இந்தியர்களை பார்த்து ஏளனமாக சிரித்த அமெரிக்கர்கள்
தற்போது நான் Retail Sector-ல் வேலை பார்த்து வருகிறேன். நான் வேலை பார்த்து வரும் இடத்தில் தினசரி சராசரியாக 2-ல் இருந்து 3 பேராவது திருடி (Shop Lifting) மாட்டி கொள்வார்கள். பெரும்பாலும் மாட்டுபவர்கள் இங்கு வசிக்கும் ஸ்பானிஷ் அல்லது ஆப்பிரிக்க நாட்டு இனத்தவர்கள் சில சமயங்களில் வெள்ளை இனத்தவர் மற்றம் மற்ற நாட்டினர் ஆவார்கள். ஆனால் இப்போது நம் இந்திய நாட்டினர்களும் இப்படி திருடி மாட்டிக் கொள்ள ஆரம்பித்திருக்கினர். கடந்த 2 மாதங்களில் இப்படி நான் வேலைபார்த்த இடங்களில் மாட்டி கொண்ட 3 நபர்களை பற்றியதுதான் இந்த பதிவு.
நான் வேலை பார்க்கும் இடத்தில் LP (Loss Prevention ) என்ற டிபார்ட் மெண்ட் உள்ளது. அதில் வேலை பார்ப்பவர்கள் கடந்த வார சனிக்கிழமை மிக பிஸியான மதியம் 12 மணி அளவில் நாலா புறத்திலில் இருந்து ஒடினர்கள். அப்போது என்னுடன் வேலை பார்க்கும் இந்தியர்கள் மற்றும் வெள்ளைக்கார்ர்கள் கிண்டல் அடித்து சிரித்து கொண்டோம் எவனாவது ஒரு கறுப்பன் அல்லது ஸ்பானிஸ்கார்கள் திருடி மாட்டிக் கொண்டிருப்பார்கள் இவர்களுக்கு வேறு வேலையே கிடையாது என்று. ஆனால் எள்ளி நகையாடிய எங்கள் முகத்தில் கரி பூசுவது போல வந்து மாட்டிக் கொண்டவர்கள் இளம் வயது இந்திய தம்பதியினர் வயது 25ல் இருந்து 27 வயதுக்குள் இருக்கும். சிறு கைக்குழந்தையை ஸ்ட்ரோலரில் வைத்து வந்தவர்கள். அவர்கள் ஸ்ட்ரோலரில் மறைத்து வைத்து இருந்தது 2 செட் ஷுக்கள் மற்றும் சில விலை குறைந்த பேஷன் ஆபரணங்கள் 10 டாலர் மதிப்பு கூட இருக்காது. இந்த தம்பதியினர் வசதி குறந்தவர்கள் அல்ல இரண்டு பேரும் நிச்சயம் IT -யில்தான் வேலைபார்ப்பவர்கள். அவர்களை போலிஸிடம் ஒப்படைதார்களா அல்லது அவர்களை பற்றிய தகவல்களை வாங்கி அனுப்பித்து விட்டார்களா என்பது தெரியவில்லை. காரணம் இந்தியர்களாகிய நாங்கள் வெட்கம் மட்டுமல்ல வேதனை அடைந்து அந்த டிபார்ட்மென்ட்பக்கம் கூட எட்டி பார்க்கவில்லை.இந்தியன் அதும் இளம் தம்பதியினர் திருடுகிறார்களா என்ற எல்லோரும் பார்த்த ஏளன பார்வை மட்டும் எங்களைவிட்டு இன்னும் அகலவில்லை.
இதற்கு முன் நடந்த சம்பவம் ஊரில் இருந்து வந்த முதிய பெண்மணி தன் மகனோடும் மருமகளோடும் ஷாப்பிங் வந்தவர் இது போல மிகவும் விலை குறைந்த கடிகாரத்தை தான் அணிந்த குளிருக்கான கோட்டில் மறைத்து வைத்து மாட்டிக் கொண்டார்.இனிமேல் அவர் அமெரிக்காவிற்குள் மீண்டும் வரமுடியாது. அதுமட்டுமல்ல அன்று அந்த முதிய பெண்மணிகூட வந்து அசிங்கப்பட்ட மருமகள் பார்த்த பார்வை இருக்கிறதே அப்பா இன்னும் கண்ணுக்குள் இருந்து மறையவில்லை. யாரு மன்னித்தாலும் அந்த மருமகள் சாகும் வரை மன்னிக்க மாட்டார்.
