முத்து சிதறல்-03 நடிப்பதில் ரஜினி சூப்பர் ஸ்டார் ஆனால் நிஜவாழ்க்கையில்??
நிஜவாழ்க்கையில் சூப்பட் ஸ்டார் ::
எந்திரன் படத்தில் ஹிரோ ரஜினி எந்திரமாக தீ பிடித்தவீட்டில் உள்ளவர்களை காப்பாற்றுவது போல நடித்து பல கோடி சம்பாதித்து மக்கள் அபிமானத்தை பிடித்தார். ஆனால் இந்த சிறுவனோ ஏஞ்சலாக செயல்பட்டு நிஜவாழ்க்கையில் பல உயிர்களை காப்பாற்றி இந்திய மக்களின் மனத்தில் உண்மையான ஹீரோவாகிவிட்டான். இவன் சம்பாதித்தது கோடிகணக்கான பணம் அல்ல மனம்தான்
நிழல் ஹிரோவான ரஜினிகாந்த அவர்கள் முடிந்தால் நிஜ ஹீரோவான ஒம் பிரகாஷுக்கு படிக்க பண உதவிகள் தேவைப்பட்டால் செய்து கொடுத்து முன்னேறச் செய்யவேண்டும். இதை அவர் செய்வாரா?
நிஜ ஹீரோவைப் பற்றி நான் படித்த செய்திகள் :
இந்தியாவின் டெல்லியில் நடைபெற்ற 63 வது குடியரசு தின விழாவில் கடந்த வருடத்தில் வீரதீர செயல்கள் புரிந்த மாணவர்களுக்கு குடியரசு தலைவர் பிரதீபா பட்டேல் விருதுகள் வழங்கி கௌரவித்தார். இந்த படத்தில் இருப்பவர் ஓம் பிரகாஷ் (Om Prakash Yadav), உத்தர பிரதேசத்தை சேர்ந்த 11 வயது மாணவன். வீரதீர செயலுக்கான விருது பெற்றவர்களில் இவரும் ஒருவர். இவருக்கு கிடைத்த விருது, 'சஞ்சேய் சோப்ரா விருது' (Sanjay Chopra Award).
7 ம் வகுப்பு படிக்கும் இம்மாணவன், கடந்த 2010ம் ஆண்டு செப்டம்பர் 4ம் தேதி தனது சக மாணவர்களுடன் பள்ளிக்கு வேனில் சென்று கொண்டிருந்த போது, ஏதிர்பாராதவிதமாக வேனின் கேஸ் பிரிவில் மின் கசிவு ஏற்பட்டு வேன் முழுவதுமாக தீப்பிடிக்க தொடங்கியது. வாகன ஓட்டுனர் தன் பக்க கதவை திறந்து ஒடி தப்பித்து கொண்டார்.
ஆனால் ஓம் பிரகாஷ் அப்படி செய்யாமல். வேன் கதவை உடைத்து தன் நண்பர்களை முதலில் வெளியேற்றினான். ஓம் பிரகாஷின் முகத்திலும், கை, முதுகுப்பதியிலும் தீ பற்றிக்கொண்டது. இன்னமும் அந்த தீக்காயங்களின் அடையாளங்கள் அவன் முகத்தில் இருக்கிறது. இந்த சிறுவனுக்கு உள்ள நல்ல எண்ணத்தை பற்றி எப்படி பாரட்டுவது? இவனைப் போன்றவர்கள்தான் வருங்காலத்தில் தலைவர்களாக வரவேண்டும்.
மீண்டும் இதே போன்ற ஒரு ஆபத்து ஏற்பட்டால், உன் உயிரை பணயம் வைப்பாயா? என அவனிடம் அவன் கூறிய பதில் 'ஆம். ஒரு முறையல்ல, ஒவ்வொரு தடவையும்'!
ஹீரோ என்பவன் தன்னை பற்றி நினைக்காமல் முதலில் மற்றவர்களை பற்றி நினைப்பவன்
ஹீரோ என்பவன் மற்றவர்களை பாதுகாக்க தன்னை இழக்க தயங்காதவன்
ஹீரோ என்பவன் கருப்பா சிவப்பா என்று யாரும் கவலைபடுவதில்லை
ஹீரோ என்பவனுக்கு வயது வரம்பு கிடையாது
ஹீரோ என்பவன் ஆணோ,பெண்ணோ அல்லது சிறு குழந்தையாக கூட இருக்கலாம்.
ஹீரோ என்பவன் யாரையும் எதற்காகவும் குறை சொல்லுவதில்லை
ஹீரோ என்பவனுக்கு தைரியமும் மற்றவர்களை நேசிக்கவும் மட்டும் தெரியும்.
மனிதர்கள் பிறந்து மடியலாம் ஆனால் ஹீரோக்கள் என்றும் மடிவதில்லை
அவர்கள் எல்லோர் மனத்திலும் எப்போதும் இருப்பார்கள் இந்த "ஒம் பிரகாஷ்" தேவதையை போல
இன்றைய செய்தியை அறிந்து கொள்ள :
சிரிப்பது உடல் நலத்திற்கு நல்லது என்று தமிழக மக்களுக்கு நன்றாக புரிந்திருப்பதன் காரணத்தால் தான் அரசியல் தலைவர்களின் பேச்சை கேட்க போகிறார்கள்.
