Thursday, April 12, 2012



கிருஷ்ண ஸ்வீட்ஸ் மைசூர் பாகு யாரும் எளிதாக செய்யலாம் (ஆண்களும்தான்)

மைசூர் பாகு செய்ய தேவையான பொருட்கள் :



2  கப் கடலைமாவு
2  கப் ஜீனி(சுகர்)
1  கப் நெய்
கப் ஆலிவ் ஆயில்   ( உங்களுக்கு பிடித்தமான சமையல் ஆயிலை பயன்படுத்தலாம் அதற்காக வேப்ப எண்ணெய் பயன்படுத்தலாமா என்று கேட்காதீர்கள்)


செய்யும்முறை :
கடலை மாவில் எண்ணெய் விட்டு கரைத்து வைக்கவும். இப்படி செய்வதால் கட்டிகள் தோன்றாது.(எண்ணெய்யில் மாவைகரைக்கும் முறை நீங்கள் இதுவரை கேள்விபடாததுதான் அதனால் இந்த முறையில் செய்வது தவறோ என்று நினைக்க வேண்டாம்)
அதன் பின் பாத்திரத்தில் ஜீனியை போட்டு அதில் ஒரு  கப் தண்ணீர் சேர்த்து நன்கு கொதிக்கவிடவும். (நாண்ஸ்டிக் பாத்திரம் இருந்தால்  செய்வதற்கு எளிதாக இருக்கும்)
ஜீனி ஒரு கம்பிப்பாகு பதம் வந்ததும் கரைத்து வைத்த மாவை அதில் சேர்த்து நன்கு கிளறவும்அதன் பின் சிறிது சிறிதாக  நெய் சேர்த்து கிளறவும் தேவைப்பட்டால் எண்ணெய்யும் சேர்த்து கொள்ளலாம்.கொஞ்ச  நேரத்தில் எண்ணெய் கொப்பளிக்க  ஆரம்பிக்கும். அதன் பின் எண்ணெய் மற்றும் நெய் சேர்ப்பதை நிறுத்தி விடவும்.அதன் பின் கிளறிக் கொண்டிருக்கும் போது அது பொற பொறவென பொங்கி பொங்கி  வரும் போது அடுப்பை அணைத்து விடவும்.உடனே அதை நெய்யோ அல்லது எண்ணையோ தடவிய அகலமான தட்டில் அதை மாற்றவும். சிறிது சூடு ஆறிய பின் மெல்லிய ஜீனியை அதன் மேல் தூவி   நீண்ட சதுரவடிவில் கட் செய்யவும். இப்போ கிருஷ்ணா ஸ்வீட்ஸ் மைசூர் பாகு ரெடி.
கல்யாணம் ஆன ஆண்களே இதை உங்கள் மனைவிக்கும் ,கல்யாணம் ஆகாத பேச்சுலர்களாக இருக்கும் ஆண்கள் உங்கள் காதலிக்கும் செய்து கொடுத்து அசத்துங்கள். யாரும்மா அது அம்மாவுக்கு இதை ஏன் செஞ்சு கொடுக்க கூடாது என்று சவுண்டு உடுறது. நான் எதுக்கு அம்மாமார்களுக்கு இதை ரெகமண்ட் செய்யவில்லை என்றால் அவர்களுக்கு இந்த வயதில் கண்டிப்பாக உடம்பில் சுகர் இருக்கும் என்ற காரணத்தினால்தான்.
இதை ஆலிவ் ஆயிலில் செய்வதால் நெய்யைபோல உடல் நலத்திற்கு கேடு இல்லை மேலும் நமக்கு தேவையான அளவு நெய்யை சேர்த்தால் மட்டும் போதும். நான் ஒரு கப் நெய் சேர்க்கமாட்டேன் வாசனைக்காக அரை கப் மட்டும் சேர்ப்பேன் அது போல சுகரையும் நமக்கு தேவையான அளவு சேர்த்து கொள்ளலாம்.
இது கிருஷ்ணா ஸ்வீட்ஸ் மைசூர்பாக்கை விட அருமையாகவும் ஹெல்தி வெர்சனாகவும் இருக்கும் என்பதற்கு 100% கேரண்டி. இதை நான் தைரியமாக சொல்வதற்கு காரணம் நான் இதை அநேக முறை செய்து எனது நண்பர்கள் மத்தியில் இந்த ஸ்வீட் பிரபலம் என்பதுதான்.

