Thursday, January 12, 2012

முத்து சிதறல்கள் - 1 (வாழைத் தொடையிலே)

முத்து சிதறலில் நான் படித்த ரசித்த நினைத்த சிறு சிறு விஷங்களை பதிவாக இடுகிறேன்.

கவிதை:

"முக்காடு நீக்கியுந்தன் முக நிலவை பார்த்த பின்
எக்காடு வந்தாலும் எக்கமெனக்கில்லையடி"


"உன் கால்கள் மணமேடை ஏறும் போது
என் கால்கள் காலில்லா கட்டிலில் ஏறும் மறவாதே"

"வாழைத் தொடையிலே
நான் வசம் இழந்த வேளையிலே
நான் ஏழை போல தோன்றிடுவேனே"

எனது சிறு வயது பருவத்தில் எனது அண்ணனின் நண்பன் எழுதிய கவிதையில் ஒரு பகுதி இது அதை திருட்டுதனமாக படித்ததில் என் மனதில் இந்த வரிகள் மிக ஆழமாக பதிந்துவிட்டது

சிரிக்க :

காதலியிடம் காதலன் வாவ்!!! உன் கண்கள் காந்த கண்கள், உன் இதழ்கள் செர்ரிபழம் போல இருக்கிறது. உன் புன்னகை பொன்நகை போல இருக்கிறது என்று சொல்லியாவாறு மனதுக்குள் நினைத்தான் மக்கா நீ நல்ல பொய் சொல்லுவதில் டாக்டர் பட்டமே வாங்கிடுவே என்று.

கணவன் மனைவியிடம் நான் உன்னை பற்றி மனதில் நினைப்பதை எப்படி வார்த்தைகளால் சொல்வது என்பதே எனக்கு தெரியவில்லை என்றான். அதற்கு மனைவி அவனை கட்டி அணைத்தவாறே  யூ ஆர் சோ ஸ்விட் என்றாள். கணவனோ மனதுக்குள் " GO TO HELL " என்று சொல்ல நினக்கிறேன். உம்ம்ம்ம் அதுக்கு எப்போ நமக்கு தைரியம் வருமோ??

சிந்திக்க :

ஒவ்வொரு மனிதனும் இந்த உலகத்தை மாற்ற வேண்டும் என்றுதான் நினைக்கிறார்கள்; ஆனால் ஒருவர் கூட தங்களை மாற்றிக் கொள்ள வேண்டுமென நினைப்பது இல்லை.


கண்ணனின் கீதையும் ,கர்த்தரின் பைபிளும்,புண்ணிய குர்ஆனும் சொல்வது என்ன?
பரம் பொருள் ஒன்றே! எல்லாரும் ஒன்றே! ஏகனும் ஒன்றே!

வழக்கு
விவாகரத்து கோரிய அந்தப் பெண்…. நீதிபதியை பார்த்து தன்னுடைய கணவரிடமிருந்து ஜுவனாம்சத்தொகை எதையும் தான் எதிர்பார்க்கவில்லை என ஆணித்தரமாக சொன்னாள்.” நான் விரும்புவதெல்லாம்நான் அவரைத் திருமணம் செய்து கொண்டபோது என்ன நிலையில் இருந்தேனோ அந்த நிலையிலேயே அவர் என்னை விட்டு விட்டுப் போனால் போதும்.”
நீதிபதி கேட்டார்…. “நீ என்ன நிலையிலிருந்தாய் ? “அவர் திருமணம் செய்து கொண்டபோது நான் விதவையாக இருந்தேன்.” என பளிச்சென்று பதில் சொன்னாள் அவள்.

பிடித்த பழைய பாட்டு
ஒருவன் மனது ஒன்பதடாஅதில்
ஒளிந்து கிடப்பது எண்பதடா!
உருவத்தைப் பார்ப்பவன் மனிதனடா! – அதில்
உள்ளத்தைக் காண்பவன் இறைவனடா!
ஏறும்போது எரிகின்றான்!
இறங்கும்போது சிரிக்கின்றான்!
வாழும் நேரத்தில் வருகின்றான்!
வறுமை வந்தால் பிரிகின்றான்!
தாயின் பெருமை மறக்கின்றான்!
தன்னலச் சேற்றில் விழுகின்றான்!
பேய்போல் பணத்தைக் காக்கின்றான்!
பெரியவர் தம்மைப் பழிக்கின்றான்!
பட்டம் பதவி பெற்றவர் மட்டும்
பண்புடையோராய் ஆவாரா?
பள்ளிப்படிப்பு இல்லாத மனிதர்
பகுத்தறிவின்றிப் போவாரா?”

