வெளிநாட்டில் வேலை பார்க்கும் இன்ஜினியர்களைப் பற்றி பேசிய அண்ணா பல்கலை முன்னாள் துணைவேந்தர் பாலகுருசாமியின் கிறுக்குதனமான உளறல்கள்
இன்று தினமலரை பார்த்த போது அண்ணா பல்கலை முன்னாள் துணைவேந்தர் பாலகுருசாமியின் கிறுக்குதனமான உளறல்களை படிக்க நேர்ந்தது.
அந்த செய்தியில் அவர் பேசிய பேச்சின் ஒரு பகுதிதான் என்னை இந்த பதிவு எழுத தூண்டியது.
அந்த செய்தியை உங்களுக்காக கிழே தந்துள்ளேன் (நன்றி: தினமலர் :-வெளிநாட்டில்" டெக்னிக்கல் கூலிகளாக' இந்திய இன்ஜினியர்கள்:பாலகுருசாமி
==============================================
வெளிநாடுகளில் மிகவும் கடினமாக உழைப்பவர்களை இந்த துணை வேந்தர் டெக்னிக்கல் கூலிகள் என்று நக்கல் செய்துள்ளார்.
கூலிகளின் பெருமையை தெரியாதவர் இந்த படித்த முட்டாள் என்னும் துணை வேந்தர். கூலிகள் என்றாலே கடினமாக உழைப்பவர்கள் என்று படிக்காதவனுக்கு கூட தெரிந்ததை இந்த படித்த துணை வேந்தருக்கு புரியாது போனது என்னவோ?
இதை படிப்பவர்கள் கேட்கலாம். அப்ப இவர் வெளிநாட்டில் வேலைப் பார்ப்பவர்களை கடின உழைபாளிகள் என்று பெருமையாகதானே பேசி இருக்கிறார் அதில் என்ன குற்றம் கண்டுபிடிக்கிறீர்கள் என்று. அவர் பேச்சை முழுமையாக படித்தால் அவர் கிண்டல் செய்வதன் தொனி யாருக்கும் நன்றாக புரியும்.
அடுத்தாக அவர் கூறியது
//தமிழில், மிகச் சிறந்த நூல்கள் எழுதப்பட்டுள்ளன. ஆனால், படிக்கும் வாசகர்களின் எண்ணிக்கை தான் குறைவு. குறிப்பாக, மாணவர்கள் பாடப் புத்தகங்களைத் தவிர, வேறு புத்தகங்களை படிப்பதில்லை//
படிப்பவர்கள் அதிக தகவல்களை நெட்டில் படிக்கிறாரகள் அதனால் கையில் உள்ள பணத்தை செலவழித்து புத்தகங்களை வாங்கி இந்த கால மாணவர்கள் படிப்பது அந்த காலத்தில் படித்து வந்த இந்த துணை முதல்வருக்கு புரியாமல் போனதில் ஆச்சரியமில்லை.
அடுத்தாக அவர் கூறியது
///அதிகம் மதிப்பெண் பெற வேண்டி, பாடங்களை மனப்பாடம் செய்கின்றனர்; விஷயத்தை புரிந்து படிப்பதில்லை//.
அவர்கள் புரியாமல் மனப்பாடம் செய்து படிப்பதற்கு காரணம் இந்த பேராசிரியர்கள் மாணவர்களுக்கு புரியாமல் நடத்துவதால்தான் என்பது அவருக்கு தெரியாதா?
அடுத்தாக அவர் கூறியது
///நல்ல மதிப்பெண்கள் பெற்று, இன்ஜினியரிங் மற்றும் தொழில்நுட்பக் கல்லூரிகளில் சேரும் மாணவர்கள் பலர், முதலாமாண்டு செமஸ்டர் தேர்வில் தேர்ச்சி பெறுவதில்லை. இதற்கு பாடத்தை, புரிந்து படிக்காதது தான் காரணம். மனப்பாடக் கல்வி, அறிவை வளர்க்காது. இலக்கியம், வரலாறு மற்றும் சமூகம் சார்ந்த புத்தகங்களை படித்தால் தான், அறிவு விரிவடையும்.//
அதிக மாணவர்கள் முதலாமாண்டு செமஸ்டர் தேர்வில் தேர்ச்சி பெறாதற்கு காரணம் பல மாணவர்கள் தமிழக தென்பகுதியில் இருந்து வருபவர்கள் அவர்களுக்கு ஆங்கிலத்தில் வீக்காக இருப்பதால் முதலாமாண்டு மிக சிரமமாக இருக்கும் என்பதால்தான் தேர்ச்சி பெறுவதில் தவறுகிறார்கள் என்ற உண்மை கூட இந்த பேராசிரியருக்கு தெரியாதோ?
