Thursday, December 22, 2011


கூடா நட்பால் அதிகம் பாதிக்கபட்டவர் ஜெயலலிதாவா, கருணாநிதியா அல்லது நீங்களா?



ஒரு அழகிய மணமுள்ள  ரோஜாமலரை சில மீன்களோடு போட்டு ஒரு பையில் வைத்தால் சிறிதுநாளில் அது நாறத்துவங்கும். அது போலதான் நம் கூட உள்ள மோசமான நட்பால் நமது வாழ்வும் கெட்டுபோகும்



உங்கள் நண்பர்கள் உண்மையிலேயே உங்களின் நல்ல நண்பர்கள்தானா? உங்கள் வாழ்வு பிரகாசிக்க வழி சொல்லுகிறார்களா அல்லது தவறான இருட்டு வாழ்விற்கு செல்ல வழி சொல்லுகிறார்களா? நண்பர்கள் நம் வாழ்விற்கு மிக முக்கியம். நாம் வைத்திருக்கும் நட்பு நம் வாழ்வில் நம்மை அறியாமல் பல மாற்றத்திற்கு இட்டு செல்லும். அதனால் நல்ல நண்பர்கள் நல்வாழ்விற்கு மிக அவசியம்.



நமக்கு போரடிக்கும் போதும் ,கவலையுடன் இருக்கும் போதும், உடல் நிலை சரியில்லாத போதும், நாம் எழுதும் மொக்கை பதிவுகளுக்கு உடனடியாக பின்னுட்டம் இட்டும், பதிவர் கூட்டங்களில் அல்லது நமது இல்ல விழாக்களில் கலந்து தோளில் கைபோட்டு போட்டோவுக்கு போஸ் கொடுத்தும் ,பாருக்கு வந்து நம்மோடு அமர்ந்து தண்ணி அடிக்கும் நட்புகளை பற்றி நான் இங்கு கூறவில்லை.



நான் சொல்லும் நட்பு உங்களின் வாழ்வில் நல்ல மாற்றத்தை ஏற்படுத்தி முன்னேற்ற பாதைக்கு இட்டு செல்லும் நட்பு. எதையும் எதிர்பார்க்காமல் தன்னால முடிந்ததை நல்ல வழியில் செய்து நம் வாழ்வில் ஒரு பிரகாசத்தை கொடுக்கும் நட்பு

நாம் கஷ்டப்படும் போது நமது நண்பன் கஷ்டப்பட்டு உழைத்த பணத்தை நமக்கு கொடுத்து நாம் கஷ்டப்படாமல் இருக்க செய்ய வேண்டும் என்று நினைப்பது நட்பல்ல. நாம் கஷ்டப்படும் போது நம்முடன் உறுதுணையாக இருந்து  நீ இப்படி செய்து கொண்டிருக்கிறாய் அதனால்தான் உனக்கு கஷ்டம் அதற்குபதிலாக நீ இப்படி இப்படி செய்தால் அல்லது நடந்தால் இப்படிபட்ட பலன் கிடைக்கும். அதன் மூலம் உன் வாழ்வு இப்படி மாறி துன்பம் இல்லாமல் நன்றாக பிரகாசிக்கும் என்று சொல்லி நம் வாழ்வில் யார் கையையும்  எதிர்பார்க்காமல் நம் கையால் மாற்றத்தை ஏற்படுத்துபவனே உண்மையான நண்பன்.



நமது வாழ்வில் பெற்றோர்கள் இறுதி வரை வருவதில்லை நாம் கூட உள்ள வாழ்க்கை துணையோ இடையில் வந்தது ஆனால் நல்ல நட்புமட்டும்தான் ஆரம்பத்தில் இருந்து  இறுதி வரை சுயநலம் கருதாமல் வரும்.



இந்த பதிவின் ஆரம்பத்தில் நான்  ரோஜாவை பற்றி எழுதியிருப்பதை  நீங்கள் அவசியம் புரிந்து கொள்ள வேண்டும். அது மிக முக்கியம் நல்ல நட்புக்கு & நல்வாழ்க்கைக்கு!



நீங்கள் எப்படி வர வேண்டும் என்பதை நீங்கள் தான் முடிவு செய்ய வேண்டும். நீங்கள் இமயமலைக்கு சென்று அங்குவசிக்கும் யோகிகளுடனும் சாதுக்களுடன் வசித்து வந்தால் உங்கள் இயற்கை குணம் மாறி நீங்கள் மிக மென்மையுள்ளம் கொண்டவராகவும் அல்லது நடிகர்களுடன் சேர்ந்து வசித்தால் வாழ்க்கையிலும் நீங்கள் நடிக்கவும், பணத்தாசை கொண்ட அம்பானி, டாட்டா கூட சேர்ந்தால் பண ஆசை கொண்டவராகவும், அரசியல்தலைவர்களூடன் சேர்ந்து இருந்தால் குறுக்கு வழியில் பணம் சம்பாதித்து சிறைக்கு சென்றும், என்னுடன் சேர்ந்து இருந்தால் நல்லவனாகவும் பூவோடு சேர்ந்த நார் மணப்பது போல மாறலாம். (ஹீ.ஹீ நம்ம தமிழ் பழமொழி எப்படி எல்லாம் எனக்கு கை கொடுக்கிறது பாருங்க)



