Monday, September 12, 2011


 
அமெரிக்கா TO தமிழகம் ( NRI-    யின் தமிழக பயண டைரி குறிப்புகள்   ( 1 )



பார்க்க வேண்டும் என்று நினைத்தவர்களில் சிலரை பார்க்கமுடியாமல் போனதால் ஏற்பட்ட தவிப்பை தவிர எனது கோடை தமிழக பயணம் மிகவும் இனிமையாக இருந்தது. கடந்த ஒரு மாதமாக என் ப்ளாக்கிற்கு வரமாமல் சந்தோஷமாக இருந்தவர்களை பழிவாங்கதான் இந்த பயணபதிவு. (பயணம் ஆரம்பம் ஆகஸ்ட் 5 முடிவு ஆகஸ்ட் 29)





ஆகஸ்ட் 5 காலை 10 மணியளவில் போன் அலறத் தொடங்கியது. போனை எடுத்தால் சென்னை சென்ற மனைவியின் போன் கால். என்னங்க எந்திரிச்சிட்டீங்களா? பெட்டியில் எல்லாம் அடுக்கி வைச்சு எடை பாத்தீட்டுங்களா? என்ற பணிவான விசாரிப்பு.( காரணம் ஒரு மாத கால பிரிவு) நான் அதற்கு ஆமாம் அம்மா எல்லாம் அடுக்கி வைச்சு எடை பாத்தாச்சு இரவு புறப்பட வேண்டியதுதான் பாக்கி என்று  மனைவியிடம் பொய் சொன்னேன்.( பதிவுகள் படிக்கவே டையம் இல்லை விமானமோ இரவு 11 மணிக்குதான் அதற்குள் என்ன அவசரம் நிறைய நேரம் இருக்கிறதே என்ற நினைப்பு என் மனதில்)





எளிமையான எனக்கு ஒருமாத கால பயணத்திற்கு தேவையானது மூன்று ஜீன்ஸ் ஐந்து டீசர்ட் + ஜட்டிகள் அவ்வளவுதான். நான் என்ன பெண்ணா நாள் முழுவதும் மேட்சிங்க பார்த்து பார்த்து  எடுத்து வைப்பதற்கு? 10 நிமிடங்களில் எனக்கு தேவையானதை எடுத்து "கேபின் பாக்ஸில்" வைத்துவிட்டேன். என்னடா பேக்கிங் இவ்வளவு எளிதா என்று கேட்க வேண்டாம். நான் சொன்னது எனக்கு தேவையானது மட்டுமே. ஆனால் தமிழகத்தில் உள்ளவர்களுக்கு அமெரிக்க குப்பைகளை இரண்டு பெரிய பெட்டிகளில் ( 100 பவுண்டு Check In) அடுக்க மட்டும் டையம் எடுக்கும். அதையும் வெகு சிக்கிரமாக முடித்து பதிவுகளை படிக்க உட்கார்ந்து விட்டேன்.



ஐந்து மணியளவில் குளித்து விட்டு ஆன்லைனில் டிக்கெட் செக்கின் செய்து போர்டிங்க் பாஸ் ப்ரிண்ட் செய்துவிட்டு நண்பனுக்காக காத்து இருந்தேன். அவந்தான் ஏர்போர்ட் டிராப் செய்யனும்.  என் வீட்டில்(New Jersey) இருந்து ஏர்போர்ட்டுக்கு New York JFK) டிராபிக் ஏதும் இல்லையென்றால் ஒரு மணி நேரத்திற்கும் மேலாகும். JFK ஏர்போர்டிலிருந்துதான் டிக்கெட்  சீப்பாக கிடைத்தது (1850 டாலர்). டில்லிகார நண்பணும் சீக்கிரம் வந்துவிட்டான். நேரம் நிறைய இருந்ததாலும் நீண்ட தூரம் பயணம் செய்ய வேண்டி இருப்பதாலும் கொஞ்சம் சரக்கை இருவரும் தேவாமிர்தம் (ரம்) அருந்திவிட்டு பயணத்தை வீட்டில் இருந்து 6;30 க்கு ஆரம்பித்தேன்.



