உங்களின் பொழுது போக்கிற்கு உத்தரவாதம் தரும் ஒரு வலைத்தளம் அவர்கள்...உண்மைகள்.

Thursday, December 2, 2010

மௌனமாக ஒரு அலறல்..

அம்மா.... நான் பார்ட்டிக்கு போயிருந்தேன்...

அம்மா நீங்க சொன்னதை மறக்காமல் ஞாபகம் வைத்திருந்தேன்.

அம்மா நீங்க சொன்னீங்க குடிக்க கூடாதுனு

அம்மா நான் கோக் மட்டும்தான் குடித்தேன்

அம்மா என் உள்ளத்திற்குள் ஒரு கர்வம் & பெருமை

அம்மா நீங்க சொன்னதை அப்படியே கடைபிடிகின்றேன் என்று

அம்மா எல்லோரும் குடி குடி என்று சொன்னார்கள்


அம்மா இருந்தாலும் நான் குடித்துவிட்டு கார் ஒட்டவில்லை


அம்மா நான் பார்டியில் சரியாகத்தான் நடந்தேன்

அம்மா உங்கள் வழிகாட்டுதல் எப்போதுமே சரியாகத்தான் இருக்கும்

அம்மா ஒரு வழியாக பார்ட்டி முடிந்து எல்லோரும் வெளியேறத் தொடங்கினார்கள்.

அம்மா நானும் என் காரில் வந்து உட்கார்ந்தேன் எனக்கு தெரியும் நான் நல்ல படியாக வீடு வந்து சேர்வேன் என்று

அம்மா நீங்க என்னை ரொம்ப பொறுப்பாகவும் இனிமையாகவும் வளர்த்திர்கள்.



அம்மா நான் பார்க்கிங் லாட்டில் இருந்து மெதுவாக ரோட்டிற்குள் மெதுவாக வந்தேன்

அம்மா அப்போது இன்னொரு காரில் வந்தவன் என்னை பார்க்வில்லை

அம்மா அந்த கார் என் காரில் ஒரு பாறாங்கல்லை போல வந்து மோதியதும்மா

அம்மா என்ன நடந்தது என்று தெரியவில்லை நான் தரையில் கிடந்தேன் அம்மா

அம்மா அப்போது போலிஸ்காரர் பேசியது என் காதில் விழுந்தது அம்மா

அம்மா அவர் யாரிடமோ சொன்னார் அந்த வாலிபன் நல்ல குடித்துவிட்டு கார் ஒட்டி வந்து மோதியுள்ளான் என்று



அம்மா குடித்தது அவன் ஆனால் எனக்கு ஏன் அம்மா இந்த தண்டனை?


அம்மா உன் ஆசை மகள் நான் தரையில் கிடக்கின்றேன்.
நீ சிக்கிரம் இங்கே வாம்மா

அம்மா எப்படிம்மா இது நடந்தது என் வாழ்க்கை பார்ட்டியில் உள்ள ஒரு பலூனை போல ஒரு நொடியில் உடைந்துவிட்டதேயம்மா

அம்மா இங்கே எங்க பார்த்தாலும் ஒரே ரத்தமயம்தானம்மா எல்லாம் இரத்தமும் உன் செல்லப் பிள்ளையினுடையது தானம்மா

ஆம்புலன்சில் வந்தவர்கள் பேசிக் கொள்கிறார்கள் நான் சிக்கிரம் இறந்து விடுவேன் என்று



அம்மா நான் உன்னிடம் ஓன்று மீண்டும் சொல்ல விரும்புகிறேன் சத்தியாமா நான் குடிக்கவில்லை

அம்மா மற்றவர்கள்தான் குடித்தார்கள் அந்த பார்ட்டியில்

அம்மா ஓன்று மட்டும் வித்தியாசம் குடித்து அவர்கள் ஆனால் இறப்பது நான் அம்மா



அம்மா இவர்கள் ஏனம்மா குடிக்கிறார்கள் இது அவர்கள் வாழ்க்கையை மட்டுமில்லாமல்

மற்றவர்கள் வாழ்க்கையயும் அழித்துவிடுமம்மா

அம்மா ரொம்ப வலிக்குதம்மா சில நொடியில் கத்தியை எடுத்து மெதுவாக அறுப்பது போலவும் சில நொடியில் பாறாங்கல்லை மேலே தூக்கிபோட்டது போலவும் வலிக்குதம்மா...

ஆனால் குடித்து விட்டு என் மேல் மோதியவனோக்கோ சிறு அடி கூட இல்லையம்மா.அவன் வைத்த கண் மாறாமல் என்னை பார்த்து கொண்டிருக்கிறான் அம்மா.



அம்மா இது நியாமில்லை அம்மா நியாமில்லை.......



அம்மா தம்பிய அழ வேண்டாம் என்று சொல்லும்மா

அம்மா என் செல்ல அப்பாவை தைரியாமாக இருக்க சொல்லம்மா

அம்மா நீதான் அவரை பார்த்து கொள்ள வேண்டும்





என் சாமாதியில் "டாடியின் பெண் இங்கே உறங்குகிறாள் "என்று போடும்மா

அம்மா உன்னைப் போல யாரவது அவனுக்கு எடுத்து சொல்லி வளரத்திருந்தால்

இப்போது நானும் உயிரோட இருந்திருப்பேன் அம்மா.

அம்மா எனக்கு இப்போ பயமா இருக்கும்மா. என்னால முச்சுவிடமுடியலையம்மா

அம்மா எனக்காக அழாதேம்மா உனக்கு நான் எப்போது தேவையோ அப்போது உன் அருகில் இருப்பேனம்மா?

