Thursday, April 19, 2012


மனதை நெகிழ வைக்கும் ஒரு உறவின் உண்மை கதை...

பென்சில் (Pencil) ரப்பரே! என்னை மன்னித்து கொள்
ரப்பர் (Eraser) பென்சிலே! எதுக்குங்க இந்த பெரிய வார்தை எல்லாம் நீங்க ஓன்றும் தப்பு ஏதும் பண்னவில்லையே.
பென்சில் ; மன்னிச்சுங்க என்னாலதான் உங்களுக்கு பாதிப்பு. நான் எப்போது எல்லாம் தப்பு பண்ணுறேனோ அப்போது எல்லாம் நீங்க வந்து உதவுறிங்க..அது மட்டுமல்லாமல் நான் செய்த தவறு இருந்த இடமில்லாமல் செய்து விடுகீறீர்கள் அப்ப்டி செய்வதால் நீங்கள் உங்களின் ஒரு பகுதியை இழந்து நாளுக்கு நாள் சிறியதாகி கொண்டே போகிறீர்கள்

 ரப்பர் : அது உண்மைதாங்க!!! ஆனா அதை பற்றி எனக்கு கவலை இல்லைங்க, காரணம் நான் பிறந்ததே அதற்காகதான். நீ எப்போது எல்லாம் தவறு செய்கிறாயோ அப்போதெல்லாம் வந்து உதவுவதற்காகதான் நான் படைக்கப்பட்டு இருக்கிறேன். சிறியதாகி கொண்டே போகிற நான் ஒரு நாள் மறைந்து போவேன். அப்போது  நான் இருந்த இடத்தில் நீ வேறொன்றை மாற்றி வைத்து இருப்பாய். அது எனக்கு தெரிந்து இருந்த போதிலும் நான் எனது வேலையை செய்வதில் மிக மகிழ்ச்சியாகவே இருக்கிறேன்.அதனால் நீ கவலைப் படாமல் மகிழ்ச்சியாக இரு..நீ கவலையாக இருப்பதை பார்ப்பதுதான் எனக்கு மிகவும் வேதனையாக இருக்கிறது என்று சொன்னது.


மேலே சொன்னது ஏதோ சிறு பிள்ளைகளுக்கு சொல்லும் கதை போல இருக்கலாம் ஆனால் அதை நமது வாழ்வில் சற்று பொருத்தி பார்த்தோமானால் அதில் மறைந்து கிடக்கும் வாழ்வியல் உண்மைகள் நமக்கு மிக தெளிவாக விளங்கும்.

பெற்றோர்கள்தான் ரப்பர் ...குழந்தைகள்தாம் பென்சில். பெற்றோர்கள் பிள்ளைகள் செய்யும் தவறுகளை சுட்டிகாட்டி திருத்த முயல்கிறார்கள் அதனால் பல சமயங்களில் காயப்படுகிறார்கள். ஆனாலும் அதற்காக அவர்கள் கவலைப்படுவதில்லை காரணம் அவர்கள் குழந்தைகள் நல்வழியில் சென்று சந்தோஷமாக வாழ வேண்டுமென்று நினைப்பதால்தான். அவர்கள் பென்சிலை போல சிறியதாக மாறுவதில்லை அதற்கு பதிலாக வயதாகி காலப்போக்கில் மறைந்து போவார்கள். ஆனால் அவர்கள் இருந்த இடத்தில் புதிய வாழ்க்கை துணை(spouse) ஓன்று வந்து நம்மை கவனித்து கொள்ளும். பெற்றோர்கள் இருந்த இடத்தில் வாழ்க்கை துணை வந்து விடும் என்று தெரிந்த போதிலும் பெற்றோர்கள் அவர்கள் கடமையை செய்து பிள்ளைகள் கவலையில்லாமல் இருக்கவே விரும்புவார்கள்


