Thursday, April 12, 2012

 

குப்பைகளுக்கு ஒரு கோயிலா? (அறிவுக்கண்ணை திறக்கும் கோயில்எங்கே???

குப்பைகளால் கோவில் கட்டுவது அமெரிக்காவில் ஆனால் கோயிலை குப்பைகளாக்குவது இந்தியாவில்தான் முடியும்

நான் இரு தினங்களுக்கு முன் குழந்தையை கூட்டிக் கொண்டு இரண்டு நாள் சிறு பயணமாக நீயூஜெர்ஸிக்கு அருகில் உள்ள மாநிலமான கனனெக்டிக்கட்(Connecticut) என்ற மாநிலத்திற்கு சென்றேன் இரண்டு நாள் பயணம் என்றாலும் நாள் முழுவதையும் ஊரை மட்டும் சுற்றி வராமல் அதில் சிறிது நேரத்தை பயனுள்ளவையாகவும் அதே நேரத்தில் குழந்தையும் ஏதாவது கற்று கொள்ள வேண்டும் என்ற நோக்கத்தில் இரண்டு இடங்களை தேர்ந்து எடுத்து சென்றோம். அதில் ஓன்றில்தான் நாங்கள் பார்த்த Trash மியூஸியத்தில்தான் இந்த Temple of Trash ( அறிவுக்கண்ணை திறக்கும் கோயில் இது )இருந்தது.


இந்த மியூஸியத்தை பற்றி இரண்டு வரிகள் : இந்த Trash மியூஸியம் என்பது ஓன்றுமில்லை. குப்பைகளை மறுசுழற்சி (recycle ) செய்யும் இடம். அவர்கள் அதை எப்படி செய்கிறார்கள் என்பதை பொதுமக்களும் வந்து பார்க்கும் வண்ணம் அதற்கான வசதிகள் செய்து தந்து இருக்கின்றனர். அங்கு பல அறிய தகவல்களை அறிய மற்றும் கற்க முடிந்தது. பள்ளி மாணவர்கள் அதிக அளவில் வந்து இருந்தனர்.
Trash coke can யை வைத்து தாயாரிக்கபட்ட கோபுரம்


இங்கு மாநிலத்திற்கு மாநிலம் நகரத்திற்கு நகரம் குப்பைகளை போடுவதற்கு ரூல்ஸ் உண்டு. நான் பார்த்த கனனெக்டிக்கட்டில் single-stream recycling சிஸ்டம் அப்படி என்றால் எல்லா குப்பைகளையும் ஒரே தொட்டியில் போடுவது ஆனால் நான் வசிக்கும் ஊரிலோ குப்பைகளை தனியாகவும், பாட்டில் மற்றும் கேன்களை தனியாகவும், செய்திதாள்,மேகசின் போன்றவற்றை தனியாகவும், அப்ளையன்ஸ் தனியாகவும் எலக்ரானிக் ஐயிட்டங்களை தனியாகவும் போடவேண்டும். அந்த அந்த குப்பைகளை வாரத்திற்கு ஒரு முறை அதற்கென குறிப்பிட்ட நாட்களில் வந்து பிக்கப் செய்வார்கள்.


சில நேரங்களில் நாங்கள் குப்பை போடும் பிக் கண்டெய்னரிலேயே சோம்பேறிதனத்தால் பாட்டில் மற்றும் கேன் களை தூக்கி போட்டுவிடுவோம். சில நேரங்களில் டவுன் சிப் ஆட்கள் செக் செய்யும் போது அது கண்டுபிடிக்கப்பட்டால் அதற்கென அபராதம் கட்ட வேண்டும். அப்படி போடுவது  எவ்வளவு தவறு என்பதை இங்கு சென்ற வந்த பின்னர் உணர்ந்து கொண்டோம்.