அம்மா நான் இறக்கும் முன் உன்னிடம் கடைசியாக ஒரு கேள்வியம்மா....

நான் குடிச்சிட்டு கார் ஓட்டவில்லை ஆனா நான் ஏனம்மா இப்போ சாகனும்?

-----

இன்றைய இளைஞர்கள் நல்லிரவுகளில் அளவுக்கு அதிகமாக குடித்து விட்டு அவர்களே காரை ஓட்டி சென்று விபத்திற்கு உள்ளாவதை நாம் தினசரிகளீல் படிக்கிறோம். அந்தமாதிரியுள்ள இளைஞர்கள் இளம் சகோதரிகள் குடிப்பதற்கு முன்னால் ஒரு கணம் சிந்தித்து பாருங்கள். நான் உங்களை குடிக்க வேண்டாம் என்று சொல்லவில்லை ஆனால் அதிகமாக குடித்து விட்டு விடிகாலையில் கார்களை ஒட்டி செல்ல வேண்டாம் என்றுதான் கேட்டுக் கொள்கிறேன். உங்களின் லிமிட் என்னவென்று தெரிந்து விட்டு அந்த அளவு குடியுங்கள் நண்பர்கள் சொல்லுவதற்க்காக அதிக அளவு குடிக்காதிர்கள்.

இழப்பு என்பது இழந்தவர்களூக்குதான் புரியும். நீங்கள் இறப்பதினால் உங்களுக்கு பெரிய இழப்ப ஏதுமில்லை வாழ வேண்டிய ஆண்டுகளைதான் இழக்கிறீர்கள். ஆனால் உங்களை சுற்றியுள்ளவர்களுக்கு உங்களின் இழப்பு ஒரு பெரிய இழப்பு.உங்களால் அடைந்த சந்தோஷங்களையும் அவர்கள் இழக்கிறார்கள்

ஹலோ ...ஹலோ..உங்களைத்தாங்க..என்னங்க இது வந்தீங்க படிச்சீங்க போறீங்களே ...கொஞ்சம் உங்க மனசுலப்பட்ட கருத்தைதான் சொல்லிட்டு போங்களேன்





அன்புடன்
மதுரைத்தமிழன்






8 comments :

  1. :(

    சோகம்தான்.
    மத்தவங்களுக்காகவும் சில பழ்க்கங்களை விடணும்தான்.

    ReplyDelete
  2. படிச்சுட்டு ரொம்பவே கஷ்டமா இருந்தது...உங்கள் எழுத்து நடை மூலம் அழுகையையும் வரவச்சுட்டிங்க:((.லிமிட் ஆ குடியோ,லிமிட் இல்லாத குடியோ...அந்த கருமமே எதுக்கு தொடணும்...)

    ReplyDelete
  3. அம்மாக்கு பொண்ணு தன் சோகத்தை விவரிக்கிற மாதிரி இருந்த presentation தான் இதுல ரொம்பவே என்னை கவர்ந்த விஷயம்...நல்லா இருக்குங்க...

    ReplyDelete
  4. Hello Friend,
    I read almost all your articles in your blog.
    Please remove those scary pics.
    Because we come to read at all times and in this world which is a mixture of all, I request you to keep the article as is... but please remove those scary pics...and tearful pics.
    I know a picture speaks thounsands words. But, remove those scary pics.
    And once again... I am a fan of all your articles..as you cover almost all parts of life

    Thanks,
    Your Friend

    ReplyDelete
  5. seyyadha thavarukku dhandanai anubhavikkum ovvoru aanmaavum kadharum kadharal ippadi thaanae irukkum,ethanai kanavugal ,ethanai edhir paarpugal,ethanai kadamaigal sumandhu irundhu iruppangalo . indha news eh common places like bus stand,hospitals,hotels pondra idangalil notice maadhiri otti vaikalam....manasu valikkudhu

    ReplyDelete
  6. உணர்வுகளின் ஆழத்தைத் தொட்ட பதிவு. இதை நான் இப்போதுதான் படிக்கிறேன். கண்ணீரை வரவழைத்தீர்கள். குடிப்பவர்களை வரையறை அறிந்து குடிக்க வேண்டும் என்று அறிவுறுத்தி இருக்கிறீர்கள். குடிப்பழக்கம் என்பது அதற்கு அடிமைப்படும் எண்ணத்தை (Addiction) விதைக்கக்கூடியது. அதை உபயோகிப்பவர்கள் உறுதியான மனநிலை உள்ளவர்களாக இருந்தால் மட்டுமே அடிமைப்படக்கூடிய வாய்ப்பினைத் தவிற்க இயலும். அப்படிப்பட்ட உறுதி உள்ளவர்கள் குடிப்பதையே தவிர்த்து விடுவார்கள். அப்படிப்பட்டவர்களுக்கு நமது அறிவுரை தேவைப்படாது. விளையாட்டாகக் குடிக்க ஆரம்பிப்பவர்களே ஒரு தருணத்தில் அதற்கு அடிமைப்பட்டு விடுகிறார்கள். எனவே நாம் கூடுமானவரை குடிப்பது ஒரு விளையாட்டு (ஜாலி) என்கின்ற எண்ணத்தை விதைக்காமல் இருப்பது நல்லது. எனவே தான் குடிப்பது கேடு என்கின்ற பரப்புரையை செய்கிறோம். மதுரைத்தமிழனுக்கு வரைமுறை அறிந்து மது உபயோகிக்கும் திறமை இருக்கலாம். ஆனால் உங்கள் எழுத்துக்களில் அவ்வப்போது குடிப்பதில் உள்ள “ஜாலி” பற்றி ஒரு தொனி இருக்கும். தமாஷாகவே இருந்தாலும் வீக்கான மனம் உள்ளவர்களை அது தவறாகவே வழிநடத்தும் என்பது என்னுடைய கருத்து. கோபித்துக்கொள்ளாதீர்கள். நாம் யாருக்கும் இடறலாக இருந்துவிடக்கூடாது. பெரும்பாலோனோர் இந்த விஷயத்தில் பலவீனமானவர்களாகவே இருக்கிறார்கள் என்பது என்னுடைய பார்வை. இந்த வகையில் நான் ஒருமுறை உங்கள் பதிவிற்குப் பின்னுட்டம் இட்டதை நீங்கள் தவறாகப் புரிந்துகொண்டு உங்களை நான் தவறாகப்புரிந்து இருக்கிறேன் என பதில் கொடுத்தீர்கள். நானும் என்னுடைய எண்ணத்தினை சரிவர வெளிப்படுத்தவில்லையோ என்னும் ஐயத்தில் அதை அப்படியே விட்டுவிட்டேன். மற்றபடி நான் உங்கள் எழுத்தின் ரசிகன். என்னைப் போன்றே பல ரசிகர்கள் உங்கள் எழுத்திற்கு இருக்கிறார்கள் என்பது உங்கள் தளத்திற்கு வந்து பார்த்தாலே தெரியும். எனவே உங்கள் எழுத்து பலவீனமான மனம் உள்ள இளைஞர்களுக்கு ஒரு இடறலாக அமைந்து விடக்கூடாது என்பதே என் கவலை. அதனால் குடியின் ஜாலி பற்றி குறிப்பிடுவதைத் தவிர்க்கவும். உங்களுக்கு ஆலோசனை கூறும் தகுதி இல்லாவிடினும் வயது இருக்கிறது என்கின்ற நம்பிக்கையில் இதனைச் சொல்லுகிறேன். தவறு எனில் கண்டுகொள்ள வேண்டாம்.