//இலக்கியம், வரலாறு மற்றும் சமூகம் சார்ந்த புத்தகங்களை படித்தால் தான், அறிவு விரிவடையும்.///
இன்ஜினியரிங் படிப்பவன் அந்த துறை புத்தகங்களை படித்தால் அந்த துறை அறிவு மிக வளரும் அவனுக்கு ஏன் இலக்கியம், வரலாறு மற்றும் சமூகம் சார்ந்த புத்தகங்களை படிக்க வேண்டும் அதைதான் பள்ளி பருவங்களில் படித்து இருப்பானே
///இந்தியாவில் படித்து, வெளிநாட்டுக்குச் சென்று வேலை செய்யும் இன்ஜினியர்கள், அங்கு "டெக்னிக்கல்' கூலிகளாகத் தான் வேலை பார்க்கின்றனர். இன்ஜினியரிங் படித்தவர்கள், அங்கு இன்ஜினியர்களாக இல்லை; அங்குள்ள ஐ,டி., கம்பெனிகளில், கம்ப்யூட்டர் புரோகிராமர்களாக உள்ளனர்////
இன்ஜினியரிங் படித்தவர்கள், அங்கு இன்ஜினியர்களாக இல்லை என்பதற்கு காரணம் கல்லூரியில் நீங்கள் அந்த துறையில் நல்ல பயிற்சி கொடுக்காததுதான் காரணம் என்பதை ஏன் இவர் உணரவில்லை. இன்ஜினியரிங் படித்தவர்கள் தங்கள் சொந்த திறமையால் கம்பியூட்டர் அறிவை பெற்று கடினமாக அந்த துறையில் உழைத்து வெற்றி பெற்று கொண்டிருக்கிறாரகள். அவர்களை கூலிகள் என்று பேசி தரம் குறைகிறார் இந்த துணைவேந்தர்
// கம்ப்யூட்டர் சயின்ஸ் படித்தவர்கள், 20 சதவீதம் பேர் தான் வேலைக்குச் செல்கின்றனர்; 80 சதவீதம் பேர் சும்மாவாக உள்ளனர்//
இதற்கு காரணம் உங்களை போல உள்ள பேராசிரியர்கள் கற்று தந்ததுதான் காரணம்
//நாம் டாக்டர், இன்ஜினியர், வழக்கறிஞர் என்று பட்டம் பெற்றால் மட்டும் போதாது; நல்ல மனிதர்களாக, நல்ல குடிமகனாக இருப்பது முக்கியம். இந்த சிந்தனை வளர வேண்டும் என்றால், சிறந்த புத்தகங்களையும், சாதனையாளர்களின் வரலாறுகளையும், உன்னதமான இலக்கியங்களையும் படிக்க வேண்டும்//
இப்படி அறிவுரை சொல்லுவது எல்லாம் அடுத்தவர்களுக்கு மட்டும்தானா தனக்கு கிடையாதா? நல்ல சிந்தனையாளர்கள் குடிமகன் கள் படித்து வேலைபார்ப்பவர்களை கூலிகள் என்று நக்கல் அடிக்க மாட்டார்கள்.
இறுதியாக, ஐயா அண்ணா பல்கலை முன்னாள் துணைவேந்தர் பாலகுருசாமி அவர்களே பேச சந்தர்ப்பம் கிடைத்தால் இப்படி கிறுக்குதனமாக உளறமல் மாணவர்களுக்கு & பொது மக்களுக்கு பயன் தரும் பேச்சுகளை பேசுங்கள் அதுதான் தாங்கள் வகித்த பதவிக்கும் பெருமை உங்களுக்கும் பெருமை உங்களிடம் படித்த மாணவர்களுக்கும் பெருமை.
இதை படிப்பவர்களுக்கு ஒரு வேண்டுகோள் இந்த செய்தி பற்றிய உங்களின் கருத்துகளை இங்கே தெரிவிக்கவும். இதில் நான் தவறுதலாக ஏதும் சொல்லி இருப்பின் அதை சுட்டி "குட்டி" காட்டவும் காரணம் நான் அறிவுஜீவி அல்ல அல்லது பல்கலைகழக வேந்தரும் அல்ல.இந்த துணைவேந்தர்பாலகுருசாமி தவறாக பேசி இருப்பதாக கருதினால் அவருக்கும் இதன் மூலம் ஒரு குட்டு வைக்கவும்.
