Friday, September 16, 2011


விஜயகாந்திற்கு நாமம் போட்ட ஜெயலலிதா

தான் பெற்று எடுத்த குழந்தைகள் தன்னை திட்டினலோ ஏன் சில சமயங்களில் அடித்தாலோ அதை மறந்து மன்னித்து அரவணைத்து போவாள் பெற்ற அன்னை. ஆனால் அன்னை ஜெயலலிதாவோ தன்னிடம்  நட்பாக இருக்க கூடியவர்களையும் சந்தேக கண்ணோடு பார்த்து விரோதியாக மாற்றிக் கொள்வார் . இவர்தான் தமிழகத்தை காப்பாற்ற வந்த தமிழ் அன்னை. அந்த அன்னைதான் விஜயகாந்திற்கு நாமம் போட்ட அன்னை.
தமிழகத்திலுள்ள 10 மாநகராட்சிகளிலும் .தி.மு.., போட்டியிடும் வேட்பாளர்கள் பட்டியலை, முதல்வர் ஜெயலலிதா நேற்று வெளியிட்டதன்  மூலம், தேமுதிக, இடதுசாரிகளுக்கு ஒரு மேயர் பதவி கூட தரப்பட மாட்டாது என்பதை தெள்ளத் தெளிவாக்கிவிட்ட முதல்வர் ஜெயலலிதா.விஜயகாந்திற்கு நாமம் போட்டு  தன் குடும்பத்தில் ஒருவராக ஏற்றுக் கொண்டார்.


தன் கட்சியினர்களுக்காக இந்தப் பதவிகள் மீது கண் வைத்து இத்தனை நாட்களாக அதிமுகவை எந்த வகையிலும் விமர்சிக்காமல் இருந்து வந்த தேமுதிக தலைவர் விஜய்காந்த் கடும் அதிர்ச்சிக்குள்ளாகியுள்ளார்.

தேமுதிகவைப் பொறுத்தவரை மதுரை, சேலம் மாநகராட்சிகள் உள்பட 3 மாநகராட்சிகளின் மேயர் பதவிகளை குறி வைத்திருந்தது. அந்த இடங்களையும் முக்கிய நகராட்சிகள், பஞ்சாயத்துகளின் பதவிகளையும் கேட்டுப் பெறும் வரை அதிமுக ஆட்சியை விமர்சிப்பதோ, கேள்வி கேட்பதோ இல்லை என்ற 'கொள்கையுடன்' சட்டசபையில் செயல்பட்டது தேமுதிக.


அதாவது, 10 மேயர் பதவிகளும் எங்களுக்கே. உங்களுக்கு ஒரு இடம் கூட கிடையாது என்பதை முகத்தில் அறைந்தது போல சொல்லி விஜயகாந்திற்கு நாமம் போட்டுள்ளார்  ஜெயலலிதா.

அவர் நாமம் போட்ட காரணம் எப்படியும் உள்ளாட்சி தேர்தலுக்கு அப்புறம் விஜயகாந்த வாலாட்டதான் செய்வார் என்பது ஜெயலலிதா அம்மையாருக்கு புரியாதா என்ன அதனால் தான் அவர் விஜயகாந்துக்கு நாமம் போட்டுள்ளார்.

நாமம் பெற்ற விஜயகாந்த் செய்யப் போவது அந்த நாமத்தை அழித்து விட்டு பட்டை(சரக்கு) போட்டு அந்த அம்மையாரை திட்டி தீர்ப்பார் மேலும் கலைஞரைப்போல தனித்து நிற்கப் போவதாக சபதம் விடுவார்.

இரு கம்யூனிஸ்ட் கட்சிகளுக்கும் மாநகராட்சி ஒதுக்கப்படாததால், அக்கட்சியினர் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.அதனால் ஜெயலலிதாவை தோற்கடிக்க & திட்டி தீர்க்க புதிய உண்டியல்களை  தயார் செய்வார்கள்.

தமிழக சட்டசபை தேர்தலுக்கு பின் போரடித்த அரசியல் இனிமேல் ரொம்ப இன்ரெஸ்டிங்காக செல்லும் என எதிர்பார்க்கப்படுகிறது

12 comments:

  1. GOOD POST KEEP IT UP.

    ReplyDelete
  2. ஒரு வேளை புள்ளி விவரம் கலெக்டு பண்றதில பிஸியா இருக்காரோ ? அப்புறமேல அவர்
    படத்தில் போட்டு தாகுறமாதிரி , மொக்கை போட போறாரோ ?

