மாத்தி யோசி : பிறந்தால் பெண் ஜென்மமாக பிறக்க வேண்டும்
கட்டிலில் படுத்தவாறே மனோ யோசித்து கொண்டிருந்தான், என்னடா இந்த ஆண் ஜென்ம வாழ்க்கை, காலையில் இருந்து இரவு முழுவதும் வேலை வேலைதான் எப்பதான் நமக்கு ரெஸ்ட் கிடைக்குமோ? நாம் செத்த பிறகுதான் கிடைக்கும் போல இருக்கிறது என்று நினைத்தவாறே தினசரி நடக்கும் நிகழ்ச்சிகளை அப்படியே கண் முன்னால் கொண்டு வந்தான் மனோ ( சத்தியமா இது நாஞ்சில் மனோ அல்ல மனோ என்ற பெயர் பிடித்தால் இந்த கதையில் வரும் கதாநாயகனுக்கு இந்த பெயர் வைத்துள்ளேன் கதாநாயகிக்கு பெயர் வைத்து நான் வம்பில் மாட்டிக் கொள்ளவில்லை. இதை படிப்பவர்கள் பின்னுட்டத்தில் கதாநாயகிக்கான பெயரை செலக்ட் செய்து சொல்லவும் பெண் பதிவாளர்களின் பெயராக இருத்தல் நலம். தைரியம் இருக்கும் ஆண்பதிவாளர்கள் முயற்சி செய்யலாம். ஹீ..ஹீ.)
காலையில் நான்கு மணிக்கே எழுந்திருந்து அவசர அவசரமாக சமையல் செய்து, குழந்தைகளை ஸ்கூலுக்கு தயார் செய்து அனுப்பிவிட்டு, அதே நேரத்தில் எப்போதும் கரித்துகொண்டே இருக்கும் மாமியார் மாமனாருக்கு தொண்டு செய்துவிட்டு, மனைவிக்கு அன்றைக்கு தேவையான டிரெஸ்ஸை மிகவும் கவனமாக எந்த வித சுருக்கம் இல்லாமல் அயன் செய்து வைத்துவிட்டு அவளுக்கு தேவையானவைகளை பாத்ரூமில் எடுத்து வைக்க வேண்டும். அவள் வேலைக்கு சென்ற பிறகு அவசர அவசரமாக ஆபிஸூக்கு கிளம்பி 5 நிமிடம் லேட்டாக போனால் கூட அந்த லேடி மானேஜர் பார்க்கும் பார்வையும், கேவலமாக திட்டுவதையும் பல்லைகடித்து பபொருத்து கொள்ள வேண்டும். தலைக்கு மேல் குவிந்து கிடக்கும் வேலைகளை முடித்து விட வேண்டுமென்று மாங்கு மாங்கு என்று வேலைபார்க்கும் சமயத்தில், அந்த 'லேடி' அக்கவுண்ட் மேனேஜரின் அசிங்கமான பார்வையையும் வழிதலையும் சமாளித்து வேலை செய்யவேண்டும். என்ன ஜென்மங்களோ இவர்களுக்கு அண்ணன் தம்பிகள் அல்லது மகன்கள் கிடையாதா?என்ன பொழப்போ...ச்சீசீய்
இதுல வேற அடிக்கடி அந்த லேடி மார்கெட்டிங்க் மேனேஜர்(50 வயசு) வந்து நீங்க ரொம்ப ஹேண்ட்சம்மாக இருக்கிறீங்க உங்களுக்கு குழந்தைகள் இருந்தும் நீங்கள் இன்னும் அப்படியே ஸ்கூல் பையன் போல அப்படியே ரொம்ப இளமையாக இருக்கிறீங்கன்னு சொல்லி அப்படி ஒரு வழிதல் இதெல்லாம் இந்த நாய்கிட்ட நாம என்ன கேட்டோமா? வந்தமா வேலைய்ய பாத்தோமா இல்லையான்னு என்னடா பொழப்பு இது!
