Friday, January 13, 2012இப்படி ஒரு நட்பா?உறவா ?ஆண் பெண் இருவரும் அவசியம் படிக்க வேண்டிய பதிவு


ஒரு உல்லாச கப்பல் கடலில் சென்ற போது   அடித்த புயலினால்  உடைந்தது. அதில் இருந்த இரு  ஆண்கள் மட்டுமே தப்பி நீந்தி வந்து அருகில் உள்ள ஒரு சிறிய தீவை சென்று அடைந்தனர். அந்த தீவு ஒரு பாலைவனம் போல இருந்தது.

அந்த இருவரும் மிகவும் நல்ல நண்பர்கள். அவர்களுக்கு என்ன செய்வது என்பதே தெரியவில்லை. முடிவில் இருவரும் கடவுளை வேண்டிக் கொள்வது என்று முடிவு செய்தனர். அப்போது யாருடைய பிரார்த்தனைக்கு நல்ல சக்தி இருக்கிறது பார்ப்போம் என்று முடிவு செய்தனர், அதன்படி அந்த தீவை இரண்டாக பிரித்து அதில் தனி தனியாக தங்குவதற்கு உடன்பட்டனர்.
முதலில் இருவரும் உணவுக்காக பிரார்த்தனை செய்தனர். அவர்களின் பிரார்த்தனைபடி ஒருவன் நிலத்தில் பலவிதமான பழமரங்கள் வந்தன. அதை அவன் சாப்பிட்டான் ஆனால் மற்றவன் நிலமோ தரிசு நிலமாகவே இருந்தது.அவன் பசியோடு இருந்தான்.

பசியாறிய மனிதனுக்கோ போரடித்தது, தனக்கு அருகில் மனைவியாக ஒரு  பெண்  இருந்தால் நன்றாக இருக்குமே என்று வேண்டினான் அவனது வேண்டுதல் படியே அந்த தீவுக்கு அருகில் வந்த படகு உடைந்து அதில் இருந்த ஒரு பெண் மட்டும் உயிர்தப்பி அந்த தீவிற்கு வந்து சேர்ந்தாள்,தீவின் மற்றொரு பக்கம் இருந்தவன் இன்னும் பசியால் தனிமையில் இருந்தான்.


முதல் மனிதன் செய்த வேண்டுதல்படி நல்ல உணவுகள்,துணிகள், நல்ல வீடு எல்லாம் மேஜிக் போல வந்தன. ஆனால் அவன் நண்பனுக்கோ ஒன்றும் கிடைக்கவில்லை.அவன் உருக்குலைந்து போனான்.இப்படியாக ஒருவாரம் கழிந்தது

இறுதியாக முதல் மனிதன் தன் புது மனைவியுடன் தன் சொந்த இடத்துக்கு போவதற்கு வேண்டி ஒரு படகுக்காக வேண்டினான்.அதுவும் அடுத்தநாள் வந்தது. முதல் மனிதன் தன் நண்பனை அழைக்காமல் தன் புது மனைவியுடன் அதில் ஏறி அந்த தீவை விட்டு செல்ல ஆயுத்தமானான். அவன் நினைத்தான் தன் நண்பன் ஓன்றுக்கும் உதவாதவன் கடவுளின் ஆசிர்வாதம் கூட அவனுக்கு கிடைக்கவில்லை அவனுடைய பிரார்தனைகளில் ஓன்று கூட கடவுள் நிறைவேற்றி வைக்கவில்லை. அதானல் அவனை அழைத்து செல்ல அவனுக்கு இஷ்டமில்லை,

அப்போது அந்த போட்டு கிளம்ப தொடங்கியதும் வானத்தில் இருந்து ஒரு குரல் ஒலிக்க தொடங்கியது ஏன் உன் நண்பனை தனியாக இந்த தீவில் விட்டு செல்கிறாய் என்று அந்த குரல் கேட்டது.

அதற்கு அந்த மனிதன் சொன்னான் நான் கடவுளிடம் பிரார்த்தனை செய்தேன் அவர் என்னை ஆசிர்வாதித்து இது எல்லாம் எனக்கு மட்டும் கிடைக்க செய்தார். என் நண்பனின் பிரார்தனை ஓன்றுக்கும்கூட கடவுள் செவி சாய்க்கவில்லை.அவன் ஓன்று கூட பெற தகுதியில்லாதவன் என்று சொன்னான்.