    ReplyDelete
  7. குடிக்கு எதிரான பதிவு! கலங்க வைத்தது! ஒரு சிலரை திருந்தவும் வைக்கும்! இத்தனை நாள் இதை படிக்காமல் விட்டதை நினைத்து வருந்துகிறேன்! அருமையான பதிவு!

    ReplyDelete

உங்க மனசுலபட்ட மாற்று கருத்துகளை தாராளமாக பகிரலாம். ஆனால் தேவையற்ற, வரம்புமீரிய, அநாகரிகமான, வார்த்தைகளாலும் பதிவிற்கு சம்பந்தமில்லாமல் கருத்துக்கள் சொல்லப்பட்டாலும் அது வெளியிடப் படமாட்டது. இந்த கமெண்ட்ஸ் காலத்தை திறந்து வைத்திருப்பதன் காரணம் பல்வேறு மக்களின் கருத்துக்களை அறிந்து கொள்ள வேண்டும் என்ற நோக்கத்தினால் மட்டுமே. சில நேரங்களில் நான் சொல்லும் கருத்துகள் தவறாக கூட இருக்கலாம் அதை தெரிந்து மாற்றிக் கொள்ளலாம். நான் மதங்களை அல்ல கடவுள் என்ற ஒரு சக்தி உண்டு என்பதை நம்புவன். அதனால் மதக் கருத்துகளுக்கு இங்கு இடமில்லை. மீண்டும் ஒரு முறை சொல்லிக் கொள்கிறேன். நான் அறிவு ஜீவி அல்ல ஒரு சாதாரணமான் மனிதன் தான்.

