Saturday, June 9, 2012




பூங்கொத்து யாருக்கு  அமெரிக்கா பொண்ணூக்கா அல்லது தமிழ் பொண்ணுக்கா? படித்துவிட்டு சொல்லுங்கள்;

நமக்கு தெரியாத ஒரு இந்திய தமிழ் பெண்ணிடம் போய் ஒரு அழகான பூங்கொத்தையும் மிகவும் விலை உயர்ந்த வைரமோதிரத்தையும் கொடுத்தால் என்ன நடக்கும் தெரியுமா?

டேய் யார்ரா நீ? நீ எதுக்கு எனக்கு இதெல்லாம் தரணும் நல்ல செருப்பு பிஞ்சுடும். பாரு இப்பவே என் அப்பா அண்ணனுக்கு போன் போடுறேன். அவங்க வந்து அடிக்கிற அடியில நீ வேற எந்த பொண்ணுகிட்டேயும் இப்படி நடக்க கூடாதுடா ?

இதை பார்த்துகிட்டு இருக்கிற பொதுமக்கள் அவன் எதோ வம்பு செய்கிறான் என்று அவனை நல்லா நாலு சாத்து சாத்துவாங்க

ஆனால் நமக்கு தெரியாத ஒரு அமெரிக்க பெண்ணிடம் போய் ஒரு அழகான பூங்கொத்தையும் மிகவும் விலை உயர்ந்த வைரமோதிரத்தையும் கொடுத்தால் என்ன நடக்கும் தெரியுமா?

வாவ் யூ ஆர் ஸோ ஸ்வீட் ?  இந்த ஒரு ஸ்வீட் கிஸ் என்று ஒரு கிஸ்ஸும் ஒரு அணைப்பும் கிடைக்கும். ஹனி கொஞ்சம் வெயிட் பண்ணுங்க  இப்பவே என் அப்பா அண்ணனுக்கு போன் போடுறேன். அவங்க வந்ததும் நாம நல்ல பாருக்கு போய் தண்ணி அடிக்கலாம். அப்புறம்  நீ வேற எந்த பொண்ணுகிட்டேயும் இப்படி நடக்க கூடாதுடா என் செல்லம். உனக்காக நான் என்ன வேண்டுமானாலும் செய்யுறேன். ஓகே வா ஹனி.. என்பாள்

இதை பார்த்துகிட்டு அமெரிக்காவில் இருக்கிற பொதுமக்கள் வாவ் ...அவன் காதலை என்ன அழகாக வெளிப்படுத்துகிறான்  என்று அவனை பார்த்து கைதட்டி வாழ்த்தி சிரிப்பார்கள்

மக்காஸ் இப்ப சொல்லுங்க நீங்க வாங்கின பூங்கொத்தும் வைரமோதிரமும் யாருக்கு கொடுபிங்க???

அன்புடன்
உங்கள் அபிமானத்திற்குரிய
மதுரைத்தமிழனின் கிறுக்கல்கள் உங்கள் பார்வைக்காக



12 comments:

  1. இதுல என்னய்யா சந்தேகம்? அமெரிக்கப் பெண்ணுக்குத்தான் நான் கொடுப்பேன்...

    ReplyDelete
  2. naan varala!
    intha vilaiyaattukku...

    ReplyDelete
  3. ஹி ஹி ஹி

    இந்திய பொண்ணுக்குதானுங்.....இவ்வளவு அடிச்சாலும் தாங்குவோம்ல அது ஒரு தனீ சொகமுங்..

    ReplyDelete
  4. சகோதரா தங்கள் இடுகையை வாசித்து சிரித்தேன் . பதிலை வெள்ளைப் பெண்ணுக்கே என்று எனக்குள் கூறினேன். கீழே 3 பேரின் இடுகையை அதாவது கருத்தைப் பார்த்துச் சிரிசிரியெனச் சிரித்தேன் என்னமாய் நைசா நழுவறாங்க பாருங்க....
    அது தான் நகைச் சுவை. நல்வாழ்த்து. எப்படித்தான் யோசிக்கிறீங்க பதிவிட. (முதற் தடவை தங்கள் பக்கம் தமிழ் மணம் மூலம் வந்தேன் . கருத்திடல்களில் பெயரைப் பார்த்துள்ளேன்.)
    வேதா. இலங்காதிலகம்.
    http://kovaikkavi.wordpress.com
    (வேட் பிரஸ் மூலமே பதிலிடுவேன். நேரே என் தளத்திற்கு வரும் வகையாக. இன்று ஏனோ மக்கர் பணணுகிறது. கூகிள் வழி யாகக் கருத்திடுகிறேன்.)

