சென்னை: செப்டம்பர் 13, 2025ல் தமிழக அரசு, இசைஞானி இளையராஜாவுக்கு சென்னை ஜவஹர்லால் நேரு இன்டோர் ஸ்டேடியத்தில் பிரம்மாண்ட விழா நடத்தப் போகிறதாம்! முதல்வர் ஸ்டாலின், உதயநிதி, ரஜினி, கமல் எல்லாம் வருவார்களாம். இதற்கு செலவு? தமிழக மக்களாகிய நீங்கள் கட்டிய வரிப்பணம்! இது என்ன அநியாயம்? மக்களின் கஷ்டத்தை உதாசீனப்படுத்தி, அரசு பணத்தை சினிமா ஷோவுக்கு வீணாக்குவது நியாயமா?
இளையராஜா மிகச் சிறந்த தமிழ் சினிமா துறையில் ஒரு இசையமைப்பாளர். அவரது இசை உலகெங்கிலும் உள்ள தமிழர்கள் அனைவராலும் ரசிக்கப்படுகிறது. அவரது திறமையை பாராட்டி மத்திய மாநில அரசுகள் அவருக்கு விருதுகள் கொடுத்து கெளரவித்திருக்கின்றன. லண்டனில் ‘வேலியன்ட்’ சிம்பொனி நடந்தபோது, மோடியும் ஸ்டாலினும் புகழ்ந்தார்கள். இப்படி உலக அங்கீகாரம் பெற்றவருக்கு, இப்போ மறுபடி அரசு விழாவா? ஏன், ஸ்டாலின் அரசே? உங்க கட்சி அரசியல் ஷோவுக்கு மக்கள் பணத்தை வீணடிக்கிறீர்களா? இது மக்கள் வரி - மக்கள் நலத்துக்கு செலவு செய்ய வேண்டியது, சினிமா டிராமாவுக்கு இல்லை! இந்த விழாவுக்கு கோடிகளை அள்ளி செலவழிக்கிறார்கள். மக்கள் பசி, வறுமை, வேலையின்றி தவிக்கும்போது, இந்த ஷோ எதுக்கு? இது அரசின் அராஜகம்!
சரி, அவருக்கு பாராட்டு விழா நடத்தியே ஆக வேண்டும் என்றால், அவர் சார்ந்த திரைத்துறை.. குறிப்பாக.. இசைத்துறையினர் நடத்தலாமே! அல்லது ஆளும் தி.மு.க. கட்சி சார்பாக கட்சி செலவில் பாராட்டு விழாவை நடத்தலாமே! எதற்காக அரசுப் பணம்?
இளையராஜா மக்கள் மகிழ்ச்சியாக இருக்க வேண்டுமென்பதற்காக மட்டும் இசை அமைக்கவில்லை. தன்னிடம் உள்ள திறமையை மற்றவர்களுக்குக் காட்டவும், அப்படி காட்டுவதன் மூலம் தனக்கு ஒரு நல்ல வருமானத்தை ஈட்டுவதற்காக மட்டுமே இசை அமைத்திருக்கிறார்.
மேற்கத்திய கலைஞர்கள் மக்களுக்கு ஒரு பிரச்சனைகள் வந்து பாதிக்கப்படும் போது தங்கள் நிகழ்வுகளை நடத்தி அதில் இருந்து ஈட்டும் வருமானத்தை மக்களின் பிரச்சனைகளைத் தீர்ப்பதற்காகக் கொடுப்பார்கள். அப்படி ஏதும் தமிழ் பேசும் மக்களுக்காக இளையராஜா செய்திருக்கிறாரா? சென்னை வெள்ளம் (2015)ல் சில உணவுப் பொட்டலங்கள் கொடுத்தார். அவ்வளவுதான். ஆனால் சென்னையில் வெள்ளம் வந்து பாதித்த போதோ, தூத்துக்குடி, கன்னியாகுமரியில் புயல் வந்து புரட்டிப் போட்டு மக்களின் வாழ்வாதாரங்களை இழந்து தவித்த போதோ, அதிலும் மீனவர்கள் பாதிக்கப்பட்ட போதோ, அல்லது கொரோனா சமயத்தில் தமிழக மக்கள் பாதிக்கப்பட்ட போதோ, அவர் இசை நிகழ்வு நடத்தி அதன் மூலம் கிடைத்த வருமானத்தை மக்கள் நலனுக்காகச் செலவழித்திருக்கிறாரா? அப்படி ஏதும் அவர் பாராட்டும்படி செய்திருந்தால், அவரைக் கௌரவிக்க அரசு செலவில் ஒரு விழா எடுத்தால் அதில் தப்பே இல்லை. ஆனால் அப்படி ஏதும் அவர் செய்த மாதிரி செய்திகள் நான் கேள்விப்பட்ட அளவில் வரவே இல்லை.
அரசு இவருக்கு விழா எடுப்பது ஒரு தவறான முன்னுதாரணம் ஆகும். இன்று ஒரு இசையமைப்பாளர், நாளை ஒரு நடிகர், அதன் பிறகு இயக்குநர் என்று சினிமாத் துறையினருக்கு விழா எடுக்க ஆரம்பிப்பார்கள். ஸ்டாலின் அவர்களே, இது ஒரு தவறான உதாரணம் என்பது உங்களுக்குத் தெரியவில்லையா அல்லது உங்களைச் சுற்றியுள்ளவர்கள்தான் சொல்லவில்லையா?
