Wednesday, April 11, 2012


This image isavailable from the United States Library of Congress's Prints and Photographsdivision under the digital ID hhh.ny1264.


எங்கே சென்றான் இந்த மதுரைத்தமிழன்?





ஈஸ்டர் பண்டிகையை ஒட்டி இங்குள்ள பள்ளியில் Spring Breake விட்டு விட்டதால் எனது குழந்தை இந்த விடுமுறை நாளில் எங்காவது வெளிமாநிலத்திற்கு கூட்டி செல்ல வேண்டும்மென்று எங்களுடன் டீல் போட்டு இருந்தாள்.

நம்ம கிட்ட டீல் போட்ட சும்மாவிட்டு விடுவோமா அதனால் ஈஸ்டருக்கு முதல் நாள் சர்ச்சில் நடந்த நீண்ட பிரார்த்தனை கூட்டத்திற்கு நண்பர்களுடன் குடும்பத்தோடு சென்று வந்தோம் அதன் பிறகு எனது வீட்டிற்கு வந்த நண்பர்களுடன் விருந்துண்டு( மருந்தும்தான்) சாப்பிட்டு இரவு 2 மணிவரை மகிழ்ந்து இருந்தோம். அதன் பின் அடுத்த நாள் நடை பெறும் ஈஸ்டர் பிரார்தனை கூட்டத்திற்கும் நண்பர்களுடன் சென்று வந்தோம்  அதன் பிறகு கடையில் காபி சாப்பிட்டு பேசி கொண்டிருந்த போது நண்பர் ஒருவர் கோயிலுக்கு சென்று ரொம்ப நாளாகிவிட்டது கோயிலுக்கு செல்வோமா என்று கேட்டார் நாங்களும் சரியென்று எங்கள் ஊரில் உள்ள பாலாஜி கோயிலுக்கு சென்று வந்தோம். அப்போது என் குழந்தை ஒரு பார்வை பார்த்தாள் அதன் அர்த்தம் எங்களுக்கா புரியாது அதனால் நாங்கள் இப்ப சொல்லு உனக்கு எங்கே போக வேண்டுமென்று என்று கேட்டோம் அதற்கு அவள் முதலில் நாம் ஹோட்டலுக்கு போய் சாப்பிட்டவாறே அதை பற்றி பேசுவோம் என்று சொன்னாள். சரியென்று சொல்லியவாரு அங்கு சென்று உணவுண்டு அடுத்த நாள் வாஷிங்டன் அல்லது பிலடெல்பியா அல்லது கனெடிக்கட் செல்வோம் என்று உறுதியளித்தேன். வீட்டிற்கு வரும் போது இரவு மணி 10 ஆகிவிட்டது எல்லோருக்கும் கடந்த இரு தினங்களுக்கு மேலாக உறக்கம் இல்லாததால் மிகவும் களைப்பாக இருந்தோம் அதனால் குழந்தையை தூங்கவிட்டு அதன் பிறகு நெட்டை பிரவுஸ் பண்ணி எங்கே சென்று என்ன பார்க்கலாம் என்று துலாவி அதன் பிறகு  கனெடிக்கட் செல்வதென்றும் அங்கு பார்க்க வேண்டிய 2 இடங்களுக்கான விலாசத்தை தேடி எழுதி வைத்து ஒருநாள் டிரிப்பாக சென்றுவருவது என்று முடிவு செய்து தூங்க சென்றேன்.