டிஸ்கி : எனது சமையல் அனுபவம் 14 வயதிலேயே துவங்கிவிட்டதால் சமையலும் எனக்கு அருமையாக வரும்.இங்கு வசிக்கும் எனது நண்பர்கள் எனது மனைவியின் நண்பர்கள், உறவினர்கள் எனது சமையலை பாராட்டினாலும் எனது சமையலையும் ஒருவர் குறை கூறுகிறார் என்றால் அது எனது மனைவியாகத்தான் இருக்க முடியும் . உணவு டேஸ்டாக இல்லை என்ற காரணமில்லை நல்ல டேஸ்டாக இருக்கிறது அதனால் சற்று அதிகம் சாப்பிட்டுவிட்டு உடல் எடையை குறைக்க முடியவில்லை என்பதால்தான்

எங்களுக்கும் சமைத்து தாருங்கள் என்று நீங்கள் கேட்பது காதில் விழுகிறது. மக்காஸ் உங்களுக்கு இல்லாமலா கண்டிப்பாக வீக்கென்ட்டில் எனது வீட்டிற்கு வாருங்கள் "சரக்கோடு" நல்ல விருந்தும் உங்களுக்கு காத்து இருக்கிறது

என் வீட்டில் விருந்தினர்களுக்காக காத்து இருக்கும் சரக்குகளின் ஒரு பகுதி

நன்றி.
என்றும் அன்புடன்
மதுரைத்தமிழன்


21 comments:

  1. கிட்டத்தட்ட உங்க பேர்ல ஒரு டூப்ளிகேட் சுத்திகிட்டு இருக்கிறதால நேரத்தை வீணாக்க வேண்டாமே என்று தவற விட்டு விட்டேன் உங்கள் பதிவுகளை.நேரா மதுரை வீரன் மாதிரி மதுரை தமிழன் என்றே அறிமுகப்படுத்தியிருக்கலாம் உங்களை.

    இப்ப பதிவுக்கு....ஒவ்வொரு மைசூர்பாகும் ஒவ்வொரு தரத்தில் இருப்பதன் காரணம் என்ன?கலவையா,கிண்டுற முறையா?

    ReplyDelete
  2. எனது சமையலையும் ஒருவர் குறை கூறுகிறார் என்றால் அது எனது மனைவியாகத்தான் இருக்க முடியும் . உணவு டேஸ்டாக இல்லை என்ற காரணமில்லை நல்ல டேஸ்டாக இருக்கிறது அதனால் சற்று அதிகம் சாப்பிட்டுவிட்டு உடல் எடையை குறைக்க முடியவில்லை என்பதால்தான்


    கீழே விழுந்தாலும் மீசையில் ஒட்டியது மைசூர்பா இனிய துக்ள்கள் தானே !!

    ReplyDelete
  3. சமையல் கலையில் வல்லவர்களை நளன் என்றும் பீமன் என்றும் ‌சொல்வார்கள். மதுரைத் தமிழனும் அந்த ரகமா..? எனக்கும் சமையலறைக்கும் ரொம்ப தூ...ரம். அதனால வீக்கெண்டுக்கு உங்க வூட்டுக்கு வந்துடறேன். (முடிஞ்சா... ஹும்!)

    ReplyDelete
  4. எனது வீட்டிற்கு வாருங்கள் "சரக்கோடு" நல்ல விருந்தும் உங்களுக்கு காத்து இருக்கிறது.
    >>>>
    நல்ல பிராண்ட் சரக்குதானே?! ஏன்னா மட்ட சரக்குன்னா எனக்கு கொஞ்சம் அலர்ஜி

    ReplyDelete
  5. நம்ம பக்கமும் மைசூர் பாகு இருக்கே வாங்க.