என் வாழ்வில் எனக்கு உதவிய ரப்பர்(அம்மா) மறைந்து விட்டது ஆனால் அந்த ரப்பர் மறையும் முன்பே எனக்கு பிடித்த ரப்பர்(காதலி) என்னுடன் சேர்ந்து வாழ ஆசிர்வதித்து மறைந்துவிட்டது. நான் என் வாழ்க்கை முழுவதும் பென்சிலாக இருக்காமல் மறுசுழற்சி முறையில் ரப்பராக மாறி எனது குழந்தைக்கும் மற்றும் என்னை சுற்றிவாழும் அனைவருக்கும் என்னால் முடிந்த வரை  உதவி வருகிறேன்

எனக்கு இமெயிலில் ஆங்கிலத்தில் வந்ததை என்னுடைய வழியில் மாற்றி வாழ்க்கையோடு ஒப்பிட்டு இங்கு தந்துள்ளேன்.

“We never know the love of our parents for us till we have become parents.”

என்றும் அன்புடன்,
உங்கள் "மதுரைத்தமிழன்'



""புழக்கத்தில் இருக்கிற பாத்திரம் பளபளப்பாக இருக்கும். அது போல  மற்றவர்களுக்குப் பயன்படுகிற வாழ்க்கை மகிழ்ச்சியாக இருக்கும்"


9 comments:

  1. உங்க ஊர்ல ரப்பர்னா வேறென்னவோ போல...

    We never know the love of our parents for us till we have become parents..//

    Amen.

    ReplyDelete
  2. மொழியாக்கம் செய்ததுடன் நீங்கள் சொல்ல நினைத்ததையும் அழகாகவே சொல்லிவிட்டீர்கள், பாராட்டுக்கள்.

    ReplyDelete
  3. சிறந்த சிந்தனை வளம் மிக்க கதை!

    ReplyDelete
  4. அருமையான ஒப்பீடு ...!

    ReplyDelete
  5. நானும் ரப்பராக வாழவே ஆசைப்படுகிறேன். (பதிவை இழுக்கற விஷயத்துல சொல்லலை) மத்தவங்களுக்குப் பயன்படுகிற மாதிரி வாழணுங்கறதை விஷயத்தை ரப்பர்-பேனாக் கதை அருமையாப் புரிய வெச்சுட்டுது.

    ReplyDelete
  6. ரொம்ப நல்ல உவமைகளுடன் சிறுகதையாக சொன்னது நல்லா இருக்கு. வாழ்த்துகள்.

    ReplyDelete
  7. அழகாய் விளக்கிய விதம் அருமை .

    ReplyDelete
  8. இதை நாம நினைச்சே பார்க்கலயே.அருமையான சிந்தனை.வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  9. நீங்கள் சொன்னது போல அணைத்து ரப்பர்ரும் இருந்தால் நல்லது தான் .... இன்னமும் அதிக குழந்தை தொழிலாளர் இருக்க தான் செய்கின்றனர்.. பெண் சிசு கலைப்பு இருக்கிறது... அதிக ரப்பர் இன்னும் பென்சில்லாக தான் இருக்குறாங்க....

    ReplyDelete

நான் அறிவு ஜீவி அல்ல ஒரு சாதாரணமான் மனிதன் தான்.இங்கு நான் பதியும் பதிவுகளில் உள்ள கருத்துகள் "மிகவும் சரி"யென்று சொல்லமாட்டேன் அது அன்றைய மனநிலையில் என் மனதில் எழும் கருத்துகளே...அதனால் உங்களது மனசுலபட்ட மாற்று கருத்துகளை தாராளமாக பகிரலாம். ஆனால் தேவையற்ற, வரம்புமீரிய, அநாகரிகமான வார்த்தைகளாலும் பதிவிற்கு சம்பந்தமில்லாமல் கருத்துக்கள் சொல்லப்பட்டால் எந்த வித பதில் விளக்கமின்றி அந்த கருத்து டெலீட் செய்யப்படும்.