( Ibad-ஆல் ) எனக்கு என் மனைவியால் ஏற்பட்ட பிரச்சனை?
IPhone, IPad, ITouch போன்றவைகளை இந்த ஸ்டீவ் உலகத்துக்கு அறிமுகப்படுத்தி விட்டு நல்ல பெயரோடும் புகழோடும் போய் சேர்ந்துவிட்டார். அவரின் இந்த நல்ல சேவையை நான் தொடர்ந்ததால் எனக்கு என் மனைவியிடம் கிடைத்த பெயர்தான் IBad என்பதாகும். அதோடு இருந்திருந்தால் பரவாயில்லை ஆனால் எனக்கு நேர்ந்த விபரிதத்தை கண்டால் யாருமே எதிர்காலத்தில் இப்படி எல்லாம் நடக்க மாட்டீர்கள். அப்படி என்ன நடந்தது என்று கேட்கீறிர்களா? அதை கடைசியில் பார்க்கலாம்.
அதற்கு முன்னால் என்ன நடந்தது என்பதை இங்கே கொஞ்சம் விபரமாக சொல்லுகிறேன். அதை படியுங்க முதலில் மக்கா..
எனக்கு பிறந்த நாள் வந்துச்சுங்க.... என் பிறந்த நாளுக்கு என் மனைவி iPhone வாங்கி கொடுத்தாங்க. எனக்கு ரொம்ப சந்தோசமுங்க....யாருக்குதான் சந்தோஷம் வராதுங்க...
ஒரு 2 மாசம் கழித்து என் அண்ணன் பொண்ணுக்கு பிறந்தநாள் வந்துச்சுங்க அப்ப என் மனைவி அவளுக்கு iPad வாங்கி கொடுத்தாங்க...அவளுக்கும் ரொம்ப சந்தோசமுங்க...
போன மாசம் என் பொண்ணுக்கு பிறந்தநாள் வந்துச்சுங்க அப்ப என் மனைவி அவளுக்கு iPod Touch வாங்கி கொடுத்தாங்க...
அவளுக்கும் ரொம்ப சந்தோசமுங்க.
இந்த மாசம் என் மனைவிக்கு பிறந்தநாள் வந்துச்சுங்க....இந்த ஸ்டீவ் வேற புதுசா ஏதும் கண்டுபிடிக்காம போய்ட்டாருங்க... நான் என் மண்டைய போட்டு உடைச்சேங்க....என்னடா வாங்கி கொடுக்குறதுனு.... என் மனைவியோ எல்லோருக்கும் i ல ஆரம்பிச்ச பொருளாதான் வாங்கி கொடுத்து இருக்கா எனவே அவளுக்கும் அது மாதிரி பொருளாதான் வாங்கி கொடுக்கனுமுனு நல்லா யோசிச்சு அவளுக்கு கடைசியா நல்ல அழகாக லைட் வெயிட்டா இருக்க கூடிய iRon Box வாங்கி கொடுத்தேங்க...
இதுல என்னங்க தப்பு ? அப்ப ஆரம்பிச்சுதுங்க வினை....
என் மனைவி என் திறமையை, ஸ்மார்ட்னசை புரிஞ்சுக்க தவறிட்டாங்கனு நினைக்கிறேனுங்க... நான் வாங்கி கொடுத்த இந்த iRon Box ஹோம் நெட்வொர்க்கோட கனெக்ட் பண்ணினால் நிறைய பயன்பாடுகள் இருப்பது அவளுக்கு தெரியலைங்க... உதாரணமாக இதை எதோடு எல்லாம் தொடர்பு கொள்ளலாம் என்பதை அவளிடம் சொன்னதை நான் உங்களுக்கும் சொல்லுகிற்னுங்க..இதை iWash, iCook and iClean போன்றவைக்ளோடு இணைத்து உபயோகிக்கலாமுங்க
ஆனா என் மனைவி இதை எல்லாம் கேட்டுவிட்டு என் ஸ்மார்ட்னசை புரியாம என்னை iKnock பண்ணிட்டு இப்ப அவள் iMad ஆகி iNag* பண்ணிக்கிட்டு இருக்காங்க. இப்போ என் நிலமை இப்படி iBad ஆகிபோச்சு (///*nag - someone (especially a woman) who annoys people by constantly finding fault//)
என் கூட வேலை பார்க்கும் அமெரிக்க நண்பர் சொன்ன ஜோக்கை வைத்து என் வழியில் நான் இதை உங்களுக்கு பகிர்ந்து உள்ளேன். கொஞ்சமாவது சிரித்து இருப்பிர்கள் என நினைக்கிறேன்.
