Wednesday, June 20, 2012




உங்கள் மனசு அன்பான மனசா அழகான மனசா இதைப்படித்து விட்டு சொல்லுங்கள்


காயப்பட்ட அன்பான மனசு சோகத்தில் திரிந்து கொண்டிருந்தது
அப்போது சந்தோஷத்தில் திரிந்த அழகான மனசிடம் பேசும் வாய்ப்பு அந்த
காயப்பட்ட மனசுக்கு கிடைத்தது.

அழகான மனசு காயத்தை ஆற்ற வந்த மனசாக அந்த காயப்பட்ட மனசு கருதி
சந்தோஷத்தில் சிறுவனைப் போல குதித்து மகிழந்தது.
அழகான மனசிடம் அன்பான மனசு உள்ளத்தை திறந்து அன்பை அள்ளிக் கொட்டியது.

ஆனால் அந்த அழகான மனசு , தன் மனசு அழகாக இருக்கும் கர்வத்தினால்
அன்பான காயப்பட்ட மனசிடம் என் அழகான மனதை வேண்டுமானல் ரசித்து கொள்
ஆனால் என் அன்பு இன்னொரு அழகான மனசுக்குதான்
உன்னை போல காயப்பட்ட மனசுக்கு இல்லை என்று சொல்லி
நான் அழகான மனசு என்பதால் நான் இப்போது ரொம்ப பிஸியாக இருக்கிறேன்
என்று சொல்லி மறைந்து விட்டது.

அந்த அன்பான காயப்பட்ட மனசுக்கு மேலும் ஒரு காயம் ஏற்பட்டு வழக்கம் போல
பரிதவித்து நிற்கிறது.


அன்பான மனசை புரிந்து கொள்ள இந்த காலத்தில் அழகான மனசுகளுக்கு நேரம் இல்லை.
காரணம் போலித்தனமான இந்த உலகில் அன்பைவிட அழகுக்குதான் மதிப்பு அதிகம்.

ஆனால் காலம் மாறும் போது அழகான மனசு அன்பான மனசாக மாறும் போது அது காயப்பட்ட மனசாக இருக்கும்.

அழகான மனசே என் இதயத்தில் எத்தனை காயங்கள் ஏற்பட்டாலும்  இதயம் வலித்தாலும்
உன் நினைவுகள்  மாறப் போவதில்லை ,என்னை நீ பிரிந்து சென்றாலும்
உன் நினைவுகள் என் இதயத்தை விட்டுச் செல்வதில்லை

அன்பான என் மனதுக்கு வலிக்கிறது ஆனால் வலி பழகி போய்விட்டது அதனால் நீ கவலைபடாமல் உன் பயணத்தை தொடர் என் கண்மணியே...

டிஸ்கி : மனசை பற்றி நினைத்த போது என் மனதில் தோன்றிய எண்ணங்கள் இங்கே கிறுக்கலாக வந்திருக்கிறது.


அன்புடன்,
உங்கள் அபிமானத்திற்குரிய
மதுரைத்தமிழனின் கிறுக்கல்கள் உங்கள் பார்வைக்காக
20 Jun 2012

5 comments:

  1. நல்லாத்தான் இருக்குய்யா ஹி ஹி....!

    ReplyDelete
  2. உங்கள் இணையத்தளத்துக்கு எளிதான முறையில் டிராபிக் பெறுவது எப்படி ?


    Tamilpanel.com தளத்தின் மூலம் உங்கள் இணையத்திற்கு , மிக எளிதான முறையில் நூற்றுக் கணக்கான வாசகர்களை எளிதில் பெறலாம் .இதில் கருத்தில் கொள்ள வேண்டியது என்னவெனில் நீங்கள் , ஓட்டுப் பட்டையோ , வாக்குகளோ அல்லது உங்கள் தளத்தின் செய்திகள் முன்னணி இடுகையாகவோ தேர்ந்தெடுக்கப்பட வேண்டிய அவசியம் இல்லை




    மேலும் விபரங்களுக்கு



    http://www.tamilpanel.com/







    நன்றி

    ReplyDelete
  3. மனசு மனசு மனசு எங்கும் மனசே நிறைந்து விட்டது .

    ReplyDelete
  4. அன்பான கவிதை கதை...

    ReplyDelete

நான் அறிவு ஜீவி அல்ல ஒரு சாதாரணமான் மனிதன் தான்.இங்கு நான் பதியும் பதிவுகளில் உள்ள கருத்துகள் "மிகவும் சரி"யென்று சொல்லமாட்டேன் அது அன்றைய மனநிலையில் என் மனதில் எழும் கருத்துகளே...அதனால் உங்களது மனசுலபட்ட மாற்று கருத்துகளை தாராளமாக பகிரலாம். ஆனால் தேவையற்ற, வரம்புமீரிய, அநாகரிகமான வார்த்தைகளாலும் பதிவிற்கு சம்பந்தமில்லாமல் கருத்துக்கள் சொல்லப்பட்டால் எந்த வித பதில் விளக்கமின்றி அந்த கருத்து டெலீட் செய்யப்படும்.

:) :)) ;(( :-) =)) ;( ;-( :d :-d @-) :p :o :>) (o) [-( :-? (p) :-s (m) 8-) :-t :-b b-( :-# =p~ $-) (b) (f) x-) (k) (h) (c) cheer
Click to see the code!
To insert emoticon you must added at least one space before the code.