முத்து சிதறல் 02 - நிதானம் தவறும் தந்தையே......ஒரு வார்த்தை
படித்து சிந்திக்க ஒரு கதை
ஒரு மனிதன் தான் வாங்கிய புதிய காரை துடைத்து பாலீஸ் பண்ணி அழகு பார்த்து கொண்டிருந்தான். அப்போது அந்த காருக்கு அருகில் அவனது நாலு வயது குழந்தை விளையாடி கொண்டிருந்தது.விளையாடிக் கொண்டிருந்த அந்த குழந்தை அருகில் இருந்த கல்லை எடுத்து அந்த புதிய காரில் கிறுக்க ஆரம்பித்தது. வேறு வேலையில் கவனம் செலுத்தி கொண்டிருந்த அந்த தந்தை அதை கவனிக்காமல் இருந்தார். தீடீரென்று அவர் காதில் அந்த சத்தம் பலமாக விழவே திரும்பி பார்த்த அந்த தந்தை குழந்தை கல்லை கொண்டு புதிய காரில் கிறுக்கி கொண்டிருந்ததை கண்டு மிக கோபம் கொண்டு அந்த குழந்தை கையை பிடித்து இழுத்து அதில் அடிக்க தொடங்கினார். அவருக்கு வந்த கோபத்த்தில் கையில் இருந்த இரும்பு ஸ்பெனரை கொண்டு அடித்ததை அவர் உணரவில்லை. அந்த குழந்தை வலியில் மூர்ச்சை அடைந்ததை கண்ட பின் சுய நிலைக்கு வந்த அந்த தந்தை குழந்தையை எடுத்து ஹாஸ்பிட்டலுக்கு கொண்டு போனார்.
முறிந்து போன அந்த பிஞ்சு விரல்களுக்கு சர்ஜரி செய்தடாக்டர் அந்த குழந்தையை வீட்டிற்கு அனுப்பினார். வீட்டிற்கு வந்த அந்த குழந்தை கண்முழித்தவுடன் வலியில் துடித்த அந்த குழந்தை தந்தையை பார்த்து அப்பா என் விரல்கள் முன்னே போல வளர்ந்து நன்றாக ஆகிவிடுமா என்று கேட்டது. பேச வார்த்தைகளற்ற அந்த தந்தை மனமுடைந்து சுத்தியலை எடுத்து அந்த புதிய காரை சுக்கு நூறாக உடைக்க ஆரம்பித்தான்.அப்போதுதான் அவன் கவனித்தான் அவன் குழந்தை கல்லால் ஐ லவ் யூ டாடி என்று கிறுக்கி இருப்பதை . அதை கண்டு அவன் இதயம் சுக்கு நூறாகி போகி தற்கொலை செய்து கொண்டான்
மக்காஸ் கோபம் வரும் பொழுதும் காதல் வரும் போதும் அதற்கு அளவே கிடையாது. அதனால்தான் இந்த இரண்டும் வரும் போது நாம் நிதானம் இழக்க கூடாது அப்படி இழந்தால் நாம் அறிவு இழந்து நடுத்தெருவில் நிற்கதான் வேண்டும்
சிந்தனைக்கு சில வார்த்தைகள் ...
ஏழை
தினமும் உணவு சம்பாதிக்க
பல மைல்கள் நடக்கிறான்,
செல்வந்தன்
தினமும் உண்ட உணவு செரிக்க
பல மைல்கள் நடக்கிறான்!
ஏழை
தினமும் உணவு சம்பாதிக்க
பல மைல்கள் நடக்கிறான்,
செல்வந்தன்
தினமும் உண்ட உணவு செரிக்க
பல மைல்கள் நடக்கிறான்!
மரணத்தைப்பற்றி கவலைப்படாதே!
நீ இருக்கும்வரை
அது வரப்போவதில்லை.-
அது வரும்போது
நீ இருக்கப்போவதில்லை....
நீ இருக்கும்வரை
அது வரப்போவதில்லை.-
அது வரும்போது
நீ இருக்கப்போவதில்லை....
The true man wants two things: danger and play. For that reason he wants woman, as the most dangerous plaything.
சிரிக்க :
மனைவியை தாயாக நினைக்கிறது நல்லதுதான்...அதுக்காக நாம அவுங்க கிட்ட அடிவாங்குறதெல்லாம் ரொம்ப ஓவருங்க!!
