கேப்டனை கேலி செய்தவர்கள் கற்றுக் கொண்ட பாடம்
"கேப்டன்" இவர் தமிழக குடிமகன் கேப்டன் அல்ல. இவர் உல்லாச படகை வழி நடத்தும் கேப்டன். ஒரு நாள் இவர் படகை செலுத்தும் முன் தன் கப்பலை பார்த்தார் அன்று அந்த உல்லாச கப்பல் இளைஞர், இளைஞிகளின் கூட்டத்தால் நிரம்பி வழிந்து எங்கும் கூச்சலும் ஆர்பாட்டமாகவும் இருந்தது ,கடலை பார்த்தார் அது வெகு அமைதியாக இருந்தது..
கப்பலை செலுத்துவதற்கு முன்பு தான் பிரார்த்தனை செய்யப் போவதாகவும் விருப்பமுள்ளவர்கள் தன்னுடன் சேர்ந்து பிரார்த்தனை செய்யலாம் என்று கூறிவிட்டு அவர் மண்டியிட்டு பிரார்த்தனை செய்தார். இதை பார்த்த அந்த இளைஞர்கள் கூட்டம் அவரை கேலி செய்து சிரித்தனர். அவர் அதை பற்றி கவலைப்படாமல் பிரார்த்னை செய்துவிட்டு கப்பலை செலுத்தினார்.
2 மணி நேரம் பயணத்திற்கு அப்புறம் மேகங்கள் கருக்கத் தொடங்கியது காற்றும் பலமாக வீச தொடங்கி புயலாக மாறியது கப்பலும் சரக்கு அடித்த நம் தமிழக கேப்டன் போல ஆடத் தொடங்கியது. இதைக் கண்டு பயந்து போன இளைஞர் கூட்டம் பிரார்த்தனை செய்ய ஆரம்பித்தனர். அப்போது அவர்கள் அருகில் இருந்த கேப்டனையும் பிரார்த்தனைக்கு அழைத்தனர். அவர்களின் அழைப்பை மறுத்த கேப்டன் அமைதியாக இருக்கும் போது பிரார்த்தனை செய்வதும் கடல் குமறும் போது கப்பலை கவனித்து செலுத்துவதுதான் எனது வழக்கம் என்று சொன்னார். எதை எதை எந்த நேரத்தில் செய்ய வேண்டுமோ அதை அந்த நேரத்தில் செய்து முடிக்க வேண்டும்.
நம்மால், நமக்கு கிடைக்கும் அமைதியான நேரங்களில் கடவுளை தேட முடியவில்லை என்றால் நமக்கு பிரச்சனைகள் என்று வரும் போது அவரை கண்டுபிடிப்பது மிக சிரமம். காரணம் அந்த நேரங்களில் நாம் பதட்டம் அடைந்துவிடுவோம். அதனால் நமக்கு கிடைக்கும் நேரங்களில் கடவுளை தேடினால் நமக்கு பிரச்சனை வரும் போது மிக எளிதாக அடைந்துவிடலாம்.
இது வாழ்க்கையில் வெற்றி அடைய வழியாகும். இதை வாழ்வில் பல நிகழ்ச்சிகளோடு பொருத்தி பார்த்து சிந்தித்து வாழ்க்கையில் வெற்றி பெற வாழ்த்துகிறேன்.
நான் ஆங்கிலத்தில் படித்த சம்பவத்தை எனது வழியில் தமிழில் வழங்கியுள்ளேன். ஒரு சில நல்ல இதயங்களுக்காவது இது பிடித்து இருக்கும் என நம்புகிறேன்.
அருமையானக் கருத்தைச் சொன்ன இப்பதிவுக்காக ரொம்ப நன்றிங்க.
ReplyDeleteஎனக்கு இப்பதிவு பிடித்திருப்பதால்
நானும் நல்லுள்ளம் கொண்டவன் என்பது தெளிவாகிறது. :)
(BTW உங்களுடைய எல்லாப் பதிவுகளும் படிப்பதுண்டு)
தன மேல் நம்பிக்கை உள்ளவன் கடவுளை வேண்ட மாட்டான்... இக்கட்டான சூழ்நிலையில் கடவுளை வேண்டி யாரோ வந்து காப்பாற்றுவதற்கு பதில், நீங்கள் முயற்சி செய்து உங்களை நீங்களே காப்பாற்றி கொள்ளலாமே
ReplyDeleteஅரபுதமிழன் அவர்களுக்கு உங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி. எனது வலைதள நண்பர் ஒருவர் ஒரு நாள் பேசிக் கொண்டிருந்த போது சொன்னார் எனக்கு மறைமுக ஃப்ளோவர்கள் அதிகம் என்று. அதனால் நீங்கள் எழுதும் போது மிக கவனமாக நல்லதையே எழுதுங்கள் என்று. அதைத்தான் நான் இன்னும் மிக கவனமாக செய்து வருகிறேன். அந்த வலைத்தள நண்பருக்கு அநேகமாக அனைத்து பதிவாளர்களும் நண்பர்கள்.
