Friday, September 9, 2011

இப்படியும் ஒரு மருமகள் & இப்படியும் ஒரு மாமியார் என்ன உலகம்டா இது?

இது ஒரு நகைச்சுவை பதிவு அதனால் இதை சீரியஸாக எடுத்து கொள்ளாமல் நகைச்சுவை உணர்வுடன் படிக்கவும்.



கல்யாணமான ஒரு தம்பதிகள் காரில் உல்லாச பயணம் சென்ற போது ஏற்பட்ட கார் விபத்தினால் கணவருடைய முகம் மிகவும் கடுமையாக கருகி சேதம் அடைந்தது. அவருக்கு சிகிச்சை அளித்த மருத்துவர் சொன்னார். ஒன்றும் கவலைப்பட வேண்டாம். ப்ளாஷ்டிக் சர்ஜரி மூலம் அதை சரி செய்து விடலாம் என்று ஆலோசனை கூறினார். ஆனால் ஒரு சிறிய பிரச்சனை உங்கள் கணவர் மிகவும் ஒல்லியாக இருப்பதால் அவரிடம் உள்ள சதையை எடுத்து பண்ண முடியாது. யாராவது நெருங்கிய உறவினர்கள் தான் ஸ்கின் தானம் தரணும் என்று சொன்னார்.

உடனே மனைவி தான் தன் கணவருக்கு ஸ்கின் தானம் தருவதாக ஒத்துக் கொண்டார். அவரை பரிசோதித்த டாக்டர்  அவரின் பின்பக்கத்தில் (buttocks) உள்ள ஸ்கின் மட்டும்தான் மிக ஒத்துவருவதாக சொன்னார். கணவன் & மனைவி இருவரும்மிகுந்த ஆலோசனைக்கு பிறகு எங்கிருந்து ஸ்கின் எடுக்கபட்டது என்ற இந்த விஷயத்தை மிக ரகசியமாக வைத்து கொள்வதென்றும் டாக்டரும் இந்த ரகசியத்தை எப்போதும் சீக்ரெட்டாக வைத்து கொள்ள வேண்டும் என்று உறுதி மொழி வாங்கி கொண்டனர்.

சிகிச்சையும் வெற்றிகரமாக முடிந்து அவர் முகம் மிகவும் பிரகாசமாகவும் அழகாகவும் அமைந்துவிட்டது,

அவரை பார்க்கும் நண்பர்கள்,உறவினர்கள் மற்றும் எல்லோரும் அவர் முன்னை விட அவர் முகம் மிக இளமையாக இருப்பதோடு மட்டுமல்லாமல் ஹேண்ட்சமாக இருப்பதாகவும் மீண்டும் மீண்டும் கூறிவந்தனர்.

அதனால் மிகவும் சந்தோஷமடைந்த கணவன் ஒரு நாள் தனிமையில் இருக்கும் போது மனைவியிடம் மிக எமோஷனலாக. அன்பே நீ செஞ்ச இந்த உதவிக்கு நான் எப்படி நன்றி சொல்லவது என்றே தெரியவில்லை என்று சொன்னான்.

அத்தான் அதற்காக ஒண்ணும் கவலைப்பட வேண்டாம். உங்கள் அம்மா எப்போது எல்லாம் உங்கள் கன்னத்தில் முத்தமிடுவார்களோ அப்போது அதை  பார்க்கும் போதெல்லாம் நன்றிகள் ஒன்றுக்கு நான்காக வந்து எனக்கு சேர்ந்துவிடுகிறது என்று அவள் சொன்னாள்



மாமியார்கள் ஒன்றும் குறைச்சல் இல்லை .படியுங்க அவங்க பண்ணுற கூத்தை?

பக்கத்து வீட்டில் இருக்கும் மருமகளை, அவளோட பக்கத்து வீட்டு மாமியார் வந்து பயங்கரமா திட்டி, சண்டை போட்டுட்டுப் போனாங்க. இதையெல்லாம் பார்த்து கொண்டிருந்த அந்த மருமகளோட தோழி, "ஏன்டி நீ என்ன லூசா அந்த பொம்பளை இங்கே உன் வீட்டுக்கு வந்ததுமட்டுமல்லாமல் உன்னை திட்டிட்டும் போகுது...நீயும் பேசாம இருக்கறியே?"னு கேட்டாள்.

அதுக்கு அந்த மருமகள் சொன்னாள்... "இங்கே வந்து என்னை ஏன் திட்டுறீங்கன்னு கேட்டேன்.... அதுக்கு அவுங்க சொல்லுறாங்க ....'ஊருக்குப் போயிருக்கற உன் மாமியார்தான்டி என்கிட்ட சொல்லிட்டுப் போனாங்க...நான் வர்ற வரைக்கும் நீ போய் அந்த கழுதைய திட்டிக்கிட்டே இரு. இல்லாட்டா அதுக்கு கொழுப்பு ஏறிடும்...அதே நேரத்தில் .உன் மருமகளும் பிரசவத்துக்குப் போயிருக்கா....உனக்கும் மருமகளைத் திட்டுறதுல டச் விட்டுப் போவாம இருக்கும்' பாருன்னு!"

இது எப்படி இருக்குங்ங்ங்ங்க?





என்னங்க உங்க மாமியார் அல்லது மருமகள் இது மாதிரி ஏதும் காமடி பண்ணி இருந்தா அதை பின்னுட்டமாக போடுங்க
09 Sep 2011

4 comments:

  1. இல்லீங்க இந்த அனுபவம்லாம் எங்கவீட்லல்லாம் இல்லீங்க சாரி

    ReplyDelete
  2. ஊருக்கு வந்து போனவுடன் ஒரு
    அசத்தலான காமெடி பதிவா ? சூப்பர்
    த.ம 3

    ReplyDelete
  3. ஹா ஹா ஹா ஹா கொன்னுட்டீங்க போங்க....!!!

    ReplyDelete

நான் அறிவு ஜீவி அல்ல ஒரு சாதாரணமான் மனிதன் தான்.இங்கு நான் பதியும் பதிவுகளில் உள்ள கருத்துகள் "மிகவும் சரி"யென்று சொல்லமாட்டேன் அது அன்றைய மனநிலையில் என் மனதில் எழும் கருத்துகளே...அதனால் உங்களது மனசுலபட்ட மாற்று கருத்துகளை தாராளமாக பகிரலாம். ஆனால் தேவையற்ற, வரம்புமீரிய, அநாகரிகமான வார்த்தைகளாலும் பதிவிற்கு சம்பந்தமில்லாமல் கருத்துக்கள் சொல்லப்பட்டால் எந்த வித பதில் விளக்கமின்றி அந்த கருத்து டெலீட் செய்யப்படும்.

:) :)) ;(( :-) =)) ;( ;-( :d :-d @-) :p :o :>) (o) [-( :-? (p) :-s (m) 8-) :-t :-b b-( :-# =p~ $-) (b) (f) x-) (k) (h) (c) cheer
Click to see the code!
To insert emoticon you must added at least one space before the code.