சமைக்காத பிரியாணி...! தயிரில்லாத தயிர் பச்சடி...!!
நான் திணமணியில் படித்ததில் ஒரு உபயோகமான தகவலை மற்றவர்களுடன் பகிர்ந்து கொள்ளும் முயற்சியே இந்த பதிவு. இதை எழுதியவர் : சா. ஜெயப்பிரகாஷ் First Published : 10Jun 2012 12:00:00 AM IST இந்த செய்தியை எதிர்காலத்தில் தேடி அலைய வேண்டாம் என்பதால் இதை இங்கே பதிவு செய்துள்ளேன். அவ்வளவுதானுங்க....
பத்ரிக்கையில் வந்த ஒரு பகுதியை மட்டும் இங்கே வெளியிட்டுள்ளேன். முழு செய்தியைகாக இங்கே க்ளிக் செய்யவும்.
உணவுப் பொருள்களை சமைக்காமல் சாப்பிட்டால் அது உடலுக்குச் எல்லாவிதமான சத்துகளையும் கொடுக்கவல்லது என்கிறார்கள் "சங்கமம்' இயற்கை நல வாழ்வு மையத்தில் பயிற்சியளிப்போரும், பயிற்சி பெறுவோரும்..அப்படியென்ன இங்கே சொல்லித் தருகிறார்கள்? திருச்சியிலிருந்து கரூர் நெடுஞ்சாலையில் சுமார் 20 கிலோமீட்டர் தொலைவில், பெருகமணி காவிரிப் படுகையில் உள்ளது கப்புச்சின் சகோதரர்களின் "சங்கமம் - இயற்கை வாழ்வியல் மையம்'.
தினமும் ஒவ்வொரு வேளை உணவிலும் பலாப்பழம், பேரீச்சம்பழம், தேங்காய் கீற்றுகள், கேரட், மாங்காய், வெள்ளரிக்காய் போன்றவை "சைடு டிஷ்'. முட்டைகோஸ், கேரட், புடலங்காய், செüசெü, மாங்காய் போன்றவற்றை பொடித் துண்டுகளாக நறுக்கி உப்பு, சீரகத்தூள், மிளகுத்தூள், தேங்காய் துருவல், பொடியாக நறுக்கிய கறிவேப்பிலை, மல்லித் தழைகளைக் கலந்தால் "காய்கறிக் கலவை' தயார். வேகவைத்து, தாளித்து நாம் அன்றாடம் தயாரிக்கும் கூட்டு பொறியலை விஞ்சுகிறது இந்தப் பச்சைக் கலவை.
இதேபோன்ற காய்கறிக் கலவையில் முட்டைகோஸ் இதழ்களைச் சுற்றினால் இயற்கையான "ஸ்பிரிங் ரோல்' தயார்.
இவற்றைத் தயாரித்து வரும் மல்லிகா கூறும் ரெசிபிகள் மேலும் மேலும் ஆச்சரியத்தைத்தான் ஏற்படுத்துகின்றன. அடுத்த அதிரடி - "அவல் பிரியாணி'.
அவலை சுத்தப்படுத்தி தேங்காய்ப் பாலில் ஊறவைத்துக் கொள்ள வேண்டும். கொஞ்சம் பட்டை, கிராம்பு, சோம்பு பொடித்துக் கொள்ள வேண்டும். இஞ்சி, பூண்டு ஆகியவற்றை விழுதாக அரைத்துக் கொள்ள வேண்டும். கொத்தமல்லி, புதினா, கறிவேப்பிலை ஆகியவற்றை கழுவி பொடியாக அரிந்து கொள்ள வேண்டும். தேவையான அளவு உப்பு சேர்த்து இவை எல்லாவற்றையும் ஒன்றாகக் கொட்டி கிண்டினால் அவல் பிரியாணி தயார். "தம்' போடுவதற்கு கரி தேட வேண்டியதில்லை; ஆவி வரும்முன் விசில் போட வேண்டியதும் இல்லை!
பிரியாணிக்கு பிரதானமான தயிர் பச்சடியும் உண்டு. இந்த பச்சடி தயிரில் இருந்து தயாரிக்கப்படுவதல்ல! தேங்காய்ப் பாலில் எலுமிச்சை பழத்தைப் பிழிந்து அரை மணி நேரம் வைத்திருந்தால் சுவையான தயிர் தயார். அப்புறம் பெரிய வெங்காயம், கேரட்... இத்யாதிகளைச் சேர்த்தால் போதும்.
அவலைப் பொடித்து தேங்காய்ப் பால், தண்ணீர், நாட்டுச் சர்க்கரை, முந்திரி, உலர்ந்த திராட்சை சேர்த்தால் பாயசம் தயார். இவற்றை தலைவாழை இலையில் பரிமாறினால் "படாகானா' தோற்றுவிடும் "இயற்கை உணவு விருந்து'. எல்லாவற்றையும் நன்றாக மென்று சாப்பிட்டாலே போதும், உடலுக்குத் தேவையான சத்துகளுடன், நோய் எதிர்ப்பு சக்தியும் தானாக வரும் என்கிறார்கள்.
பயனுள்ள் பதிவு
ReplyDeleteபரிட்சித்து பார்த்துவிடுகிறோம்
பதிவுக்குனன்றி
தொடர வாழ்த்துக்கள்
@ரமணி சார்
ReplyDeleteஅதிகாலையில் எழுந்திருந்து எனது பதிவையும் படித்து கருத்து இட்ட உங்களின் சுறுசுறுப்பு என்னை வியக்க வைக்கிறது. நன்றி சார்
பரிசோதனைக்கு சரி. நீடித்து கடைப்பிடிக்க சிரமப்படும். இயற்கை உணவுதான். ஆனால் மனிதனின் இன்றைய இயற்கைக்கு ஒவ்வாதது.
ReplyDelete