Thursday, April 19, 2012


கொலைவெறி வெற்றி  Vs அக்னி-5  ஏவுகணை வெற்றி

அக்னி-5  ஏவுகணையின் வெற்றி ஒரு பெண்ணின் வெற்றி....
(Meet the woman behind Agni-V success )


இது மிகவும் மகிழ்ச்சி அளித்த செய்தி


செய்தி : கண்டம் விட்டு கண்டம் பாயும் இந்தியாவின் அதிநவீன அக்னி-5 ரக ஏவுகணை இன்று  காலை வெற்றிகரமாக விண்ணில்
ஒடிசா மாநிலத்தில் இருக்கும் வீலர் தீவிலிருந்து  ஏவப்பட்டது.  அணு ஆயுதத்தையும் ஏற்றி செல்லக்கூடிய இந்த ஏவுகணை, 5 ஆயிரம் கிலோ மீட்டர்  தூரத்தில் உள்ள இலக்கையும் துல்லியமாக தாக்கும் திறன் கொண்டது. இந்திய பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் வளர்ச்சி நிறுவனம் தயாரித்துள்ள இந்த ஏவுகணை,  ஒலியை விட 24 மடங்கு வேகத்திலும், பயணிகள் விமானத்தை விட 30 மடங்கு  வேகத்திலும் சென்று இலக்கைத் தாக்கக்கூடியது.

அமெரிக்கா, சீனா, ரஷ்யா ஆகிய  நாடுகளிடம் மட்டுமே உள்ள இத்தகைய  ஏவுகணை தற்போது இந்திய அரசாங்கத்திடமும் வந்துவிட்டது.இதன் மூலம்,  ஏவுகணைத் தொழில்நுட்பத்தில் முன்னேறிய நாடுகளின் பட்டியலில் இந்தியாவும் இடம்  பெற்றுள்ளது.
இந்த ஏவுகணை 5000 கி.மீ. தொலைவில் உள்ள இலக்கையும் தாக்கும் திறன் படைத்தது என்பதால் அக்னி-5யின் தொடு பரப்புக்குள் சீனா, கிழக்கு ஐரோப்பா, வடகிழக்கு  மற்றும் கிழக்கு ஆப்ரிக்கா, அந்தமான் நிகோபார் தீவுகளில் இருந்து என்றால் ஆஸ்திரேலியா உள்ளிட்ட நாடுகளையும் எட்டிவிடும்.

நமக்கு மகிழ்ச்சிகரமான செய்தி இது ஆனால் இந்தியாவை எதிரிகளாக நினைக்கும் நாடுகளுகளின் ராணுவத்துக்கு சவால் விடும் செய்தியாக ஆகிவிட்டது, அதனால்தான் சீனா வெளியிட்ட செய்தியில் இந்தியா எங்களது எதிரி நாடு அல்ல என்று கூறியுள்ளது.

இன்று நான் படித்த ஒரு மகிழ்ச்சியான செய்தி இது. இந்திய விஞ்ஞானிக்களுக்கு எனது மனமார்ந்த வாழ்த்துக்கள்.

India DRDO Agni-V ICBM



இப்போது நான் எனது பதிவின் தலைப்புக்கு வருகிறேன்.

கொலைவெறி பாடலை எழுதி பாடிய தனுஸுக்கு பாராட்டி விருந்து அளித்த பாரத பிரதமர். இந்த அக்னி - 5 வெற்றிக்கு பின்னால் இருக்கும் விஞ்ஞானிகளுக்கு பாராட்டி விருந்து கொடுப்பாரா? அட்லீஸ்ட் இந்த அக்னியின் வெற்றிக்கு உழைத்த அதன் டைரக்டர் டெஸி தாமஸையாவது கூப்பிட்டு விருந்து கொடுப்பாரா

பொருத்து இருந்து பார்ப்போமய்யா?

என்றும் அன்புடன்,
உங்கள் "மதுரைத்தமிழன்"

5 comments:

  1. //தனுஸுக்கு பாராட்டி விருந்து அளித்த பாரத பிரதமர்.//

    நம்ம சிங்கு சாருக்கு அநத அளவுக்கு இன்னமும் முத்தல.

    ஜப்பானில் கொலவெறி கண்டபடி பாப்புலராகி நைட்கிளப்புகளில் போடப்படும் அளவுக்கு ஆகிவிட்டதால், ஜப்பான் பிரமருக்கு அளித்த விருந்தில் கலந்து கொள்ள தனுசுக்கு அழைப்பு அனுப்பட்டது. இவ்வாறு வெளிநாட்டு தலைவனுகளை குஷிபடுத்த உள்ளூர் கூத்தாடிகளை அழைப்பது வழக்கமே. உதாரணமாக ஒபாமா வந்த போது ஷபானா ஆஸ்மியும் முசாரப் வந்த போது ராணி முகர்ஜியும் அழைக்கப்பட்டனர்

    ReplyDelete
  2. அக்னி வெற்றிக்குப் பின்னாலிருக்கும் பெண்மணியைப் பற்றி உங்கள மூலம் தெரிந்து கொண்டதில் மிக்க மகிழ்ச்சி. கொலவெறி பாடல் அதன் தகுதி(?)க்கு மீறிய புகழடைந்து விட்டது. உண்மையில் எனக்கு அந்தப் பாடல் பிடிக்கவில்லை. நம்ம அரசியல்வாதிகளுக்கு நீங்க சொன்ன மாதிரி நல்ல விஷயங்களைப் பண்ண ஏதுங்க நேரம்? மனம்?

    ReplyDelete
  3. கொலைவெறி பாடலை எழுதி பாடிய தனுஸுக்கு பாராட்டி விருந்து அளித்த பாரத பிரதமர். இந்த அக்னி - 5 வெற்றிக்கு பின்னால் இருக்கும் விஞ்ஞானிகளுக்கு பாராட்டி விருந்து கொடுப்பாரா?// பொறுத்திருந்து பார்ப்போம் . நல்ல பதிவு .

    ReplyDelete
  4. என்னிக்கு நம்ம ஊருல நல்லவனவற்றிற்கு மதிப்பு குடுத்திருக்கிறோம் சகோ.

    ReplyDelete
  5. தங்கள் கருத்தும் ஆதங்கமும் சரியே
    மனம் கவர்ந்த அருமையான பதிவு
    பகிர்வுக்கு வாழ்த்துக்கள்

    ReplyDelete

நான் அறிவு ஜீவி அல்ல ஒரு சாதாரணமான் மனிதன் தான்.இங்கு நான் பதியும் பதிவுகளில் உள்ள கருத்துகள் "மிகவும் சரி"யென்று சொல்லமாட்டேன் அது அன்றைய மனநிலையில் என் மனதில் எழும் கருத்துகளே...அதனால் உங்களது மனசுலபட்ட மாற்று கருத்துகளை தாராளமாக பகிரலாம். ஆனால் தேவையற்ற, வரம்புமீரிய, அநாகரிகமான வார்த்தைகளாலும் பதிவிற்கு சம்பந்தமில்லாமல் கருத்துக்கள் சொல்லப்பட்டால் எந்த வித பதில் விளக்கமின்றி அந்த கருத்து டெலீட் செய்யப்படும்.