சினிமா நடிகர் சூர்யா அகரம் அறக்கட்டளையை நிறுவி எவ்வளவு மாணவர்களுக்கு உதவி வருகிறார். அதுபோல சுஜித் என்ற இளைஞரும் மாற்றம் என்ற ஒரு அறக்கட்டளையை நிறுவி இளைய சமுதாயத்திற்கு உதவி வருகிறார். அவர்களை எல்லாம் அழைத்து கௌரவிக்காமல் இளையராஜாவிற்கு மட்டும் விழா எடுப்பது சரியா? அவர் அதற்குத் தகுதியானவரா?
அரசு செலவில் விழா எடுக்க வேண்டுமென்றால், மக்கள் நலனுக்காக உழைப்பவர்களுக்கு எடுக்கலாம். உயிர்களைக் காப்பாற்றும் மருத்துவர்கள், மாணவர்களுக்கு ஒளி ஏற்றும் ஆசிரியர்கள், பொது மக்களின் பாதுகாப்பை உறுதி செய்யும் காவலர்கள், கொரோனா காலத்தில் உயிரைப் பணயம் வைத்து பணியாற்றிய சுகாதார ஊழியர்கள்-சமூக ஆர்வலர்கள் போன்றவர்களுக்கு விழா எடுப்பதுதானே சிறப்பு
ஒவ்வொரு ஊரிலும் சுயநலம் கருதாமல் சமூக நலனைக் கருத்தில் கொண்டு பணியாற்றும் சமூக ஆர்வலர்கள் ஒருத்தர்களைக் கூட அரசு செலவில் பாராட்டி கெளரவப்படுத்தக் கூடாதா என்ன? இளையராஜா நியமன எம்பியாகப் பதவி வகித்து அந்த எம்பி பதவி மூலம் தமிழ்ச் சமூகத்திற்காக ஏதாவது குரல் எழுப்பி இருக்கிறாரா என்ன? இப்படி சமூக நலனுக்காக ஏதும் செய்யாத அவருக்கு மக்கள் வரிப் பணத்தில் விழா எடுப்பது அவசியமா என்ன?
ஒரு தனிப்பட்ட மனிதனுக்கு பாராட்டு விழா நடத்தி வரிப்பணத்தை வீணடிப்பதற்கு பதிலாக எத்தனை அரசு பள்ளிகளில் கட்டிடங்களை சீர்படுத்த பயன்படுத்தலாம் அல்லது எத்தனை அரசு போக்கு வரத்தில் இருக்க் கூடிய வாகனங்களை சரி படுத்தி அதை மக்களின் வசதிக்காக பயன்படுத்தலாம்
மக்களே, கேள்வி கேளுங்கள்! இந்த விழாவை நிறுத்த மாட்டார்கள், ஆனால் மக்களாகிய நீங்கள் கேள்வி கேட்க வேண்டும்! உங்கள் வரிப்பணம் எப்படி செலவழிக்கப்படுகிறது? ஏன் மக்கள் நலத்திட்டங்களுக்குப் பயன்படுத்தப்படவில்லை? இளையராஜாவுக்கு விழா நடத்துவது உங்கள் பணத்திற்கு மரியாதையா? சிந்தியுங்கள், கேள்வி கேளுங்கள், உங்கள் குரலை உயர்த்துங்கள்! இப்படி எல்லாம் நாங்கள் கேள்விகள் எழுப்புவதால் நீங்கள் விழாவை நிறுத்தப் போவதில்லைதான், ஆனால் இப்படி கேள்விகள் எழுப்பும் போது அதைப் படித்து கொஞ்சமாவது சிந்திப்பவர்கள் இருக்கத்தானே செய்வார்கள்.

அன்புடன்
மதுரைத்தமிழன்
#TaxMoneyForPeopleNotShows
#AskBeforeYouSpend
#PublicFundsAreNotPrivateFame
#VoiceOfTamilTaxpayers
#StopCelebrityCelebrationsWithTaxMoney
#Ilayaraja
#MKStalin
#DMK
#tamilNadu
#tax
#மக்கள்_வரிப்பணம்_மக்களுக்கே
#Tax money belongs to the people
#வரிப்பணத்தை_வீணாக்காதீர்கள்
#Don’t waste tax money
#இளையராஜா_விழா_தேவையா
#Is Ilaiyaraaja’s tribute necessary?
#மக்கள்_கேள்வி_கேட்கிறார்கள்
#The people are asking questions
#சினிமா_விழாவுக்கு_அரசு_பணம்_வேண்டாம்
#No government funds for cinema shows
0 comments:
Post a Comment
நான் அறிவு ஜீவி அல்ல ஒரு சாதாரணமான் மனிதன் தான்.இங்கு நான் பதியும் பதிவுகளில் உள்ள கருத்துகள் "மிகவும் சரி"யென்று சொல்லமாட்டேன் அது அன்றைய மனநிலையில் என் மனதில் எழும் கருத்துகளே...அதனால் உங்களது மனசுலபட்ட மாற்று கருத்துகளை தாராளமாக பகிரலாம். ஆனால் தேவையற்ற, வரம்புமீரிய, அநாகரிகமான வார்த்தைகளாலும் பதிவிற்கு சம்பந்தமில்லாமல் கருத்துக்கள் சொல்லப்பட்டால் எந்த வித பதில் விளக்கமின்றி அந்த கருத்து டெலீட் செய்யப்படும்.