உங்களின் பொழுது போக்கிற்கு உத்தரவாதம் தரும் ஒரு வலைத்தளம் அவர்கள்...உண்மைகள்.

Thursday, July 28, 2011

காதலிப்பது என்பது அவ்வளவு எளிதா? காதல் வசப்படும் ஆண்களுக்கு மட்டும்

காதலிப்பது என்பது அவ்வளவு எளிதா? காதல் வசப்படும் ஆண்களுக்கு

ஆண்களே காதலை சொல்வதற்கு முன்பு....இந்த பதிவை சற்று படித்து வெகு நிதானமாக யோசித்து காதலை வெளிப்படுத்துங்கள்


அவள் சிரிப்பதற்காக நீ கோமாளியாக வேண்டும்……..
அவள் திட்டுவதற்காக  நீ தவறிழைக்க வேண்டும்…….
அவள் ஆறுதல் சொல்லவதற்காக நீ சோகமாக வேண்டும்.........
அவள் சந்தோஷப்படுவதற்காக நீ சிரிக்க வேண்டும்........
அவள் தடவிக்கொடுப்பதற்காக நீ காயங்கள் ஏற்படுத்திக் கொள் வேண்டும்….
அவள் செல்லமாக கோபப்பட  நீ அவளை வம்புக்கிளுக்கவேண்டும்.......
அவள் அணைப்பதற்காக நீ நொந்து போக வேண்டும்.......
அவள் தரும் முத்தங்களுக்காவே நீ  வெற்றியடைய வேண்டும்......
அவள் சிந்தும் கண்ணீருக்காக நீ தோற்றுப்போக வேண்டும்....
அவள் துடைத்துவிடுவதற்காக  நீ மழையில் நனைய வேண்டும்....
அவள் கனவில் வர நீ தூங்க வேண்டும்........
அவள் கொஞ்சுவதற்காக நீ  குழந்தையாக வேண்டும்.....
அவள் அன்பு காட்டுவதற்காக நீ நோயாளியாக வேண்டும்.........
அவள் காட்டும் செல்லக்கோபங்களுக்காக  நீ  தாமதமாய் வரவேண்டும்.......
அவள் பேரை எப்போதும்  சொல்ல நீ கிளி வளர்க்க வேண்டும்...........
அவள் சூடிக்கொள்ள  நீ ரோஜா செடி வளர்க்க வேண்டும்.........
அவள் செல்ல சிணுங்கல்களுக்காக   நீ கிண்டல் செய்வேண்டும் ......
அவள் அகன்ற விழிகளை ரசிக்க நீ அதிர்ச்சியளிக்க வேண்டும்....
அவள் பெருமிதப்பட நீ எப்போதும் உண்மையாய் இருக்க வேண்டும்......

இந்த செயல்கள் நீ செய்வதாக இருப்பினும் அதை ஆட்டுவிப்பது அவளின் எதிர் செயல்கள்தான் மக்காஸ்.

இப்ப சொல்லுங்க காதலில் வசப்பட இந்த மாதிரி டெரரருக்கு எல்லாம் நீங்க ரெடியா மக்களே.


காதல் வசப்பட போகும் முன்பு கிழ்கண்ட  பொண்ணுகளை தவிர்க்கவும். ஏன்னா இவங்க எல்லாம் டெரர் ஆட்கள் (நல்லவங்க..கல்யாணம் ஆனவங்க(மைண்ட் வாய்ஸ் : இவர்களின் கணவர்கள் வாயில்லா ஜீவன்கள் பாவப்பட்ட ஆத்மாக்கள் இது போன்ற ஆத்மாகளில் நானும் ஒருவந்தான். அப்பா என் மனைவி ஊருக்கு போயிருக்கா) அந்த கடவுளே வந்தாலும் எங்களை காப்பாற்ற முடியாது)

உங்களை உண்டு இல்லைன்னு  பண்ணிடுவாங்க இந்த பொண்ணுங்க ஜாக்கிரதை1. ஆனந்தி மதுரை சண்டியர் வலையுலகின் மதுரை பெண் தாதா.

2. சாந்தி இவரை பற்றி  வலையுலகில் தெரியாதவர்கள் இருக்க முடியாது. வலையுலக பேராளி..

3. சித்ரா வெட்டி(வெற்றி)பேச்சால் எல்லோருக்கும் அல்வா கொடுக்கும் நெல்லை பதிவாளர்

4. ஹுசைனம்மா ஏலே எவன்ல அவன் ரொம்ப பேசினா என் டிரெங்கு பெட்டியில போட்டு பூட்டி புடுவனாக்கும்.

5. ஆமினா சின்ன நெல்லை பொண்ணுதான்... மக்கா மாட்டினேங்க ..தொலைஞ்சிங்க..

6. பிரதிஷா அர்சுனனுக்கு வில்லுதான் ஆயுதம் அது போல இவங்களுக்கு கவிதைதான் ஆயுதம்.