அந்த குரல் அவனிடம் மறுபடியும் பேசியது மகனே நீ நினைப்பது தவறு. உன் நண்பன் பிரார்த்தனையில் ஒன்றே ஓன்று மட்டும் கேட்டான். அந்த பிரார்த்னையையும் நான் நிறைவேற்றி வைத்தேன். அது மட்டும் அவன் கேட்கவில்லை என்றால் உனக்கு எந்தவித ஆசிர்வாதமும் பலனும் கிடைத்து இருக்காது.

அந்த மனிதன் கேட்டான் சொல்லுங்க அப்படி அவன் என்ன பிரார்த்தனையில் கேட்டான்? நான் அவனுக்கு கடமை ஏதாவது பட்டிருக்கிறேனா?

உன் நண்பன் பிரார்த்தனையில் என் நண்பன் வேண்டுவதை மட்டும் நிறைவேற்றிவை அதுபோதும் எனக்கென்று கேட்க எதுவும் இல்லை  என்றுதான் வேண்டினான்


மக்காஸ் : நம்முடைய பிரார்த்தனைகளால் மட்டுமே எல்லாம் நமக்கு கிடைத்துவிடுவதில்லை.மற்றவர்களின் வேண்டுதல்களும் அத்ற்கு உதவி புரிகின்றன என்பதை மறந்து விட வேண்டாம். நம்மை நேசிப்பவர்களை யாராக இருந்தாலும் ஓதுக்கி வைத்துவிட வேண்டாம் & சந்தேகப்படவேண்டாம். உறவையும் நட்பையும் மதிக்க கற்று கொள்ளுங்கள்.

இதை புரிந்து கொண்டவர்களுக்கு வாழ்த்துக்கள் புரியாதவர்கள் மீண்டும் ஒரு முறை படியுங்கள் & உங்களுக்காக பிரார்தனை செய்யும் முகம் தெரியாத நண்பர்களில் நானும் ஒருவன் என்பதை மறக்க வேண்டாம்

இதையும் படியுங்க நல்ல பதிவுதானுங்க....நட்பை பற்றிய ஒரு நல்ல பதிவு  எனது பதிவுகளில் தலைப்பைபார்க்காதிர்கள் அந்த பதிவில்லுள்ள விஷயங்களை பாருங்கள். தலைப்பு அந்த நேரத்திற்கு வந்த செய்திகளின் அடிப்படையில் வைத்து இருப்பேன்.

------
டிஸ்கி : சி.பி. செந்தில்குமார் 1000 பதிவுகள் போட்டு சாதனை புரிந்தாக இன்றுதான் படித்தேன். வாழ்த்துக்கள்!!!!!!அவருக்கும் அவர் மற்றவர்களிடம் கொண்ட நட்புக்காக இந்த பதிவை அவருக்காக வெளியிடுகிறேன்

17 comments:

 1. அருமையான கருத்தைச் சொல்லிப் போகும்
  அழகான நீதிக்கதை
  நல்லதையே நினைப்போம்
  நல்லதையே செய்வோம்
  நல்லதே நடக்கும்

  தங்களுக்கும் தங்கள் குடும்பத்தாருக்கும்
  இனிய பொங்கல் திரு நாள் வாழ்த்துக்கள்

  ReplyDelete
 2. இந்த நல்ல நாளிலே நல்லதொரு இனிய செய்தியினை
  தெரிந்து கொண்டு புதிதாக புத்துணர்வுடன் துவங்கி இருக்கிறேன்.
  கதை மிக அருமை. கூட்டுப்ப்ரார்த்தனை எல்லாம் இப்படிதான்
  பலிக்கிறது போலும். நீங்கள் இந்த இடுகையை உங்கள் நண்பருக்கு
  சமர்ப்பித்து இருப்பது முத்தாய்ப்பாக உள்ளது.
  பகிர்வுக்கு நன்றி !

  ReplyDelete
 3. உண்மைதான் மற்றவர்களுக்காக பிரார்த்தனை செய்வது சிறந்த விஷயம்தான். அதை ந்ல்லா சொல்லி இருக்கீங்க. வாழ்த்துகள்.

  ReplyDelete
 4. // நம்முடைய பிரார்த்தனைகளால் மட்டுமே எல்லாம் நமக்கு கிடைத்துவிடுவதில்லை.மற்றவர்களின் வேண்டுதல்களும் அத்ற்கு உதவி புரிகின்றன என்பதை மறந்து விட வேண்டாம். நம்மை நேசிப்பவர்களை யாராக இருந்தாலும் ஓதுக்கி வைத்துவிட வேண்டாம் & சந்தேகப்படவேண்டாம். உறவையும் நட்பையும் மதிக்க கற்று கொள்ளுங்கள் //

  காலையிலேயே ஒரு நல்ல மெசேஜ். மிகவும் நன்றி.

