கலைஞர் & ஜெயலலிதா இருவரையும் நாம் பாராட்டுவோமே!!!!!
எப்ப பார்த்தாலும் நாம் அடுத்தவன் பொண்டாடிதான் ரொம்ப சமர்த்து தன் பொண்டாட்டி ரொம்ப மக்கு என்று நினைப்பவர் நாம் அது போல குஜராத் முதலமைச்சர் மிக கெட்டிகாரர் ஆனால் நம் தமிழகத்தை ஆளும் முதல்மைச்சர்கள் சுயநலக்காரர்கள் நாட்டுக்கு ஏதும் செய்வதில்லை என்று குறை கூறாமல் அவர்கள் தமிழகத்துக்கு செய்த நல்ல காரியங்களை பாராட்டுவோமே.
ஜெயலலிதா & கலைஞர் இருவரும் கீரியும் பாம்பும் போல எல்லாவற்றிலும் எதிரி போல ஏறுக்குமாறாக செயல்பட்டாலும் ஒன்றில் மட்டும் மிக ஓற்றுமையாக சிந்தித்து செயல்பட்டு தமிழக வளர்ச்சிக்கு செயல் பட்டுள்ளார்கள் என்பதை நினைக்கும் போது மிக ஆச்சிரியமாக இருக்கிறது . அப்படி அவர்கள் என்ன செய்து இருக்கிறார்கள் என்று அறிய ஆவலா அப்படியென்றால் கிழே உள்ள செய்தியை படித்து பாருங்கள் அவர்கள் இருவரும் ஒன்றாக தமிழக வளர்ச்சிக்கு பாடுபட்டது மிக தெளிவாக விளங்கும்.
கடந்த நிதி ஆண்டில் (2011-12) டாஸ்மாக் மூலம் ரூ.18081 கோடி வருவாய் ஈட்டியுள்ளது தமிழக அரசு. இது கடந்த நிதி ஆண்டைவிட ரூ.3116 கோடி அதிகமாம். கடந்த இரண்டு ஆண்டுகளில் 20% வளர்ச்சியைக் கண்டுள்ளது அரசின் சாராய விற்பனை.
‘கள்ளச் சாராயத்தை’ ஒழித்ததன் மூலமாக தமிழக அரசின் ‘நல்ல சாராய’ விற்பனை 2003 ஆண்டிலிருந்து அதிகரித்தே வருகிறது. கலைஞரும் ஜெயலலிதாவும் கருத்து வேறுபாடு ஏதுமின்றி வளர்த்து வரக்கூடிய தமிழகத்தின் பிரதானமான ஒரே தொழில் சாராயத் தொழில்தான்..
என்ன மக்களே இப்ப உங்களுக்கு புரிஞ்சுதா அவர்கள் எப்படி தமிழக வளர்ச்சிக்கு பாடுபட்டு இருக்கிறார்கள் என்பது.
இந்த வளர்ச்சியால நாம் அடைந்த பலன்கள் மற்றும் அடையப் போகும் பலன்கள் :
நாம் நமது தமிழக வளர்ச்சிக்கு முழுமையாக மத்திய அரசை நம்பி இருக்காமல் நாம் சுயமாக வருவாயை அதிகரித்து நமக்கு ஏற்ற திட்டங்களை நிறைவேற்ற முடிகிறது.
இதில் வரும் வருவாயை வைத்து வீணாக கல்வி மற்றும் சமுக நலன்கள் போன்ற யாருக்கும் பயன்படாத திட்டங்களை நிறைவேற்றுவதற்கு பதில் மக்களுக்கு உபயோகப்படக் கூடிய பொருட்களை இலவசமாக தர முடிகிறது & முடியும்.
அடுத்தவதாக இந்தியாவின் மிகச் சிறந்த "குடி"மகன் களாக இருந்த நம் அண்டைய மாநிலமான கேரளாவை பின்னுக்கு தள்ளி நாம் இந்தியாவின் தலை சிறந்த குடிகாரர் என்ற பட்டத்தை தட்டி பறிக்கும் நிலமைக்கு வந்துள்ளோம்.
அடுத்தவதாக நம் மாநிலத்தில் வாழும் & தமிழக வளர்ச்சிக்கு ஒரு துணையாக இருக்கும் "குடி"மக்களுக்கு பாதுகாப்பு மற்றும் உதவிக்காக எதிர்காலத்தில் டாஸ்மாக் கடைகளுக்கு அருகில் இருக்கும் பள்ளி கல்லூரி மற்றும் கோயில்கள் வேறு இடங்களுக்கு மாற்றும் செய்யப்படும் என்று எதிர்பார்க்கபடுகிறது.
அடுத்தபடியாக மக்கள் உடல் நலத்திற்கு கேடு விளைவிக்கும் டீ மற்றும் காபி கடைகள் ஒழிக்கபட்டு அதற்கு பதிலாக மக்களுக்கு பயன்படும் ஒயின் ஷாப்புகள் திறக்கபடலாம் என்று எதிர்பார்க்க படுகிறது.