டிராபிக் ஏதும் இல்லாததால் சீக்கிரமே ஏர்போர்ட் வந்துவிட்டோம். (Navigating JFK Airport Video - New York City Travel Videos - Tripfilms) நண்பரை அனுப்பிவிட்டு செக்யூரிட்டி செக் பண்ணும் இடத்திற்கு வந்தேன் என் பெயர் மற்றும் நான் மதுரைக்காரன் என்பதாலும் எனக்கு எப்போதும் ஒரு நல்ல கவனிப்பு. அதுனால நான் எடுத்து சென்ற வீடியோ கேமரா பேக்கை தனியாக எடுத்து சென்ற செக்யூரிட்டி லேடி  என் வீடியோ கேமராவை அவர்கள் வைத்திருந்த ஒரு சிறப்பு டிஷ்யூவால் நன்றாக துடைத்து அதற்கென வைத்திருக்கும் ஒரு மிஷினில் போட்டு ஏதோ டெஸ்ட் செய்து விட்டு ஒகே நீங்கள் செல்லலாம் என்று சொன்னார் நானும் சிரித்தாவாறு அவர்களுக்கு நன்றி சொல்லிவிட்டு சென்றேன். எதுக்கு நன்றி சொன்னேன் என்று நினைக்கிறீர்களா? என் வீடியோ கேமராவை துடைத்து கொடுத்தவருக்கு நன்றி சொல்வதுதானே நம் தமிழர் பண்பாடு .



நான் அமெரிக்கா வந்த பின் முதன் முறையாக தனியாக நான் செய்யும் பயணம் என்பதால் கடவுளை நோக்கி பிரார்த்தனை செய்தேன். கடவுளே நான் நீண்ட தூரம் தனியாக பயணம் செய்ய வேண்டிருப்பதால் என் அருகில்   தூங்கி என் மேல் விழும் எந்த வயதான ஆளும் வேண்டாம் மேலும் எந்த இந்திய குறிப்பாக தமிழக பெண்ணும் அமர வேண்டாம்( காரணம் நம் கைகால்களை அசைக்க முடியாது தப்பி தவறி அசைத்து அது தவறி ஒரு வேளை அவர்கள் மேல் பட்டுவிட்டால் நம்மை ஒரு பொறுக்கி போலவும் ஒரு பார்வைபார்ப்பார்கள் அது வேண்டாம் என்பதால்தான்) அதற்கு பதிலாக ஒரு அமெரிக்க பெண் இருந்தால் நன்றாக இருக்கும் என்று நினைத்தேன் காரணம் அமெரிக்க பெண் வந்தால் அவர்களிடமே அனுமதி வாங்கி அவர்கள் மடியில் படுத்து தூங்கலாம். ம்ம்ம்ம்ம்ம்ம்.. மேலும் யாரவது அருகில் வந்து உட்கார்ந்து நடுவே இருக்கும் கைப்பிடியில் கைவைத்து இடம் பிடிப்பதற்கு முன்பே நாம் அதில் வைத்து இடம் பிடித்து விட வேண்டும் என்றும் நினைத்தேன்.



வழக்கம் போல எப்போதும் எனக்கு நல்லதே நடத்தி வைக்கும் கடவுள் என் வேண்டுதலுக்கு செவி சாய்த்து நானும் கெட்டு போய்விட கூடாது என்பதால் எந்த பெண்ணையும் என் அருகில் அமர்த்த வில்லை அதுமட்டுமில்லாமல் எனக்கு அடுத்த சீட்டு காலியாக இருந்தது அதற்கு அடுத்த சீட்டில் ஒரு இளைஞன் இருந்தான். யாரு விட்ட சபமோ அந்த விமானத்தில் வந்த ஏர்ஹோஸ்டல்கள் சப்பை பிகராகவும் மேலும் எமிரேட் யூனிபார்மும் அட்ராகஷனாக இல்லாதலும் முன்னால் இருந்த டீவியில் படம் பார்க்க ஆரம்பிதேன். 12 மணியளவில் சாப்பிடும் போதுதான் அறிந்து கொண்டேன் என் வரிசையில் விண்டோ சீட்டில் இருப்பவனுடைய சீட்டின் கைப்பிடியை மடக்க முடியாது என்று ஆக நாம ரொம்ப அதிர்ஷ்டகாரன் நமக்கு விமானத்தில் பெர்த் கிடைத்துள்ளது அதனால் கடவுளுக்கு நன்றி சொல்லியவாறு ஒரு நல்ல தூக்கம் போட்டேன்.



