CLICK THIS PICTURE AND GET YOUR GIFT. TRY IT |
2012 பொங்கல் பரிசு பெறும் வலைப்பதிவாளார்கள் யார்?நீங்கள் அதில் ஒருத்தாரா?
வலைத்தளம் எழுதிவரும் பதிவாளர்களுக்கும் அதை வந்து படிப்பவர்களுக்கும் எனது தளம் மூலம் நான் பொங்கல் பரிசை வழங்க விரும்புகிறேன். நீங்கள் இங்கே வந்து இருந்தால் நீங்களும் அந்த பரிசை பெருபவர்களில் ஒருவர். கிழே உள்ளதை முழுவதும் படித்து பரிசை எடுத்து செல்லுமாறு கேட்டு கொள்கிறேன்.
நமது நிலமை(தகுதி)மாற மாற நமது எண்ணங்களும் மாறிவருகின்றன. அதில் சில பேர்தான் தாங்கள் கடந்து வந்த பாதையை நினைவில் வைத்து கொள்கின்றனர். ஆனால் பல பேர் மறந்து விடுகின்றனர். ஆனால் அநேகபேர்கள் பாதையை கடக்க முடியாமல் அதே நிலைமையில் இருக்கின்றனர்.அவர்களை பார்த்தாவது நாம் திருப்தி அடைய வேண்டும் என்ற செய்தியை நான் இங்கே உங்களுக்கு பொங்கல் பரிசாக தருகின்றேன்.
இன்று
நீங்கள் மற்றவர்களை காயப்படுத்தும் வார்த்தைகளை சொல்ல நினைப்பதற்கு முன்பு
ஒரு கணம் பேசகூட முடியாதவனை பற்றி சிந்தித்து பாருங்கள்
நீங்கள் உண்ணும் உணவு ருசி இல்லை என்று குறை சொல்ல நினைப்பதற்கு முன்பு
ஒரு கணம் ஒருவேளைகூட உண்ண உணவு இல்லாதவனை பற்றி சிந்தித்து பாருங்கள்
நீங்கள் மற்றவர்களை(கணவனையோ or மனைவியையோ குற்றம் சொல்ல நினைப்பதற்கு முன்பு
ஒரு கணம் தனக்கு ஒரு துணையில்லையே என்று கடவுளிடம் கதறி அழுபவர்களை பற்றி சிந்தித்து பாருங்கள்
நீங்கள் வாழ்க்கையை குறை சொல்ல நினைப்பதற்கு முன்பு
வாழ்க்கையை சிக்கிரமாக முடித்து கொண்டு சென்றவர்களை பற்றி சிந்தித்து பாருங்கள்
நீங்கள் உங்கள் குழந்தைகளை பற்றி குறை சொல்ல நினைப்பதற்கு முன்பு
குழந்தைகள் இல்லாமல் குழந்தைக்காக ஏங்குபவர்களை பற்றி சிந்தித்து பாருங்கள்
நீங்கள் உங்கள் வீடு பார்ப்பதற்கு நன்றாக இல்லை என்று குறை சொல்ல நினைப்பதற்கு முன்பு
வீடுகளே இல்லாமல் தெருவில் வசிப்பவர்களை பற்றி சிந்தித்து பாருங்கள்
நீங்கள் ஆபிஸுக்கு நீண்ட தூரம் காரிலோ பஸ்ஸிலோ செல்ல வேண்டும் என்று குறை சொல்ல நினைப்பதற்கு முன்பு
தன் கால்களின் உதவியை மட்டும் நம்பி நடந்து ஆபிஸுக்கு செல்பவர்களை பற்றி சிந்தித்து பாருங்கள்
நீங்கள் பார்க்கும் வேலையை பற்றி குறைகள் சொல்ல நினைப்பதற்கு முன்பு
அந்த வேலையாவது கிடைத்தால் பரவாயில்லை என்று நினைக்கும் வேலையில்லாதவர்களை பற்றி சிந்தித்து பாருங்கள்
இறுதியாக மற்றவர்களை சுட்டிகாட்டி குறை கூறத்துவங்குவதற்கு முன்பு நாம் யாரும் நூறு சதவிகிதம் ஒழுங்கானவர்கள் இல்லை என்பதை நினைத்து அதன் படி நடந்து கொள்ளுங்கள். மற்றும் நாம் மனம் தளர்ந்து போகும் சமயத்தில் கடவுளுக்கு நன்றி கூறி நான் இன்னும் வாழுவதை நினைத்து சந்தோஷபடுங்கள்.
மக்காஸ் : மறக்காதீர்கள் Life is a gift - Live it, Enjoy it, Celebrate it, and Fulfill it. இந்த செய்திதான் நான் உங்களுக்கு தரும் பொங்கல் பரிசு
இங்கு வந்து படித்து செல்லும் அனைவருக்கும் எனது இதயங்கனிந்த புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்.
இந்த வலைத்தளத்தில் எப்போதும் தரம் குறைந்த செய்திகள் வராது என்பதை இங்கே நினைவுபடுத்துகிறேன்.
MTG ,
ReplyDeleteஎல்லோருக்கும் ஞாபகமறதி என்று நினைக்கிறேன்.
இந்த அரிய உண்மைகள் பொங்கல் பரிசாக தந்ததிற்குப் பிடியுங்கள்
எங்கள் பாராட்டுக்களைப் பதில் பரிசாக.
எனதினிய பொங்கல் திருநாள் நல்வாழ்த்துக்கள் .
ReplyDeleteபொங்கல் பரிசு அருமையா இருக்கு. வாழ்த்துகள்.
ReplyDeleteஇந்த முகவரி தடை செய்யப்பட்டுள்ளது: http://avargal-unmaigal.blogspot.com/2012/01/2012.html
ReplyDeleteவோட்டு போடபோனேன் இந்த செய்தி வருது
தங்களுக்கும் தங்கள் குடும்பத்தாருக்கும் எனது இனிய பொங்கல் திருநாள் நல் வாழ்த்துக்கள்.
ReplyDeleteஉண்மைவிரும்பி.
மும்பை.
அருமையான பொங்கல் பரிசு......புண்ணியத்திற்கும் பாவத்திற்குமான ஒரு விளக்கத்தை எனது நண்பர் ஒருவர் எப்போதுமே கூறுவார்.
ReplyDeleteஉனக்கு இன்னொருவர் செய்த செயல் உனக்கு துன்பத்தை தருமாயின் அது போன்ற செயலை பிறருக்கு செய்யாதே ....ஏனென்றால் அது பாவமானது.
உனக்கு இன்னொருவர் செய்த செயல் உனக்கு இன்பத்தை தருமாயின் அது போன்ற செயலை பிறருக்கு செய் ....ஏனென்றால் அது புண்ணியமானது .
இனிய பொங்கல் வாழ்த்துகள்.
@ஸ்ரவாணி
ReplyDelete@நண்டு@நொரண்டு
@லக்ஷ்மி அம்மா
@மதுரை கோவிந்தராஜ்
@எனது கவிதை
@ புதுகை செல்வா
அனைவருக்கும் எனது மனமார்ந்த நன்றிகள்!!!!!!
simple and nice information
ReplyDelete