Wednesday, October 19, 2011


அதிர்ந்தது அமெரிக்காவின் ஒகாயோ மாநிலத்தின் சிறு நகரம்


ஒரே நாளில்  காடாகிய அமெரிக்கா போன நகரம் 



அமெரிக்காவில் ஒகாயோ என்ற மாநிலத்தில் உள்ள ஷேன்ஸ்வில் (Zanesville) என்ற ஊரில் வசித்த (Terry Thompson )டெரி தாம்ஸன் என்ற 62 வயது ஆண் தான் வளர்த்த 50 பயங்கரமான விலங்குகளை எல்லாம்  அதன் கூண்டுக்குள் இருந்து வெளியே ஊருக்குள் அனுப்பி விட்டு தற்கொலை செய்து கொண்டான். இந்த நிகழ்ச்சி செவ்வாய் கிழமை மாலை நேரம் நிகழந்தது.



இதை அறிந்த அந்த நகரத்தில் பதட்டம் தொற்றி கொண்டது. அருகில் உள்ள பள்ளிகள் அனைத்தும் விடுமுறை விடப்பட்டன. மக்கள் வீடுகளை விட்டு வெளீயே வர வேண்டாம் என்று  டிவி  & ரேடியோ மூலம் எமர்ஜன்ஸி அறிவிப்பு வெளியிடப்பட்டது. எச்சரிக்கை போர்டுகள் பல இடங்களில் வைக்கப்பட்டன.

மக்களின் பாதுகாப்புதான் நம்பர் 1 என்று அறிவித்த டெபுடி ஷெரிப் தப்பி ஒடும் விலங்குகளை சுட்டு வீழ்த்துமாறு அறிவித்தார். அவரது வேண்டுகோளுக்கிணங்க அவரது தலைமையில் 50 க்கும் மேற்பட்ட போலிஸ் ஆபிசர்களும் ஃபாரஸ்ட் ஆபிஸர்களும் மற்றும் மிருக காட்சி ஆட்களும் தேடத் தொடங்கினர். விலங்குகளை மயக்க மருந்து கொண்டகுண்டுகள் மூலம் சுட்டு பிடிக்கலாம் என்று கருதினர் முதலில் ஆனால் இரவு நேரமாகத் தொடங்கியதால் அந்த முறை இன்னும் மோசமான நிலைக்கு கொண்டு சென்றுவிடும் என்று கருதியதால் அதை தேடி சுட்டு வீழ்த்த தொடங்கினர் .



செவ்வாய் லேட் ஈவினிங்க் தொடங்கிய வேட்டையாடுதல் புதன் கிழமை மாலை முடிந்தது. இந்த வேட்டையாடுதலில் 48 விலங்குகள் செத்தன. இதில் 12 சிங்கங்களும் 8 கரடிகளும், 18 பயங்கரமான் பெங்கால் டைகர்களும் சுட்டு வீழ்த்தப்பட்டன. இன்னும் மீதி இருப்பவை ஒரு ஓநாய்யும் ஒரு பெரிய குரங்கு மட்டும்தான்.


 .

காட்டுக்குள் சுதந்திரமாக திரியக் கூடிய விலங்குகளை  சிறு கிராமததில் வளர்த்த இந்த மனித மிருகத்தால்  இந்த விலங்குகள் இன்று மடிந்தன




அமெரிக்காவில் உள்ள பல மாநிலங்களில் இந்த மாதிரியான கொடிய விலங்குகளை செல்லப் பிராணியாக வளர்ப்பதுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளன ஆனால் சில மாநிலங்களில் அதற்கு தடைகள் இல்லை ஆனால் இந்த மாநிலத்தில் தடைகள் அதிக அளவு இல்லாததால் இந்த மாதிரி நிகழ்வு ஏற்பட்டுள்ளது. இந்த நிகழ்ச்சிக்கு பிறகு தடைகள் பிறபிக்கப்பட வேண்டும் என்று மக்கள் எதிர் பார்க்கத் தொடங்கியுள்ளனர்.



------

டிஸ்கி : அமெரிக்கா நகரம் இறுதியாக காப்பாற்றப்பட்டது. ஆனால் இதைவிட மோசமான அரசியல் வாதிகளாலும் சாமியார்களாலும்,

காமுகர்களாலும் சூழபட்ட நம் இந்தியாவை காப்பாற்ற போவது யார்?

5 comments:

  1. மொக்கை போடாமல்...உருப்படியா இருந்தது இன்னைக்கு பதிவு...கொஞ்சம் பயமாவும் இருந்தது...எங்கே ரொம்ப பில்ட் அப் பண்ணிட்டு...கடைசியில் கிராபிக் ல கருணா..ஜெயா...ராமதாஸ்,கேப்டன் படத்தை போட்டு இவங்க தான் அனிமல்ஸ் னு போட்ருவீங்கலோன்னு ;-)) தேங்க்ஸ் அப்படி எதுவும் சொதப்பாமல் இருந்ததுக்கு...;-))

    ReplyDelete
  2. ஆனந்தி ஏமாந்துட்டாங்க... அடுத்து யாரு.. நானா?

    ReplyDelete
  3. இதை விட பயங்கரமான மிருகங்கள் இந்தியாவில் நிறைய இருக்கின்றன... அவற்றில் இருந்து நம்மை நாமே தான் காப்பாத்திக்கணும்.. தமிழ் படம் பாத்து ரொம்ப தான் கேட்டு போயிருக்கீங்க.. இதுக்கெல்லாம் ஹீரோ வருவாங்களா

    ReplyDelete
  4. சுட்டுக்கொல்ல முடியாதே நீங்க சொன்னவங்களை எல்லாம்.. அப்படி இருந்தா ஜனத்தொகையாவது கொஞ்சம் குறையும் !!?

    ReplyDelete
  5. நினைத்துப் பார்க்க நடுக்கமாகத்தான் இருந்தது
    நல்ல வேளை அசம்பாவிதம் ஏதும் நேரவில்லை
    படங்களுடன் பதிவு நேரடியாகப் பார்ப்பதைப் போன்ற
    உணர்வைத் தந்தது
    இது போன்ற நிகழ்வுகள் தொடர வேண்டாம்
    தங்கள் பதிவு தொடரட்டும்

    ReplyDelete

நான் அறிவு ஜீவி அல்ல ஒரு சாதாரணமான் மனிதன் தான்.இங்கு நான் பதியும் பதிவுகளில் உள்ள கருத்துகள் "மிகவும் சரி"யென்று சொல்லமாட்டேன் அது அன்றைய மனநிலையில் என் மனதில் எழும் கருத்துகளே...அதனால் உங்களது மனசுலபட்ட மாற்று கருத்துகளை தாராளமாக பகிரலாம். ஆனால் தேவையற்ற, வரம்புமீரிய, அநாகரிகமான வார்த்தைகளாலும் பதிவிற்கு சம்பந்தமில்லாமல் கருத்துக்கள் சொல்லப்பட்டால் எந்த வித பதில் விளக்கமின்றி அந்த கருத்து டெலீட் செய்யப்படும்.