திடிரென ஒரு சத்தம் வண்டி ஐந்து நிமிடம் நிற்கும் பாத்துரூம் மற்றும் காப்பிடீ சாப்பிட வேண்டியவங்க போய்ட்டு வரலாம் என்று முழித்து பார்த்தால் எல்லோரும் தூங்கி கொண்டிருந்தார்கள் அதன்பின் தான் புரிந்தது அது ஒரு கனவு என்று..அதன் பின் தூக்கம் போய்விட்டது அதனால் டிவியில் படம் பார்த்தவாறு துபாய் வந்து இறங்கினேன்.


துபாய் விமான நிலையத்தை பார்த்த எனக்கு மிகவும் ஆச்சிரியம் எங்கு பார்த்தாலும் இந்திய மக்கள் இருந்த போதிலும் ரொம்ப ரொம்ப சுத்தமாக இருந்தது வாவ் என்றாவாறே நேராக 'Duty Free" கடைக்கு சென்று சென்னை நண்பர்களுக்காக 2 ஒரு லிட்டர் வாட்டர் பாட்டில் வாங்கி கொண்டு சென்னைக்கு செல்லும் விமானதிற்க்காக ஒரு ஒரமாக அமர்ந்து இருந்தேன். அப்போதுதான் அந்த சம்பவம் நடந்தது.





அப்போது ஒரு 40 வயது இருக்கும் ஒரு தமிழ் லேடி என்னருகே வந்து ஒரு உதவி செய்ய முடியுமா என்று கேட்டார்கள். என்னடா இந்த பெண்கள் சவகாசமே வேண்டாம் என்று ஒதுங்கி போனாலும் இந்த பெண்கள் நம்மை விட மாட்டார்கள் போலிருக்குதே என்று நினைத்தவாறே என்ன செய்ய வேண்டும் என்று கேட்டேன். அதற்கு அவர்கள் சொன்னார்கள் என் செல்போனிற்கு சிம்கார்டை மாற்றமுயற்சிக்கிறேன் என்னால முடியவில்லை உங்களால் மாற்றி தர முடியுமா என்று கேட்டார்கள். இந்த சிம்கார்ட் விவகாரம் எல்லாம் எங்க வில்லேஜ்ல (அமெரிக்காவில்) கிடையாது என்பதால் எனக்கு எப்படி மாற்றுவது என்று தெரியாது என்று கூறினேன் என்னை ஒரு மாதிரியாக பார்த்துவிட்டு எனக்கு எதிரே இருந்த இன்னொருவனிடம் கேட்டார் அவரும் சரியென்று சொல்லியவாறு நான் விமானம் ஏறும் வரைக்கும் ஏதோ மாற்ற முயற்சி செய்து கொண்டிருந்தார். அவர் மாற்றி கொடுத்தாரா அல்லது அந்த பெண் வேறு செல் போனை மாற்ற வேண்டி வந்ததா என்பது எனக்கு தெரியவில்லை. ஓன்றும் மட்டும் புரிந்தது குரங்கு கையில் அந்த செல்போனை அந்த பெண் கொடுத்துள்ளார் என்பது.




ஒரு வழியாக விமானம் சென்னை வந்து இறங்கியது, விமானத்தில் இருந்து வெளியேவந்த எனக்கு ஒரு ஷாக் என்ன... விமானி விமானத்தை சென்னை பஸ்டாண்டில் கொண்டு வந்து இறக்கிவிட்டாரா என்று. அருகில் உள்ள வரை கேட்டேன் அவர் இதுதான் சென்னை இண்டர்நேஷனல் ஏர்போர்ட் என்று சத்தியம் செய்தார். ஒகே என்றவாறு இமிகிரேஷன் ஆபிஸரை ஸ்மைலுடன் அணுகி குட்மார்னிங்க் சார்.. ஹ்வ் ஆர் யூ சார் என்று கேட்டேன் அதற்கு அவர் என் மூஞ்சியை கூட பார்க்காமல் பாஸ்போர்ட்டை வாங்கிமுத்திரை குத்தி அனுப்பிவிட்டார் நான் மனதிற்குள் நம்ம முஞ்சியை பார்க்க பயமா அவருக்கு அல்லது தமிழக ஆபிசர் இன்னும் மாறாமல் அப்படியே இருக்குகிறார்களா என்று நினைத்தாவாறே  வெளியே வந்த எனக்கு ஒரு சந்தோசம் அங்கு பெட்டியை எடுத்து வைத்து செல்லும் கார்ட் இலவசம் என்பதுதான் இங்கு அமெரிக்காவில் அதற்கு ஐந்து டாலர் கொடுத்து எடுக்க வேண்டும்.( என் மனதில் தோன்றியது இதுதான் அமெரிக்கா போல இங்கும் இன்னும் அதிகமாக பணம் வசூலித்து அந்த பணத்தில்  விமானம் நிலையத்தை சுத்தம் செய்து பாராமரிக்க கூடாதா என்பதுதான் .ஏன் இந்த இலவசம்?????)



