Thursday, June 28, 2012


காதலியைத் தேடி ஒரு பயணம்....

எனக்கும் ஒரு காதலி கிடைத்தாள்( உனக்குமா என்று கேட்பது என் காதில் விழுகிறது)
அவள் உலகயே மறந்து
என் மீது அன்பு மழை பொழிந்தாள்.(சரியான லூசா உன் காதலி என்று நீங்கள் கேட்பதும் என் காதில் விழுகிறது)
எனக்கோ சந்தோஷத்தில் தலைகால் புரியவில்லை( மரமண்டை உனக்கு என்னதான் புரியப்போகிறது)
இவள் எனக்கு காதலியாக இருக்கும் போதே
இவ்வளவு அன்பு காட்டுகிறாளே(அப்படிதான் மக்கா நடிப்பாங்க)
அவளே எனக்கு மனைவியாக வந்தாள் எப்படி இருக்குமென(வேண்டாம் இந்த விபரீதம்)
கற்பனை சிறகை பறக்கவிட்டேன்( ஆமாம் இவரு பெரிய பாடகர்)
அதுவும் மிகவும் இனிமையாக இருந்தது.
இனிமையான கனவை நினைவாக்க முயற்சி செய்தேன்(உனக்கு நீயே கல்லறை தோண்டுகிறாயா?)
அதனால் காதலியை மனைவியாக்கினேன்(கடவுளே இந்த அப்பாவியை நீதான் காப்பாற்ற வேண்டுமப்பா)
காதலி மனைவியானது அன்பு அதிகாராமாக மாறியது.(இன்னொரு ஜெயலலிதாவாஆஆஆஆஅ)
அதிகாரத்தைவிட அன்புதான் எனக்கு பிடித்திருக்கிறது.
அதனால் அன்பைபொழியும் காதலியைத் தேடி எனது பயணம் தொடர்கிறது( டேய் நீ இன்னொரு பெண்ணுக்கு ஆசைபடுறேன்னு தைரியமா சொல்லேண்டா)


நீங்க நினப்பது மாதிரி நான் அப்படி மோசமானவன் இல்லைங்க. நான் சொல்ல வருவது என்னவென்றால் மனைவியை மீண்டும் காதலியாக்க நான் முய்ற்சி செய்கிறேன் என்றுதான். அதற்கு உங்களிடம் ஐடியா ஏதாவது இருந்தா சொல்லுங்களேன்

என்னடா இதெல்லாம் ஒரு பதிவா என்று நீங்கள் கேட்பது எனக்கு புரிகிறது. என்ன செய்ய நம்ம வலைதளம் தினம் தேடி வருபவர்களை ஏமாற்ற கூடாது என்ற நல்ல எண்ணமும் மேலும் என்ன பதிவு போடவது என்று யோசித்ததில் மூளை சுளுக்கி கொண்டதால் வேறு வழியின்றி இந்த பதிவை இட்டுள்ளேன்.

டிஸ்கி: இது என்னுடைய கற்பனை பதிவுதான். அதனால் இது உங்கள் வாழ்க்கை அனுபவமா என்று என்னை கேட்டு என் குடும்பத்தில் குழப்பம் விளைவிக்க பின்னுட்டத்தில் யாரும் முயற்சி செய்ய வேண்டாம்( அப்பாட  யாரவது மனைவியிடம் வத்தி வைச்சால் அதில் இருந்து தப்பிக்க ஒரு வழியா டிஸ்கியில் போட்டு விட்டோம். அடுத்த வேளை சாப்பாட்டுக்கு இப்போதைக்கு கவலையில்லை)


அன்புடன்,
உங்கள் அபிமானதிற்குரிய
மதுரைத்தமிழனின் எண்ணங்கள் கிறுக்கல்களாக உங்கள் பார்வைக்கு
28 Jun 2012

17 comments:

  1. ஒவ்வொன்றுக்கும் நீங்கள் தந்த கமெண்ட் நன்றாக இருந்தது.மனைவியைக் காதலிப்பதில் எவ்வித பிரச்சனையும் இல்லையே.பிறகெதற்கு ஐடியா..:):)

    ReplyDelete
    Replies
    1. @மதுமதி உங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி

      படித்து ரசித்து பாராட்டியதற்கு மிகவும் நன்றி. நாலு பேரிடம் ஐடியா கேட்பது நமக்கு தெரியாதது மற்றவர்களுக்கு தெரிந்திருக்கலாம் அல்லவா அதனால் தான் கேட்டேன்

      Delete
  2. மனைவியை காதலிக்க சூப்பர் வழி ஒண்ணு இருக்கே... அவங்களை பேஸ்புக்ல இணைச்சிட்டு, நீங்க வேற பெயர்ல போய் காதல் பண்ணுங்க... (முதுகுல டின் கட்டிக்கிட்டா... விளைவுகளுக்கு நான் பொறுப்பில்லப்பா...) ஹி... ஹி...

    ReplyDelete
    Replies
    1. பா.கணேஷ் உங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி

      நீங்க சொன்ன ஐடியா நல்லாதான் இருக்கு ஆனால் அவங்க IT துறையில் வேலை பண்ணினாலும் இந்த பேஸ்புக் வலைத்தளம் அவங்களுக்கு காத தூரம் அவங்களை பொறுத்த வரை இதெல்லாம் வேஸ்ட்

      Delete
  3. ம் எப்படியெல்லாம் சிந்திக்கிறீங்க.

    ReplyDelete
    Replies
    1. சசிகலா உங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி


      உங்களை மாதிரியெல்லாம் என்னால சிந்திக்க முடியாதுங்க ஏதோ என்னால முடிந்ததுங்க

      Delete
  4. எப்படியோ இன்னிக்கு மொக்கை போட்டாச்சு! அப்புறம்?

    ReplyDelete
    Replies
    1. எஸ்.சுரேஸ் உங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி
      அடுத்த மொக்கைக்கு இருக்கும் மூளையை கசக்கி கொண்டு இருக்கிறேன்

      Delete
  5. நல்ல நகைச்சுவையாக எழுதியுள்ளீர்கள்.
    பாராட்டுக்கள்.

    காதலி ... காதலியாக இருக்கும் வரை
    மட்டும் தானே ஒருவித த்ரில்லிங் இருக்கும்?

    //அவளே எனக்கு மனைவியாக வந்தாள்
    எப்படி இருக்குமென ....

    (வேண்டாம் இந்த விபரீதம்)// ;)

    ReplyDelete
    Replies
    1. வை.கோபாலகிருஷ்ணன் ஐயா உங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி

      //நல்ல நகைச்சுவையாக எழுதியுள்ளீர்கள்.பாராட்டுக்கள்.//

      குருவிடம் பாராட்டு பெற்றதில் மிகவும் சந்தோஷம்

      //காதலி ... காதலியாக இருக்கும் வரை
      மட்டும் தானே ஒருவித த்ரில்லிங் இருக்கும்?///

      உண்மைதான் ஐயா

      //அவளே எனக்கு மனைவியாக வந்தாள்
      எப்படி இருக்குமென ....////

      வந்து எங்க வீட்டுல ஒரு மாதம் தங்கி இருங்க அப்ப புரியும்

      உங்களை போல உள்ளவர்கள் என் வலைப்பக்கம் வருவதற்காகவே இந்த மாதிரி நகைச்சுவைகள் அதிலும் நீங்க இதை ரசித்தது மிகவும் சந்தோசத்தை தருகிறது. அதனால் மீண்டும் எனது நன்றி

      Delete
  6. அன்புள்ள நண்பர் “அவர்கள் உண்மைகள்” அவர்களே, வணக்கம்.

    உங்கள் மேல் எனக்கு ஒரு சின்ன கோபம்.

    சென்ற 2011 மார்ச் மாதம் தமிழக சட்டசபைத் தேர்தலுக்கு முன்பு
    “வந்து விட்டார் வ.வ.ஸ்ரீ - புதிய கட்சி ”மூ.பொ.போ.மு.க.” உதயம்” என்ற தலைப்பில் நகைச்சுவை + அரசியல் + அனுபவம் + இல்வாழ்க்கை + அலுவலக நடைமுறை வாழ்க்கை + வெளிநாட்டுப்பயணம் போன்ற அனைத்தையும் இணைத்து, ஒரு கதை பகுதி-1 முதல் பகுதி-8 வரை வெளியிட்டிருந்தேன்.

