Monday, June 18, 2012


 Vikatan Cover design by MaduraiTamilGuy


ஹாய் மதனின் கேள்வி பதிலுக்கு பதிலாக மதுரைத்தமிழனின் கேள்வி பதில் ஆனந்த விகடனிலா?



மதுரைத்தமிழா, பெண்கள் என்றும் இளமையாக இருக்க ஒரு நல்ல ஐடியா சொல்லுங்க?
மதுரைத்தமிழன் : அது ரொம்ப சிம்பிள்ங்க அவங்களை விட வயதில் மூத்தவர்களுடனேயே எப்போதும் காலத்தை கழித்தால் என்றும் அவர்கள் இளமையாக இருக்க முடியும்

மதுரைத்தமிழா, மனைவியிடம் சபாஷ் வாங்குவது எப்படி?

மதுரைத்தமிழன் : 1.எப்போதெல்லாம் நீ தவறு செய்யும் போது அதை தைரியமாக ஒத்துகொள்
2.எப்போதெல்லாம்  நீ சரியோ  அப்போதெல்லாம் உன் வாயை மூடிகொள்

மதுரைத்தமிழா, மதத்தில் சொல்லியவைகளை நம்பாத ஆண்களுக்கு எப்படி நம்பிக்கையை வர வழைப்பது?
மதுரைத்தமிழன் :அவனுக்கு ஒரு கல்யாணத்தை பண்ணி வையுங்கள் அதன் பிறகு மதத்தில் சொல்லிய நரகம் தெரிய ஆரம்பிக்கும் போது அவனுக்கு மதத்தின் மீது நம்பிக்கை ஆரம்பிக்கும்

மதுரைத்தமிழா, குடிப்பது நல்லதா?
மதுரைத்தமிழன் :அரசாங்கத்துக்கு நல்லது......காலிப்பாட்டில்களை பொறுக்குபவர்களூக்கும் நல்லது.

மதுரைத்தமிழா, குறுகிய காலத்தில் உழைக்காமல் அதிக அளவு பணம் சம்பாதிக்க வழி என்ன?
மதுரைத்தமிழன் :காவி உடை உடுத்தி பள்ளியறையில் யோக கற்று கொடுப்பதுதான்.

மதுரைத்தமிழா, நவின கால தமிழ் இலக்கியத்தை வளர்ப்பது எப்படீ?
மதுரைத்தமிழன் :நீ ஏதாவது கிறுக்கி வெளியிட்டு , வாசகர் சந்திப்புக்கு ஏற்பாடு செய்து தண்ணியடித்து ஆட்டம் இட்டு இப்படியெல்லாம் எழுதினா தமிழனுக்கு ரசிக்க தெரியாது மலையாளக்காரனுக்குதான் ரசிக்க தெரியும் என்று சொல்லினால் தமிழ் இலக்கியம் வளருமுங்கோ

மதுரைத்தமிழா, உங்களுக்கு அதிகாரம் இருந்தால் நீங்கள் யாரை ஜனாதிபதி பதவிக்கு சிபாரிசு செய்வீர்கள்?
மதுரைத்தமிழன் :அதற்கு பொறுத்தாமான ஆள் சூப்பர் ஸ்டார் அல்ல நம்ம பவர் ஸ்டார்தான்

மதுரைத்தமிழா ,தமிழக மக்கள் விரும்புவது & கடவுளிடம் வேண்டுவது என்ன?
மதுரைத்தமிழன் :எங்க தொகுதி எம்.எல்.ஏ எப்ப சாவான் மீண்டும் எங்க தொகுதியில் தேர்தல் வரவேண்டும் என்றுதான்

மதுரைத்தமிழா, சிறையில் இருந்து வந்த ராசைவை பார்த்து கலைஞர் ஒர் ஆண்டுக்கு பின் எனது தம்பியை காண்கிறேன் என்று சொன்னது பற்றி நீங்கள் என்ன சொல்லுகிறிர்கள்?

