Tuesday, January 10, 2012




கடவுள் கூட உட்கார்ந்து சாப்பிடுவோமா?

ஒரு சிறுவன் பையில் சிப்ஸ்,பழங்கள்,பாக்கெட் ஜுஸ் மற்றும் கோக் எடுத்து கொண்டு பார்க்கில் போய்விளையாடிட்டு வருகிறேன் என்று அம்மாவிடம் சொல்லிவிட்டு சென்றான். அவன் பார்க்குக்கு சென்ற போது ஒரு வயதான ஏழை பாட்டி ஒருத்தி பசியோடு அமர்ந்து அங்கிருந்த பறவைகளை வேடிக்கை பார்ப்பதை பார்த்தான்.உடனே பையில் இருந்த சிப்ஸ்பாக்கெட்டை எடுத்து அந்த பாட்டியிடம் கொடுத்து சாப்பிடு பாட்டி என்று சொல்லி தந்தான். அந்த பாட்டி கனிவான புன்னகையோடு அந்த சிறுவன் தந்ததை வாங்கி சாப்பிட்டாள்.

ரொம்ப பசியோடு இருந்த அந்த பாட்டி சாப்பிட்டு முடித்ததும் அவனை பார்த்து புன்னகைத்தாள். அவளின் அந்த புன்னகை அவனுக்குள் ஒருவித சந்தோசத்தை தந்தது. அந்த புன்னகையை மீண்டும் பார்க்க அவன் விரும்பினான் அதனால் அவளுக்கு தனிடம் இருந்த ஜூஸை அவளிடம் கொடுத்து குடிக்க சொன்னான் மறுத்த அந்த பாட்டி அவனின் வற்புறுதலுக்கிணங்க அதை வாங்கி அருந்தினாள்.அப்போது அந்த பாட்டியின் முகத்தில் ஒரு மகிழ்ச்சி புன்னகையை கவனித்தான். அந்த புன்னகை அவனுக்கு பிடித்து போகவே தான் கொண்டு வந்த அனைத்து சிநேக்ஸையும் தானும் சாப்பிட்டு அந்த பாட்டிக்கும் கொடுத்து அவளை மகிழ்வித்து அவளது புன்னகையை பார்த்து மகிழ்ந்து வந்தான்.ஆனால் அவர்கள் இருவரும் ஒரு வார்த்தைகள் கூட பேசவில்லை.

மாலைபொழுதும் வந்து இருட்ட ஆரம்பிக்கவே அவன் வீட்டிற்கு செல்ல தொடங்கினான் இரண்டு அடிகள்தான் எடுத்து வைத்திருப்பான் என்ன நினைத்தானோ அப்படியே ஒடி வந்து அந்த பாட்டியை கட்டி அணைத்துவிட்டு சென்றான். அப்போது அந்த பாட்டி மிக மிக சந்தோஷத்துடன் புன்னகைத்தாள். அதை பார்த்து கொண்டே விட்டிற்கு வந்தான்.

வீட்டு கதவை திறந்த அவனுடைய அம்மா அவனுடைய மிக சந்தோசமான முகத்தை பார்த்து ஆச்சிரியப்பாட்டவாறே பார்க்கில் என்ன நடந்தது உன் முகம் ஏன் இந்த அளவு சந்தோஷமாகவும் பிரகாசமாகவும் உள்ளது என்று கேட்டாள். அதற்கு அவன் சொன்னான். அம்மா நான் இன்று பார்க்கில் கடவுள் கூட உட்கார்ந்து மதிய உணவை சாப்பிட்டேன் என்றான் மேலும் அம்மா பதில் அளிப்பதற்கு முன்பாகவே அந்த கடவுள் மிக அழகாக புன்னகைத்தது அந்த மாதிரி புன்னகையை பார்த்ததே இல்லை என்றான்.

அதே நேரத்தில் அந்த வயதான ஏழை பாட்டியும் தன் வீட்டிற்கு சென்றாள் அவளுடைய மகன் அம்மாவின் மிக சந்தோசமான முகத்தை பார்த்து ஆச்சிரியப்பாட்டவாறே பார்க்கில் என்ன நடந்ததும்மா உன் முகம் ஏன் இந்த அளவு சந்தோஷமாகவும் பிரகாசமாகவும் உள்ளது என்று கேட்டாண். அதற்கு அவள் சொன்னான். மகனே நான் இன்று பார்க்கில் கடவுள் கூட உட்கார்ந்து மதிய உணவை சாப்பிட்டேன் என்றாள் மேலும் மகன் பதில் சொல்லுவதற்கு  முன்பாகவே அந்த கடவுள் மிக அழகாக புன்னகைத்தது அந்த மாதிரி புன்னகையை பார்த்ததே இல்லை என்றான். இது நாள் வரை கடவுள் மிகப் பெரியவர் என்றுதான் நினைத்தி இருந்தேன் ஆனால் கடவுள் மிக சிறியவனாக இருப்பதை இன்றுதான் நான் நேரில் கண்டேன் என்றாள்.