போட்டோ செய்தி :




10 comments:

  1. செம செம தலைவா.

    அருமையான பதிவு வாழ்த்துகள்.

    ReplyDelete
  2. முத்துச் சிதறல்
    நிஜமாகவே முத்துச் சிதறல்தான்
    பகிர்வுக்கு நன்றி
    தொடர வாழ்த்துக்கள்

    ReplyDelete
  3. நன்றாய் இருந்தது..பன் முகத்தோடு ....வாழ்த்துகள்.

    ReplyDelete
  4. ///ஒவ்வொரு மனிதனும் இந்த உலகத்தை மாற்ற வேண்டும் என்றுதான் நினைக்கிறார்கள்; ஆனால் ஒருவர் கூட தங்களை மாற்றிக் கொள்ள வேண்டுமென நினைப்பது இல்லை.//

    ஒவ்வொருமனிதனும் மாறினால் இந்த உலகம் மாறிவிடும் என்பதை யாரும் சிந்திப்பதில்லை என்பது உண்மைதான்.


    MTG உங்களின் இந்த முத்து சிதறல் முயற்சி நன்றாக இருக்கிறது .தொடருங்கள்

    ReplyDelete
  5. எனக்கு பிடித்த பாடலும் இதுதான். ஆண்கள் என்ன செஞ்சாலும் நாங்கதான் பாஸ் என்று ஒத்துக்கொண்டதுக்கு நன்றி

    ReplyDelete
  6. @தனசேகரன் நான் தலைவனா???ஹாஆஆஆஆஅ பாத்துங்க என்னை தலைவன் என்று கூப்பிட்ட உங்களை ஜாக்கி& கேபிள் வந்து போட்டு தாக்கிட போறாங்க..ஊர்ல இருக்கிறிங்க பாத்துநடந்துகுங்க. என்னை தலைவனாக்கிய உங்களை நான் இன்று முதல் கொள்கைபரப்பு செயலாளர் ஆக்கிவிடுகின்றேன். என் வலைத்தளத்தை எல்லா இடங்களிலும் சென்று பரப்புங்கள். எதாவது கலக்ஷன் பண்ணினால் மறக்காம என் பங்கை அனுப்பி விடுங்க ஹீ...ஹீய

    ReplyDelete
  7. @ரமணி சார் உங்கள் "நிஜமான" வாழ்த்துக்கு "நிஜமான" நன்றிகள்

    ReplyDelete
  8. @புதுகை செல்வா உங்கள் வாழ்த்துக்கு நன்றி

    ReplyDelete
  9. @ரிஷி உங்கல் கருத்துக்கு நன்றி

    ReplyDelete
  10. @அனு நீண்ட நாட்களுக்கு அப்புறம் வந்ததுமட்டுமல்லாமல் கருத்தும் சொன்ன உங்களுக்கு மனம் மார்ந்த நன்றிகள். நேரம் கிடைக்கும் போது முடிந்தால் வாருங்கள் நன்றி

    ReplyDelete

நான் அறிவு ஜீவி அல்ல ஒரு சாதாரணமான் மனிதன் தான்.இங்கு நான் பதியும் பதிவுகளில் உள்ள கருத்துகள் "மிகவும் சரி"யென்று சொல்லமாட்டேன் அது அன்றைய மனநிலையில் என் மனதில் எழும் கருத்துகளே...அதனால் உங்களது மனசுலபட்ட மாற்று கருத்துகளை தாராளமாக பகிரலாம். ஆனால் தேவையற்ற, வரம்புமீரிய, அநாகரிகமான வார்த்தைகளாலும் பதிவிற்கு சம்பந்தமில்லாமல் கருத்துக்கள் சொல்லப்பட்டால் எந்த வித பதில் விளக்கமின்றி அந்த கருத்து டெலீட் செய்யப்படும்.