கனிமொழிக்கு கலைஞர் எழுதிய ரகசிய கடிதம்.
மகளே கனிமொழி, கால சூழ்நிலையால் நாம் பிரிந்து இருக்க வேண்டியிருக்கிறது. உன் அருகில் இருந்து பேச முடியவில்லை என்றாலும் இந்த கடிதத்தின் மூலம் உன் கூட பேசுவது எனக்கு சிறிது மகிழ்ச்சியே..
அவர்கள்...உண்மைகள் என்ற பெயரில் வலைத்தளம் நடத்தி வரும் Madurai Tamil Guy என்பவர் நேற்று இரவு என்னை தொலை பேசியில் அழைத்து என்னிடம் உரையாடி கொண்டிருந்த போது அவர் எனக்கு ஒரு கதை சொல்லி ஆறுதல் படுத்தினார். அந்த கதை மிகவும் நன்றாக இருப்பதால் அதை உன்னிடம் Reshare செய்யலாம் என்று நினைத்து இந்த கடிதத்தை எழுதுகிறேன். இந்த கதை எனக்கு மட்டுமல்ல உனக்கு, ஸ்டாலின் அழகிரி அண்ணண்களுக்கும் மற்றும் வாழ்க்கையில் கஷ்டபடும் அனைவருக்கும் மிக உதவியாக இருக்கும்.
இதோ அந்த கதை :
ஒரு நாள் இந்தியாவில் இருந்து அமெரிக்க சென்ற பெண் தன் தந்தையை பக்கத்தில் அமர்த்தி காரை ஓட்டி சென்றாள். அவர்கள் காரில் பயணம் செய்யும் போது திடீரென பெரும் மழை பெய்ய தொடங்கி சூறாவளி காற்றும் அடிக்கத் தொடங்கியது.
உடனே அந்த பெண் அப்பாவிடம் கேட்டாள் நாம் என்ன செய்யலாம் என்று?
அதற்கு அந்த தந்தை சொன்னார் காரை நிறுத்தாமல் தொடர்ந்து ஓட்டு என்றார்.
அந்த பெண்ணும் காரை ஒட்டி சென்றார் . ஆனால் சூறாவளி மிகவும் அதிகரிக்கத் தொடங்கியது . ரோடில் சென்ற கார்கள் அனைத்தும் ஓன்றன் பின் ஒன்றாக ரோட்டோரமாக நிற்கத் தொடங்கியது.
அதை பார்த்த அந்த பெண் அப்பாவிடம் கேட்டாள் நாம் என்ன செய்யலாம் என்று?
அதற்கு அந்த தந்தை சொன்னார் காரை நிறுத்தாமல் தொடர்ந்து ஓட்டு என்றார்.
அப்பாவின் பேச்சை கேட்டு அந்த பெண்ணும் காரை ஒட்டி சென்றார்.
அப்படி அவர் ஓட்டும் போது 18 சக்கரங்கள் கொண்ட பெரிய லாரிகளும் ரோட்டோரமாக ஒதுங்கத் தொடங்கின.
இப்போது அந்த பெண்ணோ, அப்பா எனக்கு ரோடு நல்லாகவே தெரியவில்லை. எல்லா வாகனங்களும் நிற்க தொடங்கிவிட்டன நாமும் இப்போது கண்டிப்பாக நிற்க வேண்டும் இதற்கு மேல் ஓட்டி செல்வது நல்லதாக எனக்கு படவில்லை என்றார்.
அதற்கு அந்த தந்தை சொன்னார் மகளே மனம் தளராமல் காரை நிறுத்தாமல் தொடர்ந்து ஓட்டு என்றார்.
மிகவும் இருட்ட தொடங்கியது மட்டுமல்லாமல், மழையும், சூறாவளியும் அதிகரிக்க தொடங்கின. இருந்த போதிலும் அப்பாவின் பேச்சை தட்டாமல் அந்த பெண் தொடர்ந்து காரை நிறுத்தாமல் ஒட்டிச் சென்றாள்.
அப்படியே இன்னும் சிறிது தூரம் ஓட்டி செல்லும் போது வானம் தெளிவடைவதை கண்டாள். இன்னும் சிறிது நேரம் ஓட்டிய போது நல்ல சூரிய வெளிச்சத்துடன் ஒரு துளி மழை கூட இல்லாமல் இருக்கும் இடத்திற்கு வந்தாள்.
அப்போது அவரின் தந்தை இப்போது காரை நிறுத்தி கிழே இறங்கு என்று சொன்னார்.
அப்பா இப்போ எதற்கு இறங்கச் சொல்லுகிறீர்கள் மழையோ காற்றோ இல்லை இப்போது ஓட்டிச் செல்வதுதான் நல்லது என்று கேட்டாள்.
அதற்கு அவர் மகளே, நீ கீழே இறங்கிவந்து, வந்த பாதையை திரும்பிபார் யாரெல்லாம் முயற்சி பண்ணாமல் ரோட்டோரமாக நின்றார்களோ அவர்கள் எல்லோரும் இன்னும் அந்த சூறாவளியில்தான் சிக்கி இருக்கிறார்கள் ஆனால் கடின முயற்சியால் காரை ஒட்டி வந்த நீயோ சூறாவளியில் இருந்து தப்பி இப்போது நல்ல இடத்தில் இருக்கிறாய்.