என்ன உங்களுக்கு சிரிப்பு வரலையா??????? அப்ப என்னுடைய ப்ளாக்பெரி வேலை செய்யவில்லை!! என்ற இந்த வீடியோவை பாருங்கள்.( My Blackberry Is Not Working)
என்ன மக்காஸ் இப்பவாது சிரிச்சு இருப்பீங்க என நினைக்கிறேன். என்ன இப்ப கூட சிரிப்பு வரவில்லையா? அப்ப மெல்ல உங்களை சுற்றி மெதுவாக பாருங்கள் உங்களை பார்த்து மக்கள் மெதுவாக சிரித்து கொண்டிருக்கிறார்கள்தானே? அப்ப உறுதியாக சொல்லுகிறேன் நீங்கள் கீழ்பாக்கத்தில்தான் இருக்கீறிர்கள் என்று
அது சரி உங்க பேரு அவர்கள் உண்மைகளா அல்லது iஅவர்கள் உண்மைகளா?
ReplyDeleteஹா ஹா அசத்தலா எழுதியிருக்கிறீங்க
பிளாக்பெரி காமடி கலக்கல்
என்னே உங்க யோசனை iRon Box எனக்கு இது தெரியாம போச்சே!!? அந்த வீடியோ அருமை அண்ணே
ReplyDeleteஅப்படியே படம் பாக்க inox தியேட்டருக்கு கூட்டி போயிருந்தீங்கன்னா இன்னும் நல்லா இருந்திருக்கும்.. அறிவாளிகளை என்றும் யாருமே மதிச்சது இல்லீங்க..
ReplyDeleteஉங்கள் பதிவைப் படித்தும் சிரிப்பு வந்தது
ReplyDeleteகாணொளி பார்த்தும் சிரிப்பு வந்தது
நிஜமாகவே
(அப்ப நான் நல்லாதானே இருக்கேன் )
அருமையான நகைச்சுவைப் பதிவு
தொடர வாழ்த்துக்கள்
@மதுரன் உங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி
ReplyDelete@ரமேஷ்பாபு
ReplyDeleteதம்பி உங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி. பதிவைமட்டும் படியுங்க. ஆனா இந்த யோசனையை மட்டும் பின்பற்றாதிங்க
@சூர்யஜீவா உங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி
ReplyDelete//அறிவாளிகளை என்றும் யாருமே மதிச்சது இல்லீங்க..///
நான் உங்களை மதிக்கிறேனுங்க
@ எனது பெரும்மதிப்பிற்குரிய ரமணி சார் உங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி
ReplyDelete//அப்ப நான் நல்லாதானே இருக்கேன் //
நீங்க எப்பவும் நல்லதான் இருக்கிறிங்க. ஆனால் ஒரு சின்ன வேண்டுகோள் நீங்கள் என் பதிவுகளை படிக்கும் போது நாலு பேரோட சேர்ந்து படியுங்க...நீங்க பாட்டுல தனியா படிச்சு அடக்கமுடியாம சிரிச்சுகிட்டு இருந்தீங்கனா பார்க்குற யாரவது தப்பா நினைச்சுக்க போறாங்க ( இன்னும் நாலு பேரு கூட அதிகமாக படிக்கதான் இந்த ஐடியா? இது எப்படி சார் எப்படியெல்லாம் ஆள் சேர்க்க வேண்டி இருக்கு)