    ReplyDelete
  5. இன்றைய வலைச்சரத்தில் தங்களைப் பற்றி குறிப்பிடும் வாய்ப்பு கிடைத்தது. நேரம் இருக்கும்போது வருகை தந்து கருத்தளிக்கும்படி அன்புடன் கேட்டுக்கொள்கிறேன்.
    http://blogintamil.blogspot.in/2012/06/7.html

    ReplyDelete
  6. @ பா.கணேஷ்
    ///இதுல என்னய்யா சந்தேகம்? அமெரிக்கப் பெண்ணுக்குத்தான் நான் கொடுப்பேன்...///


    நீங்க அமெரிக்க பொண்ணுக்கு கொடுத்தா நாங்க அதை உங்க வீட்டுகாரம்மா கிட்ட சொல்லி கொடுப்போம்ல

    ReplyDelete
  7. @Seeni

    //naan varala!
    intha vilaiyaattukku...///

    வாழ்க்கையே ஒரு விளையாட்டுதான் அதற்கெல்லாம் நாம் பயப்படலாமா?

    ReplyDelete
  8. @மனசாட்சி

    ///ஹி ஹி ஹி இந்திய பொண்ணுக்குதானுங்.....இவ்வளவு அடிச்சாலும் தாங்குவோம்ல அது ஒரு தனீ சொகமுங்///

    உங்களுக்கு மிக ஸ்ராங்கான உடம்புதாங்க....ஆமாம் வடிவேலு மாதிரி எத்தனை பேர்கிட்ட இப்படி அடி வாங்கி இருக்கீங்க.

    ReplyDelete
  9. @ கோவை.கவி (வேதா. இலங்காதிலகம்.)
    உங்களின் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி

    ///சகோதரா தங்கள் இடுகையை வாசித்து சிரித்தேன் . பதிலை வெள்ளைப் பெண்ணுக்கே என்று எனக்குள் கூறினேன். கீழே 3 பேரின் இடுகையை அதாவது கருத்தைப் பார்த்துச் சிரிசிரியெனச் சிரித்தேன் என்னமாய் நைசா நழுவறாங்க பாருங்க....
    அது தான் நகைச் சுவை. நல்வாழ்த்து. எப்படித்தான் யோசிக்கிறீங்க பதிவிட. ///

    ரசித்து மகிழ்ந்து கருத்து சொன்னதற்கு மிகவும் நன்றி...


    ///(முதற் தடவை தங்கள் பக்கம் தமிழ் மணம் மூலம் வந்தேன் . கருத்திடல்களில் பெயரைப் பார்த்துள்ளேன்.)//

    நானும் கருத்திடல்களில் பெயரைப் பார்த்துள்ளேன். உங்கள் வலைதளங்களிலும் வந்து படித்து இருக்கிறேன். ஆனால் கருத்துக்கள் இட்டேனா இல்லையா என்று ஞாபகம் இல்லை. மன்னிக்கவும்.

    ReplyDelete
  10. @முரளிதரன்
    என் எழுத்தையும் படித்து அதை மற்றவர்களுக்கு நீங்கள் அறிமுகப்படுத்திய உங்களுக்கு மிகவும் நன்றி.

    ReplyDelete
  11. இதுல என்ன சந்தேகம்? அமெரிக்கப் பெண்ணுக்குத்தான்..........

    ReplyDelete
  12. எந்த ஊர் பெண்ணாக இருந்தாலும் முன்பின் தெரியாத ஆளை முன்பின் தெரியாத ஆளாகத்தான் நடத்துவர். நீங்கள் சொல்வது அமெரிக்கா என்றால் திரைபடங்களில் காட்டுவார்களே அது போல எழுதியுள்ளீர்கள். அமெரிக்க பெண்ணாக இருந்தாலும் முன்பின் தெரியாதவரின் இந்த செய்கையை கண்டிக்கத்தான் செய்வார், என்ன செறுப்பு என்று செல்லாமல் நாகரீகமாக கண்டிப்பார்கள். அப்படியும் வம்பு செய்தான் என்றால் கம்பி எண்ணுவது உறுதி. எனக்கு அவரை தெரியும் இவரை தெரியும் என்றாலும் கம்பி எண்ணுவது உறுதி, முயன்று தான் பருங்களேன்......

    அன்புடன்,
    பனிமலர்.

    ReplyDelete

நான் அறிவு ஜீவி அல்ல ஒரு சாதாரணமான் மனிதன் தான்.இங்கு நான் பதியும் பதிவுகளில் உள்ள கருத்துகள் "மிகவும் சரி"யென்று சொல்லமாட்டேன் அது அன்றைய மனநிலையில் என் மனதில் எழும் கருத்துகளே...அதனால் உங்களது மனசுலபட்ட மாற்று கருத்துகளை தாராளமாக பகிரலாம். ஆனால் தேவையற்ற, வரம்புமீரிய, அநாகரிகமான வார்த்தைகளாலும் பதிவிற்கு சம்பந்தமில்லாமல் கருத்துக்கள் சொல்லப்பட்டால் எந்த வித பதில் விளக்கமின்றி அந்த கருத்து டெலீட் செய்யப்படும்.