ஆண்களின்
வாழ்வில் வசந்தம் வருவது எப்போது?
பல
முறை அலாராம் அடித்தும் எந்திரிக்காத நாம்
பக்கத்துவீட்டு
குக்கர் அடிக்கும் "விசில்" சத்தத்தில் எழுந்திரித்து
காலையில்
நடக்கும் அம்மா அப்பா சண்டையில் சிக்காத நாம்
டிராபிக்
சிக்கலில் சிக்கி ஆபிஸ் செல்வோம்.
தினசரி
சரியான நேரத்திற்கு சென்ற நாம்
லேட்டாக
சென்ற அன்று
தினசரி
லேட்டாக வரும் மேனேஜர்
அன்றுதான்
சிக்கிரம் வந்து
நாம்
தினமும் லேட்டாக வருவது போல
ஒரு
ஏளனப் பார்வை பார்ப்பார்
மிக
சிறப்பாக செய்த வேலைக்கு
இமெயிலில்
கூட பாராட்டாத ஆன் சைட் மேனேஜர்
நாம்
செய்த மிக சிறிய தவறை சுட்டிகாட்ட
போன்
போட்டு அழைக்கும் போது
நாம்
தன் மானத்தை இழந்து நிற்கிறோம்.
வேலை
நிமித்தம் வெளிநாடு சென்ற நண்பன்
புதுப்
புது இடங்களில் நின்று
விதவிதமான ஸ்டைலில் அட்டகாசமாக சிரித்து
போஸ்
கொடுத்து பேஸ்புக்கில் அப்டேட்
செய்ததை பார்க்கும் போது
செய்ததை பார்க்கும் போது
சென்னையை
விட்டு வேறு எங்கும் செல்லாத
நமக்கு
விரக்திதான் ஏற்படுகிறது
சென்னையின்
பவர்கட்டிலில் இருக்கும் நமக்கு
பவர்
கட்டு இனிமேல் இல்லை என்ற செய்தி வருவது போல
பெண்களே
அருகில் இல்லாத நம் சீட்டிற்கு அருகில்
தேவதை
போல வந்த
பெண்ணின்
தேவைகளை அறிந்து
நாம்
வாரம் முழுவதும் அவர்களுக்கு சேவை செய்து
பின்
வார இறுதியில் நாம்
அவளை
வெளியில் அழைத்து செல்ல
நினைக்கும்
போது
அப்போதுதான்
தான் காதலிக்கும் பையனை
நமக்கு
அறிமுகப்படுத்தி நம்மையும்
அவர்களுடன்
சேர்ந்து வர அழைக்கும் போது
நாம்
நொந்து நூழாகி போகிறோம்.
பார்க்கும்
போதெல்லாம் நமது பணித்திறமையை பாராட்டி
மாதம்
தோறும் பணிச்சுமையை அதிகரித்து
ஆண்டு
இறுதியில் ரிவ்யூ பண்ணும் போது மட்டும்
இல்லாத
குறைகளை
இருக்கும்
குறைகளாக சுட்டிக்காட்டி
சம்பள
உயர்வை மட்டும்
மிகமிக
குறைந்த அளவு உயர்த்தும்
மேனேஜரை
பார்க்கும் போது
இவனும்
ஒரு மனிதனா என்று
நமக்கு
நினைக்க தோன்றுகிறது.
இதையெல்லாம்
நினைத்து நொந்தவாறு
டாஸ்மாக்
கடைக்கு சென்று
ஜில்
என்று ஒரு பீர் கொடு என்று அமைதியாக கேட்கும் போது
ஜில்
இல்லாத பீர்தான் இருக்கிறது சத்தம் போட்டு சொல்லி
நம்மை
நொகடித்து விடுவார்கள்
இதையெல்லாம்
நினைத்து அழுதவாறே வீட்டிற்கு சென்றால்
அங்கு
அம்மா சீரியல் பார்த்து அழுது கொண்டிருப்பார்கள்.
அவர்களிடம்
அம்மா என்ன சாப்பாடு செய்து இருக்கிறிர்கள்
என்று
பசியோடு கேட்டால்
நீ
வழக்கம் போல வெளியில சாப்பிட்டு வந்து விடுவாய்
என்று
நினைத்து இன்று ஓன்றும் செய்யவில்லை
வேண்டுமென்றால்
இருக்கும் பழைய சாதத்தை
சாப்பிடு
என்று சொல்லும் போது
நாம்
எதுக்கடா பிறந்தோம் என்று நினைக்க தோன்றுகிறது.
இப்படி
தினம் தினம் நடந்தாலும்
என்றாவது
நமக்கு நல்லது நடக்கும்
நம்
வாழ்வுக்கு துணையாக
ஒரு
தேவதை வருவாள் என்று
கனவுகண்டு
கரண்டு இல்லாத அந்த இரவை எப்படியோ கழித்துவிடுவோம்
இப்படியாக
வசந்தம் வரும் என்று நினைத்த இளைஞனின் வாழ்வில் வசந்தம்தான் வந்ததா? அல்லது
வாழ்க்கை துணைக்கு தேவதை வரும் என்ற நினைத்த அவர்களுக்கு தேவதைதான் வந்து அமைந்ததா? என்பது
ஒரு கேள்வி குறியாக இருக்கிறது இளைஞர்களின் வாழ்வில்!
டிஸ்கி : நமது வாழ்வில் கல்யாணம் ஆன புதிதில் வசந்தமும் இருக்கும் தேவதையும் உடன் இருக்கும்.
ஆனால் கல்யாணம் ஆன சில ஆண்டுகள் கழித்து தேவதை நமது வாழ்வில் வதையாக
மாறும் போது வசந்தமும் காணாமல் போய்விடும்.அதன் பின் வாழ்க்கை
ஒரு போலி நாடகமாக ஆகிவிடும்
அன்புடன்,
உங்கள்
அபிமானத்திர்குரிய
மதுரைத்தமிழன்
எழுதிய கிறுக்கல்கள் உங்கள் பார்வைக்காக
ayyo ......paavam.....
ReplyDeleteநமது வாழ்வில் கல்யாணம் ஆன புதிதில் வசந்தமும் இருக்கும் தேவதையும் உடன் இருக்கும். ஆனால் கல்யாணம் ஆன சில ஆண்டுகள் கழித்து தேவதை நமது வாழ்வில் வதையாக மாறும் போது வசந்தமும் காணாமல் போய்விடும்.அதன் பின் வாழ்க்கை ஒரு போலி நாடகமாக ஆகிவிடும்// இது ஆண்களுக்கு மட்டுமல்ல பெண்களுக்கும் பொருந்துமே .
ReplyDelete