இந்த நீதி கதை யாரெல்லாம் கஷ்டத்தின் விளிம்பில் வாழ்க்கையை நடத்தி கொண்டு இருக்கிறார்களோ அவர்களுக்காக சொல்லப்பட்டது. திட மனது உள்ளவர்கள் கூட பிரச்சனைகளை எதிர் கொள்ளாமல் போகலாம் ஆனால் நீ அதில் இருந்து விட்டு விலகாதே...தொடர்ந்து கடினமாக முயற்சி செய்தால் சூறாவளியில் இருந்து விடுபட்டு சூரிய ஒளி பிரகாசிப்பது போல நீயும் பிரகாசிப்பாய்.
இந்த கதையைத்தான் Madurai Tamil Guy என்னிடம் தொலை பேசியில் பகிந்தார். இந்த கதையை கேட்டதும்தான் என் மனம் தெளிவடைந்தது. அதனால் இதை உன்னிடம் இந்த கடிதம் மூலம் பகிர்ந்து கொள்கிறேன்.மகளே இந்த வீடியோ க்ளிப்பைஅவர் எனக்கு அனுப்பி வைத்தார் இதை நீ பார்க்க தவறாதே
( இந்த Madurai Tamil Guy நிறைய நல்ல அனுபவ செய்திகளையும் என்னிடம் பகிர்ந்து உள்ளார். அவரிடம் நான் இட்ட வேண்டு கோளுக்கிணங்க அதை அவரே நாளைய பதிவில் அவரது தளத்தில் வெளியிடுவதாக என்னிடம் வாக்குறுதி அளித்துள்ளார். அதையும் நீயும் மற்றவர்களும் கண்டிப்பாக படிக்க வேண்டும் மகளே.)
அது போலத்தான் மகளே நீயும் இப்போது சூறாவளியில் சிக்கி இருக்கிறாய் நீ மனம் தளராமல் இந்த சிறை வாழ்க்கையை கடந்து வந்தால் திமுக கட்சியில் உன் வாழ்க்கை எதிர்காலத்தில் மிக பிரகாசமாக இருக்கும்..
என்றும் உன்னை நேசிக்கும் உன் பாசத் தந்தை.
மு.கருணாநிதி
பின் குறிப்பு: நாம் மீண்டும் ஆட்சிக்கு வரும் போது இந்த Madurai Tamil Guy -யை அழைத்து ஒரு பாராட்டுவிழா நடத்தி அவர் விருப்பபட்டால் நீதி கதையை வழங்கிய அவருக்கு நீதி துறை அமைச்சர் பதவியை வழங்க வேண்டும்.
ஒருவேளை கனிமொழி தியாகியாகி ஆட்சியை பிடிக்கலாம் யாருக்கு தெரியும் ...உங்களுக்கு நீதித்துறையா ? சரிங்க கொடுத்திடலாம்
ReplyDeleteGood advice
ReplyDeleteஇப்படியும் பதவி வாங்கலாமா? தாத்தா அதுக்கும் காசு கேப்பார்?
ReplyDeleteSatisfaction Guaranteed மிகச் சரி,
ReplyDeleteஆமா இப்பதிவுக்கு கமெண்ட் கம்மியாயிருக்கே, எல்லோரும்
எதிர்பார்த்து,ஏமாந்து,கடுப்பாகிச் சென்று விட்டார்களோ. நானு வெறும்
சிரிப்பை நம்பி வந்ததால் ஏமாறவில்லை :)
@ அரபுதமிழன் உங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி. எனது பதிவுகளுக்கும் எப்போதும் கமெண்ட்ஸ் கம்மிதான். அதுபோல ஒட்டுகளும் கம்மிதான். எனக்கு சைலண்ட் ரீடர்கள்தான் அதிகம். ஆரம்பத்தில் இருந்து முதல் வடை தோசை போன்ற கமெண்ட்ஸ் வேண்டாம் என்று சொல்லியிருந்தேன் அது போல குருப் கும்மாளம் நடத்தி Chat ல் பேச வேண்டியதையெல்லாம் கமெண்ட்சாக போட்டு அதிகம் காட்ட விரும்பியதில்லை.
ReplyDelete@ பூங்குழலி, ஒன்விஷ், சூர்யாசெல்வம் உங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.
ReplyDelete//நாம் மீண்டும் ஆட்சிக்கு வரும் போது இந்த Madurai Tamil Guy -யை அழைத்து ஒரு பாராட்டுவிழா நடத்தி....//
ReplyDeleteஒரு "பெரிய" பிழை, இந்த இடத்தில்...அவர் இப்படி தான் சொல்லி இருப்பார்...
நாம் மீண்டும் ஆட்சிக்கு வரும் போது இந்த Madurai Tamil Guy -யை அழைத்து, அவரின் கதையை கேட்ட எனக்கு அவரையே வைத்து ஒரு பாராட்டு விழா நடத்த செய்வோம்...
நான் சரியாய் தான் சொல்றேனா?