Thursday, September 8, 2011


இப்படியும் சில தமிழர்கள்



எப்போது தமிழனிடம் பணம் இல்லையோ அப்போது அவன் வீட்டில் இருந்து காய்கறிகளை சமைத்து சாப்பிடுவான்.
அதே தமிழனிடம் எப்போது பணம் வருகிறதோ அப்போது அவன் உயர்தர ஹோட்டலுக்கு சென்று பச்சை காய்கறிகளை சாப்பிடுவான்.

எப்போது தமிழனிடம் பணம் இல்லையோ அப்போது அவன் சைக்கிள் ஒட்டுவதன் மூலம் வேலைக்கு செல்வான்
அதே தமிழனிடம் எப்போது பணம் வருகிறதோ அப்போது அவன் சைக்கிள் ஒட்டுவதன் முலம் உடற்பயிற்சி செய்வான்.

எப்போது தமிழனிடம் பணம் இல்லையோ அப்போது அவன் நடந்து உணவை தேடி செல்வான்.
அதே தமிழனிடம் எப்போது பணம் வருகிறதோ அப்போது அவன் நடப்பதன் மூலம் உணவை செரிக்க செய்வான்.

எப்போது தமிழனிடம் பணம் இல்லையோ அப்போது கல்யாணம் செய்து கொள்ள ஆசைப்படுவான்.
அதே தமிழனிடம் எப்போது பணம் வருகிறதோ அப்போது அவன் விவகாரத்து செய்து கொள்ள ஆசைப்படுவான்.

எப்போது தமிழனிடம் பணம் இல்லையோ அப்போது அவன் மனைவி உதவியாளராக (secretary) இருக்க ஆசைப்படுவான்.
அதே தமிழனிடம் எப்போது பணம் வருகிறதோ அப்போது அவன் உதவியாளர் மனைவி போல நடக்க ஆசைப்படுவான்.

எப்போது தமிழனிடம் பணம் இல்லையோ அப்போது அவன் பணக்காரன் போல நடிப்பான்.
அதே தமிழனிடம் எப்போது பணம் வருகிறதோ அப்போது அவன் ஏழை போல நடிப்பான்.

ஷேர் மார்கெட் ரொம்ப மோசமாக இருப்பதாக சொல்லிக் கொண்டேதமிழன் அதில் மீண்டும் மீண்டும் முதலீடு செய்வான்.
பணத்தை பிசாசு என்று தமிழன் சொல்லிக்கொண்டே அதை தேடி செல்வான்.
உயர்ந்த பதவிகளில் இருப்பவர்கள் தனிமைப்படுத்தப் படுவார்கள் என்று சொல்லிக் கொண்டே தமிழர் உயர்ந்த பதவியை அடைய ஆசைப்படுவார்கள்

தமிழா.........தமிழா

இந்த தமிழர்கள் (மனிதர்கள்) சொல்லுவதில் அர்த்தமிருக்காது அதை போல அர்த்தமுள்ளதை சொல்லுவதில்லை.

எளிமையாக சொல்லுவது என்றால் எப்போதும் இவன் உண்மையை சொல்லுவதில்லை.

ஆனால் இப்படியும் சில தமிழர்கள் நல்ல தமிழர்கள் உண்டு.

5 comments:

  1. இப்படியும் சில தமிழர்களில் சில நல்ல தமிழர்களைமட்டும்மனதில் நிறுத்திக்கொள்ளலாமே.

    ReplyDelete
  2. லக்ஷ்மி அம்மா & அமுதா கிருஷ்ணன் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி

    //இப்படியும் சில தமிழர்களில் சில நல்ல தமிழர்களைமட்டும்மனதில் நிறுத்திக்கொள்ளலாமே.//
    நல்லதை விட கெட்டதுதான் மனதில் ஆழப்பதிகிறது. ஆனால் நல்லதை மனதில் நிறுத்தி கொள்ள பயிற்சி தேவைப்படுகிறது. அதில் வெற்றீ பெறுபவன் தான் மனிதனாக வாழ்கிறான். மனிதனாக வாழ நான் எப்போதும் முயற்சி செய்து மனிதானாக வாழ்ந்து கொண்டிருக்கிறேன்.

    ReplyDelete
  3. அன்புடன் வணக்கம்
    தமிழனின் பெருமை இப்படித்தான் இருக்கிறது ?
    வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  4. நல்லவனா இருக்க கூட மூலை இருக்கணும். மூலை இல்லா தமிழனை விட்டுடுவோம்....

    ReplyDelete

நான் அறிவு ஜீவி அல்ல ஒரு சாதாரணமான் மனிதன் தான்.இங்கு நான் பதியும் பதிவுகளில் உள்ள கருத்துகள் "மிகவும் சரி"யென்று சொல்லமாட்டேன் அது அன்றைய மனநிலையில் என் மனதில் எழும் கருத்துகளே...அதனால் உங்களது மனசுலபட்ட மாற்று கருத்துகளை தாராளமாக பகிரலாம். ஆனால் தேவையற்ற, வரம்புமீரிய, அநாகரிகமான வார்த்தைகளாலும் பதிவிற்கு சம்பந்தமில்லாமல் கருத்துக்கள் சொல்லப்பட்டால் எந்த வித பதில் விளக்கமின்றி அந்த கருத்து டெலீட் செய்யப்படும்.