படிக்க தவறியவர்கள் படிக்க எனது முந்தையை 10 பதிவுகள்

Download templates

www.gnanalaya-tamil.com

Random Posts

லேபிள்கள்

நகைச்சுவை ( 383 ) அரசியல் ( 247 ) தமிழ்நாடு ( 136 ) இந்தியா ( 111 ) சிந்திக்க ( 91 ) பெண்கள் ( 90 ) அமெரிக்கா ( 81 ) ஜெயலலிதா ( 71 ) நக்கல் ( 55 ) தமிழன் ( 54 ) வெட்கக்கேடு ( 53 ) கலைஞர் ( 52 ) மனைவி ( 51 ) தலைவர்கள் ( 45 ) மோடி ( 43 ) தேர்தல் ( 40 ) கணவன் ( 38 ) தமிழர்கள் ( 38 ) தமிழ் ( 38 ) நையாண்டி ( 31 ) வீடியோ ( 31 ) திமுக ( 30 ) வாழ்க்கை ( 29 ) அனுபவம் ( 26 ) சமூக பிரச்சனை ( 25 ) செய்திகள் ( 25 ) போட்டோடூன் ( 25 ) ஆண்கள் ( 24 ) இந்தியன் ( 23 ) உபயோகமான தகவல்கள் ( 23 ) சமுகம் ( 23 ) எண்ணங்கள் ( 21 ) சட்டம் ( 20 ) பயனுள்ள தகவல்கள் ( 20 ) காதல் ( 19 ) கேள்விகள் ( 19 ) யோசிங்க ( 19 ) விகடன் ( 19 ) உணர்வுகள் ( 18 ) குடும்பம் ( 18 ) குழந்தை ( 18 ) மொக்கைகள் ( 18 ) புது தகவல்கள் ( 17 ) ஹெல்த் டிப்ஸ் ( 16 ) எஜுகேஷன் ( 15 ) ஸ்டாலின் ( 15 ) கேள்வி பதில் ( 14 ) சினிமா ( 14 ) அம்மா ( 13 ) சமுக சீரழிவு ( 13 ) ஜோக்ஸ் ( 13 ) தலைவன் ( 13 ) இழப்பு ( 12 ) எதிர்பார்ப்பு ( 12 ) எலக்சன் 2011 ( 12 ) காங்கிரஸ் ( 12 ) சுயநலவாதிகள் ( 12 ) பெண் ( 12 ) பேஸ்புக் ( 12 ) மகளிர் ( 12 ) மருத்துவம் ( 12 ) வாழ்க்கை அனுபவம் ( 12 ) விஜய் டிவி ( 12 ) வெட்ககேடு ( 12 ) வேதனை ( 12 ) ஹெல்த் ( 12 ) இளைஞர்கள் ( 11 ) எதிர்கால உலகம் ( 11 ) கல்வி ( 11 ) சந்தோஷம் ( 11 ) நல்ல சிந்தனை ( 11 ) மது ( 11 ) மரணம் ( 11 ) உடல் நலம் ( 10 ) குற்றம் ( 10 ) குழந்தை வளர்ப்பு ( 10 ) கொடுரம் ( 10 ) தகவல்கள் ( 10 ) நம்பிக்கை ( 10 ) படித்ததில் பிடித்தது ( 10 ) பதிவாளர்கள் ( 10 ) மொக்கை ( 10 ) விஜயகாந்த் ( 10 ) வெற்றி ( 10 ) உன்னால் முடியும்.... ( 9 ) காதலி ( 9 ) கிறுக்கல்கள் ( 9 ) குழந்தைகள் ( 9 ) சோகம் ( 9 ) டெக்னாலாஜி ( 9 ) தீபாவளி ( 9 ) நகைச்சுவைகள் ( 9 ) நட்பு ( 9 ) மாணவன் ( 9 ) ரஜினி ( 9 ) அதிமுக ( 8 ) அரசாங்கம் ( 8 ) ஆண் ( 8 ) இறப்பு ( 8 ) உணவு ( 8 ) எச்சரிக்கை ( 8 ) காமெடி ( 8 ) சாரு நிவேதிதா ( 8 ) ட்ரிங்ஸ் ( 8 ) தமிழகம் ( 8 ) பிஜேபி ( 8 ) பெற்றோர்கள் ( 8 ) வாழ்த்துக்கள் ( 8 ) Blogger ( 7 ) Drinks ( 7 ) vijay tv ( 7 ) அரசியல் களம் ( 7 ) அறிவியல் ( 7 ) இலங்கை ( 7 ) உங்களுக்கு தெரியுமா ( 7 ) உறவுகள் ( 7 ) என்றும் படிக்க புது புது தகவல்கள் ( 7 ) கட்சி ( 7 ) கார்டூன் ( 7 ) சக்தி வாய்ந்த நாடு ( 7 ) சாதனை ( 7 ) டிப்ஸ் ( 7 ) நக்கல்கள் ( 7 ) நடிகர்கள் ( 7 ) பாஸிடிவ் எண்ணம் ( 7 ) மனம் ( 7 ) வியக்கதக்க தகவல்கள் ( 7 ) 2014 ( 6 ) அன்பு ( 6 ) இல்லறம் ( 6 ) இளஞிகள் ( 6 ) உலகம் ( 6 ) கருணாநிதி ( 6 ) கருத்துக்கள் ( 6 ) கலைஞர் கடிதம் ( 6 ) கூட்டணி ( 6 ) கேள்வி பதில்கள் ( 6 ) சமையல் குறிப்பு ( 6 ) சிரிக்க ( 6 ) செக்ஸ் ( 6 ) தத்துவம் ( 6 ) துணிச்சல் ( 6 ) நீதி கதை ( 6 ) பெண்ணுரிமை ( 6 ) போலீஸ் ( 6 ) யூகச் செய்தி ( 6 ) விஞ்ஞானம் ( 6 ) Award ( 5 ) face book ( 5 ) அறியாமை ( 5 ) அழகிரி ( 5 ) அழகு ( 5 ) கடவுள் ( 5 ) கல்லூரி ( 5 ) கவிதை ( 5 ) கோயில்கள் ( 5 ) சினிமா உலகம் ( 