7. அப்பாவி தங்கமணிகிட்ட மாட்டினிங்க்க உங்களை நடுத் தெருவுல நிக்க வைச்சு, சிரிக்க வச்சே உங்க பேண்ட்ல மூச்சா போக வச்சு மானத்தை வாங்கிடுவாங்க
நிறைய பேர் என்னுடைய பதிவை வந்து படித்து விட்டு நேரமின்னையால் கருத்து சொல்லாமல் போய்விடுகிறார்கள். அதனால் அவர்கள் ( நான் அல்ல) மன வருத்த பட கூடாது என்பதற்காக அவர்களுக்கு பதிலாக நானே கருத்தை கூறி செல்கிறேன்.Madurai Tamil Guy சொன்னது : அட அட பொண்ணுகளை லூசாக்க இவ்வளவு வழிகளா?

மதுரை தமிழ்காரன் (ஆளு) சொன்னது : லூசுப் பெண்ணை காதலிச்சா லூசாகத்தான் நடிக்க வேண்டும் என்பதை அழகாக இந்த பதிவாளர் சொல்லியுள்ளார்.காதல் வசப்பட ரெடியான்ன லூசு பசங்களுக்காக இந்த பாடல் சமர்பணம். ஹீ ஹீ நம்மால முடிஞ்சது

லூசு பெண்ணே லூசு பெண்ணே லூசு பெண்ணே...
லூசு பைய்யன் உன்மேல தான் லூசா சுத்துரான
லூசு பெண்ணே லூசு பெண்ணே லூசு பெண்ணே...
லூசு பைய்யன் உன்மேல தான் லூசா சுத்துரான்

17 comments :

 1. அட காதல் வசப்படும் ஆண்களுக்கு இத்தனை ஐடியாக்கள் இருக்கா..;)சூப்பர்!

  படிக்க சுவாரஸியமா இருந்தது!

  ReplyDelete
 2. அவள் செல்ல சிணுங்கல்களுக்காக நீ கிண்டல் செய்வேண்டும் ......//

  எவ அவ்வ ?..

  //4. ஹுசைனம்மா ஏலே எவன்ல அவன் ரொம்ப பேசினா என் டிரெங்கு பெட்டியில போட்டு பூட்டி புடுவனாக்கும்.

  5. ஆமினா சின்ன நெல்லை பொண்ணுதான்... மக்கா மாட்டினேங்க ..தொலைஞ்சிங்க..//


  எங்க நெல்லை மண்ணை பற்றி என்ன நெனச்சீங்க.. தாமிரபரணி தண்ணியோட துணிவையும் சேர்த்து குடிச்சு வளர்ந்தோம்ல..

  நெல்லை பொண்ணுங்க இன்னும் நிறைய இருக்காங்க தமிழ் கை..

  ( Had a good laugh again )

  ReplyDelete
 3. எப்படியோ பதிவுலகத்துல பொண்ணுங்க தயவு வேணும் னு நல்லா புரிஞ்சிட்டீங்க.. மூளக்காரர் நீங்க..:)))

  வாழ்த்துகள்

  ReplyDelete
 4. நெல்லை மதுரை ஆண்கள் அருவாளோடும் கத்தியோடும் அலைந்தால் அதற்கு போட்டியாக இங்க வாழும் பெண்கள் நாக்கையே கத்தியாக உபயோகப்படுத்துபவர்கள். நான் சொல்லவது சரிதானே சாந்தி மேடம்

  ReplyDelete
 5. சாந்தி மேடம் பொண்ணுகள் எனக்கு கண்கள் போலத்தான் அந்த பெண்களில் அம்மா, மனைவி, எனது ஆசை மகள் மற்றும் நான் இங்கு குறிப்பிட்ட நல்ல பொண்ணுகள் இன்னும் மற்றும் பலர் அடங்குவர். நல்ல பொண்ணுங்களை மதிக்கவும் மற்ற பெண்களிடம் இருந்து விலகி நடக்கவும் தெரிந்தவன். ஆனால் எந்த பெண்ணையும் ஆணையும் குறை சொல்லாதவன் & எதையும் எதிர்பார்க்காதவன்

  ReplyDelete
 6. ப்ரியா உங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி . ஆண்கள் எவ்வளவு ஐடியாக்கள் வைத்திருந்தாலும் அப்படியே அவர்களை கவுத்துவிட பெண்களிடம் உள்ள ஐடியாவுக்கு எண்ணிக்கையே இல்லை எனலாம்

  ReplyDelete
 7. பெண்கள் நாக்கையே கத்தியாக உபயோகப்படுத்துபவர்கள்//

  :)

  சர்தான் ..

