Friday, April 13, 2012



அமெரிக்காவில் ஷாரூக்கானிடம் நடத்தப்பட்ட விசாரணை நியாமானதா? ஒரு பார்வை

செய்தி :ஷாரூக்கானிடம் நடத்தப்பட்ட விசாரணை குறித்து வெளியுறவு துறை அமைச்சர் எஸ்.எம்.,கிருஷ்ணா கண்டனம் தெரிவித்துள்ளார். இது குறித்து அமெரிக்க தூதர் நிருபமாராவிடம் விசாரிக்க சொல்லி உத்தரவிட்டுள்ளேன் என்றார்.

ஒரு நாட்டின் சட்ட திட்டங்களில் நாம் தலை இட முடியாது. அமெரிக்கர்களை பொறுத்தவரை ஷாருக்கானும் ஒரு சாதாரண மனிதர்தான். ஒரு நாட்டிற்குச் சென்றால் அந்த நாட்டின் சட்ட திட்டங்களுக்கு அது அர்த்தமற்றவையாகவும், அவமானப்படுத்துவதாகவும் இருந்தாலும் அதற்கு உட்பட்டுதான் ஆகவேண்டும். அப்படி இல்லையென்றால் அந்த நாட்டுக்கு போவதை தவிர்க்க வேண்டும் அதைவிட்டு விட்டு  இங்கே வந்து கூப்பாடு போட்டுப் பயனில்லை.

நம்ம நாட்டுலதான் நடிகர்களை தலைக்கு மேல தூக்கி வைச்சி கொண்டாடுறோம்...... அது போல அமெரிக்காவும் அப்படி செய்ய வேண்டுமென்ற  அவசியம் இல்லையே..... இவரு நடிகர் என்பதற்காக நம் நாட்டு விமான நிலைய அதிகாரிகள் வேண்டுமானால் அவர்கள் தூக்கி எறியும் பணத்தை பெற்று பல் இளித்து கொண்டு இவரை சோதனை செய்யாமல் விட்டுவிடுவார்கள். ஆனால் அமெரிக்கர்கள்  அப்படியல்ல அவர்கள் கடமையை சரியாக செய்கிறார்கள்..அதை குற்றம் சொல்வதுதான் தவறானது.

அதுமட்டுமல்லாமல் அந்த இமிகிரேஷன் ஆபிஸருக்கு "இவர்" யாரு என்று தெரியாது.அப்படி தெரிந்தாலும் அவரை விசாரணை செய்யாமல் அனுப்ப அவருக்கு அதிகாரம் கொடுக்கபடவில்லை. அவருடைய மேல் அதிகாரியே வந்து இவரை விசாரனை செய்யவேண்டாம் விட்டு விடு என்று சொன்னாலும் அவர் கேட்க வேண்டிய அவசியம் இல்லை. அந்த ஆபிஸர் தன் கடமையை சுதந்திரமாக செய்ய அவருக்கு முழு அதிகாரம் இங்கே உண்டு.

இன்னொரு விஷயம் இங்கே கவனிக்க பட வேண்டியது மிக முக்கியம். நமக்கு தெரியாத பல விஷயங்கள் சில சமயங்களில் அமெரிக்க புலனாய்வு துறைக்கு நன்றாகவே தெரியும் அவர்களின் மறைமுக ஏற்பாட்டின்படி இந்த விசாரனையும் நடைபெற்று இருக்கலாம்.



ஹிந்தி பட உலகம் "யார்" கையில் இருக்கிறது என்பது அமெரிக்க புலனாய்வு துறைக்குமட்டுமல்ல இந்தியாவில் நன்கு படித்தவர்கள் மற்றும் விபரம் தெரிந்தவர்கள் அனைவருக்கும் மிக நன்றாக தெரிந்திருக்கும். அவர்களை இந்திய அரசாங்கமே பிடிக்க முயற்சிக்கிறது . '"அந்த" நபர்களின் அதிகாரம் இல்லாமல் ஹிந்தியில் எவராலும் படம் எடுக்க முடியாது என்பதும் தெரியாது.. அப்படிபட்ட நபர்களிடம் தொடர்பு கொண்டவர்கள்தான் இந்த செல்வாக்கு மிகுந்த நடிகர்கள். பயங்கரவாதிகளிடமிருந்து திரைப்படம் எடுப்பதற்கு பணம் பெறப்படுகிறதா, யார் யார் அப்படி பணம் கொடுக்கிறார்கள், அவர்கள் எந்த நாடுகளில் ஒளிந்து இருக்கின்றனர் என்பது போன்ற தகவல்களை விசாரிப்பதில் தவறு ஏதும் உண்டா?. இது போன்ற தகவல்களை விசாரிப்பதில் இந்திய காவல் துறையை விட அமெரிக்கர்கள் சிறந்தவர்கள் காரணம் எந்தவிதமான அரசியல் தலையீடோ லஞ்சமோ இல்லாமல் நேர்மையாகவே விசாரிக்கும் அதிகாரம் அவர்களுக்கு உண்டு. அதை யாரும் மறுப்பதற்கு இல்லை.


