Thursday, June 14, 2012



                    போதைக்கு அடிமையாகும் புதிய  கலாச்சாரம் + ( பதிவாளர்கள் )


போதை என்றாலே நம் மக்களின் சிந்தனைக்கும் கண்களுக்கும் முதலில் தெரிவது குடிப்பழக்கம்தான். அதுமட்டுமல்ல குடிப்பவர்களை எல்லாம் சமுகத்தில் ஏதோ தவறு செய்தவர்கள் என்று எண்ணி அவர்களை நடத்துவதும்  அவர்களைப் பற்றி பெறும் ஒப்பாரியே வைப்பதும்  என சில கூட்டங்கள் கருதி நடத்தி வருகின்றன. அது மட்டுமல்லாமல் இந்த மதத்தில் இப்படி சொல்லி இருக்கிறது அந்த மதத்தில் அப்படி சொல்லி இருக்கிறது என்று பல உதாரணங்களை அள்ளி விசி அறிவுரை வழங்குவார்கள் இந்த கலாச்சார காவலர்கள்,

அப்படி பட்டவர்களிடம் நான் ஐயா நான் குடிப்பவன்தான் ஆனால் குடிக்கு அடிமை இல்லை என்று சொன்னாலும் நாம் சொல்லவருவதை புரியாமல் அவர்கள் உலக ஞானிகள் போல நமக்கு அட்வைஸ் பண்ண வருவார்கள்.

அப்படி அறிவுறை சொல்லுபவர்களுக்கு நான் ஒன்றை சொல்ல விரும்புகிறேன். என்னை பொறுத்த வரை குடிப்பது தவறு இல்லை என்று கருதுபவன் அதே நேரத்தில் குடிப்பதற்கு அடிமையாகுவதைத்தான் தவறு என்று நினைக்கிறேன். போதைக்கு அடிமையாகுவதால் உடல் நலமும் மன நலமும் குடும்ப நலமும் கெடுகிறது அதனால் அடிமையாகுவது தவறுதான். அதுமட்டுமல்லாமல் எது நமது உடல் நலத்தையும் மன நலத்தையும் குடும்ப நலத்தையும் கெடுக்கிறதோ அது எல்லாம் தவறுதான் என்பது எனது அசைக்க முடியாத கருத்து.

அப்படி பார்க்கும் போது குடிபழக்கம் மட்டுமல்ல பல்வேறு செயல்களும் நம்மை அடிமையாக்கி நமது உடல் நலத்தையும் மன நலத்தையும் குடும்ப நலத்தையும் கெடுக்கிறது. அதை பற்றி இந்த சமுக காவலர்கள் கூச்சல் போடுவதில்லை. காரணம் அவர்களும் இந்த போதைக்கு அடிமையாகி உள்ளார்கள். உதாரணமாக  உலகம் முழுதும் பெருவளர்ச்சி கண்ட சமூக வலைத்தளம்  என கருதுப்படும் ஃபேஸ்புக், யாகூசாட்,டிவிட்டர், ஆர்குட், முதலியவற்றை  பயன்படுத்துவது மட்டுமல்லாமல் அதை தினமும் பார்க்காதவர்கள் குறைவு. அதற்கு அடிமையாகி மன நலத்தையும் குடும்ப நலத்தையும் கெடுத்தவர்கள் அனேகம். இந்த பேஸ்புக் போதைக்கு அடிமையாகுவதை இந்த கலாச்சார காவலர்கள் பேசுவதில்லை.

போதைக்கு அடிமையாகியவன் அவனது வாழ்வையும் அவனது குடும்ப வாழ்வையும் மட்டும்தான் கெடுக்கிறான், ஆனால் இந்த சமுக வலைதளங்களில் அடிமையாகிய பலர் அவர்களது  வாழ்வையும் அவர்களது  குடும்ப வாழ்க்கையும் கெடுப்பது மட்டுமல்லாமல் மற்ற குடும்பங்களின் வாழ்க்கையையும் கலாச்சாரத்தையும் கெடுக்கின்றனர். அதனது விளைவாக பல கள்ளக்காதல்களும் கொலைகளும் நாளுக்கு நாள் அதிகரித்து வருகின்றன என்பதை யாரும் மறுக்க முடியாது