இங்கு வந்த சென்ற போது என் மனதில் உதித்தவைகளில் சில உங்களின் பார்வைக்கு:

அமெரிக்காவில்  குப்பைகளை மறுசுழற்சி  (recycle ) செய்யும் இடத்தை மியூஸியமாக மாற்றி  அதை எப்படி செய்கிறார்கள் என்பதை பொதுமக்களும் வந்து பார்க்கும் வண்ணம்  வசதிகள் செய்து தந்து  அதன் மூலம் விழிப்புணர்வு ஏற்படுத்தி கொண்டுருக்கின்றனர்.
ஆனால் நமது இந்தியாவில் நாம் ரோட்டில் அல்ல நமது விட்டிலும்மல்ல நாம் இறைவனை காணச் செல்லும் புனிதமான கோயிலை எப்படி குப்பை கூழமாக்கி வருகிறோம் என்பதை நான் சொல்லிதான் உங்களுக்கு தெரிய வேண்டும் என்பது இல்லையே!


அடுத்தாக கல் தோன்றி மண் தோன்றா காலத்தில் வாழ்ந்தவர்கள் நம் முன்னோர்கள் என்று நாம் பழம் பெருமையை பேசிவருகிறோம் நாம். அப்படி பெருமை பேசுபவர்கள் இந்த மியூஸியத்தில் உள்ள சிறு தகவலை படித்தால் தலை குனிந்துதான் போவார்கள். நானும் தலை குனிந்தேன் அதை தகவலை கண்டு. அந்த தகவலை நான் போட்டோ எடுத்து உங்களுக்கு கிழே கொடுத்துள்ளேன்.



அந்த தகவலில் இருந்தது இதுதான். கிறிஸ்து பிறப்பதற்கு 400 ஆண்டுகளுக்கு முன் ஏதென்ஸ் நகரில் உள்ள முனிசிபல் ஆபிஸ்தான் உலகிலேயே முதன் முதலில்  குப்பை போடுவதற்கென ஒரு சட்டத்தை இயற்றியது. அதன்படி மக்கள் குப்பையை நகரின் சுவரில் இருந்து ஒரு மைல் தூரத்திற்கு அப்பால்தான் கொட்ட வேண்டும் என்று அறிவித்தது.

உலகிலேயே முதன் முதலில் நலந்தா  என்ற பல்கலைகழகம் இருந்தது இந்தியாவில்தான் ஜீரோவை கண்டு பிடித்தது நாம்தான் என்று பல பெருமைகளை பேசிவரும் நாம். இப்போது குப்பைகளை எங்கே போடுகிறோம் எப்படி கையாள்கிறோம் என்பதை சிறிது சிந்தித்து பார்க்க சொல்கிறேன்.


நான் இந்தியாவில் இருந்து இருந்தால் இது எல்லாம் எனக்கு தெரிந்து இருக்காது நானும் உங்களை போலத்தான் குப்பைகளுக்கு அருகில் வாழ்ந்து இருப்பேன். ஆனால் இங்கு வந்து பார்த்த போதுதான் இந்தியா எப்படி கேவலமாக  இருக்கிறது என்பது தோன்றுகிறது. நாங்கள் இந்தியாவரும் போது அங்குள்ள எனது உறவினரிடம் பேசும் போது அவர்கள் சொல்லவது அது மாதிரி உங்கு எல்லாம் நடக்காது. அது மட்டுமல்லாமல் நீ அமெரிக்கா போய்விட்டதால் இங்கு நீங்கள் வசித்ததை மறந்து விட்டு அங்கு நடப்பதை பெருமையாக பேசாதே என்று குற்றம் சாட்டுவார்கள். அவர்கள் மாதிரி இதை படிப்பவர்களும் கேள்விகள் கேட்க கூடும்.