மதுரைத்தமிழன் :இன்னும் ஒரு சில ஆண்டுகளுக்கு பிறகு தம்பி வைகோவுக்கு நடந்ததுதான் உனக்கும் என்று சொல்லாமல் சொல்லியது போல இருந்தது



நண்பர்களே நீங்கள் கேட்ட கேள்விக்கு எல்லாம் பதில் சொன்ன எனக்கு ஒரு சின்ன கேள்வி முடிந்தால் நீங்கள் பதில் சொல்லுங்கள்

மிக அதிகமாக வளர்ந்த பெண்
மிக அதிகமான சம்பளம் வாங்கினாலும்
மிக அதிகமான விலையில் உள்ள ஆனால்
மிக குறைவான நீளம் உள்ள குட்டை ஸ்கர்ட்டை வாங்குவதன் காரணம் ஏனோ???

பதில் சொல்லிவிட்டு போங்க மக்காஸ்.. இல்லை உங்கள் கண்ணில் காக்கா வந்து கொத்திவிட்டு செல்லும்

அறிவிப்பு : இந்த பதிவின் தலைப்பு எனது கற்பனையே...இந்த பதிவும் எனது கற்பனையே .இந்த பதிவிற்கும் இங்கு வந்த விகடனின் அட்டைபடத்திற்கும் ஆனந்தவிகடனுக்கும் எந்தவித சம்பந்தமும் இல்லை. அதுபோல ஆனந்தவிகடன் கவர் போல வடிவமைத்தது நான் தான். விகடனின் வாசகனாகிய நான் விகடனின் "லோகோ"வை இங்கு எடுத்து கவர் வடிவமைத்துள்ளேன். அதற்கு விகடனாருக்கு எனது நன்றிகள்.


அன்புடன்,
உங்கள் அபிமானத்திற்குரிய
மதுரைத்தமிழனின் கிறுக்கல்கள் உங்கள் பார்வைக்காக
18 Jun 2012

13 comments:

  1. ஆஹா... தமிழ் இலக்கியத்தை வளர்ப்பது எப்படிங்கற கேள்விக்கான பதில் சூப்பர் நண்பா! மற்ற பதில்களிலும் உங்களுக்கே உரிய ‘டச்’ ரசிக்க வெச்சது. மெய்யாலுமே விகடன்ல எழுதச் சொன்னாலும் எனக்கு சந்தோஷம்தான்! இப்ப, உங்க கேள்விக்கு என் பதில்: ஷாப்பிங் பண்ணும் போது நிறையச் செலவு பண்றோமே... எதாவது ஒரு விஷயத்துலயாவது சிக்கனமா இருக்கணும்கற ‘நல்ல’ எண்ணத்துலதான்! எப்பூடி?

    ReplyDelete
  2. @பா.கணேஷ்

    உங்களின் பதில் மிகவும் என்னை சிரிக்க வைத்தது. அப்பா மதுரைக்காரர் என்பதை நிருபவித்துவிட்டீர்கள். மிகவும் அருமை..

    உங்களின் வருகைக்கும் நகைச்சுவையான கருத்துக்கும் மிகவும் நன்றி

    ReplyDelete
  3. //மதுரைத்தமிழன் :காவி உடை உடுத்தி பள்ளியறையில் யோககற்று கொடுப்பதுதான்.//

    //மதுரைத்தமிழன் :எங்க தொகுதி எம்.எல்.ஏ எப்ப சாவான் மீண்டும் எங்க தொகுதியில் தேர்தல் வரவேண்டும் என்றுதான் //

    மதியும் மிஞ்சி விடீர்கள், அட்டை பட வடிவமைப்பிலும் அசதி விட்டர்கள்

    ReplyDelete
  4. @சீனு உங்கள் வருகைக்கும் கருத்துக்கும் மனமார்ந்த நன்றிகள். உங்களின் கருத்துக்கள் உற்சாகமூட்டுபவையாக இருக்கின்றன. நன்றிகள்

    ReplyDelete
  5. செமையா இருக்கு...