5 ) சோஷியல் ( 5 ) தந்தையர் தினம் ( 5 ) தொழில் நுட்பம் ( 5 ) நண்பர்கள் ( 5 ) நிருபர் ( 5 ) பயணம் ( 5 ) பாதுகாப்பு ( 5 ) பாராட்டுகள் ( 5 ) மருத்துவ குறிப்பு ( 5 ) மெயில் பேக் ( 5 ) ரகசியம் ( 5 ) 2012 ( 4 ) 2015 ( 4 ) Anna Hazare ( 4 ) Educational ( 4 ) tamil joke ( 4 ) அப்துல் கலாம் ( 4 ) அப்பா ( 4 ) அழுகை ( 4 ) இறைவன் ( 4 ) இல்லறம் என்றும் இன்பமாக இருக்க? ( 4 ) உறவு ( 4 ) ஊழல் ( 4 ) கதை ( 4 ) கற்பழிப்பு ( 4 ) கலாச்சாரம் ( 4 ) கலைஞர் பாணி கேள்வி பதில்கள் ( 4 ) சமூகச் சீரழிவுகள் ( 4 ) சிந்தனை ( 4 ) சிறுகதை ( 4 ) சிறுவன் ( 4 ) டாக்டர் ( 4 ) டாஸ்மாக் ( 4 ) டிராவல் ( 4 ) தரமான பதிவுகள் ( 4 ) தினமலர் ( 4 ) தொழில்நுட்பம் ( 4 ) பதிவர் கூட்டம் ( 4 ) பதிவாளர் ( 4 ) பிரபலம் ( 4 ) பிறந்தநாள் ( 4 ) புதிய கண்டுபிடிப்பு ( 4 ) பொதுநலம் ( 4 ) மகளிர் மட்டும் ( 4 ) மகளிர்தினம் ( 4 ) விஜய்டிவி ( 4 ) விமர்சனம் ( 4 ) #jayalalithaa ( 3 ) 2016 ( 3 ) NRI ( 3 ) Rio Olympics ( 3 ) THE WHOLE TRUTH ( 3 ) Tamil tweets ( 3 ) best school ( 3 ) hurricane sandy ( 3 ) narendra modi ( 3 ) super singer ( 3 ) vikatan ( 3 ) அட்டாக் ( 3 ) அரிய புகைப்படங்கள் ( 3 ) ஆச்சிரியம் ( 3 ) ஆனந்தம் ( 3 ) இந்திய ராணுவம் ( 3 ) இல்லறம் இனிக்க உண்மையான அனுபவ ரகசியங்கள் ( 3 ) இளமை ( 3 ) உணர்வு ( 3 ) உண்மைகள் ( 3 ) எக்கானாமி ( 3 ) ஓ.....அமெரிக்கா ( 3 ) கலாய்ப்பு ( 3 ) கோபிநாத் ( 3 ) சிந்தனைகள் ( 3 ) சீனா ( 3 ) சுதந்திரம் ( 3 ) சென்னை ( 3 ) சேல்ஸ் ( 3 ) தமிழக அரசு ( 3 ) தமிழ் சமுகம் ( 3 ) தீபாவளி வாழ்த்து ( 3 ) தேர்தல் 2014 ( 3 ) நன்றி ( 3 ) நல்ல வலைத்தளங்கள் ( 3 ) நாட்டு நடப்பு ( 3 ) நீதி ( 3 ) நீயா நானா ( 3 ) படிக்க ( 3 ) பாசம் ( 3 ) பாதுகாப்பான உறவு ( 3 ) பெண்ணின் சாதனை ( 3 ) பொது மக்கள் ( 3 ) பொருளாதாரம் ( 3 ) போட்டோ ( 3 ) மஞ்சள் பத்திரிக்கை ( 3 ) மனவளம். ஆனந்தம் ( 3 ) மலர் ( 3 ) முயற்சி ( 3 ) ரிசல்ட் ( 3 ) ரெசிபி ( 3 ) வரலாறு ( 3 ) விஜய் ( 3 ) விருதுகள் ( 3 ) விற்பனை ( 3 ) வெள்ளம் ( 3 ) வேலைவாய்ப்பு ( 3 ) ஸ்கூல் ( 3 ) 2 G Scam ( 2 ) 2013 ( 2 ) 2014 தேர்தல் ( 2 ) 2016 தேர்தல் ( 2 ) 5 Star blogger award ( 2 ) Child Sexual Abuse ( 2 ) Dark Secret ( 2 ) New year ( 2 ) Social networking danger ( 2 ) U.A.E ( 2 ) Warning ( 2 ) apps ( 2 ) best tamil tweets ( 2 ) facebook ( 2 ) modi ( 2 ) sexual harassment ( 2 ) tamil ( 2 ) twitter ( 2 ) wife ( 2 ) அ.தி. மு.க ( 2 ) அனுபவம். இழப்பு ( 2 ) அன்னை ( 2 ) அன்புமணி ( 2 ) அமெரிக்கன் ( 2 ) அரசியல் கலாட்டா ( 2 ) அரசியல். நகைச்சுவை ( 2 ) அரசியல்.பிரச்சனை ( 2 ) ஆசிரியர்கள் ( 2 ) ஆணுறை ( 2 ) ஆப்பிள் நிறுவனம் ( 2 ) ஆல்கஹால் ( 2 ) இணையம் ( 2 ) இந்தியர் ( 2 ) இறப்பு செய்தி ( 2 ) இஸ்லாம் ( 2 ) உண்மை ( 2 ) உதவி ( 2 ) உளறல்கள் ( 2 ) எதிர்காலம் ( 2 ) எலக்சன் 2014 ( 2 ) ஒபாமா ( 2 ) ஓ...