மணி நான்கு ஆனதும் அடிச்சு புடுச்சி குழந்தையின் ஸ்கூலுக்கு போய், அவளை பிக்கப் பண்ணி அவளை காரத்தே க்ளாஸில் விட்டு விட்டு, அவளின் பயிற்சி நேரத்தில் அருகில் உள்ள சூப்பர் மார்கெட்டில் வீட்டிற்கு தேவையானதை வாங்கிவிட்டு மீண்டும் குழந்தையை பிக்கப் பண்ணி வீட்டிற்கு கூட்டிச் சென்று, அதற்கு ஹோம் வொர்க் சொல்லி கொடுத்து கொண்டே மாமனார் மாமியாருக்கு வேண்டியதை செய்து கொடுத்து விட்டு இரவு சமையலுக்கு ரெடி பண்ணி வேண்டும். ஹும்ம்ம்ம்ம்ம்
சில சமயங்களில் மாமனார் கரித்து கொட்டுவார் பிறந்த வீட்டில் இவன் அப்பா என்னத்ததான் சொல்லி கொடுத்தானோ இன்னும் ரம்'ல எந்த அளவுக்கு 'கோக்" கலக்கனுமுனு கூட தெரியல்லை என்று அடிக்கடி என் பிறந்த வீட்டை கரித்து கொட்டவில்லை என்றால் இவருக்கு தூக்கம் வராது. ஹூம்......
அடுத்த பிறவியிலாவது பிறந்தால் பெண் ஜென்மமாக பிறக்க வேண்டும் பாரு கொடுத்து வைச்ச மகாராணிங்க காலையில் எழுந்திருப்பதோ 8 மணிக்கு அதுவும் எழுந்திரிக்கும் போதே செல் போனும் SMSகத்தான் இருப்பாங்க. அவங்க எழுந்திருந்து சாப்பிட்டு குளித்து ஆபிஸுக்கு காரில் ஏற கார் கதவை திறந்து விட்டு அவள் போகும் வரை நாம் வேறு ஏதும் பண்ணிவிடக்கூடாது. மதியம் சாப்பாடு கையில் எடுத்து போனால் கவுர குறைச்சல். ஆபிஸ் முடிஞ்சு நேராக வீட்டிற்கு வருவது கிடையாது. அப்படியே தோழிகளுடன் ஷாப்பிங்க், லேடிஸ் க்ளப், சினிமா என்று சென்று விட்டு வெளியே சாப்பிட்டு விட்டு வீட்டிற்கு லேட்டாக வருவது.
2025 -வில் மனைவியிடம் கணவன் எதிர்பார்ப்பது இதுதான் ஹீ..ஹீ... |
அப்படியே வந்தாலும் என்னப்பா எப்படி இருக்கே சாப்பிட்டியா இல்லையா என்று நேசமுடன் ஒரு வார்த்தை கேட்பது கூட கிடையாது. குழந்தை படித்தானா சாப்பிட்டனா என்று கூட கவலை கிடையாது. நேராக அப்பா அம்மாவிடம் சென்று பேச்சு சிரிப்பு அதன் பின் லேப்டாப்பை எடுத்து பெட் ரூமிற்கு சென்று விடுவாள்.. ஏதோ வலைத்தளம் (ப்ளாக்) வைச்சு நடத்துராளாம் அதை 2 அல்லது 3 மணிவரை அதோடு கொட்டம் அடித்து தூங்கிவிடுவாள்.
சரி அதை விடுங்க வார இறுதிநாளில் அப்படியே குழந்தையும் என்னையும் கூப்பிட்டு பீச்சுக்கு அல்லது சினிமாக்கு போகலாமுன்னு நினைத்தால் அதுதான் நடக்காது அதற்கு பதிலாக அவளின் ஆபிஸ் நண்பர்களையும் ப்ளாக்கர்ஸ் நண்பர்களையும் கூப்பிட்டு காலை முதல் இரவு வரை ஒரு கூத்தும் கொண்டாட்டமும்தான்.
