Sunday, September 25, 2011




பட்டையை கிளப்பபோகுது விஜயகாந்த் பாடப் போகும் தமிழ்பாடல்

கோட்டை தகர்ந்திருச்சு;
கோப்பை நழுவிருச்சு
கண்மணி என் கண்மணி!
உள்ளாட்சி தேர்தலில் கோட்டை விட்டோம்
நாமத்தைப் போட்டுக்கிட்டோம்
கண்மணி என் கண்மணி!


பட்டை கிளப்புமென்று
பந்தாவாய் வந்தோம்
சட்டை கிழித்துக்கொண்டு
சந்தியிலே நிற்கிறோமே!

கோட்டை தகர்ந்திருச்சு;
கோப்பை நழுவிருச்சு
கண்மணி என் கண்மணி!
உள்ளாட்சி தேர்தலில் கோட்டை விட்டோம்
நாமத்தைப் போட்டுக்கிட்டோம்
கண்மணி என் கண்மணி!

சேலையையும் உருவவில்லை
செருப்பையும் விளாசவில்லை
மைக்கும் பறக்கவில்லை
கண்மணி என் கண்மணி!

ஆனால் அம்மா நம்ம வேட்டியை
அவுத்துவிட்டு வெறும்பயலா ஆக்கிவிட்டு
டாஸ்மார்க் வாசலில விழுந்து கிடக்கும்
ஆளைப்போல ஆகிவிட்டோமே
கண்மணி என் கண்மணி!

தோற்போம் இந்தக் தேர்தலில்
அம்மா வைச்ச ஆப்பையால்
ரேட்டிங் இனி மாறும்
மானம் கப்பல் ஏறும்
கண்மணி என் கண்மணி


முயல் ஆமை கதையாச்சே!
செமையான உதையாச்சே
கண்மணி என் கண்மணி!

இதையெல்லாம் பொருத்துக்குவேன்
ஆனா அந்த வடிவேலு பய
வாயில விழுந்த சோளப்பொரி போல
ஆகிவிட்டேனே கண்மணி
கண்மணி என் கண்மணி!

-------------

முதல் பாட்டுக்கு இந்த பாட்டு இலவசம்

ஜெயலலிதா: என் நண்பனே என்னை ஏய்த்தாயோ
என் பாவமாய் வந்து வாய்த்தாய்
உன் போலவே நல்ல நடிகன் ஓ..
ஊரெங்கிலும் இல்லை ஒருவன்
நல்லவர்கள் யாரோ தீயவர்கள் யாரோ
கண்டுக்கொண்டு இந்த அம்மா யாரிடமும்
கூட்டணி செய்வதில்லையே
கங்கை நதி எல்லாம் கானல் நதி என்று
பிற்பாடு ஞானம் வந்து லாபம் என்னவ

விஜயகாந்த்: கூட்டணி என்பது கனவு மாளிகை
புரிந்துகொள்ளடி என் தோழியே
உண்மைக் கூட்டணியை நான் தேடிப்பார்க்கிறேன்
காணவில்லையே என் தோழிய
25 Sep 2011

3 comments:

  1. ஒரே பாட்டில் பொட்டில் அடித்தாற் போல சொல்லீட்டீங்க கேப்டன்-னோட நிலையை..

    அருமை

    ReplyDelete
  2. பட்டையை கிளப்பும்
    பாடலுக்குப் பாராட்டுக்கள்.

    ReplyDelete
  3. தனித்து போட்டி என்று கர்ஜித்தவர் சேலை துவைக்க சென்றவுடன் சோப்பு கட்டி இருக்கும் இடத்தில் தான் வைப்பார்கள்

    ReplyDelete

நான் அறிவு ஜீவி அல்ல ஒரு சாதாரணமான் மனிதன் தான்.இங்கு நான் பதியும் பதிவுகளில் உள்ள கருத்துகள் "மிகவும் சரி"யென்று சொல்லமாட்டேன் அது அன்றைய மனநிலையில் என் மனதில் எழும் கருத்துகளே...அதனால் உங்களது மனசுலபட்ட மாற்று கருத்துகளை தாராளமாக பகிரலாம். ஆனால் தேவையற்ற, வரம்புமீரிய, அநாகரிகமான வார்த்தைகளாலும் பதிவிற்கு சம்பந்தமில்லாமல் கருத்துக்கள் சொல்லப்பட்டால் எந்த வித பதில் விளக்கமின்றி அந்த கருத்து டெலீட் செய்யப்படும்.

:) :)) ;(( :-) =)) ;( ;-( :d :-d @-) :p :o :>) (o) [-( :-? (p) :-s (m) 8-) :-t :-b b-( :-# =p~ $-) (b) (f) x-) (k) (h) (c) cheer
Click to see the code!
To insert emoticon you must added at least one space before the code.