அமெரிக்கா ( 2 ) கடிதம் ( 2 ) கட்சிகள் ( 2 ) கனிமொழி ( 2 ) கார்டூன் அரசியல் ( 2 ) குடியரசு தினம் ( 2 ) குடும்ப நலம் ( 2 ) குற்றவாளி ( 2 ) கொலு ( 2 ) கோபம் ( 2 ) க்ரின்கார்டு ( 2 ) சரக்கு ( 2 ) சூப்பர் சிங்கர் ( 2 ) டில்லி ( 2 ) டிவிட்ஸ் ( 2 ) டுவிட்ஸ் ( 2 ) தமிழக அரசியல் ( 2 ) தமிழக தேர்தல் ( 2 ) தமிழக பயண அனுபவம் ( 2 ) தமிழிசை ( 2 ) தரம் ( 2 ) தலைப்பு செய்திகள் ( 2 ) திடங்கொண்டு போராடு – காதல் கடிதம் பரிசுப் போட்டி ( 2 ) தின தமிழ் செய்தி தாள் ( 2 ) தேமுதிக ( 2 ) தேவதை ( 2 ) தோல்வி ( 2 ) நல்ல செய்தி ( 2 ) நவராத்திரி ( 2 ) நெட்வொர்க் ( 2 ) நெல்லை ( 2 ) நையாண்டி.போட்டோடூன் ( 2 ) பகுத்தறிவு ( 2 ) பயனுள்ள இணைய தளங்கள் ( 2 ) பயனுள்ள தகவல் ( 2 ) பரிசுநல்ல சிந்தனை ( 2 ) பலாத்காரம் ( 2 ) பாஜக ( 2 ) பாமக ( 2 ) பிரதமர் ( 2 ) பிரார்த்தனை ( 2 ) புத்தகம் ( 2 ) பொங்கல் ( 2 ) மதன் ( 2 ) மதுரை ( 2 ) மனித உரிமைகழகம் ( 2 ) மலையாளி ( 2 ) மழை ( 2 ) மாணவர்கள் ( 2 ) முல்லை பெரியாறு ( 2 ) ரஜினிகாந்த் ( 2 ) ரெசிப்பி ( 2 ) லேகியம் ( 2 ) வருத்தம் ( 2 ) வாழ்த்து ( 2 ) விசா ( 2 ) விஜய்காந்த் ( 2 ) வைகோ ( 2 ) ஸ்ரீலங்கா ( 2 ) ஹிந்து ( 2 ) #Cauvery ( 1 ) #ChennaiFloods ( 1 ) #I-T ACT SECTION 66 A ( 1 ) #dmk fail ( 1 ) #modi ( 1 ) #olympic ( 1 ) 100 ( 1 ) 1000 ( 1 ) 2 million hits ( 1 ) 2011 Best Tamil Blog ( 1 ) 2014 லோக்சபா ( 1 ) 2014 லோக்சபா தேர்தல் ( 1 ) 2030 ( 1 ) Abortion ( 1 ) Ayurvedic Anti-Diabetic Medicine ( 1 ) Best jokes of the year 2013 ( 1 ) Cell ( 1 ) GK ( 1 ) Good news to be proud ( 1 ) Google ( 1 ) Hindu ( 1 ) Hindu Ritual ( 1 ) IAS ( 1 ) IIT ( 1 ) IPad ( 1 ) IPhone ( 1 ) ITouch ( 1 ) July 9th ( 1 ) Know Your English ( 1 ) Mangalyaan ( 1 ) Modern Mahatma ( 1 ) Modi .top American business leaders ( 1 ) NASA ( 1 ) NIPFA ( 1 ) New year Eve's spacial ( 1 ) One million ( 1 ) Perfect Mobile Plan ( 1 ) Telegram| ( 1 ) admk ( 1 ) alcohol ( 1 ) beep song ( 1 ) big ben london ( 1 ) black friday ( 1 ) blog post ( 1 ) book fair ( 1 ) chennai ( 1 ) clinton ( 1 ) comedians ( 1 ) dinamalar ( 1 ) dirty politics ( 1 ) diwali ( 1 ) dog ( 1 ) face book status ( 1 ) facebook theorem ( 1 ) fake news ( 1 ) famous facebook- ( 1 ) five star blogger award ( 1 ) flood ( 1 ) friendship ( 1 ) gopinath ( 1 ) greatest ( 1 ) heart touching ( 1 ) heart toucing ( 1 ) hits ( 1 ) humanity ( 1 ) ilayaraja ( 1 ) india ( 1 ) inhumane ( 1 ) ipod ( 1 ) joker ( 1 ) little girl ( 1 ) love ( 1 ) messaging app . mobile message | app l social messaging |டெக்னாலஜி|Technology ( 1 ) mobile phone ( 1 ) music ( 1 ) neeyaa naanaa ( 1 ) network ( 1 ) obama ( 1 ) oh..america ( 1 ) opinion ( 1 ) photos ( 1 ) poem ( 1 ) power cut ( 1 ) price ( 1 ) rape ( 1 ) sachin tendulkar ( 1 ) sandwiches ( 1 ) social ( 1 ) tamil bloggers meet ( 1 ) tamil blogspot ( 1 ) tamil eelam ( 1 ) telegram ( 1 ) tips ( 1 ) vijay ( 1 ) walmart ( 1 ) whatsapp . telegram app ( 1 ) wonderful ( 1 ) worlds heaviest man ( 1 ) அசோக் சக்ரா ( 1 ) அதிகாரி ( 1 ) அநாகரிகம் ( 1 ) அந்தரங்க அட்வைஸ் ( 1 ) அந்தரங்கம் ( 1 ) அனிமல் ( 1 ) அன்னையர் தினம் ( 1 ) அப்பாடக்கர் ( 1 ) அமலா பால் ( 1 ) அமெரிக்க போலீஸ் ( 1 ) அரசியல். சென்னை ( 1 ) அரசியல். தேர்தல் 2014 ( 1 ) அரசியல். நக்கல்கள் ( 1 ) அரசியல்.