Sunday, October 16, 2011

"தின பூ" தமிழ் செய்திதாள் நிருபர் செய்தி வழங்குவது இப்படித்தான்!!!!





மயிலாப்பூரில் ஒரு பயங்கரமான வெறி நாய் ஒரு சிறு குழந்தையை விரட்டி கடிக்க தொடங்கியது. அதை பார்த்த அந்த ஏரியாமக்கள் பயந்து கத்தி கூச்சல் போட்டனர். ஆனால் யாரும் அருகில் செல்ல பயந்தனர். அப்போது அந்த வழியாக சென்ற ஒருவன் ஒடி அந்த நாயுடன் போராடி அந்த நாயை கொன்று அந்த குழந்தையை காப்பாற்றினான்.



அதை பார்த்த  நிருபர் அவனை அழைத்து பாராட்டி " நீ ஒரு ஹீரோ. நாளைய பேப்பரில் உனது பெயரை பெரிய அளவில் போட்டு குழந்தையை காப்பாற்றிய மயிலாப்பூர் பிராமணரின்  அதி வீரச் செயல் என்று பாராட்டி செய்தி போடுகிறேன். அதனால் உன் பெயர் என்ன என்று கேட்டார்.



அதற்கு அவர் நான் பிராமின் அல்ல என்றார் அப்படியா பரவாயில்லை  குழந்தையை காப்பாற்றிய ஒரு ஹிந்துவின் வீர தீரச் செயல் என்று போடுகிறேன் என்றார்.



அதற்கு அவர் ஐயா நான் ஒரு இஸ்லாம் மதத்தை சேர்ந்தவன் என்றார். அப்படியா பரவாயில்லை .உங்கள் பெயரை சொல்லுங்கள் கண்டிப்பாக உங்களை பற்றி செய்தி போடுகிறேன் என்றார் அந்த நிருபர்.



அடுத்த நாள் பத்திரிக்கையில் வந்த செய்தி " மயிலாப்பூரில் அப்பிராணி நாயை கொன்ற இஸ்லாமிய வெறியர் :



இப்படிதான் நமது தமிழ் தினசரி பத்திரிக்கை ஒரு சார்பாக செய்திகளை வெளியிடுகின்றன.



இது ஒரு கற்பனை கதை மட்டுமே யாரையும் எந்த மதத்தையும் காயப்படுத்துவதற்காக எழுதப்பட்டது அல்ல. இந்த செய்தியின் நோக்கம் ஒரு சில பத்திரிக்கைகள் ஒரு சார்பாக செய்தியை தருகின்றன என்பதை தெரிவிக்ககே இங்கு எழுதப்பட்டது. இங்கு மதத்திற்கு பதிலாக அ.தி.மு., தி.மு.க என்று பொருத்தி பார்த்தால் நான் இப்போது எந்த பத்திரிக்கையை பற்றி சொல்லவருகின்றேன் என்று வலைதளம் வருபவர் அனைவருக்கும் புரிந்து இருக்கும் என நம்புகிறேன்.


3 comments:

  1. பயங்கர suspense ... அண்ணே பூவ பூவுன்னும் சொல்லலாம், மலர்னும் சொல்லலாம், புய்ப்பம்னும் சொல்லல்லாம் நீங்க சொல்ற மாதிரியும் சொல்லலாம்

    ReplyDelete
  2. அண்ணே, அது பூவல்ல, மலம்
    கரெக்டா சொன்னீங்க 'நச்சு'ன்னு

    ReplyDelete

நான் அறிவு ஜீவி அல்ல ஒரு சாதாரணமான் மனிதன் தான்.இங்கு நான் பதியும் பதிவுகளில் உள்ள கருத்துகள் "மிகவும் சரி"யென்று சொல்லமாட்டேன் அது அன்றைய மனநிலையில் என் மனதில் எழும் கருத்துகளே...அதனால் உங்களது மனசுலபட்ட மாற்று கருத்துகளை தாராளமாக பகிரலாம். ஆனால் தேவையற்ற, வரம்புமீரிய, அநாகரிகமான வார்த்தைகளாலும் பதிவிற்கு சம்பந்தமில்லாமல் கருத்துக்கள் சொல்லப்பட்டால் எந்த வித பதில் விளக்கமின்றி அந்த கருத்து டெலீட் செய்யப்படும்.