Friday, September 23, 2011


ஈரல் சாப்பிடுவதால்  ஏற்படும் மருத்துவ பலன்கள்  ( Health Benefits ) :

லிவர் என்று அழைக்கப்படும் ஈரலின் முக்கிய செயல்பாடு நச்சு( Toxin ) தன்மையை மட்டப்படுத்துவதாகும். லிவர் நச்சுதன்மையை சேமித்து வைப்பதில்லை. ஆனால் லிவர் Toxin நச்சுதன்மையை  சேமித்து வைத்து கொள்கிறது என்று மக்கள் கருதுகிறார்கள். அது மிகவும் தவறான நம்பிக்கை.

இந்த ஈரல் நச்சுதன்மையை சேமித்து வைக்கும் ஒரு உறுப்பு அல்ல ஆனால் இது அநேக ஊட்டசத்தை (vitamins A, D, E, K, B12 and folic acid, and minerals such as copper and iron)  சேமித்து வைத்து கொள்கிறது. ஈரலில் தனி சிறப்பு வாய்ந்த இரத்த நாளம் உள்ளது. இதை கல்லீரல் சிரை என்று அழைப்பார்கள், இது இதயத்திலிருந்து நேரடியாக வரவில்லை என்றாலும் இது இரத்தத்தை மண்ணிரல் குடல் வயிறு போன்றவற்றிற்கு எடுத்து செல்ல உதவுகிறது. இரத்தத்தால் கொண்டு வரப்படும் பல ஊட்டப் பொருட்களை இதுதான் செயல்படுத்துகிறது.இதில் ஊட்டசத்து அதிகமிருப்பதால் உடல் ஆற்றலுக்கு பெரிதும் உதவுகிறது மற்றும்  உடம்பில் இருந்து நச்சுதன்மையை நீக்கும் ஒரு கருவியாக செயல்படுகிறது.

ஈரல் சாப்பிடுவதால் உண்டாகும் மருத்துவ பலன் கள்:

ஈரலில் ஹை குவாலிட்டி புரோட்டின் அதிக அளவு உள்ளது. இது உடல் வளர்ச்சிக்கு மிகவும் பயன்படுகிறது.

ஈரலில் அதிக அளவு வைட்டமின் A உள்ளது. வைட்டமின் ஏ கண்பார்வைக்கும், ஆண் பெண் உயிர் அணு வளர்ர்சிக்கும் உதவுகிறது.

ஈரலில் CoQ10 என்ற ஊட்டசத்து உள்ளது இது cardio-vascular செயல்பாட்டிற்கு மிகவும் முக்கியமாகும்.

ஈரல் Anemia- வை குணப்படுத்துகிறது. வாரம் ஒரு முறை ஈரலை சாப்பிடுவதன் மூலம் pernicious anemia  -வை வருமுன் தடுக்கலாம்.

ஈரல் உடம்பில் சக்தியை பெருக்க மிகவும் உதவுகிறது.

ஈரலில் அதிக அளவு வைட்டமின்  B-12 ம் ஃபோலிக் ஆக்ஸிட் ( folic acid. ) அதிகம் உள்ளது. இரும்பு சத்தும் அதிகம் உண்டு மேலிம் இதில் copper, zinc and chromium வும் உண்டு



 Eating Raw Liver: Raw liver was used before by physician Max Gerson the juice was extracted by a special juicer to treat patients with pancreatic cancer but later his daughter, Charlotte Gerson dropped this part of the protocol because of the unavailability of fresh clean liver without bacterial contamination. Now a crude liver extract injection or desiccated liver tablets are used in the current protocol. However, Dr. Nicholas Gonzalez, a New York doctor who treats cancer holistically, insists that all his patients eat raw liver.

குறிப்பு : நல்ல ஹெல்த்தி விலங்குகளின் ஈரலை மட்டும் உண்ணவும்.

Caution on Excessive Consumption of Vitamin A:

·         Cod liver oil and other synthetic form of vitamin A is only necessary for healthy adults in very small quantities, but moderate to large amounts were found to cause problems and even contribute to birth defects.