என்றும் அன்புடன்
உங்களின் அபிமானதிற்குரிய "மதுரைத்தமிழன்"
எனது அடுத்த பதிவு உங்களுக்கு வேண்டியதை வாரி வழங்கும் "கடவுளுக்கு மாற்று (ஒரு புதிய கடவுள் அறிமுகம்)" படிக்கதவறாதீர்கள் .
உங்கள் காணிக்கைகளை பின்னுட்டமாக போடவும் நன்றி
பாவம்! இந்தியாவில் கல்வியாளர்கள் அப்படி தான் பேசுவார்கள் தகுதிக்கு மீறின ஊதியம் வசதிகள், பல்கலைகழகங்களில் ஊழல் ஊழல் என கல்வியை மற்ந்து பணம் என்பதை மட்டும் குறியாக வாழ்பவர்கள்.
ReplyDeleteமுடி ரொம்ப வளந்தா..மூளையும் வழிஞ்சிடும் என்பது உண்மைதான் போல...
ReplyDelete:-)
நமது கல்விதிட்டம் , ஒரு நல்ல விஞ்ஞானியை உருவாக்குவதில்லை...
அதற்கு காரணம் இது போல பேராசியர்கள் வகுத்த பாடத்திட்டங்கள்தான்...
@ஜோஸபின் பாபா நீங்கள் சொன்னது மிகச்சரியே , உங்களின் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி
ReplyDelete@பட்டாபட்டி
ReplyDelete//நமது கல்விதிட்டம் , ஒரு நல்ல விஞ்ஞானியை உருவாக்குவதில்லை...அதற்கு காரணம் இது போல பேராசியர்கள் வகுத்த பாடத்திட்டங்கள்தான்... //
சரியாக சொல்லியிருக்கிறிர்கள் பட்டாபட்டி.உங்களின் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி
J P Josephine Baba said வாயால் சொன்னால் போதுமா இவர்களை போன்ற உயர்கல்வியாளர்கள் தான் திட்டங்கள் தீட்டி (பாடதிட்டத்தில் மாற்றம், ஆசிரியர் மாணவர் பங்களிப்பு மேன்படுத்துதல்)நடமுறைக்கு கொண்டு வர வேண்டும். இவர்களை போன்றவர்கள் தாங்கள் வாங்கும் ஊதியத்திற்க்கு தகுந்தது போல் உபதேசிப்பார்கள் செயலாற்றல் கேள்விக்குறிதான்
ReplyDeleteSanthi M Mary Said கல்வி வாழ்க்கையை வாழ்வதற்கான ஒரு தகுதியை மட்டுமே தருகிறது.. ஆக பொறியியல் படித்ததாலேயே அவர் அது சம்பந்தமான வேலை மட்டுமே பார்க்கலாம் என்பது மூடத்தனம். அறிவு வேறு , புத்திசாலித்தனம் வேறு.. ஒரு புத்திசாலி தான் பெற்ற அறிவை பல துறைகளில் உபயோகப்படுத்தலாம்.. அடுத்து கூலி என்பது இழிவல்ல., இழிவான நோக்கில் சொல்லப்பட்டாலுமே. அப்ப விவசாயி இழிவா?.. உலகில் நாம் அனைவருமே கூலிக்குத்தான் மாரடிக்கிறோம்..
ReplyDeleteதான் பெரியவன் எனும் நிலை வரும் போது இப்படி தான் பேசுகிறார்கள் என்ன செய்வது கேட்பது நம் விதி .
ReplyDeletejust leave it
ReplyDeletejosapli !
ReplyDeletesonnthuthaan-
en nilailaadum!
ஒரு தினசரி பத்திரிகை செய்தியை வைத்து ஒரு பேராசிரியரை எடை போடுதல் எந்த வகை நியாயம் ஐயா? இன்று தமிழ் நாட்டில் உள்ள கல்லூரிகளில் பெரும்பாலானவற்றில் அவர் எழுதிய புத்தகங்கள் தான் text books... அவர் பேச்சுகளை தொடர்ந்து கேட்டிருந்தால் இப்படி எழுத மாட்டீர்கள். முடிந்தால் பொறியியல் கல்லூரி கல்வி தரம் பற்றி கொஞ்சம் Google செய்யுங்கள்... உண்மை புரியும்...
ReplyDelete