ராகுல் காந்தியைப் பலர் கோமாளி என்று கிண்டல் செய்கிறார்கள்... அவர்களுக்கு ஒன்று தெரியவில்லை கோமாளிகள் ஒன்றும் முட்டாள்கள் அல்ல அவர்கள் மற்றவர்களைச் சிரிக்க வைக்கச் செய்வதனால்தான் அவர்களைக் கோமாளி என்கிறார்களே ஒழிய முட்டாள்கள் என்பதால் அல்ல.மற்றவர்களை அழுக வைப்பது மிக எளிது அதைத்தான் நாசக்காரர்கள் மோடியும் அமித்ஷாவும் செய்கிறார்கள்.. ஆனால் மற்றவர்களை முகம் மலரச் செய்வது என்பது எளிதல்ல
சில நாட்களுக்கு முன்பு அமித்ஷா பேசும் போது கொரோனா காலத்தில் ராகுல் காந்தி ஒன்றும் செய்யவில்லை என்று குரை கூறி இருக்கிறார்.ஆமாம் அய்யா அவர் ஒன்றும் உங்களை மாதிரி கொரோனா காலத்தில் PM CARE என்று சொல்லி மக்களை ஏமாற்றிச் சுரண்டவில்லைதான்..அதுமட்டுமல்ல ஆட்சியில் பதவியில் இருக்கும் நீங்களே ஒன்றும் செய்யாத போது ஒரு தேசிய கட்சியில் இளைஞன் என்ன செய்ய முடியும் என்று நீங்கள் கேள்வி கேட்கிறீர்கள்
இதுல வேற அறிவு ஜீவிகள் என்று தங்களைக் கருதிக் கொள்ளும் சங்கிகளும் ராகுல் காந்தியைக் கோமாளி என்று கிண்டல் பண்ணிக் கொண்டிருக்கிறார்கள் அடேய் ராமர் தன் மனைவி சீதையைத் தீக்குளிக்க வைத்தார் காரணம் அவர் மனைவியின் மீது மற்றவர்கள் சந்தேகம் கொண்டதால்... அப்படிப்பட்ட ராமரை தெய்வமாகக் கொண்டாடும் உங்கள் தலைவர் அதுமட்டுமல்ல அந்த ராமருக்குக் கோயில் கட்டும் அந்த தலைவர் கொரோனாவால் தேசம் சீரழிந்த நேரத்தில் PM CARE என்று சொல்லி வசூலித்த பணத்தை என்ன செய்தீர்கள் என்று பொது மக்கள் சந்தேகத்துடன் கோர்ர்ட்டுக்கு போன போது வெளிப்படையாகக் கணக்கைக் காண்பித்து தன்னை சுத்தமானவன் என்று காண்பிக்காமல் மூடி மறைத்துச் செய்வது கோமாளித்தனமா நயவஞ்சகத்தனமா இதைக் கேட்க வக்கில்லாத நீங்கள் அறிவாளிகளா அல்லது ஏமாளிகளா?
எதற்கு எடுத்தாலும் ஒரே தேசம் என்று மூச்சுக்கு மூன்னூறு தடவை கூவும் கோமாளி கொரோனா சமயத்தில் புலம் பெயரும் தொழிலாளிகளுக்கான ரயில் செலவுகளை மாநில அரசுதான் ஏற்க வேண்டும் கூறுவதுதான் சரியா? அது கோமாளித்தனமா மற்றவர்களை ஏமாற்றும் கோமாளித்தனமா?
கொரோனாவால் ஏற்பட்ட பொருளாதார சிக்கலைத் தீர்க்க 20 லட்சக் கோடியில் முதலில் திட்டம் போட்டு அறிவித்துவிட்டு அதனால் மக்கள் நலம் பெறுகிறார்கள் என்று சொல்லி அதன் பின் திட்டத்திற்கான நிதியைத் தேடிக் கொண்டிருக்கும் மோடி கோமாளியா? அல்லது அதையும் புரிந்து கொள்ள முடியாமல் அதை ஆதரிக்கும் சங்கிகள் கூட்டங்களான நீங்கள் கோமாளியா?
Rollins College in Florida, USA,Trinity College, Cambridge இந்த காலேஜில் படித்து பட்டம் பெற்றவர்தான் கோமாளியாம் போட்டோஷாப் மூலம் பட்டம் பெற்ற மோடிதான் அறிவாளியாம் இப்படிப் பேசுவது யார் என்று பார்த்தால் மேல்மட்ட சாதியைச் சார்ந்த வேதம் படித்த தங்களை மிக அறிவுஜிவிகள் என்று கருதிக் கொள்ளும் சங்கிகள்
அடேய் வேதம் படித்த மோமாளி சங்கிகளே அடுத்தவன் முதுகில் இருக்கும் அழுக்கைப் பார்க்காமல் முதலில் உங்கள் புட்டத்தில் இருக்கும் அசுத்தங்களைக் கழுவிவிட்டு அதன் பின் கேலி செய்ய வாருங்கள் நீங்கள் ஒரு நல்ல குடிமகன் என்றால் தேசத்தை நேசிப்பவர் என்றால் யார் ஆட்சியில் இருந்து ஆட்சி செய்கிறாரகளோ அவர்கள் நல்லது செய்யும் போது பாராட்டுங்கள் அதைப் போல அவர்கள் நல்லது செய்யாமல் இருக்கும் போது அவர்களின் தவறுகளை சுட்டிக்காட்டி விமர்சியுங்கள் தட்டிக் கேளுங்கள் அதுதான்நல்ல குடிமகனுக்கு அர்த்தம் அதைவிட்டு விட்டு மோசம் செய்பவனை துரோகம் செய்பவனை எல்லாம் அறிவாளியாக்காதீர்கள்
மதுரைத்தமிழன்
Don't waste time playing clown with social media accounts, deal with coronavirus: Rahul Gandhi to PM Narendra Modi
வேறு வழியில்லை... நம் நாட்டின் விதி...
ReplyDeleteஅரசியல் பிழைத்தோர்க்கு அறம் கூற்றாகும்...
"கோ"மாளிகள் அறிவாளிகளே .
ReplyDelete100% Correct!!!!!
ReplyDeleteவணக்கம்
ReplyDeleteகோமாளிகள் எப்போதும் புத்திசாலிகள்தான்...
நன்றி
அன்புடன்
ரூபன்
இதுதான் அரசியல்.
ReplyDelete