சந்தேகத்தை தெளிவு படுத்த :
எனது சந்தேகம் : தமிழகத்தில் காமெடி சங்கங்ளை காமெடி சங்கம் என்று அழைப்பதற்கு பதிலாக ஏன் அரசியல் கட்சிகள் என்று அழைக்கிறார்கள்? தெரிந்தவர்கள் விளக்கம் தரலாம்.
ஏழை சிரிப்பின் ரகசியம் அறிய:
எனது சிரிப்பிற்கான அர்த்தம் நான் மகிழ்ச்சியாக இருக்கிறேன் என்பதல்ல
சில சமயங்களில் கஷ்டங்களையும் என்னால் சமாளிக்க முடியும் என்பதால்
அல்லது அழுதே சோர்ந்து போய்விட்டதால் கூட இருக்கும்.
மனதை கசிந்துருக வைக்கும் படம் :
பிள்ளைகளுக்கு பெற்றவர்கள்தான் பாரமாகிறார்களே ஒழிய
பெற்றவர்களுக்கு பிள்ளைகள் பாரமாவதில்லை எந்த வயதிலும்...
இப்படிதான் இந்த முதியவள் பாடி தூக்கி செல்கிறாளோ?
மண்ணுக்கு மரம் பாரமா மரத்துக்கு இலை பாரமா?
கொடிக்குக் காய் பாரமா பெற்றெடுத்த குழந்தை தாய்க்கு பாரமா?
பாத்து சிரிச்சுட்டு போங்க
இந்த பலசாலி கையையும் மார்பையும் பாருங்க எவ்வளவு ஸ்ட்ராங்க இருக்குனு
உங்கள் கண்ணுக்கு இந்த படம் அசிங்கமாக தெரிந்தால் அது உங்கள் தவறுதான் காரணம் நீங்க நெட்ல பாலான சைட்டுக்கு அடிக்கடி விசிட் செய்கிற ஆளாக இருக்கலாம். அதனால என்னை குறை கூறாதீங்க மக்காஸ்
ஐயோ எங்க வீட்டுகாரம்மா வாரங்க பாருங்க.. வாங்க ஒடிப் போயிடலாம்.
இவன் தான் உண்மையான ஹீரோ..
ReplyDeleteநிழல் ஒருபோதும் நிஜமாக போவதில்லை. திரைப்பட நாயகர்களைப்பற்றி படதயாரிப்பாளர்கள் பணம் சம்பாதிக்க செயற்கையாக உருவாக்கிய இமேஜ் என்ற மாய தோற்றமானது நிஜம் போல தோன்றும் நிழலே....நிஜமான நாயகர்கள் நம் கண் முன்னே எந்தவித கவர்ச்சியும் ஆரவாரமும் இல்லாமல் உலவிக்கொண்டு தான் இருக்கிறார்கள்.என்ன நாம் தான் கண்டு கொள்வதில்லை.
ReplyDeleteஅது சரி இன்னமுமா காமெடி பீஸ்களை நம்புகிறீர்கள்.
கார்டூன் மிக சிறப்பாக இருந்தது.அனுபவிக்காமல் படைக்கவோ ரசிக்கவோ முடியாது.?!
நிஜ தலைவர்களுக்கு என் வாழ்த்துகள்.
ReplyDeleteஒருவரை உயர்த்த இன்னொருவரை தாழ்த்தத்தான் வேண்டுமா?
ReplyDeleteநாட்டில் எத்தையோ பேர் இருக்கும் போது உங்க ஞாபகத்திற்கு ரஜினிதான் முதலில் வருகிறார், இதுவே அவருடைய முக்கியத் துவத்தை உணர்த்துகிறது. நடிப்பு என்பது ரஜினியின் தொழில் சார், அவர் படத்தில் செய்வதெல்லாம் மக்களை மகிழ்விக்க, தயாரிப்பாளர் டைரக்டர் என்ன செய்தால் படம் ஓடுமோ, போட்ட முதலுக்கு மோசமில்லாமல் லாபமும் தருமோ அதைச் செய்யச் சொகிறார்கள், அவரும் வாங்கும் காசுக்குச் செய்கிறார், இதற்கும் மேல் அதற்க்கு எந்த முக்கியத் துவமும் இல்லை. அதை எல்லாம் நிஜ வாழ்க்கையிலும் செய்ய வேண்டுமென்று எதிர்பார்க்க முடியாது. செய் என்று அவரைக் கட்டாயப் படுத்தவும் முடியாது. நாட்டில் எல்லையில் உயிரைப் பணயம் வைத்து காவல் காக்கும் ராணுவ வீரன்தான் நிஜமான ஹீரோ. ஆனால் கிரிக்கெட் மட்டையை கையில் வைத்துக் கொண்டு, ஆட்டம் முடிந்ததும் பெண்கள் பின்னால் சுற்றும் ஊதாரிகளை ஏதோ தேசம் காப்பவன் போல நினைத்து தினமும் அவர்கள் தோற்கும் மேட்சுக்கெல்லாம் புலம்புகிறார்களே, அது நிற்கட்டும், நாடு திருந்தும்.
ReplyDeleteஓம் பிராகாஷ் என் வணக்கங்கள்!
ReplyDeleteமாணவன் ஒம் பிரகாஷுக்கு வணக்கங்கள்!!
ReplyDeleteரஜினிகாந்த்தை குத்தி காட்டுவதற்கு தனிப்பட்ட கருத்து ஏதேனும் உள்ளதா????