Tuesday, October 25, 2011

Click This Photo for Large size


திபாவளி விருந்துக்கு பின் உங்களுக்கு தேவையான மருந்து



மக்களே தீபாவளியை நன்கு கொண்டாடி இருப்பிர்கள். எல்லாவிதமான பலகாரங்களையும் உங்கள் வீட்டில் செய்தது, நண்பர்கள் வீட்டில் இருந்து வந்தது எல்லாவற்றையும் சாப்பிட்டு இருப்பீர்கள். அதுவும் எனக்கு அனுப்பாமல் திண்ணதால் உங்களுக்கு என் திருஷ்டி பட்டு உங்களுக்கு வயிற்று வலி வந்து இருக்கும். இது வரை வரவில்லை என்றாலும் வருவதற்கு அதிக வாய்ப்பு உண்டு. காரணம் நான் திருஷ்டிபட்டு கொண்டு இருக்கும் இடம் வெகு தூரத்தில் இருப்பதால் அந்த திருஷ்டி நாளை வங்க கடலை கடந்து உங்களை வெகு விரைவில் தாக்கும் என எதிர் பார்க்க படுவதால். முன்னேச்சரிக்கையாக இருக்க நான் இன்று உங்களுக்கு தீபாவளி லேகியம் என்ற மருந்தை அறிமுகப்படுத்துகிறேன்.(பாவம் நீங்கள் என் நண்பராகிவிட்டீர்களே அதனால்தான் இந்த கரிசனம்)

இதை எனது தாயார் தீபாவளி பலகாரங்களை சாப்பிடுவதற்கு முன்பும் அதற்கு அப்புறமும் எங்களுக்கு தருவதுண்டு. ஆனால் எனது தாயார் எங்களைவிட்டு நீண்டகாலம் முன்பே கடவுளிடம் சென்றுவிட்டதால் அதன் செய்முறையை எனது உறவினரிடம் வாய்மொழியாக கேட்டு உங்களுக்காக அதை இங்கே எனது பாணியில் வழங்கியுள்ளேன். இது பழங்கால முறையாகும்.

தேவையான பொருட்கள் :

1.நல்லெண்ணெய் 4 tsp
2.நெய் 3
tsp
3.சீரகம் 2-1/2  tsp
4.கருமிளகு  2 tsp
5.ஒமம் 1/4 Cup
6.கொத்தமல்லிவிதை  2-1/2
tsp
7.லாங்க் மிளகு 12
8.காய்ந்த இஞ்சி சிறிய துண்டு
9.வெல்லம் சிறிதளவு
10.ஏலக்காய் பொடி
11.தேன் சிறிதளவு

செய்முறை :

முதலில் சீரகம்,கருமிளகு, ஒமம், கொத்தமல்லி, லாங்க் மிளகு(கண்டம்திப்பிலி),இஞ்சி, முதலியவற்றை 2 மணிநேரம் ஊறவைக்கவும். அதன் பின் அதை மிக நைசாக அரைக்கவும். நல்ல மணம் வரும் வரை அரைத்த பவுடரை அடுப்பில் வைத்து கிளரவும்.  ஒரு சிறுபாத்திரத்தில் சிறிதளவு நீர் ஊற்றி வெல்லத்தை கரைக்கவும் கரைந்த பின் அதை வடிகட்டி அதை மீண்டும் சிறிது நேரம் அடுப்பில் வைத்து கிளறி அதில் முதலில் கிளறிய பவுடரை போட்டு கலந்து அதில் மேற் சொன்ன அளவு எண்ணெய் மற்றும் நெய்யை ஊற்றி கிளறவும் அதில் இருந்து எண்ணெய் விட்டு விலகி வரும் சமயத்தில் அடுப்பை அணைத்து அதில் தேனையும் ஏலக்காய் பவுடரையும் நன்கு கலந்து வைக்கவும். இது அல்வாவை போல கெட்டியான பதத்தில் வர வேண்டும். ஒரு வேளை ஒவர் குக்கிங்கால் அது கெட்டியாகி விட்டாலும் அது மருத்துவதன்மையை இழப்பதில்லை எனவே அதை சிறு துண்டுகளாக செய்து சாப்பிடவும்.



இது ஒரு  மருத்துவ குறிப்பு. நீங்கள் வேறு எந்தவித நோய்வாய்பட்டு இருப்பினும் உங்கள் மருத்துவர் ஆலோசனைப் பெற்று அதன் பிறகு அவர் அனுமதித்தால் அருந்தாலாம்.



உங்களுக்கும் இதுமாதிரி ஏதாவது கிராமப்புற மருத்துவம் தெரிந்தால் இங்கே பின்னுட்டமாக இடலாம்.

4 comments:

  1. தங்களுக்கும் தங்கள் குடும்பத்தார் அனைவருக்கும் இனிய தீபாவளித் திருநாள் நல்வாழ்த்துக்கள்
    அன்புடன்
    மஞ்சுபாஷிணி

    ReplyDelete
  2. பகிர்வுக்கு நன்றி நண்பரே

    ReplyDelete
  3. இனிய தீபாவளி நல்வாழ்த்துக்கள்.

    ReplyDelete

நான் அறிவு ஜீவி அல்ல ஒரு சாதாரணமான் மனிதன் தான்.இங்கு நான் பதியும் பதிவுகளில் உள்ள கருத்துகள் "மிகவும் சரி"யென்று சொல்லமாட்டேன் அது அன்றைய மனநிலையில் என் மனதில் எழும் கருத்துகளே...அதனால் உங்களது மனசுலபட்ட மாற்று கருத்துகளை தாராளமாக பகிரலாம். ஆனால் தேவையற்ற, வரம்புமீரிய, அநாகரிகமான வார்த்தைகளாலும் பதிவிற்கு சம்பந்தமில்லாமல் கருத்துக்கள் சொல்லப்பட்டால் எந்த வித பதில் விளக்கமின்றி அந்த கருத்து டெலீட் செய்யப்படும்.