அதுமட்டுமல்லாமல் கோடை காலங்களில் மக்களிம் தாகம் தீர்க்க வைக்கப்படும் மோர்பந்தலுக்கு பதிலாக "பீர் பந்தல்" வைக்க அனைத்து கட்சிகளும் திட்டமிட்டு இருக்கின்றன.
போண்டியாகாத தொழிலுக்கெல்லாம் படிப்புகள் இருக்கும் போது கொடிகட்டிப் பறக்கும் சாராயத் தொழிலுக்கு மட்டும் படிப்பு இல்லாமல் இருப்பது நியாயமா?அதனால் வேலை வாய்ப்பை அள்ளித் தரும் சாராயப் பட்டப்படிப்பு தொடங்கப்படும் .அது முதல்வரின் கட்டுப்பாட்டுக்குள் இருக்கும்
பெரிய கம்பெனிகளிளெல்லாம் குடிக்காதவனைத்தான் தீண்டத்தகாதவனைப்போல பார்ப்பார்கள் அதுமட்டுமல்ல அவன் குடிகாரன் என்று ஒதுங்கிய காலம் சென்று இப்பொழுது அவன் 'குடிக்காதவன்' என்று சொல்லும் இழிநிலை ஏற்பட்டுவிடும்.
சாராயக்கடைகளில் அல்லது தொழிற்சாலைகளில் பணிபுரியும் ஆட்கள் மிக மிக கெளரவமான வேலைகளில் இருப்பதாக இந்த தமிழ் சமுதாயம் அங்கிகரித்து அதில் வேலை பார்க்கும் இளைஞர்களுக்கு பொண்ணை தர எல்லோரும் நான் நீ என்று போட்டி போடுவார்கள்
இப்படியெல்லாம் மாறப் போகும் தமிழகத்தின் வளர்ச்சிக்கு பாடுபட்ட நம் தலைவர்கள் ஜெயலலிதா கலைஞர் இருவரையும் நாம் கண்டிப்பாக பாராட்டிதான் ஆக வேண்டும். என்ன மக்களே நான் சொல்லவது சரியாதானே??
என்றும் அன்புடன்
உங்கள் அபிமானத்திற்குரிய "மதுரைத்தமிழன்"
romba study(panni)ya ezhuthiyirukkeenga.. paraattukkal....neradiyaa sonnaale namma makklukku puriyaathu....ithu nallaa velangidum...
ReplyDeleteஇம்புட்டு தூரம் விளக்கமா விலாவாரியா சொன்ன பிறகும் பாராட்டலை என்றால் தமிநாட்டின் 'குடி'மகன் என்று சொலிகொல்வதில் அர்த்தமே இல்லைங்.
ReplyDeleteகழைஞரையும், புலச்சி தலவி அல்ம்மாவையும் நாம்ம மலக்காம நெனவு வெழ்ச்சிலுந்து பாலாட்டணும்ல..! சுழ்ம்மாவா பின்ன...?
ReplyDeleteசமீபத்தில் ஒரு செய்தி: டாஸ்மாக் கடைகளில் சாராய விற்பனை குறைகிறது. இதைப் பார்த்தவுடன் தமிழக அரசுக்கு இது நடக்க சான்ஸ் இல்லியே என்று ஒரு கமிட்டியை அமைத்து ஏன் என்று காரணம் கண்டு பிடித்து [கள்ளச் சாராயம் புழக்கத்தில் வர ஆரம்பித்து விட்டதாம்,சாராய விற்பனை குறைந்தால் மக்கள் நல்வழிப் படுத்தப் படுகிறார்கள் என்ற எண்ணம் இவர்களுக்கு வரவில்லை] அதை நிவர்த்தி செய்தது மீண்டும் சாராய விற்ப்பனையை தூக்கி நிறுத்தியது இந்த மக்களுக்காக குடி மக்களால் தேர்ந்தெடுக்கப் பட்ட அரசு. என்ன கொடுமை சார் இது?
ReplyDeleteசிவப்பு லேபிளை விட பிளாக் லேபில் உசத்தி தெரியுமா:)
ReplyDeleteஎனக்குத் தெரிந்து இந்தியாவில் குடிகார மாநிலங்கள் கேரளம்,கோவா மட்டும்தான்.இரண்டையும் முந்திக்கொண்டோமென்றால் ஆச்சரியம்தான்.
ReplyDeleteதொழில்துறையிலும் தமிழகம் முன்னேறிய மாநிலம்தான்.எனவே குட்டுவதோடு கலைஞர் & ஜெயலலிதா இருவரையும் நாம் பாராட்டுவோமே!
எப்ப பார்த்தாலும் நாம் அடுத்தவன் பொண்டாடிதான் ரொம்ப சமர்த்து தன் பொண்டாட்டி ரொம்ப மக்கு என்று நினைப்பவர் நாம்
ReplyDelete>>
ஒரு சின்ன திருத்தம் நாம இல்ல நான்னு இருக்கனும் சகோ