இதுபோன்ற கடுமையான சோதனைகள் இருப்பதினால்தான் அமெரிக்கர்களால் 11 ஆண்டுகளான பிறகும் அங்கு தாக்குதல்கள் நடை பெறாமல் தடுக்க முடிகிறது. அமெரிக்கன்  அவனுடைய நாட்டை பாதுகாக்க முயல்கிறான். அதில் என்ன தப்பு? இது கொஞ்சம் அதிகம் என்றே தோன்றும். ஆனால் அமெரிக்காவின் இந்த அதீத முன்னெச்சரிக்கை 9/11 க்குப் பின் எந்த தீவிரவாத தாக்குதலும் இல்லாமல் செய்துள்ளது என்பதே உண்மை.அதில் என்ன தப்பு?

The head of the IMF has been arrested in New York for alleged sexual assault. Dominique Strauss-Kahn, who is also a possible French presidential candidate, was taken into custody on board a plane at John F. Kennedy International Airport.New York police officers and charged with the alleged sexual assault of a chambermaid at a New York hotel. இந்த செய்தியை நான் ஏன் இங்கே தருகிறேன் என்றால் அமெரிக்க ஹோட்டலில் ஹவுஸ் கீப்பராக பணி புரியும் ஒரு பெண் கொடுத்த கம்பிளையெண்ட் காரணமாக பிரஞ்சு நாட்டுக்கு அதிபராக வரக் கூடியவரும் IMF ல் தலைமை பதவியில் இருப்பவரையும் அமெரிக்காவில் உள்ள சாதாரண போலிஸ் கைது செய்தது. இந்த மாதிரி ஒரு நடவடிக்கையை இந்திய அரசாங்கத்தால் செய்ய முடியுமா? அது என்ன இந்தியாவா? இங்கேதான் நிரூபிக்க பட்ட குற்றவாளியை தண்டிக்க கூட முதுகெலும்பு இல்லாத கோழைகள் அரசு ஆள்கிறார்கள்.

அப்துல் கலாமே இது மாதிரி சோதனைகளுக்கு உட்பட்ட போதிலும் இதனை பெரிதாக எடுத்து கொள்ளவில்லை, ஷாருக்கான் வேண்டுமானல் இந்தியாவில் புலியாக இருக்கலாம் ஆனால் அமெரிக்கா வந்தால் இங்குள்ளவர்களுக்கு  பூனைதான் அதை அனைவரும் புரிந்து கொள்ள வேண்டும்.


அதைவிட்டு விட்டு இந்தியாவுக்கு வரும் அமெரிக்கர்களை நாங்கள் விசாரிப்பதில்லை அதனால் அமெரிக்கா வரும் இந்தியர்களை அவர்களும் விசாரிக்க கூடாது என்று கதறுவதில் அர்த்தமில்லை. இன்னும் மிக தெளிவாக கூற வேண்டுமானால்  இந்தியாவில் நாங்கள் தெருவில்தான் மூச்சா ஆய் போவோம் அது போல நாங்கள் அமெரிக்கா வந்தாலும் அது போல எங்களை செய்ய அனுமதிக்க வேண்டும் என்று கேட்பது போல இருக்கிறது.

இந்தியாவில் மிகப் பெரியவன் என்று கருதும் ஷாருகான் இதற்கு முன்பு இரண்டு தடவை வந்த போது இது மாதிரி நிகழச்சிகள் நடந்துள்ளது என்ற போதிலும் மீண்டும் அவர் எதற்கு இங்கு வர வேண்டும். மதியார் வாசல் மிதியாதே என்ற சொல்வது இந்த பெரிய மனுஷனுக்கு தெரியாது போனது மிக அதிசயமே....


என்றும் அன்புடன்
மதுரைத்தமிழன்

19 comments:

  1. இது இந்தியர்களுக்கு புரியாது! முக்கியமா நம்ம மக்கு மந்திகளுக்கும் (not a spelling mistake), IAS, IFS OFFICERS-களுக்கும் புரியவே புரியாது!

    ReplyDelete
  2. தமிழ் நடிகர் ஒருவருக்கு (கமல்ஹாசன்)இதுபோல்தான் நடந்தது எந்த லகுடபாண்டிகளும் சவுண்ட் வுடலையே...!

