யாரும் அறியா "அந்த" ரகசியம்? உங்களுக்காக (Perfect-Relationships )
பென்சில் : ஸாரி
ரப்பர் : ஸாரி எதுக்கு? நீ ஒன்றும் தப்பி ஏதும் பண்ணவில்லையே?
பென்சில் ; இல்லை. நான் எப்பல்லாம் தப்பு பண்ணிகிறேனோ அப்பவெல்லாம் நீ வந்து அழித்து விடுகிறாய். எனது தவறை எல்லாம் மறைய செய்யும் போது நீயும் சிறிதுசிறிதாக கரைய தொடங்குகிறாய். என்னால் நீ காயப்படுவதினால்தான் நான் ஸாரி சொல்லுகிறேன்.
ரப்பர் : அது உண்மைதான். ஆனால் அது பற்றி எனக்கு கவலையில்லை. நான் பிறந்ததே அதற்குதான். நீ எப்போது எல்லாம் தவறு செய்கிறாயோ அப்போது எல்லாம் உனக்கு உதவுவதற்க்காகத்தான் நான் பிறந்தேன். எனக்கு தெரியும் ஒரு நாள் நான் தேந்தே அழிந்து போய்விடுவேன். நீயும் எனக்கு மாற்றாக புதிய ஓன்றை கொண்டு வந்துவிடுவாய். எனக்கு என் கடமையை செய்வதில் சந்தோஷமே அதனால் கவலைப்படுவதை நிறுத்தி கொள். நீ கவலைப்படுவதை பார்க்கும் போது எனக்கு மிக கஷ்டமாக இருக்கிறது என்று சொன்னது.
என்னங்க நான் என்ன பென்சில் ரப்பர் கதையையா உங்ககிட்ட சொன்னேனு நினைச்சா அது தப்புங்க. நான் சொன்னது உறவின் கதைங்க. ரப்பர்தாங்க பெற்றோர்கள் பென்சில்கள் எல்லாம் குழந்தைங்க...
பெற்றோர்கள் எப்போதும் குழந்தைகளுக்காகவே வாழ்ந்து ,அவர்கள் செய்யும் தவறுகளை சரி செய்து திருத்தி வாழ்கையை பிரகாசிக்க செய்து பிரகாசம் குறைந்து போய்விடுகிறார்கள். ஆனால் குழந்தைகள் புதிய வாழ்க்கை துணையை கைபிடித்து வாழ்க்கையை தொடருகின்றனர். அதை கண்டு மகிழ்ச்சியடைகிறார்கள் பெற்றோர்கள், அவர்களுக்கு வேண்டியது எல்லாம் பிள்ளைகள் வாழ்வு நலமுடன் இருப்பதுதான்.
எனக்கு இந்த பென்சில் ரப்பர் உவமை பிடித்து இருந்ததால் இதை உங்களிடம் சொல்ல ஆசையால்தான் இந்த பதிவுங்க/
இந்த கதைக்கும் இந்த பதிவின் தலைப்பானா "யாரும் அறியா "அந்த" ரகசியத்துக்கு என்ன தொடர்பு என்று கேட்டு கல்லையும் அருவாவையும் தூக்கி வருவது புரிகிறது ஆனா மக்கா நீங்க எல்லாம் ரொம்ப அவசரப்படுறிங்க ஜெயலலிதா அம்மா மாதிரி
அந்த ரகசியத்தை சொல்லாம நான் பதிவை முடிக்க மாட்ட்டேன்.
அந்த யாரும் அறியா ரகசியம் என்னன்னா? இது என்னுடைய 300 வது பதிவுங்க....அதுதானங்க இது உங்களுக்கு எல்லாம் நான் சொல்வில்லை என்றால் ரகசியமாக இருந்து இருக்கும். எனக்கு ரகசியத்தை ஒளிச்சு வைக்க தெரியாதுங்க அதனாலதான் பதிவு போட்டு ஊருகெல்லாம் சொல்லிடேனுங்க....ஹீ...ஹீ பாத்தீங்களா ஊருக்கு வெளியே இருந்து பதிவு போடுவதில் உள்ள செளரியத்தை? அடிவாங்கம்மா தப்பிச்சுடலாம்.
அழகான ரசனையான பதிவு வாழ்த்துகள்.
ReplyDelete300 க்கு வாழ்த்துகள்.
ReplyDelete300 க்கு வாழ்த்துகள்.
ReplyDeleteAll the best nanba....
ReplyDeleteAll the best nanba...
ReplyDeleteமுன்னூறுக்கு வாழ்த்துக்கள்......
ReplyDelete@தனசேகரன்
ReplyDelete@வை.கோபாலகிருஷ்ணன் சார்
@காஞ்சனா ராதாகிருஷணன் மேடம்
@விஜய்
@புதுகோட்டை செல்வா
உங்கள் அனைவரின் வருகைக்கும் பின்னுட்டத்திற்கும் என மனமார்ந்த நன்றிகள். வாழ்க வளமுடன்
நகைச்சுவையாக சொல்லி உள்ள நடை
ReplyDeleteஎன்னை மிகவும் கவர்கிறது.
வாழ்த்துக்கள் 300 kku ippo!
ரசனையான உவமைகள் ..!!! நன்று
ReplyDelete