ReplyDeleteஅந்த மாதிரி என்னை தொடர்பவர்களில் நீங்களும் ஒருவர் என்பதை அறியும் போது மிக மகிழ்ச்சி. நன்றிகள். எனது பதிவில் ஏதும் குறைகள் ஏதும் இருந்தால் சுட்டிக் காட்டும்படி வேண்டிக் கேட்டு கொள்கிறேன். பொது வாழ்க்கையில் வந்த தலைவர்களைத் தவிர தனிப்பட்ட மனிதர்களையோ மதங்களையோ தாக்கி அல்லது காயப்படுத்தி ஏதும் நான் எழுதுவதில்லை.
நான் மதங்களை நேசிப்பதை விட மனிதர்களை நான் அதிகம் நேசிப்பவன். வாழ்க வளமுடன்
சூர்யஜீவா வருகைக்கும் கருத்துக்கும் நன்றி
ReplyDeleteகடவுள் நமக்கு வெற்றியை தருவதில்லை அதற்கான வழியை ஏற்படுத்தி கொடுப்பார் அதனை கண்டறிந்து செல்வதுதான் நமது கடமை. கடவுள் ஒரு போதும் தோசை இட்லியை அப்படியே தட்டில் கொண்டுவந்து வைப்பதில்லை. அதை தயாரிபதற்கான தானிய விதைகளை மட்டும் ஏற்படுத்தி கொடுத்துள்ளார் அதனை கண்டு பயிரிட்டு அறுவடை செய்து இட்ட்லி தோசைக்காக மாவு அரைத்து சுடுவது நமது முயற்சியே...
உண்மையாகவே பிடித்திருக்கிறது
ReplyDeleteவித்தியாசமாகச் சொல்வது கவனித்துப்
படிக்கும்படியாக இருப்பதால்
மனதிலும் பதிகிறது
தொடர வாழ்த்துக்கள்
நாம் இருவரும் ஒரே நேரத்தில் தான் படித்தோம் போல..அதான் நினைவு இருக்கிறது எனக்கும்...
ReplyDeleteநல்ல அறிவுரையோடு கூடியகதை.நன்றி.
ReplyDeleteஅருமையானக் கருத்து.வாழ்த்துக்கள்!
ReplyDeleteநல்லாயிருக்கு அறிவுரைக்கதை.
ReplyDeleteபிராத்தனையோ ,பணியோ செய்ய வேண்டிய நேரத்தில் செய்ய வேண்டுமென அழகாக சொல்லிருக்கீங்க!
ReplyDeleteநல்லாருக்கு!
@ ரமணி சார்
ReplyDeleteஉங்களுக்கும் என் பதிவு உண்மையாகவே பிடித்து இருக்கின்றது என்பதை கேட்கும் போது மனதிற்குள் சந்தோஷம் ஏற்படுகின்றது. உங்கள் ஆதரவுக்கு எனது நன்றிகள்
@ரெவெரி
ReplyDelete@ரா. செழியன்
@யோகா.S. FR
@R.Elan
@கோகுல்
உங்கள் அனைவரின் வருகைக்கும் கருத்துக்கும் மிக நன்றி. இந்த கதை உங்களை போல உள்ள இளைஞர்களையும் கவர்ந்ததில் மிக மகிழ்ச்சி. நல்லவைகளை பதிவாக தரும் போது படிப்பதற்கும் இந்த காலத்தில் இளைஞர்கள் அதிகம் பேர் உள்ளதை நினைக்கும் போது மிக மகிழ்ச்சியாக உள்ளது
கதையும், கதை சொல்லும் நீதியும் அருமை.
ReplyDeleteஅதையும் தேர்தல்நேரம் பார்த்துப் பதிவிட்டது இனிமை!!
@ஹீசைனம்மா உங்கள் வருகைக்கும் ஆதரவுக்கும் கருத்துக்கும் மிகவும் நன்றி
ReplyDelete