Sunday, September 21, 2025

 கனவு வாழ்க்கையை வாழ அமெரிக்க NRI-களுக்கு ஒரு வாய்ப்பு வந்திருக்கிறது. '

   




அமெரிக்காவில் டாலரில் சம்பளம் வாங்கிவிட்டு, அமெரிக்கக் கனவில் டெஸ்லா காரில் சுகமாகப் பெருமாள் கோவிலுக்குப் போய்விட்டு, நம்ம ஜீ அமெரிக்கா  வரும்போது விமான நிலையத்தில் டான்ஸ் என ஆட்டம் போட்டுக்கொண்டிருந்த NRI அம்பிகளுக்கு ஒரு 'குட் நியூஸ்'!


சும்மா 'இந்தியாதான் வல்லரசு', 'அமெரிக்கா ஒன்றுமே இல்லை'னு டெய்லி போஸ்ட் போட்டவங்க, வாட்ஸ்அப் குரூப்ல 'நம்ம பெருமை'னு நம்ம இந்தியா சூப்பர் பவர் 2047! மெசேஜ் ஃபார்வர்ட் பண்ணி கைவிரல் வலிக்க வச்சவனே, 'இந்தியா வந்து பாருங்க, செம்மையா இருக்கு!’னு ரீல்ஸ் போட்டவனே... *‘இந்தியா இப்போ வேற லெவல், மச்சி!’*னு டெய்லி ஃபேஸ்புக், இன்ஸ்டா ஸ்டேட்டஸ் அப்டேட் பண்ணவனே... உங்களுக்கு எல்லாம் உங்க கனவு வாழ்க்கை வாழ ஒரு வாய்ப்பு வந்திருக்கு.

ஆமாம்பூ, அமெரிக்காவில் சம்பாதித்த டாலரெல்லாம் அப்படியே இந்திய ரூபாய் மதிப்பில் கொட்டப்படும்னு நினைத்திருந்தவர்களுக்கு ஒரு ஷாக்... இந்த #H1Bvisa பிரச்சனை ஒரு சின்ன தொடக்கம் மட்டும்தான்!


அடுத்ததாக, 'இந்தியாவே இனி என் வீடு' என்று சொல்லிட்டு, டெல்லி ஏர்போர்ட்டில் தரையில் சம்மணம் போட்டு உட்கார்ந்துக்க வேண்டிய சூழ்நிலை வரலாம். அப்புறம், 'அமெரிக்காவில் பீட்சா, பர்கர் சாப்பிட்டு இருந்தேன்' என்று சொன்னவர்கள், இப்ப 'கோதுமை மாவு அரைக்கப் போறேன்' என்று வாட்ஸ்அப் ஸ்டேட்டஸ் போடுவார்கள்.

இனி என்ன? நீ ஆசைப்பட்ட வாழ்க்கை  ட்ரிபிள்கேன் பெருமாள் கோவில் புளியோதரை, மடிப்பாக்கம் ஆஞ்சநேயர் கோவிலில் வடை, மயிலாப்பூர் சங்கீதாவில் சாப்பாடு, அம்மா கையால் இட்லி, சட்னி, வத்தக்குழம்பு சாதம் வித் அப்பளம், மசாலா டீ குடித்து, பெசன்ட் நகர் பீச்சில் ‘ஐ லவ் இந்தியா’னு கத்துற லைஃப் – இப்போ இந்தியாவில் வந்து ஜாலியாக வாழலாம்! ‘ஓஹ்ஹ்ஹ்ஹ், மாம்ஸ் சமையல்!’னு கனவு கண்டவனே, இது உனக்கு ஒரு சான்ஸ்.

ஆகமொத்தம், வெளிநாட்டு மோகம் விட்டு கலைந்தவர்களுக்கு, இப்போது தாயகம் திரும்ப ஒரு நல்ல வாய்ப்பு வந்திருக்கிறது. வாழ்த்துகள்!

கனவு வாழ்க்கையை ரியலாக வாழ ஒரு வாய்ப்பை டிரம்ப் ஏற்படுத்திக் கொடுத்திருக்கிறார். அதுவும் #H1B விசா பிரச்சினையில் ஆரம்பித்திருக்கிறது.

சும்மா, "அமெரிக்கா ஒன்றுமே இல்லை... நம்ம இந்தியாதான் வல்லரசு" என்று சொன்னவர்களுக்கு, இப்போ "வாப்பா, இங்கேயே வந்து வாழ்ந்துவிட்டு போ" என்று ஒரு டிக்கெட் கொடுத்திருக்கிறார்கள் போல.


அம்பிங்களா மறந்துடாதீங்கோ அமெரிக்காவுல மனைவி, பிள்ளைகளை *“அம்போ!”*னு விட்டுட்டு, கோடிக்கணக்குல டாலர் சம்பாதிச்சு, தென்காசியில சம்மணம் போட்டு உட்கார்ந்து, *“வாங்க மாம்ஸ், இந்தியாவுக்கு வந்து நம்ம நாட்டை வல்லரசு ஆக்குவோம்!”*னு ஆசை காட்டுற ஒரு சங்கி ஸ்ரீதர் வேம்பு இருக்காரு!  இவரு மனைவியை அமெரிக்காவுக்கு *“வா, வா!”*னு கூப்பிட்டு, அப்புறம் *“அம்போ!”*னு விட்டுட்டு திரும்பி வந்துட்டாராம்! இப்போ இவரு தாம்பரம் சைடுலயே பல கம்பெனி ஆரம்பிச்சு, *“வாங்க மச்சி, இந்தியாவுல வந்து வேலை செய்யுங்க, வாழ்க்கை ஜகஜ்ஜாலம் ஆகும்!”*னு சொல்றாரு. இவரு கிட்ட நேரா போனீங்கன்னா, உங்க வாழ்க்கை தாம்பரம் ஸ்டைல் வசந்தம்! 



அன்புடன்
மதுரைத்தமிழன்

  • #ThamBrahmReturnTicket 😂  #DosaDreamsInTamil 😄 #H1BToIdliLife 😂 #TrumpSentMeBackToTambaram 😜 #DollarToDosaSwap 😄
  • MylaporeReturnTicket #madipaakamReturnTicket  😂 #AmericaMissesMySambar 😜 #TambaramSuperPower2047 😂 #NRItoPuliotharaiLife 😄
  • #ThamBrahmJollyJourney 😂

  • Next
    This is the most recent post.
    Previous
    Older Post

    0 comments:

    Post a Comment

    நான் அறிவு ஜீவி அல்ல ஒரு சாதாரணமான் மனிதன் தான்.இங்கு நான் பதியும் பதிவுகளில் உள்ள கருத்துகள் "மிகவும் சரி"யென்று சொல்லமாட்டேன் அது அன்றைய மனநிலையில் என் மனதில் எழும் கருத்துகளே...அதனால் உங்களது மனசுலபட்ட மாற்று கருத்துகளை தாராளமாக பகிரலாம். ஆனால் தேவையற்ற, வரம்புமீரிய, அநாகரிகமான வார்த்தைகளாலும் பதிவிற்கு சம்பந்தமில்லாமல் கருத்துக்கள் சொல்லப்பட்டால் எந்த வித பதில் விளக்கமின்றி அந்த கருத்து டெலீட் செய்யப்படும்.