இவர்கள் அனைவரிடமும் சொல்வது இதுதான். நான் சுத்தம்பற்றி பேசுவது தவறுதான் ஒத்து கொள்கிறேன். ஆனால் நீங்கள் எனது  ஒரு கேள்விக்கு பதில் மட்டும் சொல்லுங்கள்நீங்கள் மேலை நாட்டை பார்த்து அவர்கள் போடுவது போல பேண்ட் சர்ட் மற்றும் டிரெஸ் போடுகிறிர்கள், அவர்களை போல டேட்டிங்க், காதலர்தினம், பர்கர், பிட்ஸா போன்ற உணவுவகைகல் மற்றும் பலபழக்க வழக்கங்களை யார் சொல்லி நீங்கள் இப்போது கற்று நடக்கிறிர்கள். இந்த மாதிரி மேலை நாட்டில் இருக்கும் குப்பைகளை கற்று அதன்படி நடக்கும் நீங்கள் இந்த சுத்தத்தை(குப்பை) மட்டும் பற்றி பேசும் போது எங்களை ஏளனமாக பார்ப்பது ஏனோ??

கொஞ்சம் சிந்தித்து பார்த்து சொல்லுங்களேன்......

இந்தியா குப்பைகாடாக இருப்பதற்கு நாம் மக்களை மட்டும் குறை சொல்வது தப்பு அதற்கு முக்கிய காரணம் நமது அரசாங்கமும் அதனை நடத்தும் நம் தலைவர்கள் தான். அவர்கள் குப்பைகளை போடுவதற்கும்  அதை அகற்றுவதற்கும் வசதி செய்து கொடுத்தால் சிங்கபூர் அமெரிக்கா என்ன எல்லா நாடுகளையும் நாம் மிஞ்சிவிடலாம்.  மக்களே நீங்கள்தான் அதற்காக போராட வேண்டும்.

போராடுவதா அல்லது குப்பை மேட்டில் வசிப்பதா என்பதை நீங்கதான் முடிவு செய்ய வேண்டும்.


மியூஸியத்தை விடியோ க்ளிப்பில் பார்க்க இங்கே செல்லவும் 


என்றும் அன்புடன்,
மதுரைத்தமிழன்.


டிஸ்கி : இந்து மதவாதிகள் கவனிக்க .....

அது என்னங்க Temple of Trash  என்று பெயர் வைத்திருக்கிறார்கள்.( ஒரு வேளை நாம் கோயில்களில் குப்பை கூழங்களை அதிகம் போடுவதை இந்த அமெரிக்கர்கள் அறிந்துள்ளனரோ?) Temple  என்றாலே இந்துகளின் புனித தளத்தைதானே குறிக்கும். இதற்கு எதிர்ப்பு யாராவது தெரிவிக்க போகிறார்களா என்பதை பார்ப்போம்.

திரியை கொளுத்தி போடுவதுதான் நமது வேலை......

13 comments:

  1. சென்ற வாரம் இங்கே மயிலாப்பூரில் அறுபத்து மூவர் உற்சவம் நடந்தது. பல நிறவனங்கள் அன்னதானம் செய்தன. அவற்றைத் தின்ற மக்கள், பேப்பர் பிளேட்டுகளையும், ரோட்டோரங்களில் குடித்த நீர்மோர் டம்ளர்களையும் சாலையிலேயே போட்டு விட்டுச் சென்றனர். சாலையெங்கும் பேப்பர் பிளேட், டம்ளர் மயம். சிலர் பாதி சாப்பிட்ட நிலையில் போட்டதால் நடககவே அருவருப்புதான் எஞ்சியது, பக்தி அல்ல. அவர்களைக் குறைகூறும் அதேநேரம்... சாலையோரம் எங்கும் குப்பைத் தொட்டிகள் எதுவும் வைக்கப்படவில்லை என்பதையும் சொல்லித் தானாக வேண்டும். ஆக, விழிப்புணர்வு, சு்த்தத்தைக் கடைப்பிடித்தல் என்பது ஆள்பவர், பொதுமக்கள் இருவரும் உணர்ந்து செய்தால் மட்டுமே சாத்தியம். அது வரை... ஹும்! உம்மைப் போல வெளிநாட்டைப் பார்த்து பெருமூச்சுதான் விட வேண்டியிருக்கு. உங்களுக்கும் உங்கள் குடும்பத்தினருக்கும் இனிய தமிழ்ப் புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்!