    கமல் படத்தில் முத்தத்திற்கு தடை

    ReplyDelete
  3. இது ஜெயலலிதா பாணி அரசியல்
    அனேகமாக மதுரை சேலம் கோவை ஆகிய தொகுதிகளை
    கூட்டணிக் கட்சிகளுக்கு பின்னர்
    விட்டுக் கொடுப்பார் என நினைக்கிறேன் பார்ப்போம்
    த.ம 1

    ReplyDelete
  4. வெட்கம், மானம், சூடு, சொரணை, தன்மானம் எல்லாத்தையும் தூக்கி போட்டுவிட்டுத்தான் இந்தம்மா கூட கூட்டணியே வைக்கணும், இப்போ யோசிச்சு பிரயோஜனம் இல்லை.

    ReplyDelete
  5. //
    தமிழக சட்டசபை தேர்தலுக்கு பின் போரடித்த அரசியல் இனிமேல் ரொம்ப இன்ரெஸ்டிங்காக செல்லும் என எதிர்பார்க்கப்படுகிறது
    //
    நாங்களும் எதிர்பார்கிறோம்

    ReplyDelete
  6. இப்படி அவமானமெல்லாம் வரும்னு தெரிஞ்சுதானே கூட்டணியிலேயே சேர்ந்தாங்க. பிரவு என்ன?

    ReplyDelete
  7. உண்மைதான் .நல்ல பகிர்வு ;
    கேப்டன் பற்றி நாமளும் ஒரு பதிவு போட்டிருக்கோம் .

    ReplyDelete
  8. நல்லா வேணும்....... இவ்வளவு நாள் ஊமையா இருந்ததுக்கு :-)

    ReplyDelete
  9. விஜயகாந்த் பற்றி யாராலும் கணிக்கமுடியாது. அவர் சில வருடங்களில் ஜோலிக்கபோவது உறுதி.யார் அவரை உதாசீனம் பண்ணுகிரார்களோ அவர்கள் வீழ்வது உறுதி.

    ReplyDelete
  10. என் பதிவிற்கு வந்து படித்து பின்னூட்டம் போட்ட
    அழகி,
    இளையதாசன்,
    தமிழ்வாசி பிரகாஷ்,
    ரமணி சார்,
    ஜெயதேவதாஸ்,
    ராஜாபாட்டை ராஜா,
    கோமு,
    கோபிராஜ்,
    ஆமினா.
    ஸ்ரீதரன்

    அனைவருக்கும் எனது நன்றிகள். நேரம் கிடைக்கும் போது மீண்டும் உங்ககளை இங்கே வருமாறு பணிவன்புடன் கேட்டு கொள்கிறேன். எனது எழுத்தில் நிறை குரை இருந்தால் தெரியப்படுத்தவும். முடிந்தால் நான் திருத்தி கொள்கிறேன்.

    ReplyDelete
  11. திருந்துற மாதிரி தெரியலையே இவனுங்க, இன்னும் கிணத்துல போட்ட கல்லு மாதிரி தான் இருக்கானுங்க.. சூடு சுரணை எல்லாம் போயிடுச்சோ..

    ReplyDelete

நான் அறிவு ஜீவி அல்ல ஒரு சாதாரணமான் மனிதன் தான்.இங்கு நான் பதியும் பதிவுகளில் உள்ள கருத்துகள் "மிகவும் சரி"யென்று சொல்லமாட்டேன் அது அன்றைய மனநிலையில் என் மனதில் எழும் கருத்துகளே...அதனால் உங்களது மனசுலபட்ட மாற்று கருத்துகளை தாராளமாக பகிரலாம். ஆனால் தேவையற்ற, வரம்புமீரிய, அநாகரிகமான வார்த்தைகளாலும் பதிவிற்கு சம்பந்தமில்லாமல் கருத்துக்கள் சொல்லப்பட்டால் எந்த வித பதில் விளக்கமின்றி அந்த கருத்து டெலீட் செய்யப்படும்.