·         Natural vitamin A found in liver is an extremely important nutrient for human health and does not cause problems except in extremely large amounts. Chicken liver, which is lower in vitamin A, may be consumed more frequently. If you experience headaches or joint pains at this level, cut back until the symptoms go away.

இந்த காலத்தில் வயதான காலத்தில் மருந்துக்களை அதிக அளவில் டிபன் போல சாப்பிடுபவர்கள் அதிகம், இவர்கள் ஈரலை சூப்பு செய்து குடித்தால் மிகவும் நல்லது மேலும் அறுவை சிகிச்சை செய்தவர்களும் இதை அருந்தலாம் மிகவும் நல்லது.

இங்கே தரப்பட்ட மருத்துவ குறிப்புகள் தகவலுக்கு மட்டுமே. நீங்கள் உங்கள் டாக்டரிடம் கலந்து ஆலோசித்து தன் பிறகு அவர் அனுமதியளித்தால் மட்டுமே பின்பற்றவும்.


8 comments:

  1. தான் ஊன் பெருக்க தான் பிரிதூனுன்பான் என்னும் திருவள்ளுவரின் வழியில் செல்பவன்

    ReplyDelete
  2. அனைவருக்கும் பயனுள்ள பகிர்வு

    ஈரல் சாப்பிட்டால் அயர்ன் டானிக் என்று தனியாக குடிக்க தேவையில்லை

    ReplyDelete
  3. நல்ல தகவல்

    சாப்பிட ஆரம்பிக்கும் சிறுகுழந்தைகளுக்கு அதிகமாக கொடுப்பது ஈரல் தான்.... செய்யும் முறையில் செய்தால் அனைவருக்கும் பிடிக்கும்

    நல்லதொரு தகவலுக்கு நன்றி சகோ

    ReplyDelete
  4. பயனுள்ள பதிவு.பகிர்வுக்கு நன்றி.

    ReplyDelete
  5. @சூர்ய ஜீவா
    @ஆமினா
    @ஜலிலா காமால்
    @ஆயிஷா அபுல்
    உங்கள் அனைவரின் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.

    ReplyDelete
  6. என்னாச்சு, போன பதிவுல புளி, இப்ப ஈரல்... சமையல் உங்க பொறுப்பில விட்டுட்டாங்களா வீட்டம்மா? :-))

    அசைவத்தில், சதைப்பாகத்தைவிட (மட்டன்,கோழி..) மீதி ஸ்பேர் பார்ட்ஸ் (ஈரல், மூளை போன்ற) எல்லாம் கொழுப்புச்சத்து மிகுந்தது. அதனால், அவசியமான அளவோடு இருப்பது நல்லது.

    ReplyDelete
  7. ஹீசைனம்மா உங்களின் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.
    //சமையல் உங்க பொறுப்பில விட்டுட்டாங்களா வீட்டம்மா? :-))//
    அவங்க என்ன என் பொறுப்பில் விடுகிறது. நாந்தான் போனா போகுதுனு வீக்கெண்டுல அவங்க பொறுப்பில விடுவேன். கிச்சன்லதான் பெண்கள் ரொம்மப பந்தா பண்ணி வாலாட்டுவார்கள். அதனால் கிச்சைனையும் நானே கைப்பற்றி உள்ளேன்...ஹீ...ஹீ

    ReplyDelete
  8. Daily sapida kudukalama 5 yrs Boyku
    2 full piece of liver

    ReplyDelete

நான் அறிவு ஜீவி அல்ல ஒரு சாதாரணமான் மனிதன் தான்.இங்கு நான் பதியும் பதிவுகளில் உள்ள கருத்துகள் "மிகவும் சரி"யென்று சொல்லமாட்டேன் அது அன்றைய மனநிலையில் என் மனதில் எழும் கருத்துகளே...அதனால் உங்களது மனசுலபட்ட மாற்று கருத்துகளை தாராளமாக பகிரலாம். ஆனால் தேவையற்ற, வரம்புமீரிய, அநாகரிகமான வார்த்தைகளாலும் பதிவிற்கு சம்பந்தமில்லாமல் கருத்துக்கள் சொல்லப்பட்டால் எந்த வித பதில் விளக்கமின்றி அந்த கருத்து டெலீட் செய்யப்படும்.