கலைஞர் நடத்தும் புதிய நாடகம் "அழகிரி கோட்டையில் ஸ்டாலினின் வேட்டை"
கலைஞர் நடத்தும் நாடகத்தின் ஒரு புதிய பகுதிதான் சகோதர சண்டை. இது வெளியே உள்ளவர்களுக்கு வேண்டுமானால் நிஜ சண்டையாக தோணலாம் ஆனால் உண்மையில் இது சினிமாவில் வரும் சண்டை போலத்தான். யாருக்கும் நிஜ காயம் இருக்காது.
கலைஞரிடம் எனக்கு பிடித்ததே அவருடைய சாணக்கியதனம்தான். அந்த சாணக்கியர் தான் இந்த சகோதர யுத்ததை நடத்தி அந்த சகோதர யுத்தத்தை அவரேதான் பெரிதாக்குவதாகவும் அதில் ஒரு ராஜதந்திரம் இருப்பதாகவும் பலர் சொல்கிறார்கள்.
அவர் ஏன் இந்த தள்ளாத வயதிலும் இந்த ராஜதந்திர நாடகத்தை நடத்துகிறார் என்று பலர் கேள்வி கணை தொடுக்கலாம். அதற்கு முக்கிய காரணமாக சொல்லப்படுவது இதுதான்.
குடும்பத்துக்குள் அடுத்த வாரிசு யார் என்று நீயா நானா போட்டி நிலவும்போது, குடும்பத்துக்கு வெளியே இருந்து யாரும் தலைவராக உருவாகிவிட முடியாத சூழ்நிலை உருவாக்கப்படும் என்றும் அதன்மூலம் கட்சியும், கட்சியில் குவிந்து கிடக்கும் நிதியும் தனக்குப் பின்னும் தனது குடும்பத்தின் கட்டுப்பாட்டில் தொடர்வது உறுதிப்பட வேண்டும் என்று திட்டமிட்டுத்தான் இந்த நாடகம் அவரால் நடத்தப்படுவதாகக் கூறப்படுகிறது இது உண்மையாக இருக்குமா இல்லையா என்பதை காலம்தான் பதில் சொல்ல வேண்டும்
அது போல இந்த தீடீர் ஈழத்தமிழர் பாசம் என்பது தமிழ்படங்களில் சண்டை காட்சி ஒன்று வந்தால் பாடல் காட்சி ஒன்று வருவது போலத்தான். மக்களுக்கு பல்சுவை விருந்தை தருவதுதான் இவரது தந்திரம். அதில் அவர் வெற்றி கொடி நாட்டி வருகிறார்.
நல்லதோ கெட்டதோ அவரை பற்றி செய்தி மக்களிடம் புழங்கி கொண்டே இருக்க வேண்டும் அதிலும் அவர் வெற்றி பெற்றுகொண்டிருக்கிறார்.
டிஸ்கி :ஜெயலலிதாவுக்கும் கலைஞருக்கும் உள்ள வேறுபாடு ஜெயலலிதா ஆட்சியில் இல்லாவிட்டால் யாராலோ எழுதப்பட்ட அறிக்கை அவர் பெயரில் வரும் ஆனால் கலைஞரின் அறிக்கை அவரால் சொந்தமாக தயாரிக்கப்பட்டு வெளிவரும்.
// அவருடைய சாணக்கியதனம்தான். // உண்மை தான்
ReplyDelete// இது உண்மையாக இருக்குமா இல்லையா // நீங்கள் சொல்வதைப் பார்த்தல் அது தான் உண்மைய இதுக்கும் போல் தோன்றுகிறது.
சிந்திக்க வைக்க வேண்டிய அருமையான அரசியல் பதிவு. வாழ்த்துக்கள்
மிகச் சரியான கருத்து
ReplyDeleteபகிர்வுக்கு வாழ்த்துக்கள்
அரசியலின் அம்பலம் , சிறப்பான பதிவு .
ReplyDeleteunmai thaan!
ReplyDeletesariyaana karuthu!
அரசியலா? மீ எஸ்கேப்ப்பு
ReplyDeleteஎப்படியும் கத்திரிக்கா முத்தினா சந்தைக்கு வரும் தானே?
ReplyDelete