  மைதானம் , தனம் படம் பார்த்தா பெண்ணோட பலம் புரியும் , அறுவா , கத்தி ரத்தம் இல்லாம கூட ..:))))

  ReplyDelete
 8. ///எப்படியோ பதிவுலகத்துல பொண்ணுங்க தயவு வேணும் னு நல்லா புரிஞ்சிட்டீங்க.. மூளக்காரர் நீங்க..:)))///

  சாந்தி மேடம் நீங்க சொன்ன கருத்தில் ஒரு சின்ன திருத்தம் எனக்கு யாருடைய தயவும் எப்போதும் எங்கும் தேவையில்லை. அதை நான் எப்போதும் எதிர்பார்த்ததில்லை. அதனால் தான் பதிவுலகத்திலும் சரி நிஜ வாழ்க்கையிலும் சரி எந்த குழுவோடும் சேர்ந்து கும்மி அடிப்பது கிடையாது. எனக்கு ஒருவரை பிடித்து இருந்தால் அவர் நல்லவரோ அல்லது கெட்டவரோ நான் அவரோடு பழகுவேன் அடுதவங்க என்ன நினைப்பாங்க என்று நான் கவலைப்படுவதில்லை. நிஜ வாழ்க்கையில் என்னை சுற்றி உள்ளவர்கள் யாரும் என்னை எந்த குறையும் சொல்லதவாரு தான் நான் இன்னும் வாழ்கிறேன்

  ReplyDelete
 9. This comment has been removed by the author.

  ReplyDelete
 10. தமிழ் கை , உங்க பதிவுக்கேத்தாற்போல பதிலும் ஜாலியா கொடுத்தா இப்படியா சீரியஸா பதில் சொல்லி பயமுறுத்துவீங்க.. ?.. அவ்வ்வ்..

  :))

  ReplyDelete
 11. ஜூப்பரு ஐடியாக்கள் :-)))

  ReplyDelete
 12. வந்து வெளுத்து வாங்குறேன்!!!

  முழுசா படிச்சுட்டு அப்பாலிக்கா வரேன்......

  ReplyDelete
 13. பதிவும், பெண் பதிவர்கள் குறித்த கமெண்டும் சுவாரஸ்யம்.

  எனினும், //காதல் வசப்பட போகும் முன்பு கிழ்கண்ட பொண்ணுகளை தவிர்க்கவும்// இதைத் தவிர்த்து, வேற மாதிரி எழுதிருக்கலாம்னு தோணுது. எல்லாருமே கல்யாணமானவங்கங்கிறதுதானே தவிர்க்க முதல் காரணம்? கவலைப்படாதீங்க, நான் தவறா எடுத்துக்கலை. மனதில் பட்டதைச் சொல்கிறேன்.

  ஹேப்பி ஹாலிடேஸ்!!

  ReplyDelete
 14. ஹுசைனம்மா எல்லோரும் கல்யாணம் என்ற காரணத்தினால் அவர்களை யாரும் தவறான கண்ணோட்டத்தில் என் வலைத்தளம் மூலம் யாரும் அணுகிவிட கூடாது என்ற என் எண்ணத்தின் காரணமாக முன்னேச்சரிக்கையாக போட்டுள்ளேன். நீங்கள் அதை எப்படி மாற்றி போட வேண்டும் என்று நீங்கள் நீனைப்பதை உங்களுக்குரிய நகைச்சுவை உணர்வோடு எழுதி அனுப்பினால் நான் அதை மாற்றி போடுகிறேன். மனதில் பட்டதை சொன்னதற்கு மிகவும் நன்றி

  ReplyDelete
 15. ஆமினா அம்மா உங்க கணவர் அப்படி எல்லாம் பண்ணலேனு என்ற கோபத்தில் அவரை வெளுத்து வாங்காதிங்க எங்க அண்ணன் பாவம். அப்பிராணி அவரை மன்னிச்சு விட்டுங்க

  ReplyDelete
 16. அமைதிசாரல் நன்றி

  ReplyDelete
 17. //ஆமினா அம்மா உங்க கணவர் அப்படி எல்லாம் பண்ணலேனு//
  இது எங்க அம்மாக்கான பதிலா??? :))

  ReplyDelete

உங்க மனசுலபட்ட மாற்று கருத்துகளை தாராளமாக பகிரலாம். ஆனால் தேவையற்ற, வரம்புமீரிய, அநாகரிகமான, வார்த்தைகளாலும் பதிவிற்கு சம்பந்தமில்லாமல் கருத்துக்கள் சொல்லப்பட்டாலும் அது வெளியிடப் படமாட்டது. இந்த கமெண்ட்ஸ் காலத்தை திறந்து வைத்திருப்பதன் காரணம் பல்வேறு மக்களின் கருத்துக்களை அறிந்து கொள்ள வேண்டும் என்ற நோக்கத்தினால் மட்டுமே. சில நேரங்களில் நான் சொல்லும் கருத்துகள் தவறாக கூட இருக்கலாம் அதை தெரிந்து மாற்றிக் கொள்ளலாம். நான் மதங்களை அல்ல கடவுள் என்ற ஒரு சக்தி உண்டு என்பதை நம்புவன். அதனால் மதக் கருத்துகளுக்கு இங்கு இடமில்லை. மீண்டும் ஒரு முறை சொல்லிக் கொள்கிறேன். நான் அறிவு ஜீவி அல்ல ஒரு சாதாரணமான் மனிதன் தான்.

Download templates

www.gnanalaya-tamil.com

Gadgets By Spice Up Your Blog