    நான் ட்விட்டர்ல இந்த லிங்க ஆ.வி.க்கு டி.எம். பண்ணி இருக்கேன். அவிங்க உங்களைக் காண்டாக்ட் பண்ணுனா, பார்டி பிளீஸ்!!!

    :-)

    ReplyDelete
  6. நாலு பேரு திரும்பி பார்க்க வேண்டாமா....

    உமது கேள்விக்கு எமது பதில் ஒக்கேவா.

    உமது எல்லா பதில்களும் நச்சுன்னு இருக்கு வாழ்த்துக்கள்

    ReplyDelete
  7. குடிப்பது நல்லதா கேள்வியும் பதிலும் சிறப்பு .

    ReplyDelete
  8. படித்து படித்து வயிரு வலித்தது நீங்கள் ஆனந்தவிகடனில் கிழவிக்கு பதில் சொல்லும் நாள் வரும் ஆனந்தவிகடன் விஷயம் உள்ளவர்களுக்கு உரியமரியாதை கொடுக்கும்

    ReplyDelete
  9. அதற்கு பொறுத்தாமான ஆள் சூப்பர் ஸ்டார் அல்ல நம்ம பவர் ஸ்டார்தான்//


    ஆமாமா ஒரேயடியா இந்தியாவை கொல்ல சிறந்த வழி இதுதான், இது அமெரிக்காவின் மற்றும் சவூதி அரேபியாவின் சதி....!

    ReplyDelete
  10. மிக அதிகமாக வளர்ந்த பெண்
    மிக அதிகமான சம்பளம் வாங்கினாலும்
    மிக அதிகமான விலையில் உள்ள ஆனால்
    மிக குறைவான நீளம் உள்ள குட்டை ஸ்கர்ட்டை வாங்குவதன் காரணம் ஏனோ???//

    ஆண்கள் சாவியை கீழே போட்டு குனிய வேண்டாமே என்ற நல்லெண்ணம்தான் எப்பூடீ...?

    ReplyDelete
  11. //மதுரைத்தமிழா ,தமிழக மக்கள் விரும்புவது & கடவுளிடம் வேண்டுவது என்ன?
    மதுரைத்தமிழன் :எங்க தொகுதி எம்.எல்.ஏ எப்ப சாவான் மீண்டும் எங்க தொகுதியில் தேர்தல் வரவேண்டும் என்றுதான்//

    இந்தியா மொத்தமும் வேண்டுவது தான்!

    அருமை! வாழ்த்துக்கள்.

    வெற்றிமகள்

    http://vetrimagal.blogspot.in/2012/06/2.html

    ReplyDelete
  12. விகடனுக்கு நல்ல போட்டி உருவாகி விட்டது...வாழ்த்துக்கள்.

    ReplyDelete

நான் அறிவு ஜீவி அல்ல ஒரு சாதாரணமான் மனிதன் தான்.இங்கு நான் பதியும் பதிவுகளில் உள்ள கருத்துகள் "மிகவும் சரி"யென்று சொல்லமாட்டேன் அது அன்றைய மனநிலையில் என் மனதில் எழும் கருத்துகளே...அதனால் உங்களது மனசுலபட்ட மாற்று கருத்துகளை தாராளமாக பகிரலாம். ஆனால் தேவையற்ற, வரம்புமீரிய, அநாகரிகமான வார்த்தைகளாலும் பதிவிற்கு சம்பந்தமில்லாமல் கருத்துக்கள் சொல்லப்பட்டால் எந்த வித பதில் விளக்கமின்றி அந்த கருத்து டெலீட் செய்யப்படும்.

:) :)) ;(( :-) =)) ;( ;-( :d :-d @-) :p :o :>) (o) [-( :-? (p) :-s (m) 8-) :-t :-b b-( :-# =p~ $-) (b) (f) x-) (k) (h) (c) cheer
Click to see the code!
To insert emoticon you must added at least one space before the code.