நையாண்டி ( 1 ) அரசியல்களம் ( 1 ) அரசியல்வாதிகள் ( 1 ) அரசு ( 1 ) அரசு திட்டம் ( 1 ) அரபுநாடு ( 1 ) அறிமுகம் ( 1 ) அறிவிப்பு ( 1 ) அறிவு ஜீவிகள் ( 1 ) அலை ( 1 ) அழைப்பிதழ் ( 1 ) அவார்டு ( 1 ) ஆகமவிதிகள் ( 1 ) ஆணையம் ( 1 ) ஆண்களை வசிகரிக்க ( 1 ) ஆன்மிகம் ( 1 ) ஆபிஸ் ( 1 ) ஆம் ஆத்மி ( 1 ) ஆயுத பூஜை ( 1 ) ஆராய்ச்சி ( 1 ) ஆல்ஹகால் ( 1 ) இத்தாலி ( 1 ) இந்திய கலாச்சாரம் ( 1 ) இந்திய கல்வி ( 1 ) இந்திய தூதரக விவகாரம் ( 1 ) இந்திய தூதர் ( 1 ) இராணுவம் ( 1 ) இலங்கை தமிழர் ( 1 ) இளைய சமுதாயம் ( 1 ) இஸ்லாமிய மக்கள் ( 1 ) ஈரோடு ( 1 ) உன்னால் முடியும் ( 1 ) ஊடகத்துறை ( 1 ) ஊடகம் ( 1 ) எக்ஸாம் ( 1 ) எம்.ஜி.ஆர் ( 1 ) எழுத்தாளர் ( 1 ) ஐபோன் ( 1 ) ஒலிம்பிக் 2012 ( 1 ) ஒலிம்பிக் 2016 ( 1 ) ஓட்டு ( 1 ) கசக்கும் உண்மை ( 1 ) கடல் ( 1 ) கணக்கு ( 1 ) கணவரை உங்கள் சொல்படி கேட்க வைப்பது எப்படி ( 1 ) கணினி ( 1 ) கண்டணம் ( 1 ) கண்ணீர் ( 1 ) கமல் ( 1 ) கரடி ( 1 ) கருத்து ( 1 ) கற்பனை ( 1 ) கற்பனை பதிவு ( 1 ) கலாய்த்தல் ( 1 ) கலைஞர் ஜோக்ஸ் ( 1 ) கல்யாணம் ( 1 ) கழுகார் ( 1 ) கவலை ( 1 ) கவிதைகள் ( 1 ) கார்ட்டூன் ( 1 ) கிச்சன் ( 1 ) கிறிஸ்துவ பாடல்கள் ( 1 ) குடி ( 1 ) குடியரசுதினம் ( 1 ) குடும்ப அரசியல் ( 1 ) குட்டுகள் ( 1 ) குமுதம் ( 1 ) குமுதம் ரிப்போர்ட்டர் ( 1 ) குறும்பு ( 1 ) குஷ்பு ( 1 ) குஷ்பூ ( 1 ) கூடங்குளம் ( 1 ) கேடுகெட்ட சிந்தனைகள் ( 1 ) கேரளா ( 1 ) கேலி ( 1 ) கேள்விபதில் ( 1 ) கைது ( 1 ) கொடுமை ( 1 ) கோயில் ( 1 ) கோலம் ( 1 ) சக்கேடா ( 1 ) சமுக அவலம் ( 1 ) சமுக சிரழிவு ( 1 ) சமுக வலைத்தளம் ( 1 ) சமுக விழிப்புணர்வு ( 1 ) சமுகப் பிரச்சனை ( 1 ) சமையல் ( 1 ) சமையல் அறை ( 1 ) சமையல் குறிப்பு. ரெசிப்பி ( 1 ) சிக்கல் ( 1 ) சிதம்பரம் ( 1 ) சிரழிவு ( 1 ) சிரிபு ( 1 ) சிரிப்பு ( 1 ) சிறுநீரில் கல்லா? ( 1 ) சிறை கோர்ட் ( 1 ) சு.சாமி ( 1 ) சுகம் ( 1 ) சுடும் உண்மைகள் ( 1 ) சுதந்திர தினம் ( 1 ) செக் ( 1 ) சென்னை பதிவர் கூட்டம் ( 1 ) சென்னை வெள்ளம் ( 1 ) செய்திகள். செக்ஸ் ( 1 ) செல்போன் ( 1 ) சேலை ( 1 ) சைனிஷ் ( 1 ) சொத்துகுவிப்பு ( 1 ) சோனியா ( 1 ) ஜப்பான் ( 1 ) ஜல்லிகட்டு ( 1 ) ஜி-மெயில் ( 1 ) ஜுனியர் விகடன் ( 1 ) ஜெயலலிதா! ( 1 ) ஜெயலலிதா. பா.ஜ.க ( 1 ) ஜெயலிதா ( 1 ) ஜெயாலலிதா ( 1 ) ஜெயில் ( 1 ) ஜெர்மன் ( 1 ) ஜோக்கர் ( 1 ) ஞாநி ( 1 ) ஞானாலயா ( 1 ) டான்ஸ் ( 1 ) டிவிட்டர் ( 1 ) டிவிட்டுகள் ( 1 ) டீவிட்டர் ( 1 ) ட்விட்டர்கள் ( 1 ) தங்கமான தமிழ் சங்கங்கள் ( 1 ) தடை ( 1 ) தண்டனை ( 1 ) தந்தை ( 1 ) தந்தையர்தினம் ( 1 ) தமிழக அரசியல் தலைவர்கள் ( 1 ) தமிழக் சட்டசபை ( 1 ) தமிழ் சினிமா ( 1 ) தமிழ்சமுகம் ( 1 ) தமிழ்தத்துவங்கள் ( 1 ) தமிழ்மணம் ( 1 ) தலைவர்கள் நக்கல் ( 1 ) தாஜ் மஹால் ( 1 ) தாய்ப்பால் ( 1 ) தாலி.பெண்கள் ( 1 ) தி.மு.