மக்காஸ் அடுத்தவரின் புன்னகையில் தான் நாம் இறைவனை காண முடியும். ஒரு சிறு அணைப்புக்கு உள்ள சக்தி எந்த அளவிற்கு அடுத்தவரின் வாழ்க்கையில் ஒரு மாற்றத்தை ஏற்படுத்தும் என்பதை நாம் அறிந்து கொள்ள வேண்டும் மேலும் கனிவான அன்பான வார்த்தைகள் செயல்கள் வாழ்க்கைக்கு மிக முக்கியம் நண்பர்களே. நாம் மற்றவர்களின் வாழ்க்கையில் ஒரு மாற்றத்தை மட்டுமல்ல நம் வாழ்க்கையிலும் ஒரு நல்ல மாற்றத்தை இந்த செயல்களால் மாற்ற முடியும்.

முடிந்தால் நீங்களும் கடவுள் கூட உட்கார்ந்து இந்த சிறுவன்  சாப்பிட்ட மாதிரி நீங்களும் சாப்பிடலாமே? உங்களுக்கு தெரிந்த கஷ்டப்பட்டு உழைப்பவரை ஒரு நாள் நீங்கள் அழைத்து அவருக்கு ஒரு நல்ல உணவை வாங்கி பகிரலாமே. இதை செய்து பாருங்கள் ஒரு நாளாவது அப்போது கிடைக்கும் மகிழ்ச்சிக்கு அளவே கிடையாது என்பது உங்களுக்கு புரியும்.


நான் ஆங்கிலத்தில் படித்ததை எனது வழியில் மாற்றம் செய்து இங்கு தந்துள்ளேன். கடவுள் கூட உட்கார்ந்து சாப்பிட எனக்கு ஆசை வந்துவிட்டது உங்களுக்கும் ஆசை வந்தால் ஒரு நாளாவது முயற்சி செய்து பாருங்களேன்


16 comments:

  1. இந்த போஸ்ட் ரொம்ப ரொம்ப டச்சிங் ஆ இருந்தது...உருகி போனேன்....நன்றி நெல்லை guy ;-))

    ReplyDelete
  2. மிக மிக அருமையான பதிவு
    நாம் அனைவரும் விரும்பும்போது கடவுளைப் பார்க்கவும்
    கடவுளிடம் உரையாடவும் உணவருந்தவும்
    மனமிருந்தால் மார்க்கம் இருக்கும்போது நாம்தான்
    எங்கெங்கே தேடி அலைந்து நொந்து கொள்கிறோமோ
    மனம் கவர்ந்த அருமையான பதிவு
    வாழ்த்துக்கள்

    ReplyDelete
  3. மனம் நெகிழவைத்த பதிவு.

    ReplyDelete
  4. அழகான பதிவு புன்னகையை விளைத்தது.
    ஆம் நாமும் அன்னதானம் செய்து ஏழையின் சிரிப்பில்
    இறைவனைக் காண்போம்.

    ReplyDelete
  5. நானும் இன்று கடவுளைக் கண்டேன். உங்களின் இந்த அழகிய பதிவினிலே!

    ReplyDelete
  6. MTG ,
    எல்லோரும் என்னப்பா நானே நினைக்காத அளவுக்கு சீரியஸ்
    ஆக எடுத்துக் கொண்டு விட்டீர்கள் ?
    முதலில் உங்கள் பொறுமைக்கு நீண்ட பதிலுக்கு என் இதயப்பூர்வமான நன்றிகள் .
    ஒன்றும் இல்லை , ரமணி சார் ஒரு நாள் எனக்கு வந்து கருத்து சொல்லவில்லை.
    அப்புறம் வந்து சொல்லி விட்டது வேறு விஷயம். நான் ரமணி சாரின் அபிமானி.
    அவரின் பந்தா இல்லாத , பிறர் முதுகில் ஏறி சவாரி செய்யாமல் , மேற்கோள்கள் இடாமல் ,
    100 % சொந்த எழுத்துக்கள் தருபவர். அனுபவசாலி.
    அதனால் எனக்கு கொஞ்சம் குழப்பம். வேதனை. பிடித்திருந்தால் கருத்து இடுவர்.
    இல்லை என்றால் வரமாட்டார்கள் யாரும். உண்மைதான்.
    நான் அவரைக் கம்பெல் செய்து விட்டேனோ
    என்று தோன்றுகிறது.
    அது மட்டும் அல்ல , என் வலைப்பூ என்றில்லை கீதா மேம் , ராஜி இன்னும் நிறைய
    பேரின் சிறந்த படைப்புகளுக்கு உரிய அங்கீகாரம் இருப்பதாகப் படவில்லை எனக்கு.
    நம்மால் புலம்புவதைத் தவிர [vote தவிர] வேறென்ன செய்ய முடியும் ?
    எனக்கு என்று நான் அபிமானிககும் நால்வர் இருந்தால் போரும். popular எல்லாம் வேண்டாம்.
    உங்கள் ideas க்கு நன்றி. செவி மடுக்கிறேன்.
    உண்மையாக. dont be serious abt my writings . ஒரு பயனுள்ள பொழுதுபோக்கு அவ்வளவே.
    உண்மையாக உங்கள் அனைவரின் உற்சாகமூட்டும் ஆறுதல்களினால் iam bounced back .
    many hearty thanks MTG ! happy pongal !

