Saturday, September 27, 2025

 வெட்கம் கெட்ட கமெண்ட்டுகள்! விஷம் உமிழும் விரல்கள்!
    

@avargalunmaigal


இணையத்தில் நாம் காட்டும் கோபம்: நம் பிள்ளைகளுக்கு நாம் கற்றுக்கொடுக்கும் 'சைபர் புல்லிங்'! - கண்ணாடி எங்கே?

சமூக வலைத்தளங்களில் நாம் காட்டும் கோபம், ஒரு சாதாரண விஷயம் அல்ல. அது, நம் பிள்ளைகளுக்கு நாம் கற்றுக்கொடுக்கும் விஷம் நிறைந்த பாடம்! இதை எந்தக் கௌரவமான பெற்றோரும் ஒப்புக்கொள்ள மாட்டார்கள். ஆனால், நீங்கள் செய்யும் தவறு இதுதான்.

உங்கள் கமெண்ட்டுகள்தான், உங்கள் குழந்தையின்  வருங்கால முகம் மட்டுமல்ல இளைய சமுதாயத்தின் முகம்!

நாம் நம் பிள்ளைகளுக்குத் 'தார்மீகப் பாடம்' எடுக்கிறோம்: "யாரையும் வெறுக்காதே," "அன்பாக இரு." ஆனால், அடுத்த நொடியே போனைத் திறந்து, கோழைகள்போல் திரைக்குப் பின்னால் ஒளிந்துகொண்டு, சக மனிதர்களைப் பார்த்துச் சீண்டுகிறோம், அருவருக்கத்தக்க வார்த்தைகளை உமிழ்கிறோம்.

வீட்டில் அன்பானவர்போல் நடிக்கிறீர்கள்; இணையத்தில் ஒரு 'குண்டர்போல்' நடந்துகொள்கிறீர்கள். உங்கள் பிள்ளைகள் ஒருவரையொருவர் இப்படித் திட்டினால், நீங்கள் அதைக் 'சைபர் புல்லிங்' என்று சொல்லிச் திட்டுகிறீர்கள் அப்படி செய்க்கூடாது என்று பாடம் எடுக்கிறீர்கள்  ஆனால், நீங்கள் செய்வது என்ன? நீங்கள் புல்லிங்கின் முன்னோடியாகதானே இருக்கிறீர்கள்!

உடனே கண்ணாடியில் உங்கள்  முகம் பாருங்கள்!

உங்களை நீங்களே கேட்டுக்கொள்ள வேண்டிய நேரம் இது: "இந்த வெட்கக்கேடான கமெண்ட்டுகளை என் பிள்ளை பார்க்க வேண்டுமா? இந்த நச்சுக் கருத்துகளை என் பிள்ளைதான் கற்றுக்கொள்ள வேண்டுமா?"

உங்கள் விரல்கள் தட்டச்சு செய்யும் ஒவ்வொரு விஷ வார்த்தையையும் அந்தப் பிஞ்சுக் கண்கள் கவனித்துக் கொண்டிருக்கின்றன. நீங்கள் திரையில் காட்டும் அத்தனை ஆவேசத்தையும், தரக்குறைவான பேச்சையும், அவர்கள் ஒரு பாடமாகப் பதிய வைத்துக்கொள்கிறார்கள்.

இன்று நீங்கள் உமிழும் இந்த வெறுப்பு, நாளை உங்கள் பிள்ளையின் வாயில் விஷமாகக் கொப்பளிக்கும்!

இந்தச் சமூக அவமானத்துக்கு நீங்கள் பொறுப்பல்லவா?

இனிமேலாவது கமெண்ட் போடுமுன் பல  தடவை யோசித்து போடுங்கள்நாமே நல்ல உதாரணமாகத் திகழாவிட்டால், இந்தச் சமூகத்தை யார் காப்பாற்றுவது?

இனிமேலாவது, அன்பைத் தவிர வேறு எதையும் உங்கள் விரல்கள் தட்டச்சு செய்யக்கூடாது! 

ஏதோ ஞாயிற்று கிழமை  காலையில் கொஞ்சம் யோசிக்கும் போது மனதில் தோன்றியதை இங்கே பதிவாக எழுதிவிட்டேன் அம்புட்டுதான் சிந்திக்கிறவனக் சிந்தியுங்க அப்படி இல்லைன்னா வழக்கம் போல சிரிச்சுட்டு வன்மம் கக்குங்கள்

சூர்யாவின்  அகரம் பவுண்டேஷனுடன் போட்டியிடுகிறதா தமிழக அரசின் கல்வியில் சிறந்த தமிழ்நாடு நிகழ்வு??  https://avargal-unmaigal.blogspot.com/2025/09/kalviyilsirandhatntamilnadueducationmks.html

 

 

இந்தியா என்ற ஆலமரத்தை வெட்டிச் சாய்ப்பது யார்?

இந்தியாவின் மீது உண்மையான அக்கறை உள்ளவர்கள் வாசிக்க வேண்டியது இது https://avargal-unmaigal.blogspot.com/2025/09/blog-post_19.html

 

அடுத்த பத்தாண்டுகளில் அமெரிக்காவின் விண்வெளி ஆதிக்கத்தை முறியடிக்கப் போகும் சீனா! அமெரிக்காவிற்கு ஓர் எச்சரிக்கை  https://avargal-unmaigal.blogspot.com/2025/09/warning-to-america-today-america.html



அன்புடன் 
மதுரைத்தமிழன். 

#இணையவெறுப்பைநிறுத்து#OnlineKindness#பிள்ளைகள்நமக்குபாடம்#LeadByExample#திரைக்குப்பின்னால்யார்#DigitalParenting#மதுரைத்தமிழன்கேள்வி#StopTheHate#அவர்கள்உண்மைகள்#BeKindOnline

Next
This is the most recent post.
Previous
Older Post

0 comments:

Post a Comment

நான் அறிவு ஜீவி அல்ல ஒரு சாதாரணமான் மனிதன் தான்.இங்கு நான் பதியும் பதிவுகளில் உள்ள கருத்துகள் "மிகவும் சரி"யென்று சொல்லமாட்டேன் அது அன்றைய மனநிலையில் என் மனதில் எழும் கருத்துகளே...அதனால் உங்களது மனசுலபட்ட மாற்று கருத்துகளை தாராளமாக பகிரலாம். ஆனால் தேவையற்ற, வரம்புமீரிய, அநாகரிகமான வார்த்தைகளாலும் பதிவிற்கு சம்பந்தமில்லாமல் கருத்துக்கள் சொல்லப்பட்டால் எந்த வித பதில் விளக்கமின்றி அந்த கருத்து டெலீட் செய்யப்படும்.