    ReplyDelete
  3. @ நம்பள்கி உங்கள் வருகைக்கும் கருத்துக்கும் மிகவும் நன்றி

    ///இது இந்தியர்களுக்கு புரியாது! முக்கியமா நம்ம மக்கு மந்திகளுக்கும் (not a spelling mistake), IAS, IFS OFFICERS-களுக்கும் புரியவே புரியாது!///

    நம்ம மந்திகளுக்கு தெரிந்ததெல்லாம் எப்படி பணம் சுருட்டுவது என்பது மட்டும்தான்

    ReplyDelete
  4. This comment has been removed by the author.

    ReplyDelete
  5. @ வீடு சுரேஸ்குமார்
    உங்கள் வருகைக்கும் கருத்துக்கும் மிகவும் நன்றி


    ///தமிழ் நடிகர் ஒருவருக்கு (கமல்ஹாசன்)இதுபோல்தான் நடந்தது எந்த லகுடபாண்டிகளும் சவுண்ட் வுடலையே...!///

    கமல் ஒன்னும் ஹிந்திகாரர் கிடையாதே.....

    ReplyDelete
  6. @ antony உங்கள் வருகைக்கும் கருத்துக்கும் மிகவும் நன்றி

    ReplyDelete
  7. நடிகன்னா கொம்பு முளைச்சுட்டதா நம்ம ஆளுங்களுக்கு நினைப்பு

    ReplyDelete
  8. I liked ur blog header .. very nicely done .. .

    Thanks,
    Tamil Post.

    ReplyDelete
  9. மதுர:)முதலில் செய்தி படிக்கும் போது மறுபடியுமா என்றுதான் எனக்கும் தோன்றியது.ஆனால் யோசித்துப் பார்க்கும் போது இந்த மாதிரி பிரபலங்களை இன்னும் தீவிர விசாரணை செய்வதில் தவறில்லை.காரணம்,சாருக்கான் மாதிரி ஆட்களுக்கான ஆட்களின் வட்டம் மிகப் பெரியது.பொருள்,தகவல் உட்பட பலவற்றையும் கட்த்தும் சாத்தியம் அதிகமுள்ளது.கால்பந்து வீரர் மடோனா போன்றவர்கள் கால்பந்தாட்ட ரசிகர்களுக்கு பாதி கடவுள் மாதிரியாக இருந்தாலும்,போதைக் கடத்தலுக்கு அவரை மாபியா உலகம் உபயோகிப்படுத்தியுள்ளது.அதே போல் சாருக்கான்,பாகிஸ்தான் ராணுவம் போன்ற நட்பு வட்டாரங்களையெல்லாம் கொண்டிருப்பதோடு பதிவில் சொன்ன மாதிரி இந்தி திரைப்படங்களின் தயாரிப்புக்கான பொருளாதாரம் பாதாள அமைப்புக்கள்,தாவுத் இபராஹிம் போன்றவர்களின் தொடர்புடையது என்பதால் சாருக்கானை அமெரிக்கா தீர விசாரிக்க வேண்டிய கட்டாயம் உள்ளது.மேலும் சாருக்கானின் தகவல்கள் கணினி மயப்படுத்தப்பட்டுள்ளதால் சாருக்கான் பற்றி தெரியாமலே சோதனை செய்திருக்க முடியாது.இந்த சோதனையில் அமெரிக்காவிற்கு பல லாபங்கள் உண்டு.சட்டத்தின் முன் அனைவரும் சமம்.இது போன்ற சோதனைகள் உலகம் தழுவிய செய்தியாக தீவிரவாதத்திற்கு எதிராக பயன்படுவது.என்னதான் அமெரிக்கா மறைத்தாலும் 9/11க்குப் பின்பான இஸ்லாமிய பெயர்களின் அபாய சங்கு நிலைக்கான செய்தி.கணினி தகவல் விரிவாக்கம்,காசு செலவு செய்யாமலே தீவிரவாதத்திற்கு எதிரான விளம்பரம் என்று பல சாதகங்கள் அமெரிக்காவிற்கு உண்டு.

    மேலும் சாருக்கான் அமெரிக்கா போகக்கூடாது என்பது அவராலேயே இயலாத வாழ்க்கை கட்டமைப்பு சூழல் என்பதால் சோதனையை பெரிதுபடுத்தாமல் ஜோக் அடிப்பதுதான் நல்லது.

    கிருஷ்ணா பிரபலங்களுக்கு தனியா க்யூ வேணும் என்று கூவுகிறார்.இந்த மனநிலை கண்டனத்துக்குரியது.