அடுத்தநாள் காலை ஒன்பது மணிக்கு குழந்தை எழுந்து வந்து என்னை எழுப்பி எங்கே போகப்போகிறோம் என்று கேட்டது நானும் போகும் இடத்தை சொல்லி அவளை ரெடியாகுமாறு சொல்லி நாங்களும் தயார் ஆனோம் எங்களுடன் வருவேன் என்று சொன்ன நண்பர் காலையில் கூப்பிட்டு அவருக்கு டயர்டாக இருப்பதாக் சொல்லிவிட்டார் எனவே  நாங்கள் மட்டும் 11 மணியளவில் வேனில் சென்றவாறே போகும் இடத்திற்கு ஒன்றறை மணி நேரம்தான் ஆகுமென்று நினைத்தவாறே விலாசத்தை GPS ல் போட்ட பிறகுதான் தெரிந்தது நாங்கள் செல்லும் இடத்திற்கு சென்று அடைய மினிமம் 3 மணிநேரமாவது ஆகுமென்று. சரியென்றவாறே வேனை ஒட்டிஸ் சென்றோம் அப்போது வேனில் உள்ள ரேடியோவை ஆன் செய்த போது ஜார்ஜ் வாஷிங்டன் பாலத்தில் டிராபிக் பம்பர் டூ பம்பர் என்று அந்த பாலத்தை கடக்க ஒரு மணி நேரத்திற்கு மேலாக ஆகும் என்றும் தெரிந்தது  கடவுளே என்று சொல்லியவாறே வண்டியை ஒட்டினேன் இறுதியாக நாங்கள் சென்று அடைய வேண்டிய இடத்திற்கு சென்ற போது 3 மணியாகிவிட்டது அங்கு நாங்கள் பார்க்க வேண்டிய 2 இடத்தில் ஒரு இடத்தை அதை மூடுவதற்குள் சுற்றி பார்த்தோம். என்ன பார்த்தோம் என்பது வேறு பதிவில் சொல்லுகிறேன். அதன் பிறகு  கடைக்கு சென்று பிரஞ்ச் ஃபரை வாங்கி அதன் அருகில் உள்ள இன்னொரு கடையில் காபி வாங்கி அருந்தியவாறே  மாலையிலே திரும்பி சென்றால் ஈவினிங்க் டிராபிக் இன்னும் மோசமாக இருக்கும் அதனால் அங்கேயே தங்கி அடுத்த நாள் அங்கு பார்க்க வேண்டிய இடத்தை பார்த்து செல்வது என்று முடிவு செய்தோம்.

அப்போது என் குழந்தை சொன்னாள் அப்பா எனக்கும் அம்மாவிற்கும்  அடுத்த நாளுக்கு போடுவதற்கு டிரெஸ் ஏதும் வாங்க வேண்டாம் அதை நான் வேனில் காலையிலே எடுத்து வைத்து விட்டேன் என்று சொன்னாள். ஆஆஆஆ.... நாம் அசடாக இருந்தாலும் குழந்தை சமார்த்தியமாக இருப்பதை எண்ணி வியந்து காசு மிக மிச்சம் என்று நினைத்தேன்.ஹோட்டலில் பேஸ்ட் பிரஷ், சோப்பு ஷாம்பூ மார்னிங்க் பிரேக் பாஸ்ட் எல்லாம் கொடுத்துவிடுவதால் அதை எல்லாம் வாங்க வேண்டியது இல்லை இது எல்லாம் நம்ம அரசாங்கம் தரும் இலவசம் மாதிரிதான் இலவசமாக கொடுப்பதாக சொல்லி வேறு வழியில் நம் கையில் இருந்து கறந்து விடுவார்கள்.

அதன் பிறகு GPS மண்டையில் இரண்டு தட்டு தட்டி அதில் இருந்து அருகில் உள்ள ஹோட்டலின் போன் நம்பரை பார்த்து ரூம் புக் பண்ணி அங்கு சென்று தங்கினோம். பகலில் பாஸ்ட் புட் ரெஸ்டராண்டில் சாப்பிட்டதால் இரவில் இண்டியன் ஹோட்டலில் சாப்பிட முடிவானது. மீண்டும்  GPS மண்டையில் தட்டிய போது ஒரு மைல் தொலைவில் உள்ள 'மசாலா'  என்ற இண்டியன் ரெஸ்டராண்டு கண்ணில் பட்டது. உணவு மற்றும் உபசரிப்பும் மிக அருமையாக இருந்தது. (GPS ஒரு அலாவூதின் அற்புத விளக்கு)

அடுத்த நாள் காலையில் சிக்கிரம் எழுந்திருந்து காலை உணவை முடித்து விட்டு பார்க்க விட்டு போனதை பார்த்து கற்க வேண்டியதை கற்று  அன்று இரவே வீடு வந்து சேர்ந்தோம். நானும் மனைவியும் மாறி மாறி ஆளுக்கு ஒரு நாள் லீவு எடுத்து அடுத்தவாரம் வரை விடுமுறையை கழிக்க வேண்டும்.....