இன்னுமொரு சம்பவம் கணவரையும் குழந்தையையும் அனுப்பிவிட்டு காலை நேரத்தில் போரடித்தால் ஷாப்பிங்க் வந்த 40 வயதுள்ள பெண்( House Wife ) இது மாதிரி ஒரு சிறிய வாட்சை எடுத்து மாட்டிகொண்டார். அவரை பிடித்து செல்லும் போது வழியில் இருந்த என்னை பார்த்து தெரியாமல் பண்ணிவிட்டேன் எனக்கு உதவுங்கள் என்று கேட்டார். என் வீட்டுகாருக்கு தெரிந்தால் என்னை கொண்ருவிடுவார் என்று அழுதார். இந்திய என்றால் பாவம் தெரியாமல் செய்துவிட்டார் வீட்டுவிடப்பா என்று சொல்லலாம் ஆனால் இங்கு அப்படி சொன்னால் நமக்கும் அதில் சம்பந்தம் உள்ளது என்று எங்களையும் வேலையில் இருந்து தூக்கி விடுவார்கள்.
போதுமென்ற மனது வேண்டும். மன சஞ்சலத்திற்கு இடம் கொடுத்து விட கூடாது இல்லையென்றால் இது மாதிரி அவமானப்பட வேண்டியது இருக்கும்.
இந்த மூன்று சம்பவமும் கடந்த 2 மாதங்களுக்குள் ஏற்பட்டது கடைசி 2 சம்பவமும் காலை நேரத்தில் ஏற்பட்டதால் அதிக பரபரப்பு ஏற்படவில்லை கமுக்கமாக முடிந்து விட்டது ஆனால் முதல் சம்பவம் மிகவும் பிஸியான நேரத்தில் ஏற்பட்டதால் எல்லோராலும் மிக ஏளனமாக பார்க்கப்பட்டது
இதை இங்கே எதுக்கு எழுதுகிறேன் என்றால் அமெரிக்காவில் வாழும் இந்தியர்களுக்கு ஒரு எச்சரிக்கையாக இருக்க வேண்டும் என்பதால் தான். இங்கே திருட்டு என்பதில் சிறியது அல்லது பெரியது என்று வேறுபாடு கிடையாது மாட்டிகொண்டால் தண்டனை மட்டுமல்ல அது பலவிதங்களீல் பாதிக்கும். H1 விசாவில் வந்தவர்கள் மாட்டிக் கொண்டார்கள் என்றால் அவர்கள் விசா எந்த நேரத்திலும் கேன்சல் செய்யப்படலாம் அல்லது க்ரீன் கார்டு அல்லது சிட்டிசன்சிப் ப்ராஸஸில் இருந்தால் அவர்களுக்கு கிடைக்காமலும் போகலாம். அதற்காகத்தான் இதை இங்கே சொல்லுகிறேன். எச்சரிக்கையாக இருங்கள் என்று. எனது உடன் வேலை பார்ப்பவர் சிட்டிசன்சிபிற்க்காக போயிருந்த போது அப்போது அவனை மாதிர் அப்ளை செய்து வந்திருந்த ஒருவரின் போலிஸ் ரிகார்டில் திருட்டு பற்றி ரிபோர்ட் இருந்ததால் அவருக்கு சிட்டிசன்சிப் மறுக்கப்பட்டது. அவர் செய்து மாட்டிக் கொண்டது ஒரு டாலருக்கும் குறைவான கேஸில்தான். இப்போது புரிந்து இருக்கும் நான் ஏன் இந்த பதிவை எழுதுகிறேன் என்பது.
இந்த பதிவு தொடரும்.....அடுத்த பதிவில் LOSS PREVENTION பற்றி மிக விரிவாக எழுத இருக்கிறேன். இது அமெரிக்க வாழ் இந்திய மக்களுக்கு மிக உபயோகமாக இருக்கும். கண்டிப்பாக படியுங்கள் மற்றும் உங்கள் நண்பர்கள் ,உறவினர்கள் உங்கள் குழந்தைகளுக்கு இதை பற்றி எடுத்து சொல்லுங்கள்.
மன நிலை மாறாது எத்தகைய உயர் நிலைக்குப் போனாலும்
ReplyDeleteஇந்த கதிதான் போலும்
அனைவரும் அவசியம் அறிந்து கொள்ளவேண்டிய
அருமையான பதிவு
தொடர வாழ்த்துக்கள்
KEvalamaga irukku sir !