    ReplyDelete
  10. முதலாவத் பின்னூட்ட மறுமொழியில் பாலோயர் ஆயிடுங்கன்னு சொல்லியிருந்தீங்க.கூட்டமில்லாத கடையில்தான் நான் டீ குடிப்பது வழக்கம்:)

    ReplyDelete
  11. nadikarukku nadanthathukku-
    kooppaadaa?

    naattula makka thinam thinam-
    saakuraan!

    athai yosikaama !

    vilamparathukku alaiyiraanga...!

    aanaal americaa periya visaaranai
    puliyalla !

    perazhuvu aayutham-
    sonnaanga!

    aduthu saadaam-
    sonnaanga!

    ippo theeviravaathi-
    solraanga!

    ithaiyellaam-
    neenga enna solreenga!

    oru naattudaya-
    pirachanaiyil thalaiyida koodaathu!
    saringa!

    ippa america thalaiyidivathellaam-ennanga!

    ReplyDelete
  12. ராஜ நடராசன் சொன்னதையே நான் எனது நண்பர்களிடம் விவாதித்து இருக்கிறேன்.

    U.S. Consulate நம்ம ஆட்களைப் பற்றி விவரமாக மேல் மட்டத்திற்கு தெரிவிப்பார்கள் என்று சொன்னதை எவனும் நம்பவில்லை. இப்ப wikileaks--க்கு அப்புறம் ஒத்துக கொள்கிறார்கள்.

    பிரபலங்கள் வரும் போது சோதனை செய்வதில்லை. மேலும், அவர்கள் பெட்டிகளில் சாமான்களை வேலையாட்கள் தான் அடுக்குவார்கள். வேலையாட்களிடம் கோடிகளில் பணம் கொடுததால் எதை வேண்டுமானாலும் வைப்பார்கள். எல்லா வேலையாட்களும் அப்படி இல்லை என்றாலும். பணத்தில் மயங்கா விட்டாலும் வேறு வழியில் அவர்களை வழிக்கு கொண்டு வர முடியும். இதை செய்வதில் தீவிரவாதிகள் கில்லாடிகள்!

    உண்மையில் சொன்னால், இந்தியாவில் இருந்து நான் வரும் போது, எப்பொழுதும் சென்னையில்ருந்து Direct Flight-தான். பாம்பே டெல்லி வழியாக இருபது வருடடத்திற்கு மேலாக நான் வருவதில்லை.

    And finally I never travel by (H)air-India!

    ReplyDelete
  13. It is acceptable for the first time. They should have his information (whether he is a terrorist or not) in their file. So second time they shouldn't do this type of check.

    He should get a special number from NSA (which is available for the frequent fliers whom they checked like this), if you have that number in your boarding pass they won't give you a hard time

    ReplyDelete
  14. அதைவிட்டு விட்டு இந்தியாவுக்கு வரும் அமெரிக்கர்களை நாங்கள் விசாரிப்பதில்லை அதனால் அமெரிக்கா வரும் இந்தியர்களை அவர்களும் விசாரிக்க கூடாது என்று கதறுவதில் அர்த்தமில்லை.// சிந்திக்க வைக்கும் பதிவு சிந்திப்பார்களா ?

    ReplyDelete
  15. அவர் அதை பெரிதாக எடுக்கவில்லை...

    ஏற்கனவே இதுபோல் மாட்டியவர்களும் இனி மாட்டவேண்டாம் என்று நினைப்பவர்களுக்கும் உலகின் பல நாடுகளில் அமெரிக்கா உட்பட..
    அட்வான்ஸ் டாகுமென்ட் வெரிபிக்கேசன் முறை உள்ளது நண்பரே... அதை வீட்டில் இருந்தே ஐந்து நிமிடத்தில் முடிக்கலாம்...அது ஒரு முறை செய்தால் போதும்...

    ReplyDelete
  16. சிலருக்கு... குறிப்பாக நடிக நடிகைகளுக்கு it is another opportunity to be among the headliners...

    ReplyDelete
  17. எந்த நாட்டுக்குக்கு செல்கிறோமோ அந்த நாட்டு சட்டபடிதான் நடந்து கொள்ளவேண்டும்

    ReplyDelete

நான் அறிவு ஜீவி அல்ல ஒரு சாதாரணமான் மனிதன் தான்.இங்கு நான் பதியும் பதிவுகளில் உள்ள கருத்துகள் "மிகவும் சரி"யென்று சொல்லமாட்டேன் அது அன்றைய மனநிலையில் என் மனதில் எழும் கருத்துகளே...அதனால் உங்களது மனசுலபட்ட மாற்று கருத்துகளை தாராளமாக பகிரலாம். ஆனால் தேவையற்ற, வரம்புமீரிய, அநாகரிகமான வார்த்தைகளாலும் பதிவிற்கு சம்பந்தமில்லாமல் கருத்துக்கள் சொல்லப்பட்டால் எந்த வித பதில் விளக்கமின்றி அந்த கருத்து டெலீட் செய்யப்படும்.