கஷ்டப்படும் அண்ணன் தம்பிகள் உதவி கேட்டால் செய்ய அனுமதிபதில்லை இல்லை விடுமுறை நாட்களிலாவது அம்மா அப்பாவை பார்த்து விட்டு வரலாம் என்றால் அதற்கு ஆயிரம் காரணம் சொல்லி தடை. என்னடா இந்த ஆண் ஜென்ம பொழப்பு.
கடவுளே முடிந்தால் அடுத்த ஜென்மத்திலாவது எங்களை பெண் ஜென்மகாக பிறக்க வை........
டிஸ்கி : இந்த கதை நடக்கும் காலம் 2025. பெண்கள் சம உரிமை வேண்டும் என்று போராடி சம உரிமைக்கும் மேலே போய்விட்ட காலம் 2025
2025 ஊடகங்களில் வரும் செய்திகள் :
சமுக சேவகர் தனுஸ் அவர்கள் ஆண்கள் உரிமைக்காக "கொலைவெறி" போராட்டம் நடத்துகிறார்.
சட்டசபையில் அடிதடி : சட்ட சபையில் தமிழக முதல்வர் "நயன் தாரா" முன்னிலையில் எதிர் கட்சி தலைவாரான 'பிரபு தேவா" வின் வேட்டியை உருவி மானபங்க செய்ய முயற்சி
பஸ்ஸில் ஆணின் பின்புறத்தை தொட்டு சில்மிஷம் செய்த பெண்ணை மற்ற பெண்கள் சேர்ந்து அடித்து பின் போலிஸ் ஸ்டேஷனுக்கு சென்று ஒப்படைத்தனர்.
நேற்று வெளியான xyz படத்தில் நடிகரின் வயிற்றில் நடிகை பம்பரம் விடும் காட்சியால் படம் சூப்பர் ஹிட்டாகியது.
காதலித்து கைவிட்ட பெண்ணை திருமணம் செய்து வைக்ககோரி ஆண், போலிஸ் ஸ்டேஷன் முன் தர்ணா.
இந்த நாட்டில் ஒரு ஆண்மகன் இரவு நேரத்தில் தனியாக வரும் நாள் எதுவோ அந்த நாள்தான் இந்தியாவின் சுதந்திர நாள் என்று நாட்டின் பிரதமர் பேசினார்
.
மக்காஸ் முடிந்தால் உங்கள் கற்பனை வளத்தை எனது பின்னுட்டங்களில் தொடரவும்.
Ungal pathivu nandraaga erunthathu. Vaalthukkal nanbare.
ReplyDeleteஅருமை அருமை நண்பரே
ReplyDeleteநடந்தாலும் நடக்கும் !
ReplyDeleteமிகவும் அருமையான கற்பனை. இப்போ பொதுவா நடக்குறத அப்படியே உல்டா பண்ணி சொல்லியிருக்கீங்க. நல்லாயிருக்கு.
ReplyDeleteஇரவில் தனியாக சென்ற வாளிபரிடம் வழிப்பறி செய்த இளம் பெண்ணை போலீசார் வலை வீசி தேடி வருகின்றனர்.
ReplyDeleteஇப்படியும் நடக்கலாம்.
கற்பனையே எவ்வளவு சுகமாக இருக்கிறது....2025 இல் நடக்குமா நண்பரே....
ReplyDeleteநல்ல கற்பனை
ReplyDeleteநடக்க முடியாததாகவும் தெரியவில்லை
பகிர்வுக்கு நன்றி
இதுபோல் வித்தியாசங்கள் தொடரட்டும்
வாழ்த்துக்கள்
Ippadi ellaam nadandhaalum aacharya paduvadharkillai. Idhil 50% ippove nadakkudhe
ReplyDeleteஏன் இப்படி...
ReplyDeleteஇவ்வளவு தைரியமா...
ஹி..... ஹி.
இக்கரை மாட்டுக்கு அக்கரை பச்சைதான் போங்க.உங்கள் ஆசை நிறைவேற என் வாழ்த்துக்கள் நண்பரே...
ReplyDeleteநல்ல நகைச்சுவைப் பதிவு !
ReplyDeleteஇதைதான் முற்பகல் செய்யின்
பிற்பகல் விளையும் என்றார்களா ?