Monday, April 16, 2012



மதுரைத்தமிழனின் மனம் கவர்ந்த காதலி (காதல் அரிச்சுவடி)

என் மனைவி காதலியாக இருந்த  போது


திகாலையில் நீ எழும் போது
சூரியன் உதிப்பது போல அந்த காலை மலர்கிறது

ற்றில் நீ குளிக்கும் போது
ஆறும் அழகாக இருக்கிறது.

ரவில் நீ என் கூட வெளிவரும் போது
நிலவும் கூடவருவது போல இருக்கிறது

ரமாக நீ பார்க்கும் பார்வை
என் கடும் இதயத்தை மென்மையாக்குகிறது

தடுகளால் நீ இடும் முத்தம்
இனிப்பைவிட இனிமையாக இருக்கிறது

ரில் நீ இல்லாத போது
ஊரும் நரகமாக இருக்கிறது

ன் கூட நீ இருக்கும் போது
இந்த உலகம் சொர்க்கமாக இருக்கிறது

க்கமாக நீ பார்க்கும் போது
என் மனம் வலிக்கிறது

யமின்றி நீ சிரிக்கும் போது
என் ஐம்புலனும் சிலிர்க்கிறது

ருமையில்  நீ என்று என்னை அழைக்கும் போது
என் மனம் குதுகலிக்கிறது


ர விழியில் நீ என்னை பார்க்கும் போது
என் இதயம் துள்ளி குதிக்கிறது

இப்படி எல்லாம் மனசு சொல்லிச்சு... அப்ப இப்ப என்ன சொல்லுதுன்னுலாம் கேட்க கூடாது.

அவள் மனைவியாக இருக்கும் போது எப்படி என்று எழுதி அதற்காக எனது உயிரை பணயம் வைக்க முடியாது முடியாது முடியாது.
அதுதான் சொல்லிடேன்ல வேணுமென்றால் இந்த ஜோக்கை படித்து செல்லுங்கள் ஆளை விடுங்கப்பா..


நண்பர் :ஏன் உங்க மனைவி  சாப்பிடும் போதெல்லாம்  ஸ்கேலை கையில் வச்சுகிட்டு சாப்பிடுறாங்க ?
மதுரைத்தமிழன் :அவங்க டையட்ல இருக்குறாங்க அதனால அவங்க அளந்து  அளவோடு சாப்பிடத்தான்

நண்பர் :நான் தினமும் சாப்பாட்டுக்கு முன் கடவுளை வணங்குவேன், நீங்கள் ?
மதுரைத்தமிழன் : நான் வணங்கவதில்லை !. காரணம் என் மனைவி சமைக்கும் முன் நானே சமைத்து விடுவேன்.

16 Apr 2012

7 comments:

  1. //அவள் மனைவியாக இருக்கும் போது எப்படி என்று எழுதி அதற்காக எனது உயிரை பணயம் வைக்க முடியாது முடியாது முடியாது//

    அந்த பயம் இருக்கட்டும்..

    சரி விடுங்க இப்படி மலரும் நினைவுகளுடன் வாழ வேண்டியதுதான்............. ம்

    ReplyDelete
  2. வர வர உங்க போல்லே சரியில்லை சகோ. எப்ப பாரு பொண்டாட்டியை வம்புக்கு இழுத்துகிட்டு பதிவை போடுறீங்க. அவங்களுக்கும் ஒரு பிளாக் ஓப்பன் பண்ணி குடுங்க. அப்போதான் உங்க லட்சணம் தெரியும்.

    ReplyDelete
  3. @ராஜி

    //எப்ப பாரு பொண்டாட்டியை வம்புக்கு இழுத்துகிட்டு பதிவை போடுறீங்க. அவங்களுக்கும் ஒரு பிளாக் ஓப்பன் பண்ணி குடுங்க. அப்போதான் உங்க லட்சணம் தெரியும். //

    அவங்களுக்கு நான் என்ன ப்ளாக் ஒப்பன் பண்ணி தரது. அவள் IT யில் உயர்நிலை பதிவியில் தான் வேலை செய்கிறாள். வேண்டுமென்றால் அவள் என் வலைதளத்தை ஹேக் செய்து அதிலேயே பதிவு போட்டுவிடுவாள்

    ReplyDelete
  4. அவள் மனைவியாக இருக்கும் போது எப்படி என்று எழுதி அதற்காக எனது உயிரை பணயம் வைக்க முடியாது முடியாது முடியாது.
    உங்க கதியும் வீட்ல இப்படித்தானா...? Why Blood...? Same Blood!

    ReplyDelete
  5. கவித்துவமான வரிகள் அழகு அது என்ன வர வர மாமிய என்று சொல்வாங்களே அப்படி ஆரம்பிச்சிடிங்க பொண்டாட்டியை வம்புக்கு இழுக்க ம் ம் .

    ReplyDelete
  6. கவிதை அருமை!

    நான் படித்து விட்டு கேட்க இருந்த
    கேள்வியவும் நீங்களே!
    சொல்லிடீங்க!
    அதான் கல்யாணத்துக்கு பிறகுன்னு....

    ReplyDelete
  7. காதல் அரிச்சுவடி அருமை
    அதைவிட இரண்டு நகைச்சுவை துணுக்குகளும்
    மனம் கவர்ந்த பதிவு
    தொடர வாழ்த்துக்கள்

    ReplyDelete

நான் அறிவு ஜீவி அல்ல ஒரு சாதாரணமான் மனிதன் தான்.இங்கு நான் பதியும் பதிவுகளில் உள்ள கருத்துகள் "மிகவும் சரி"யென்று சொல்லமாட்டேன் அது அன்றைய மனநிலையில் என் மனதில் எழும் கருத்துகளே...அதனால் உங்களது மனசுலபட்ட மாற்று கருத்துகளை தாராளமாக பகிரலாம். ஆனால் தேவையற்ற, வரம்புமீரிய, அநாகரிகமான வார்த்தைகளாலும் பதிவிற்கு சம்பந்தமில்லாமல் கருத்துக்கள் சொல்லப்பட்டால் எந்த வித பதில் விளக்கமின்றி அந்த கருத்து டெலீட் செய்யப்படும்.

:) :)) ;(( :-) =)) ;( ;-( :d :-d @-) :p :o :>) (o) [-( :-? (p) :-s (m) 8-) :-t :-b b-( :-# =p~ $-) (b) (f) x-) (k) (h) (c) cheer
Click to see the code!
To insert emoticon you must added at least one space before the code.