    நம் நகைச்சுவை எழுத்தாளர் சேட்டைக்காரன் முதல் அனைவரும் ஏராளமாகப் பின்னூட்டங்கள் கொடுத்து, படித்து ரஸித்து மகிழ்ந்தனர்.

    ஆனால் ஏனோ நீங்கள் அதை இதுவரைப் படித்ததாகவே தெரியவில்லை.

    உடனடியாக 8 பகுதிகளையும் படித்து விட்டு ஒவ்வொரு பகுதிக்கும் தனித்தனியே பின்னூட்டம் இடவும்.

    நிறைய இடங்களில் தங்களுக்குப் பிடித்தமான குறும்புக்கார இளைஞர் அதில் தென்படுவார்.

    குறிப்பாக அதில் ஐந்தாம் பகுதியில்,’காதலியோ புதிதாகக் கல்யாணம் ஆகிவரும் மனைவியோ’ ஆரம்பத்தில் எப்படியிருப்பார்கள்? பிறகு போகப்போக எப்படி ஆவார்கள்? என்பது பற்றி வ.வ.ஸ்ரீ என்ற கதாபாத்திரம் பெரியதொரு பிரசங்கமே நிகழ்த்துவார்.

    இணைப்பு இதோ:
    http://gopu1949.blogspot.in/2011/03/blog-post_11.html பகுதி-1/8

    http://gopu1949.blogspot.in/2011/03/8.html பகுதி-5/8

    http://gopu1949.blogspot.in/2011/03/8.html பகுதி-8/8

    உங்களின் “காதலியைத் தேடி ஒரு பயணம்....” என்னும் பதிவுக்கு சில புதிய கோணங்களில் மேற்படி பதிவினில் விடை காணலாம்.

    அன்புடன் vgk

    ReplyDelete
    Replies
    1. கண்டிப்பாக வந்து படிக்கிறேன் ஐயா

      Delete
  7. நல்ல பதிவு !!!

    ReplyDelete
    Replies
    1. மற்றவர்களின் பதிவுகளை படித்து தரமான கருத்துக்களையும் உண்மையை ஒளிவு மறைவு இல்லாமல் கருத்திடும் உங்கள் பாங்கு எனக்கு பிடிக்கும். வலையுலகில் ஒதுங்கி இருந்த நீங்கள் மீண்டும் வந்தததில் மகிழ்ச்சி அடையும் ஒருவரில் நானும் ஒருவன். கருதிட்டதற்கு எனது நன்றி

      Delete
  8. நேரம் போக்க நல்ல பதிவு:)

    ReplyDelete
  9. நல்ல கற்பனை நண்பரே... அருமையாக இருக்கிறது... முத்தப் வருகை... அமர்க்களம்...

    ReplyDelete
  10. மதுரைக்கு இருக்கும் நகைச்சுவை நல்லா தான் இருக்கு,, அனுபவம் அதிகம் இருக்கும் போல... எனது
    பக்கம் www.busybee4u.blogspot.com

    ReplyDelete

நான் அறிவு ஜீவி அல்ல ஒரு சாதாரணமான் மனிதன் தான்.இங்கு நான் பதியும் பதிவுகளில் உள்ள கருத்துகள் "மிகவும் சரி"யென்று சொல்லமாட்டேன் அது அன்றைய மனநிலையில் என் மனதில் எழும் கருத்துகளே...அதனால் உங்களது மனசுலபட்ட மாற்று கருத்துகளை தாராளமாக பகிரலாம். ஆனால் தேவையற்ற, வரம்புமீரிய, அநாகரிகமான வார்த்தைகளாலும் பதிவிற்கு சம்பந்தமில்லாமல் கருத்துக்கள் சொல்லப்பட்டால் எந்த வித பதில் விளக்கமின்றி அந்த கருத்து டெலீட் செய்யப்படும்.

:) :)) ;(( :-) =)) ;( ;-( :d :-d @-) :p :o :>) (o) [-( :-? (p) :-s (m) 8-) :-t :-b b-( :-# =p~ $-) (b) (f) x-) (k) (h) (c) cheer
Click to see the code!
To insert emoticon you must added at least one space before the code.