எல்லா பதிவுகளையும் காப்பி பேஸ்ட் பண்ணி பதிவு போடுவாரே அந்த பதிவாளர் அவர் என்ன வேலை பார்க்கிறார் என்று உனக்கு தெரியுமாடா?
ஓ....அவரா .....அவன் ஜெராக்ஸ் கடை வச்சிருக்காருடா
ஓ....அவரா .....அவன் ஜெராக்ஸ் கடை வச்சிருக்காருடா
பெண்ணின் திறமையை காண : (Amazing Hand Balancing )
பைத்தியகார திறமையை காண : (Train Stunts in Mumbai local train )
மரணத்தைப்பற்றி கவலைப்படாதே!
ReplyDeleteநீ இருக்கும்வரை
அது வரப்போவதில்லை.-
அது வரும்போது
நீ இருக்கப்போவதில்லை....
எவ்வளவு அழகான வரிகள்
கதை மனதை நெகிழச்செய்த்தது, வாழ்த்துகள்.
nice post.
ReplyDeleteBut seeing the train stunts - my....my.... my heart almost stopped few times.... It is dangerous!
கோபமானது எந்த அளவுக்கு அந்ந்த தந்தையை கொண்டு போயிருக்கு
ReplyDeleteபடிச்சிட்டு ரொம்ப வருத்தமாக இருக்கு.
எதையும் செய்யும் முன் 1 நிமிஷம் யோசித்தாலே போதும்.
(சிரிப்பு செம்ம காமடி) ஹிஹி
மனைவியை தாயாக நினைக்கிறது நல்லதுதான்...அதுக்காக நாம அவுங்க கிட்ட அடிவாங்குறதெல்லாம் ரொம்ப ஓவருங்க!!//
ReplyDeleteஹா ஹா ஹா ஹா அனுபவமா...?
அந்த பெண்ணின் திறமையை பாராட்டுகிறேன் என்னமா பிராக்டிஸ் பண்ணனும் இதுக்கு இல்லையா ஆச்சர்யமா இருக்கு.....!!!
ReplyDeleteஎல்லா உணர்வுகளையும் தொடும் அழகிய பதிவு.வாழ்த்துகள்.
ReplyDeleteஏழை
ReplyDeleteதினமும் உணவு சம்பாதிக்க
பல மைல்கள் நடக்கிறான்,
செல்வந்தன்
தினமும் உண்ட உணவு செரிக்க
பல மைல்கள் நடக்கிறான்!
கதையும் சிந்தனையும் காணொளியும் அருமை
தொடர வாழ்த்துக்கள்
பதிவு முழுதையும் ஹைலைட் செய்யலாம் அவ்ளோ அருமை
ReplyDeleteகதை படித்து மனதொடிந்து போனேன் .அவசரக்கார பெற்றோருக்கு ஒரு பாடம் .பகிர்வுக்கு நன்றி
.கவிதை வரிகளும் மிக அருமை
@லக்ஷ்மி அம்மா உங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி அம்மா
ReplyDelete@ சித்ரா மேடம் ஹார்ட் ஸ்டாப் ஆயிடுத்தா உங்களுக்கா நீங்க ரொம்ப தைரியமான ஆளுன்னுதான் நினைச்சுட்டு இருந்தேன்
ReplyDelete@ஜலீலா கமல் உங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி. கோபம் கண்ணை மூடிவிடும் அதனால்தான் நாம் கோபப்பட்டால் அந்த இடத்தைவிட்டு உடனே விலகி போய்விட வேண்டும்
ReplyDelete@மனோசார் இப்படி ப்ளிக்கா வந்து உண்மையை சொல்லவைக்காதிங்க உண்மையை சொன்ன அதுக்கும் சேர்த்து யாரு அடிவாங்குறது அதுனால அது உண்மையில்லை என்று சொல்லிமுடிக்கிறேன் வம்பு வேண்டாம் அப்பா
ReplyDelete@தனசேகரன் வருகைக்கும் கருத்துக்கும் வாழ்த்துக்கும் நன்றி நண்பரே
ReplyDelete@ரமணி சார் உங்கள் வருகைக்கும் கருத்துக்கும் வாழ்த்துக்கும் நன்றி
ReplyDelete@ஏஞ்சலின் அவர்களுக்கு உங்கள் வருகைக்கும் பதிவுக்கு ஏற்ர கருத்துக்கும் & வாழ்த்துக்கும் நன்றி
ReplyDelete