இப்படிதான் எங்கள் Spring Holiday இங்கே கழிகிறது.

இந்த பதிவு போட்டதற்கு காரணம் நான் கடந்த நான் கு நாட்களாக நெட்பக்கம் வர முடியாமல் பதிவு போடாமல், மற்றவர்களின் பதிவுக்ளை படிக்காமல் மேலும் அவர்களின் பதிவுக்கு கருத்து சொல்லமுடியாது இருந்தால் என்ன நடந்தது என்று மற்றவர்களுக்கு தனித்தனியாக சொல்லமுடியாமல் போனதால்தான்.


விரைவில் அடுத்த பதிவில்  (குப்பைக்கு ஒரு கோயிலா? ) சந்திக்கும் வரை உங்களிடம் இருந்து விடைபெறுகிறேன்.

நன்றி

அன்புடன்,
மதுரைத்தமிழன்

11 Apr 2012

7 comments:

  1. வருக... வருக... குழந்தைக்கும குடும்பத்துக்கும் நேரம் ஒதுக்க வேண்டியதும் அவசியம் தானே... இந்த விடுமுறை உங்களையும் ரெப்ஃரெஷ் செய்திருக்கும. புத்துணர்வுடன் தொடர்ந்து பதிவிடுங்கள் படிக்கக் காத்திருக்கிறேன்.

    ReplyDelete
  2. உங்க ஷார்ட் சுற்றுலாவை ஷார்ட் &ஸ்வீட்டாக சொல்லி இருக்கீங்க நல்லா இருக்கு. வாழ்த்துகள்.

    ReplyDelete
  3. சொல்ல மறந்துட்டேன்... நீங்க ஊர்ல இல்லாதப்ப ஒரு சிறுகதை எழுதினேன். எல்லாரும் பாராட்டினாங்க. உங்களுக்குப் பிடிச்சிருக்கான்னு பாத்துச் சொல்லுங்க நண்பா...

    http://www.minnalvarigal.blogspot.com/2012/04/blog-post_08.html

    ReplyDelete
  4. சிறப்பான யோசனைங்க நம்ம பக்கத்துக்கு வீட்டுக்காரங்க திடீர்னு சொல்லாம எங்கோ போன மாதிரி சில சமயம் நம் வலை பக்கம் வரும் பதிவர்களையும் கானாமுடியாமல் தவிக்கிறோம் இது நல்ல யோசனை தான் ஒன்று சொல்லி விட்டுப் போகலாம் இல்லை போய் வந்து சொல்வது .

    ReplyDelete
  5. நாம் அசடாக இருந்தாலும் குழந்தை சமார்த்தியமாக இருப்பதை எண்ணி வியந்து காசு மிக மிச்சம் என்று நினைத்தேன். // திறமைசாலியான பெண் தான் .

    ReplyDelete
  6. sari!
    ini melaavathu enathu-
    pathivukalukku-

    pinnoottam podunga!

    ReplyDelete

நான் அறிவு ஜீவி அல்ல ஒரு சாதாரணமான் மனிதன் தான்.இங்கு நான் பதியும் பதிவுகளில் உள்ள கருத்துகள் "மிகவும் சரி"யென்று சொல்லமாட்டேன் அது அன்றைய மனநிலையில் என் மனதில் எழும் கருத்துகளே...அதனால் உங்களது மனசுலபட்ட மாற்று கருத்துகளை தாராளமாக பகிரலாம். ஆனால் தேவையற்ற, வரம்புமீரிய, அநாகரிகமான வார்த்தைகளாலும் பதிவிற்கு சம்பந்தமில்லாமல் கருத்துக்கள் சொல்லப்பட்டால் எந்த வித பதில் விளக்கமின்றி அந்த கருத்து டெலீட் செய்யப்படும்.

:) :)) ;(( :-) =)) ;( ;-( :d :-d @-) :p :o :>) (o) [-( :-? (p) :-s (m) 8-) :-t :-b b-( :-# =p~ $-) (b) (f) x-) (k) (h) (c) cheer
Click to see the code!
To insert emoticon you must added at least one space before the code.