நீங்கள் அதிக நேரம் யார் கூட சேர்ந்து இருக்கிறிர்களோ அவர்களின் பழக்க வழக்கங்கள் நீங்கள் அறியாமல் உங்களை மாற்றிவிடும் என்பதுதான் உண்மை. காரணம் மனிதர்களாகிய நாம் இந்த உலகின் பல இடங்களில் இருந்து தகவல்களை எடுத்து கொண்டு நாம் அதற்கு தகுந்து நம்மை மாற்றி கொள்கிறோம். அதானல் நட்பு மிக முக்கியம் . அது இந்த உலகில் மிக முக்கியமான பாத்திரமாக இருந்து நமது வாழ்க்கையில் செயல்பட்டு கொண்டு இருக்கிறது.  நண்பர்களின் ஆதிக்கத்தை சார்ந்துதான் நமது எதிர்கால வாழ்க்கை மாறுகிறது. அதனால இப்ப சொல்லுங்க உங்கள் நண்பர்கள் உண்மையான நண்பர்கள்தானா ????? அல்லது ஜெயலலிதா ,கருணாநிதி கொண்டிருந்த நட்பு போல கூடா நட்பா?






Friends18.com Orkut Scraps
<



9 comments:

  1. அருமையான அனைவரும் அவசியம் படிக்கவேண்டிய
    பயனுள்ள கட்டுரை பதிவுக்கு நன்றி

    ReplyDelete
  2. அழகான இடுகை. சொன்ன கருத்துக்களின் அழகே அழகு. தடித்தத எழுத்துக்களில் ஒரு இயல்பான ,உண்மையான நட்பின் இலக்கணத்தை சொன்னது அழகு.அதற்கும் முன்னர் கூறிய "இன்டர்நெட் " நட்பின் இயல்பின் அழகும் ரசிக்க வைத்தது.அதுசரி, கடைசியில் சிம்பாலிக்காக அந்த சிறுவனின் படம் என்ன சொல்கிறது?

    அது இடுகையை எழுதியவரா அல்லது எங்களைபோன்ற படிபவர்களா?

    ReplyDelete
  3. @ரமணி சார் உங்கள் வருகைக்கும் ஆதரவிற்கும் நன்றிகள்

    ReplyDelete
  4. @சுக்கு மாணிக்கம் நீண்ட காலத்திற்கு பின் வருகை தந்ததுமட்டுமல்லாமல் கருத்து தெரிவித்த உங்களுக்கு மிகவும் நன்றிகள்.
    //கடைசியில் சிம்பாலிக்காக அந்த சிறுவனின் படம் என்ன சொல்கிறது? அது இடுகையை எழுதியவரா அல்லது எங்களைபோன்ற படிபவர்களா?///

    கடைசியில் வந்த சிறுவன் படம் சிம்பலிக்காக கூடா நட்பு கொண்டவர்களை பார்த்து மார்பில் அடித்து கொள்வதாக எடுத்து கொள்ள வேண்டும்

    ReplyDelete
  5. அருமையான பகிர்வு, நல்ல நண்பர்கள் உடையவர்கள் பாக்கியவான்கள்...!!!

    ReplyDelete
  6. //என்னுடன் சேர்ந்து இருந்தால் நல்லவனாகவும் பூவோடு சேர்ந்த நார் மணப்பது போல மாறலாம்.//

    இது நல்லா இருக்கே!!!!!!!!!

    ReplyDelete
  7. அன்பு நண்பரே - நட்பின் இலக்கண்ம வகுக்கிறீர்களா ....... நன்று நன்று - நல்வாழ்த்துகள் - நட்புடன் சீனா

    ReplyDelete
  8. நட்புக்கு இலக்கணம் கூறும் நல்லதொரு படைப்பு! வாழ்த்துக்கள்!

    ReplyDelete

நான் அறிவு ஜீவி அல்ல ஒரு சாதாரணமான் மனிதன் தான்.இங்கு நான் பதியும் பதிவுகளில் உள்ள கருத்துகள் "மிகவும் சரி"யென்று சொல்லமாட்டேன் அது அன்றைய மனநிலையில் என் மனதில் எழும் கருத்துகளே...அதனால் உங்களது மனசுலபட்ட மாற்று கருத்துகளை தாராளமாக பகிரலாம். ஆனால் தேவையற்ற, வரம்புமீரிய, அநாகரிகமான வார்த்தைகளாலும் பதிவிற்கு சம்பந்தமில்லாமல் கருத்துக்கள் சொல்லப்பட்டால் எந்த வித பதில் விளக்கமின்றி அந்த கருத்து டெலீட் செய்யப்படும்.