ReplyDeleteMaanam kappal yeri TATA kaatitu poguthu !
Dee..
//போதுமென்ற மனது வேண்டும். மன சஞ்சலத்திற்கு இடம் கொடுத்து விட கூடாது இல்லையென்றால் இது மாதிரி அவமானப்பட வேண்டியது இருக்கும்.//
ReplyDeleteமிக சரியாக சொன்னீங்க .சிறு சபலம் வாழ்நாளெல்லாம் முள்ளாக உறுத்தும் .
இது அமெரிக்க வாழ் இந்தியருக்கு மட்டுமில்லை மற்ற வெளிநாடுகளில்
வாழும் இந்தியருக்கும் பொருந்தும் . இது போன்ற விஷயங்களை தொடர்ந்து எழுதுங்க .
தனக்கு உரிமை இல்லாத பொருளை எங்கு திருடினாலும் கேவலமே.
ReplyDeleteஎன்ன இங்கு தண்டனை குறைவு அல்லது அறவே இல்லை என்பதால் இந்த புத்தியால் வெளிநாட்டில் கேவலப்பட நேர்கிறது.
மன்னன் எப்படியோ மக்கள் அவ்வழி.
கல்வி கற்கிற காலத்திலேயே நல்லொழுக்க கல்வி கற்றால் இந்நிலை ஏற்படாது.
சிலதுங்க Thrillக்காக பண்றதும் உண்டுங்க
ReplyDelete//இதை இங்கே எதுக்கு எழுதுகிறேன் என்றால் அமெரிக்காவில் வாழும் இந்தியர்களுக்கு ஒரு எச்சரிக்கையாக இருக்க வேண்டும் என்பதால் தான். இங்கே திருட்டு என்பதில் சிறியது அல்லது பெரியது என்று வேறுபாடு கிடையாது மாட்டிகொண்டால் தண்டனை மட்டுமல்ல அது பலவிதங்களீல் பாதிக்கும். H1 விசாவில் வந்தவர்கள் மாட்டிக் கொண்டார்கள் என்றால் அவர்கள் விசா எந்த நேரத்திலும் கேன்சல் செய்யப்படலாம் அல்லது க்ரீன் கார்டு அல்லது சிட்டிசன்சிப் ப்ராஸஸில் இருந்தால் அவர்களுக்கு கிடைக்காமலும் போகலாம். அதற்காகத்தான் இதை இங்கே சொல்லுகிறேன். எச்சரிக்கையாக இருங்கள்//
ReplyDeleteஇதன் மூலம் நீங்கள் சொல்லவருவது என்ன? இவற்றுக்காகத் திருடாதீர்கள் என்றா? இப்படிச் சிக்கல் இல்லாவிடில் திருடலாமா?
ஆகவே எங்கேயும் கடும் சட்டதிட்டங்கள், கையை வெட்டுமளவுக்குத் தண்டனைகள் உள்ளதென்பதற்காக மாத்திரம் திருட்டைத் தவிர்க்காதீர்கள்.
இதில் நம் நாட்டின் , நம் மக்களின் கௌரவத்தில், நம் பிள்ளைகள் எதிர்காலம் என்பன பற்றி முதல் சிந்தியுங்கள்.
எங்கும் எதையும் திருடாதீர்கள்.
பெரிதோ சிறிதோ திருடி வந்தது நமக்கு வேண்டாம், எனும் போதுமென்ற மனத்தை வளர்க்க வேண்டும்.
// ஊரில் இருந்து வந்த முதிய பெண்மணி தன் மகனோடும் மருமகளோடும் ஷாப்பிங் வந்தவர் இது போல மிகவும் விலை குறைந்த கடிகாரத்தை தான் அணிந்த குளிருக்கான கோட்டில் மறைத்து வைத்து மாட்டிக் கொண்டார்.இனிமேல் அவர் அமெரிக்காவிற்குள் மீண்டும் வரமுடியாது. அதுமட்டுமல்ல அன்று அந்த முதிய பெண்மணிகூட வந்து அசிங்கப்பட்ட மருமகள் பார்த்த பார்வை இருக்கிறதே அப்பா இன்னும் கண்ணுக்குள் இருந்து மறையவில்லை. யாரு மன்னித்தாலும் அந்த மருமகள் சாகும் வரை மன்னிக்க மாட்டார்.//
ReplyDeleteதிருட்டு இவருக்கு வாழ்நாள் தண்டனை கொடுத்துள்ளது
@யோகன் பாரீஸ் உங்கள் வருகைக்கும் உங்களின் உயர்வான கருத்துக்கும் நன்றி
ReplyDelete.