    ReplyDelete
  2. kuppai,echchil thupputhal,koilukkul malam kalithal,koil suvaril kaathal vasanam eluthuthal,aandavanai avamaththithal enpatherke oru katchi koottam.pothukalippidam yaarum sellakkoodatha nilai. nallathu chonnaal thookananguruvi-kurangu kathaithaan.

    ReplyDelete
  3. நல்ல ஒரு விஷயம்தான். செல்ஃப் கண்ட்ரோல் இல்லேன்னா கஷ்டம்தான். மனிதனாய்ப்பார்த்து திருந்தினால்தான் உண்டு.

    ReplyDelete
  4. குப்பையை தெருவில் போட்டது போக நம் தலையில் கொட்டாமல் இருந்தா சரிங்க . பயனுள்ள சிந்திக்க வேண்டிய குறிப்பு சிந்திப்பார்களா ?

    ReplyDelete
  5. தங்களுக்கும் தங்கள் குடும்பத்தாருக்கும் இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள்...

    ReplyDelete
  6. தங்களுக்கும் தங்கள் குடும்பத்தாருக்கும் இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள் சகோ

    ReplyDelete
  7. குப்பைகளுக்கு ஒரு கோவிலா ஆச்சர்யமா இருக்கே. பகிர்வுக்கு நன்றி சகோ

    ReplyDelete
  8. Even when our governments , make arrangements for trash pick up, many houses do not pay to that person. They simply throw it on the road.For such people , fining is the only way!

    We are still , talking about our past glory, and refuse to see the present disasters we are creating. Pathetic.

    ReplyDelete
  9. @ கணேஷ் உங்கள் வருகைக்கும் கருத்துக்கும் மிகவும் நன்றி

    //விழிப்புணர்வு, சு்த்தத்தைக் கடைப்பிடித்தல் என்பது ஆள்பவர், பொதுமக்கள் இருவரும் உணர்ந்து செய்தால் மட்டுமே சாத்தியம்//

    மிக சரியாக சொன்னிர்கள் கணேஷ்.

    ReplyDelete
  10. @ சேதுராமன் ஆனந்தகிருஷ்ணன்

    @ லஷ்மி அம்மா

    @ சசிகலா

    @ரெவெரி

    உங்கள் அனைவரது வருகைக்கும் கருத்துக்கும் மிகவும் நன்றி

    ReplyDelete
  11. @ ராஜி உங்கள் வருகைக்கும் கருத்துக்கும் மிகவும் நன்றி


    // குப்பைகளுக்கு ஒரு கோவிலா ஆச்சர்யமா இருக்கே.///

    அது கோயில் அல்ல அது குப்பையை ரீசைக்கிள் பண்ணும் இடம். அங்கு நடப்பதை நாலு பேர் வந்து கற்று கொள்ள வேண்டுமென்று அதை மீயூசியமாக மாற்றி இருந்தார்கள். அதில் ஒரு பகுதியை Temple of tarsh என்று குறிப்பிட்டு இருந்தார்கள். அதையே நான் தலைப்பாக கோயில் என்று வைத்துள்ளேன்

    ReplyDelete
  12. @ Vetrimagal Vetrimagal உங்கள் வருகைக்கும் கருத்துக்கும் மிகவும் நன்றி

    ReplyDelete
  13. nalla thakaval thalaivaa?

    maaranum!
    maatranum!

    ReplyDelete

நான் அறிவு ஜீவி அல்ல ஒரு சாதாரணமான் மனிதன் தான்.இங்கு நான் பதியும் பதிவுகளில் உள்ள கருத்துகள் "மிகவும் சரி"யென்று சொல்லமாட்டேன் அது அன்றைய மனநிலையில் என் மனதில் எழும் கருத்துகளே...அதனால் உங்களது மனசுலபட்ட மாற்று கருத்துகளை தாராளமாக பகிரலாம். ஆனால் தேவையற்ற, வரம்புமீரிய, அநாகரிகமான வார்த்தைகளாலும் பதிவிற்கு சம்பந்தமில்லாமல் கருத்துக்கள் சொல்லப்பட்டால் எந்த வித பதில் விளக்கமின்றி அந்த கருத்து டெலீட் செய்யப்படும்.