இன்று பேஸ்புக் இல்லாமல் வாழ்க்கை இல்லை என்றும்,அடிமையாக மாறிவருவதாக பலர் சுட்டிக் காட்டி வருகிறார்கள்.
இன்று அலுவலகப் பணிகளுக்கு இது ஒரு பிரச்சினையாகவே இருக்கிறது. பொது மக்கள் போய் ஏதாவது கேட்டாலும் எரிந்து விழுகிறார்கள்.கிட்டத்தட்ட பேஸ்புக் எல்லோரையும் கட்டிப்போட்டு  ஒரு வித போதைத்தனமான அடிமைக்கு நம்மை இட்டு செல்கிறது . நான் சென்னை வந்த போது கேட்டு பார்த்து அறிந்து கொண்டது பிரௌசிங் செண்டரில் அதிகம் பார்க்கப்படுவது பேஸ்புக் என்று  ஒரு உரிமையாளர்.சொன்னார் அதுமட்டுமல்லாமல் இவர்களுக்கு சோறு, தண்ணிகூட வேண்டாம் சார்,சிலருக்கு பேஸ்புக் இருந்தால் போதும் என்றார். சர்வர் பிரச்சினை போன்ற காரணங்களால் இணைய இணைப்பு கிடைக்காத போது பலர் எரிந்து விழுகிறார்கள்.வரும்போதே உடலும்,மனமும் பரபரக்கத்தான் வருவார்கள். இது போன்ற ஒரு பழக்கத்தை விட முடியாமல்’ உடலும் மனமும் பாதிக்கப்படும் நிலைமைக்கு பலர்  அடிமையாகி வருவதை அவர் குறிப்பிட்டார் .

பேஸ்புக்தான் என்றில்லை,வலைப்பதிவுக்கு கூட ஒருவர் அடிமையாக முடியும்.நாம் கற்றுக்கொண்ட பழக்கம் நம்மை ஆளும் நிலைதான் அடிமைத்தனம்.   போதை மற்றும் புகைப்பழக்கத்துக்கு அடிமையானவர்கள் இருக்கிறார்கள். மதுவுக்கு அடிமையானவர்கள் தினமும் குறிப்பிட்ட நேரத்துக்கு குடிக்காவிட்டால் அவர்களின் மனம் அமைதி இழக்கும்.அதன் விளைவாக உடலில் மாற்றங்கள் உருவாகும். எரிந்து விழுவார்கள். எதையும் அதற்க்காக இழக்க தயார் ஆவார்கள் எப்படியாவது எப்படியாவது என்று மனம் தேடுத்தொடங்கி விடும். அது போலத்தான் பேஸ்புக் ,வலைதளங்கள் போன்றவையும் இப்படி அடிமையாக்க முடியும்.


எந்த பழக்கமும் நம்மை ஆளாமல் நாம்தான்  அதனை ஆள வேண்டும். அப்படி முடியாத நிலையில் தயங்காமல் ஆலோசனை பெறலாம்.கொஞ்சம் கொஞ்சமாக குறைத்துக் கொள்ளலாம். எந்த சமூக வலைத்தளங்களையும் நல்ல நோக்கத்திற்காக பயன்படுத்துபவர்கள் அடிமையாக வாய்ப்பில்லை.அது போலதான் குடியும்.

என்ன மக்காஸ் என் மனதில் உள்ளதை இங்கே கொட்டிவிட்டேன் ...நீங்களும் இதைப்பற்றி உங்கள் மனதில் இருப்பதை இங்கே கொட்டலாமே

அன்புடன்,
உங்கள் அபிமானத்திற்குரிய
மதுரைத்தமிழனின் கிறுக்கல்கள் உங்கள் பார்வைக்காக.

14 comments:

  1. என் மனதிலும் இந்தக் கருத்து உண்டு. மிகச் சரியான வார்த்தைகளால் நீங்கள் பிரதிபலித்ததைக் கண்டு வியக்கிறேன், மகிழ்கிறேன். அருமை.

    ReplyDelete
  2. போதை தலைக்கேறிவிட்டால் சில கேடு விளையும் அப்படிதான் நீங்கள் குறுப்பிட்ட போதை தலைகேராமல் நாம் தான் பார்த்துக்கொள்ள வேண்டும் .