    ReplyDelete
  6. நிம்பள்கி மைசூர் பாகு செய்ய கூறிய வழி முறை இலகுவாக இருக்கிறது ஆனால், இதை விட இலகுவாக தயிர் வடை செய்யும் முறையை நம்பள்கி எழுதியிருக்கிறான். அப்படி மனைவி செய்தால், உங்கள் சமையைலை குறை கூறும் மனைவி உங்களை நிச்சயம் பாராட்டுவார்கள் அந்த குறையும் போய்விடும்!

    ReplyDelete
  7. //கணேஷ் said...
    சமையல் கலையில் வல்லவர்களை நளன் என்றும் பீமன் என்றும் ‌சொல்வார்கள்//

    நளனுக்கு சமைக்க மட்டும்தான் தெரியும்.பீமனுக்கு சாப்பிட மட்டும்தான் தெரியும்.யாரை சமையல் கலையில் வல்லவர் என்கிறீர்கள்?

    ReplyDelete
  8. எனது பின்னூட்டத்தில் ஓர் தவறு; ஆதலால், இரு மனைவிகளில், முதல் மனைவியை அல்லேக்கா தூக்கிடுங்க!!

    ReplyDelete
  9. சரக்க ரொம்ம நாள் காக்க வைக்காதிங்க...கூரியர்ல நம்ம அட்ரஸ்க்கு அனுப்பிவைங்க...நாங்க மைசூர்பா செஞ்சு உங்களுக்கு அனுப்புகிறோம்...!

    ReplyDelete
  10. டிப்ஸ் ஓகே மசூர் பாகு பாத்திரத்தை விட்டு வருமா ?.

    ReplyDelete
  11. @ ராஜ நடராஜன் முதலில் உங்கள் வருகைக்கும் கருத்துக்கும் எனது மனமார்ந்த நன்றிகள்

    போலிகளை கண்டு ஏமாற வேண்டாம் முடிந்தால் ஃப்லோவராக சேர்ந்துவிடுங்கள்

    //ஒவ்வொரு மைசூர்பாகும் ஒவ்வொரு தரத்தில் இருப்பதன் காரணம் என்ன?கலவையா,கிண்டுற முறையா?//

    கலவைதான்...சரியான விகிதத்தில் கலந்தால் யாரு செய்தாலும் அருமையாக வரும் அடுத்து ஆர்வம் இருக்க வேண்டும்

    ReplyDelete
  12. @ இராஜராஜேஸ்வரி முதலில் உங்கள் வருகைக்கும் கருத்துக்கும் எனது மனமார்ந்த நன்றிகள்

    ReplyDelete
  13. @ கணேஷ் முதலில் உங்கள் வருகைக்கும் கருத்துக்கும் எனது மனமார்ந்த நன்றிகள்

    . //வீக்கெண்டுக்கு உங்க வூட்டுக்கு வந்துடறேன். (முடிஞ்சா... ஹும்!)///

    முடியும் என்று நினையுங்கள் கண்டிப்பாக ஒரு நாள் வருவீர்கள். அழகாக எழுதும் உங்களுக்கு நிச்சயம் ஒரு நாள் மேலைநாடுகளில் இருந்து அவார்டு கிடைக்கும் அதை வாங்க வரும் போது கண்டிப்பாக வாருங்கள்

    ReplyDelete
  14. @ராஜி
    //எனது வீட்டிற்கு வாருங்கள் "சரக்கோடு" நல்ல விருந்தும் உங்களுக்கு காத்து இருக்கிறது.
    >>>>
    நல்ல பிராண்ட் சரக்குதானே?! ஏன்னா மட்ட சரக்குன்னா எனக்கு கொஞ்சம் அலர்ஜி///

    சரக்குன்னு நாலு வார்த்தை டைப் பண்ணிய உடனே மயங்கிவிடுகிற ஆள் நீங்க சரக்கை பற்றி கிண்டல் பண்ணுகிறீர்களா?
    உங்களுக்காகவே சரக்கு படம் போட்டு இருக்கிறேன்

    ReplyDelete
  15. @ லக்ஷ்மி அம்மா முதலில் உங்கள் வருகைக்கும் கருத்துக்கும் எனது மனமார்ந்த நன்றிகள்..

