார்த்தைகளை நான் இங்கே மீண்டும் நினைவு கூறி விடை பெறுகிறேன். "இனிமேல் அந்த ஆண்டவணே வந்தாலும் இந்த தமிழகத்தை காப்பாற்ற முடியாது.

5 comments:

  1. சார், வைகோ புலம்பிட்டார், அப்புறம் இந்த நெடுமாறன், சீமான் அவங்க எல்லாம் எங்க போனாங்க? கடைசியில வச்சீங்க பாரு ஆப்பு ரானாவுக்கே... ஹி ஹி... ஆனாலும் தமிழன் மிக முக்கியமான பிரச்சினைகளான வேலாயுதம் பெரிசா, ஏழாம் அறிவு இருக்கா, போதி தர்மன் யாரு, நயன்தாரா கல்யாணம் என்ன ஆச்சு என்று அலசி கொண்டிருக்கும் வரை.. விடியாது....

    ReplyDelete
  2. ஏன் சார் நீங்க எதுவும் படவிமர்சனம் எழுதலையா?இப்ப தீபாவளி ரிலீஸ் பட விமர்சனம் ட்ரெண்டு,அதை விட்டுபுட்டு எது எதுக்காகவோ மக்களுக்கு வருத்தப்பட்டுகிட்டு பதிவு எழுதறீங்க சார்:(((

    ReplyDelete
  3. சூர்யஜீவா....தமிழன் எப்பவுமே ரொம்ப ஸ்லோ. அவனுக்கு ஒரு நால் பொழுது விடியும் அப்போது அவன் வீட்டில் எல்லோருக்கும் வலிக்கும்.தன் வீட்டில் பிரச்சனை வராத வரைக்கு அவனுக்கு நயந்தாரா விஷயமும் வேலாயுதமும் முக்கியம்.

    ReplyDelete
  4. ரா.செழியன் சார் நான் படம் பார்க்குரததுல ரொம்ப்ப ஸ்லோ. நான் இன்னும் எந்திரன் படமே பார்த்து முடிக்கல. அப்புறம் எப்படி நான் பட விமர்சனம் எழுதுறது. சினிமா ட்ரெண்டுக்கும் நமக்கும் ரொம்ப தூரம் சார்

    ReplyDelete
  5. கொஞ்சம் காரசார்மாகத் தெரிந்தாலும்
    உண்மையைச் சொல்லிப் போகும் நடு நிலையான பதிவு
    தொடர வாழ்த்துக்கள்

    ReplyDelete

நான் அறிவு ஜீவி அல்ல ஒரு சாதாரணமான் மனிதன் தான்.இங்கு நான் பதியும் பதிவுகளில் உள்ள கருத்துகள் "மிகவும் சரி"யென்று சொல்லமாட்டேன் அது அன்றைய மனநிலையில் என் மனதில் எழும் கருத்துகளே...அதனால் உங்களது மனசுலபட்ட மாற்று கருத்துகளை தாராளமாக பகிரலாம். ஆனால் தேவையற்ற, வரம்புமீரிய, அநாகரிகமான வார்த்தைகளாலும் பதிவிற்கு சம்பந்தமில்லாமல் கருத்துக்கள் சொல்லப்பட்டால் எந்த வித பதில் விளக்கமின்றி அந்த கருத்து டெலீட் செய்யப்படும்.