இறுதியாக கஸ்டம்ஸ் கீரின் சேனல் வழியாக வெளிவந்தால் என்னை வரவேற்க என் சிறு வயது மகள் அதிகாலை மூன்று மணீக்கு என் மனைவி கூட வந்து இருந்தாள் ஒரு மாத காலப் பிரிவு எங்களை வாட்டியது (அப்போது நினைத்து கொண்டேன் கனிமொழி & கலைஞர் பிரிவு எப்படி இருக்கும் என்று)



என் மகளை கட்டி பிடித்தவாறு வெளியே வந்த எனக்கு ஆச்சிரியம் கலந்த பயம். ஆச்சிரியம்?? பதிவாளரை வரவேற்க இவ்வளவு கூட்டமா என்று உற்று பார்த்தேன் யார் கையிலும் மாலைகள் இல்லை ஒகே  ஒகே இது நம்மை வரவேற்க வந்த கூட்டம் அல்ல என்பது புரிந்தது. ஒரு வேளை நம்மை அடிக்க மதுரையில் உள்ள புகழ்பெற்ற பெண் பதிவாளர் செய்யத ஏற்பாடுதானோ என்று பயந்தவாறே வெளியே வந்தேன். இறுதியாக தான் புரிந்தது அது என்னை போன்றவர்களை வரவேற்க வந்த  உறவினர்கள் என்று. அப்பாடி......



என் பயணம் இன்னும் தொடரும்.....



நான் பயணம் செய்த ஊர்கள் சென்னை, திருநெல்வேலி,திருவனந்தபுரம், குற்றாலம்,மதுரை,பெங்களுர்,ஈரோடு, கடம்பூர் மலை, மற்றும் துபாய்)








4 comments:

  1. 2 ஒரு லிட்டர் பாட்டில் சேர வேண்டியவர்களிடம் சேர்ந்ததா? அசத்தலான ஆஆஆரம்பம்..

    ReplyDelete
  2. ரொம்ப ரசித்து எழுதி இருக்கீங்க
    படிக்கவே சுவார்சியமா இருக்கு. அடுத்து
    எப்போ?

    ReplyDelete
  3. மிகப் பிரமாதமான துவக்கம்
    துபாய் விமான நிலையம் நீங்க்கள் சொல்வது போல்
    அத்தனை தூய்மையாக அழகாக உள்ளது
    ஹிட்ச் ஹாக் படத்தில் வருவதுமாதிரி
    பையுடன் வந்து போவதுதான் நீங்களா
    மதுரை வந்திருக்கிறீர்கள் போல் இருக்கே
    தகவல் தெரிவித்திருந்தால் நான் வந்து சந்தித்திருப்பேனே
    அருமையான தொடராக அமைய வாழ்த்துக்கள்
    த.ம 2

    ReplyDelete
  4. மதுரை வந்தீங்களா....சொல்லவே இல்லை...தெரிஞ்சுருந்தால் கூப்ட்டு ரெண்டு அடி கொடுத்து அனுப்பிருப்பேனே...:-))

    ReplyDelete

நான் அறிவு ஜீவி அல்ல ஒரு சாதாரணமான் மனிதன் தான்.இங்கு நான் பதியும் பதிவுகளில் உள்ள கருத்துகள் "மிகவும் சரி"யென்று சொல்லமாட்டேன் அது அன்றைய மனநிலையில் என் மனதில் எழும் கருத்துகளே...அதனால் உங்களது மனசுலபட்ட மாற்று கருத்துகளை தாராளமாக பகிரலாம். ஆனால் தேவையற்ற, வரம்புமீரிய, அநாகரிகமான வார்த்தைகளாலும் பதிவிற்கு சம்பந்தமில்லாமல் கருத்துக்கள் சொல்லப்பட்டால் எந்த வித பதில் விளக்கமின்றி அந்த கருத்து டெலீட் செய்யப்படும்.