  ReplyDelete
 5. இனிய தைப்பொங்கல் நல்வாழ்த்துக்கள் !!!

  ReplyDelete
 6. நல்லதையே நினைப்போம்
  நல்லதையே செய்வோம்
  நல்லதே நடக்கும்

  தங்களுக்கும் தங்கள் குடும்பத்தாருக்கும்
  இனிய பொங்கல் திரு நாள் வாழ்த்துக்கள்

  ReplyDelete
 7. @ரமணி சார் உங்கள் முதல் வருகைக்கும் விரிவான கருத்துக்கும் நன்றிகள்.

  ReplyDelete
 8. @ஸ்ரவாணி வருகைக்கும் கருத்துக்கும் எனது மனமார்ந்த நன்றிகள்!!!!!!எல்லா நாளும் நல்ல நாள்தான் நாம் அதை எப்படி எடுத்து கொள்கிறோம் எனபதை பொறுத்து அது அமைகிறது

  ReplyDelete
 9. @லஷ்மி அம்மா உங்கள் வருகைக்கும் கருத்துக்கும் எனது மனமார்ந்த நன்றிகள்! உங்களைப் போன்ற பெரியவர்கள் வந்து படித்து நல்லா இருக்கிறது என்றும் சொல்லும் போது எனக்கு ஒரு பெரிய அவார்டு கிடைத்தது போல இருக்கிறது. ரொம்ப சந்தோசம் அம்மா

  ReplyDelete
 10. @ஹாலிவுட் ரசிகன்
  @ அருள்
  @ சக்திவேல்
  @கலைவண்ணன்
  அனைவரின் வருகைக்கும் கருத்துக்கும் எனது மனமார்ந்த நன்றிகள்

  உங்களைப் போல நண்பர்கள் வந்து ஒரு நல்ல பதிவுக்கு வந்து கருத்து தெரிவிக்கும் போது மிக மகிழ்சியாக இருக்கிறது. மீணடும் எனது நன்றிகள்

  ReplyDelete
 11. நன்றிகள்...

  பதிவு நல்லா இருக்கு.

  ReplyDelete
 12. நண்பர்கள் பற்றி இவ்வளவு அருமையாக நான் படித்ததே இல்லை! மிகவும் உணர்வு பூர்வமாக உள்ளது !

  ReplyDelete
 13. இந்த நீதிக்கதை மிகவும் சிறப்பாக உள்ளது. இன்று 28.12.2012 வலைச்சரத்தில் இதுபற்றி பாராட்டிப் பேசப்பட்டுள்ளது. அதற்கும் சேர்த்து என் அன்பான வாழ்த்துகள் பாராட்டுக்கள் நண்பா. அன்புடன் VGK

  ReplyDelete
 14. அருமையான நீதிக்கதை! நட்பை சிறப்பிக்கும் நல்லதொரு பகிர்வு! வாழ்த்துக்களும் நன்றியும்! நண்பர்கள் தினத்தில் இந்த பதிவை நினைவுகூர்ந்து படிக்கவைத்தமை இன்னும் சிறப்பு! நன்றி!

  ReplyDelete
 15. எத்தனை அற்புதம் இந்த வரிகள் சொல்லும் கருத்து...

  தனக்கென எதுவும் வேண்டாம் என் நண்பன் வேண்டியதெல்லாம் தா பகவானே.... இதல்லவா நேர்மையான நட்பு....

  சுயநலம் கலந்ததெல்லாம் நட்பே இல்லை...

  தன்னலம் கருதாதது நல் நட்பு....

  அருமையான கருத்தைச்சொன்ன வரிகள்பா...

  ReplyDelete

நான் அறிவு ஜீவி அல்ல ஒரு சாதாரணமான் மனிதன் தான்.இங்கு நான் பதியும் பதிவுகளில் உள்ள கருத்துகள் "மிகவும் சரி"யென்று சொல்லமாட்டேன் அது அன்றைய மனநிலையில் என் மனதில் எழும் கருத்துகளே...அதனால் உங்களது மனசுலபட்ட மாற்று கருத்துகளை தாராளமாக பகிரலாம். ஆனால் தேவையற்ற, வரம்புமீரிய, அநாகரிகமான வார்த்தைகளாலும் பதிவிற்கு சம்பந்தமில்லாமல் கருத்துக்கள் சொல்லப்பட்டால் எந்த வித பதில் விளக்கமின்றி அந்த கருத்து டெலீட் செய்யப்படும்.