நான் சொல்லவருவது என்னவென்றால் கடல் கடந்து வந்து இங்கு கடுமையாக உழைக்கின்றோம் அதனால் இந்த மாதிரி திருட்டுகளில் ஈடுபட்டு மாட்டி உங்கள் கெளரவத்தையும் மற்றும் எதையும் இழந்துவிடாதிர்கள் என்பதுதான். மேலும் நான் ஒரு மகாத்மா அல்ல மற்றவர்களுக்கு இதை செய் அதை செய் என்று சொல்ல...நடந்த சம்பவத்தை மட்டும் எழுதி அதனால் ஏற்படும் தீமைகளை மட்டும் இங்கு சொல்லிகிறேன். இதை நான் அமெரிக்காவில் உள்ளவர்களுக்கு என்று குறிப்பிட்டு சொன்னேன் என்றால் இங்கு தண்டனை கடுமை மற்றும் குடும்ப கெளரம் கெட்டுவிடும் என்பதால்தான். இதே மக்கள் இந்தியாவில் செய்தால் நிச்சயமாக சொல்லி இருக்க மாட்டேன். ஏனென்றால் இந்தியாவில் திருட்டு என்பது அங்கிகாரம் பெற்று உள்ளது. இல்லையென்றால் இப்பொழுது உள்ள தலைவர்களை மக்கள் தேர்ந்து எடுத்து இருக்க மாட்டார்கள்.
மக்களுக்கு சேவை செய்வதே என் கடமை என்று சொல்லி ஆட்சிக்கு வந்ததும் கொள்ளை அடிப்பதே சேவை என்று கருதும் தலைவர்கள், தனக்கு உடல்நலம் சரியில்லை என்று டாக்டர்களிடம் சென்றால் அவர்கள் தேவையில்லாத சிகிச்சை அளித்து பணம் பிடுங்குவதும்,திருடுபவர்களை பிடிப்பவர்களே திருடர்களிடம் கை கூலிவாங்குவதும் தீர்ப்பு கூற வேண்டிய நீதிபதிகளே பணத்துக்கு தகுந்து தீர்ப்பு வழங்குவதும் இருக்கும் போது இவர்களுக்கு திருடு திருடாதே என்று சொல்ல நான் யார்?
இந்த உலகில் யாரும் யோக்கியனும் இல்லை அதே நேரத்தில் அயோக்கியனும் இல்லை. சந்தர்ப்பமும் சூழ்நிலையும் மட்டும்தான் இதற்கு காரணமாக இருக்க முடியும்.
இறுதியாக நீங்கள் சொன்ன உயர்ந்த கருத்துதான் என் கருத்தும் என்று சொல்லி முடித்து கொள்கிறேன்
நீங்கள் சொன்னது "நம் நாட்டின் , நம் மக்களின் கௌரவத்தில், நம் பிள்ளைகள் எதிர்காலம் என்பன பற்றி முதல் சிந்தியுங்கள்.
எங்கும் எதையும் திருடாதீர்கள்.பெரிதோ சிறிதோ திருடி வந்தது நமக்கு வேண்டாம், எனும் போதுமென்ற மனத்தை வளர்க்க வேண்டும்.'
@ரமணி சார்
ReplyDelete@தீபக் கார்த்திக்
@ஏஞ்சலின்
@புதுக்கோட்டை செல்வா
@இளா
@ யோகன் பாரீஸ்
@கோவிந்த ராஜ்
அனைவரின் வருகைக்கும் தரமான கருத்துக்கும் எனது மனமார்ந்த நன்றிகள்.
இங்கு நான் ஏதும் தவறாக சொல்லியிருந்தால் சுட்டிக்காட்டுங்கள் திருத்தி கொள்கிறேன். ஏனென்றால் நான் அறிவு ஜீவி அல்ல அதனால் என் மனதுக்கு பட்டதை இங்கு ஒளிவு மறைவு இல்லாமல் கூறிகிறேன் நன்றி நண்பர்களே
பழக்க தோஷம் தான்! இங்கும் அரசு பணியில் உள்ளவர்கள் கூட காய்கறி கடையில் உருளகிழங்கு தேங்கா திருடுவதை கண்டுள்ளேன்.
ReplyDeleteஇப்படி எல்லாமா நடக்கிறது ?
ReplyDeleteயாரைத்தான் நம்புவதோ
தெரியவில்லை ?