    ReplyDelete
  7. தன்னுயிர் போல் மன்னுயிரை நினைத்தால் மானிடனும் தேவனாவான்.
    மண்ணில் கண்டதெல்லாம் தனதென்று நினைத்தால் அவனே பேயாவான்.......
    நன்றாய் இருந்தது.......நண்பா.

    ReplyDelete
  8. நீண்ட நாட்களுக்கு அப்புறம் வருகிறேன் உங்கள் தளத்திற்கு வந்தவுடன் மனத்தை "டச்" பண்ணியது உங்கள் பதிவு. கூடிய சீக்கிரம் நானும் கடவுள்கூட நான் சாப்பிட போகிறேன், உங்கள் பதிவுகள் எல்லாம் அருமை தமிழா

    ReplyDelete
  9. @ஆனந்தி மேடம் நீண்ட நாட்களுக்கு அப்புறம் வந்ததுமட்டுமல்லாமல் கருத்தும் சொன்ன உங்களுக்கு மனம் மார்ந்த நன்றிகள். நேரம் கிடைக்கும் போது முடிந்தால் வாருங்கள் நன்றி அப்புறம் பாத்துகுங்க ரொம்ப உருகி போயிடாதீங்க அது நல்லதுக்கு இல்லை மேடம் உங்களுக்கு கண்ணாடி தேவைப்படும் போலிருக்கிறது வயதாகிவிட்டதுஅல்லவா அதனால் தான் மதுரைGUy யை நெல்லைGuy என்று அழைக்கிறிர்கள். ஹீ...ஹீ.ஹீயீயீயீயீய்

    ReplyDelete
  10. @ரமணி சார் உண்மைதான் மனம் இருந்தால் மார்க்கம் உண்டுதான்

    ReplyDelete
  11. @ரிஷி உங்கள் கருத்துக்கு நன்றி

    ReplyDelete
  12. @ஸ்ரவாணி இந்த பதிவு சில பேருக்காவது புன்னகை வர வழைத்தது என்றால் எனக்கு மிக சந்தோசமே .உங்கள் கருத்துக்கு நன்றி

    ReplyDelete
  13. @வை.கோ சார் நானும் உங்கள் அழகிய பின்னுட்டதில் மகிழ்ச்சி அடைந்தேன்

    ReplyDelete
  14. @புதுகை செல்வா நேரம் செலவழித்து பின்னுட்டம் இட்ட உங்களுக்கு நன்றிகள்

    ReplyDelete
  15. @அனு உங்கள் வருகைக்கு நன்றி. (என்னை அழைத்துசாப்பிட்டாலும் கடவுள் கூட சாப்பிட்ட மாதிரிதான்). இந்த பதிவு உங்களுள் ஒரு நல்ல எண்ணத்தை கொடுத்துள்ளது என்பதை அறியும் போது மிக மகிழ்ச்சியே. நன்றி அனு

    ReplyDelete
  16. இங்கே வருகை தந்து கருத்துக்கள் தந்த அனைவருக்கும் எனது நன்றிகள் ஒரு நல்ல பதிவுக்கு கிடைத்த அங்கிகாரமாக நான் இதை எடுத்து கொள்கிறேன்

    ReplyDelete

நான் அறிவு ஜீவி அல்ல ஒரு சாதாரணமான் மனிதன் தான்.இங்கு நான் பதியும் பதிவுகளில் உள்ள கருத்துகள் "மிகவும் சரி"யென்று சொல்லமாட்டேன் அது அன்றைய மனநிலையில் என் மனதில் எழும் கருத்துகளே...அதனால் உங்களது மனசுலபட்ட மாற்று கருத்துகளை தாராளமாக பகிரலாம். ஆனால் தேவையற்ற, வரம்புமீரிய, அநாகரிகமான வார்த்தைகளாலும் பதிவிற்கு சம்பந்தமில்லாமல் கருத்துக்கள் சொல்லப்பட்டால் எந்த வித பதில் விளக்கமின்றி அந்த கருத்து டெலீட் செய்யப்படும்.