    //நம்ம பக்கமும் மைசூர் பாகு இருக்கே வாங்க//
    கண்டிப்பாக வருகிறேன்

    ஒகே வந்து பார்த்தா எனக்கு ஒரு பார்சல் அனுப்புவீர்களா?.

    ReplyDelete
  16. @நம்பள்கி முதலில் உங்கள் வருகைக்கும் கருத்துக்கும் எனது மனமார்ந்த நன்றிகள்...

    நிம்பள்கி உங்கள் வலைப்பதிவிற்கு வந்து படித்தேன் மிக நன்றாக இருக்கிறது அந்த பதிவு

    ReplyDelete
  17. @ ராஜ நடராஜன் முதலில் உங்கள் வருகைக்கும் கருத்துக்கும் எனது மனமார்ந்த நன்றிகள்

    ReplyDelete
  18. @ நம்பள்கி!

    //எனது பின்னூட்டத்தில் ஓர் தவறு; ஆதலால், இரு மனைவிகளில், முதல் மனைவியை அல்லேக்கா தூக்கிடுங்க!!//

    என்னது மனைவியை தூக்கவா....சார் நான் என்ன தமிழ்பட ஹீரோன்னு உங்களுக்கு நினைப்பா அப்படியே தூக்குறதுக்கு

    ReplyDelete
  19. @வீடு சுரேஸ்குமார் உங்கள் வருகைக்கும் கருத்துக்கும் எனது மனமார்ந்த நன்றிகள்

    //சரக்க ரொம்ம நாள் காக்க வைக்காதிங்க...கூரியர்ல நம்ம அட்ரஸ்க்கு அனுப்பிவைங்க...நாங்க மைசூர்பா செஞ்சு உங்களுக்கு அனுப்புகிறோம்..////

    சார் நான் சரக்கை அனுப்பி வைச்சுட்டேன்...கிடைத்தா.....மறக்காமல் மைசூர்பா அனுப்பி வையுங்க...

    ReplyDelete
  20. @ சசிகலா உங்கள் வருகைக்கும் கருத்துக்கும் எனது மனமார்ந்த நன்றிகள்


    //டிப்ஸ் ஓகே மசூர் பாகு பாத்திரத்தை விட்டு வருமா ?.///

    செஞ்சு பாத்துட்டு சொல்லுங்க

    ReplyDelete
  21. நான் கொஞ்சம் லேட்டாத்தான் இந்த பதிவு பதிச்சேன். உடனே.. தொடர்பவர் ஆயிட்டேன்.

    மதுரை குசும்போட எழுதறிங்க வாழ்த்துக்கள்.

    ReplyDelete

நான் அறிவு ஜீவி அல்ல ஒரு சாதாரணமான் மனிதன் தான்.இங்கு நான் பதியும் பதிவுகளில் உள்ள கருத்துகள் "மிகவும் சரி"யென்று சொல்லமாட்டேன் அது அன்றைய மனநிலையில் என் மனதில் எழும் கருத்துகளே...அதனால் உங்களது மனசுலபட்ட மாற்று கருத்துகளை தாராளமாக பகிரலாம். ஆனால் தேவையற்ற, வரம்புமீரிய, அநாகரிகமான வார்த்தைகளாலும் பதிவிற்கு சம்பந்தமில்லாமல் கருத்துக்கள் சொல்லப்பட்டால் எந்த வித பதில் விளக்கமின்றி அந்த கருத்து டெலீட் செய்யப்படும்.