க ( 1 ) திட்டுகள் ( 1 ) திருமணநாள் ( 1 ) திருமணம் ( 1 ) திரைத்துறை ( 1 ) திறமை ( 1 ) தீபாவளி மலர் ( 1 ) துக்ளக் ( 1 ) துண்டு பேப்பர் ( 1 ) துளிகள் ( 1 ) தேசபக்தி ( 1 ) தேர்தல் 2016 ( 1 ) தேர்தல் கமிஷன் ( 1 ) தேர்தல்களம் ( 1 ) தேவயானி கைது ( 1 ) தொடர்பதிவு ( 1 ) தொண்டன் ( 1 ) தொண்டர்கள் ( 1 ) தொழில்நுட்ப திருட்டு ( 1 ) நகராட்சி ( 1 ) நகைச்சுவை. போட்டோடூன் ( 1 ) நகைச்சுவை.கணவன் ( 1 ) நடிப்பு ( 1 ) நட்புக்கள் ( 1 ) நண்பன் ( 1 ) நண்பர் ( 1 ) நன்கொடை ( 1 ) நலஸ் செய்தி ( 1 ) நாடகம் ( 1 ) நாட்டு நடப்புகள் ( 1 ) நிகழ்ச்சிகள் ( 1 ) நிரிழிவு நோய் ( 1 ) நேசம் ( 1 ) நையாண்டி கார்டூன் ( 1 ) பகடி ( 1 ) பசி கொடுமை ( 1 ) பஞ்சாங்கங்ம் ( 1 ) பஞ்ச் டயலாக் ( 1 ) பட விமர்சனம் ( 1 ) பணம் ( 1 ) பதன்கோட் ( 1 ) பதில்கள் ( 1 ) பதிவர் ( 1 ) பதிவர் திருவிழா ( 1 ) பத்திரிக்கை ( 1 ) பத்ரி ( 1 ) பன்னீர் செல்வம் ( 1 ) பரிசு ( 1 ) பலாத்காரம். சூப்பர் சிங்கர் ( 1 ) பவர் ஸ்டார் ( 1 ) பா.ஜா.க ( 1 ) பா.ம.க ( 1 ) பாசிடிவ் செய்தி ( 1 ) பாசிடிவ் தகவல்கள் ( 1 ) பாசிடிவ் நீயூஸ் ( 1 ) பாடல் ( 1 ) பாராட்டுக்கள் ( 1 ) பாலியல் ( 1 ) பிரச்சனை ( 1 ) பிராமணன் ( 1 ) பிராமின் ( 1 ) பிரிவு ( 1 ) பீஹார் ( 1 ) புதிய கடவுள் ( 1 ) புது புது தகவல்கள் ( 1 ) புத்தக கண்காட்சி ( 1 ) புத்தாண்டு ( 1 ) பெண் பதிவர் ( 1 ) பெண் பார்க்கும் படலம் ( 1 ) பெற்றோர் ( 1 ) பேச்சு ( 1 ) பேட்டி ( 1 ) பேஸ்புக் ஸ்டேடஸ் ( 1 ) பைவ் ஸ்டார் ( 1 ) பைவ் ஸ்டார் ( 1 ) பொறாமை ( 1 ) போஸ்டர் ( 1 ) ப்ளாக்கர்ஸ் ( 1 ) ப்ளாக்கர்ஸ் டிப்ஸ் ( 1 ) மகாத்மா காந்தி ( 1 ) மக்கள் ( 1 ) மதநல்லிணக்கம் ( 1 ) மதம் ( 1 ) மதுபானம் ( 1 ) மதுரைத்தமிழன் ( 1 ) மதுவிலக்கு ( 1 ) மனதை தொடும் தகவல்கள் ( 1 ) மனதை நெகிழ வைக்கும் ( 1 ) மனவேதனை ( 1 ) மனிதன் ( 1 ) மனைவியை சந்தோஷப்படுத்துவது எப்படி? ( 1 ) மனைவியை மயக்க ( 1 ) மறைவு ( 1 ) மாப்பிள்ளை ( 1 ) மாற்றம் ( 1 ) மாற்று சிந்தனை ( 1 ) மீடியா ( 1 ) முதலாளிகள் ( 1 ) முதலைமைச்சர் ( 1 ) முத்தம் ( 1 ) முனிசிபால்டி ( 1 ) முரண்பாடு ( 1 ) மூளைக்கு வேலை ( 1 ) மூஸ்லிம் ( 1 ) மெக்ஸிகோ ( 1 ) மெட்ரோ ( 1 ) மெனோபாஸ் ( 1 ) மெளனம் ( 1 ) மேஜர் முகுந்த் ( 1 ) மேயர் ( 1 ) மைசூர் பாகு ( 1 ) மோசம் ( 1 ) மோடி. ( 1 ) மோடி. அரசியல் ( 1 ) யோகா ( 1 ) ரசிக்க ( 1 ) ரஜினி வடிவேலு ( 1 ) ரம்ஜான் ( 1 ) ராக்கெட் ( 1 ) ராஜா ( 1 ) ராமதாஸ் ( 1 ) லலித்மோடி ( 1 ) லொள்ளு ( 1 ) லோக்சபா தேர்தல் ( 1 ) வடை ( 1 ) வரதட்சணை ( 1 ) வலைத்தளம் ( 1 ) வழக்கு ( 1 ) வாழ்க்கை அனுபவங்கள் ( 1 ) வாழ்த்துக்கள். ( 1 ) வாழ்வு ( 1 ) விஜயகாந்த ( 1 ) விண்வெளி ( 1 ) விநாயக சதுர்த்தி ( 1 ) விபரிதம் ( 1 ) விபரீதங்கள் ( 1 ) விருது ( 1 ) விஸ்வரூபம் 2 ( 1 ) வீரமணி ( 1 ) வெடி ( 1 ) வெர்ஜினியா பீச் ( 1 ) வேட்டி ( 1 ) வேட்டையாடு ( 1 ) வேட்பாளர் ( 1 ) ஸ்டாக் மார்க்கெட் ( 1 ) ஸ்டாலின் கார்னர் ( 1 ) ஸ்டாலின். திருமணம் ( 1 ) ஸ்டேடஸ் ( 1 ) ஸ்பானிஷ் ( 1 ) ஸ்ரீரங்கம் ( 1 ) ஸ்வீட் ( 1 ) ஹாக்கிங் ( 1 ) ஹாலிவுட் ( 1 ) ஹிட் ( 1 ) ஹூயூமர் ( 1 ) ஹோமம் ( 1 ) ையாண்டி ( 1 )

Gadgets By Spice Up Your Blog