    ReplyDelete
  3. நல்லா சொன்னீங்க ஆமாம் இதுவும் ஒரு வகையில் போதைதான் - தெளிவான அலசல்

    ReplyDelete
  4. உண்மையை பட்டவர்த்தனமாக உடைத்து விட்டீர்கள்

    ReplyDelete
  5. அதுமட்டுமல்லாமல் எது நமது உடல் நலத்தையும் மன நலத்தையும் குடும்ப நலத்தையும் கெடுக்கிறதோ அது எல்லாம் தவறுதான் என்பது எனது அசைக்க முடியாத கருத்து.//

    மிக சரியா சொன்னீங்க .எனது கருத்தும் அதுவே .

    ReplyDelete
  6. நல்ல பதிவுதான்!

    உண்மைதான்!

    அதற்காக குடி நல்லதல்ல-
    கொஞ்சமா இருந்தாலும்!

    ReplyDelete
  7. உண்மைதான், இந்த ப்ளாக்கில் நான் எழுத ஆரம்பித்த பிறகு எனது தூங்கும் நேரம் மிகவும் குறைந்து விட்டது. எக்ஸ்ட்ராவாக நாலு கமெண்ட்ஸ் கிடைச்சா போதை தலைக்கேருது, கமெண்ட்ஸ் கிடைக்கலைன்னா எதையோ இழந்துவிட்ட மாதிரி தோணுது :(

    ReplyDelete
  8. உண்மை தலைவா.., நிறைய பேர் சைபர் ஸ்பேஸ் தான் உலகம்ன்னு நினைக்க ஆரம்பிச்சுட்டாங்க..,

    ReplyDelete
  9. மிகச் சரி அருமையாக விளக்கிப் போகிறீர்கள்
    எதற்கும்அடிமையாகாமல் அவ்வப்போது
    தன்னை சரிபடுத்துக் கொள்பவனே புத்திசாலி
    அனைவருக்குமான அருமையான பதிவு
    வாழ்த்துக்கள் (முதல் பின்னூட்டத்தை
    நீக்கி விடவும் )

    ReplyDelete
  10. எந்த பழக்கமும் நம்மை ஆளாமல் நாம்தான் அதனை ஆள வேண்டும். அப்படி முடியாத நிலையில் தயங்காமல் ஆலோசனை பெறலாம்.கொஞ்சம் கொஞ்சமாக குறைத்துக் கொள்ளலாம். எந்த சமூக வலைத்தளங்களையும் நல்ல நோக்கத்திற்காக பயன்படுத்துபவர்கள் //மிகச்சரியாக சொன்னீர்கள்.

    ReplyDelete
  11. Well said Sir, I have seen many of my cousins spending tons of time in facebook and twitter. Most of them think that it's fashion and defend that they are getting connected. But what they don't understand is they are losing not Only time, but health, money etc. where these are leading to...nobody knows

    ReplyDelete
  12. ஏன் பணம், மதம், இனம், நாடு என பல அடிமைத்தனங்கள் பல உள்ளன ?

    குறிப்பாக பெண் மேல் மோகம் கொள்ளும் அடிமைத் தனம்..

    கட்டின பெண்டாட்டி இருக்கும் போது பிற பெண்ணிடம் ஜொள்ளுவதும் அடிமைத் தனம் தானே !

    ReplyDelete
  13. எழுத்தே ஒரு போதைதான்!

    ReplyDelete
  14. பதிவு வாசிப்பதில் அடிமை உண்டோ? பயனுள்ளதாக நேரத்தை செலவிட்டால் நலமே.

    ReplyDelete

நான் அறிவு ஜீவி அல்ல ஒரு சாதாரணமான் மனிதன் தான்.இங்கு நான் பதியும் பதிவுகளில் உள்ள கருத்துகள் "மிகவும் சரி"யென்று சொல்லமாட்டேன் அது அன்றைய மனநிலையில் என் மனதில் எழும் கருத்துகளே...அதனால் உங்களது மனசுலபட்ட மாற்று கருத்துகளை தாராளமாக பகிரலாம். ஆனால் தேவையற்ற, வரம்புமீரிய, அநாகரிகமான வார்த்தைகளாலும் பதிவிற்கு சம்பந்தமில்லாமல் கருத்துக்கள் சொல்லப்பட்டால் எந்த வித பதில் விளக்கமின்றி அந்த கருத்து டெலீட் செய்யப்படும்.