தமிழகத் திருடர்கள் பல விதம் ஓவ்வொன்றும் ஒரு விதம்
நான் சொல்லப் போகும் திருடர்கள் போலிஸை கண்டு பயப்பட மாட்டார்கள், போலீஸ்தான் இவர்களை கண்டு பயப்படும்.இந்த திருடர்களூக்கு நிறைய மக்கள் ஆதரவும் உண்டு. இந்த திருடர்கள் தான் திருடியதில் இருந்தது ஒரு சிறிய பங்கை இந்த மக்களுக்கு அவ்வப்போது பகிர்ந்து அளிப்பதுண்டு. அவர்களை வகைப் படுத்தி பார்ப்போம்.
குடும்பத் திருடர் : தன் குடும்பத்திற்காக திருடுபவர். கடின உழைப்பாளி சொல்லிலும் பேச்சிலும் எழுத்திலும் வல்லவர்.
பாசமலர் திருடர் : இவர் சகோதரியின் மேல் உள்ள பாசத்தால் திருடுபவர். இவரும் மிகச் சிறந்த அறிவாளி. இவர் குடும்பத்திருடர் திருடும் போது தான் திருட மாட்டார். ஆனால் குடும்பத்திருடர் என்ன திருடுகிறார் என்று அறிக்கை மட்டும் வெளியிடுபவர்.
கலக்கல் திருடர்கள் : இந்த திருடர்கள் குழுக்குள் பல சிறிய குழுக்கள் உண்டு. இவர்களுக்குள் யார் பெரியவன் என்பதிலேயே இவர்கள் காலம் கழிந்து விடும். ஆனால் தற்போது இவர்கள் குடும்பத் திருடர்களுடன் உறவு வைத்திருப்பவர்கள். இவர்கள் மத்த திருடர்கள் திருடுவதற்கு எப்போதுமே உதபுவர்கள். இவர்களின் உதவி மற்ற திருடர்களுக்கு அவசியம். இவர்களுக்கு நாய்க்கு ரொட்டி துண்டை தூக்கி போடுவது போல சிறிய பங்கை கொடுத்தால் போதும். இதனால்தான் என்னவோ பாசமலர் திருடர் இவர்களை குடும்பத் திருடர்களிடம் இருந்து பிரிக்க குசும்பு வேலைகள் செய்து வருகிறார்.
ஜாதியத் திருடர். இவர் தன் ஜாதிக்காக திருடுவதாக சொல்லி தன் மகனுக்காக திருடுபவர். இவர் ஸிசனுக்கு தகுந்தவாறு குரங்கு போல மற்ற குழுக்களிடம் இருப்பவர். இவரை மற்ற குழுக்கள் ஒதுக்கி வைத்துள்ளனர். அதனால் இவர் தன் பேச்சால் காமடி பண்ணிக் கொண்டிருக்கிறார்.
சிறிய குடும்பத் திருடர். இவர் குடும்பத்திருடரைப் போல, நாமும் அவரைப் போல வந்து விடவேண்டும் என்ற நினைப்பில் கையை சுட்டுக் கொண்டவர். இவர் தற்போது பாசமலர் திருடரிடம் நிறைய பங்கு வேண்டும் என்று தூது விட்டுக் கொண்டிருக்கிறார். இது இவரதுவின் வாழ்வா சாவா முயற்சி ஆகும். காணமல் போகும் வாய்புகள் இவருக்கு அதிகம்.
உணர்ச்சிகரத் திருடர். இவர் குடும்பத் திருடரிடம் இருந்து பிரிந்து வந்து தனியே திருட முயற்சி செய்து அதுவும் முடியாமல் பாசமலர் திருடரிடம் ஒட்டிக் கொண்டிருக்கிறார். இவரது குழுவில் உள்ளவர்கள் இவரை விட்டு வெளியே சென்றுக் கொண்டிருக்கின்றனர். தற்போது பாசமலர் குழுவோடு ஒன்றி விட்டார்.
ஹிந்துத்துவா திருடர்கள். ஹிந்து பெயரை சொல்லி திருட வந்தவர்கள். இவர்கள் இருக்கிறார்களா இல்லையா என்பது யாருக்கும் தெரியவில்லை.
அருவாள் சுத்தி திருடர்கள். இவர்கள் தங்களை திருடர்கள் என்று அறிவித்து கொண்டவர்கள். ஒன்றுக்கும் உதவாது குழு இது.
மனதைமட்டும் கொள்ளை கொள்ளும் திருடர் ; இவர் ஒரு முறை திருட வருபாதாக இருந்தது. என்ன காரணத்தினாலோ மனதை மாற்றிக் கொண்டார். நான் எப்போ வருவேன் என்று சொல்ல முடியாது ஆனால் நான் வர நினைத்தால் யாரும் என்னைத் தடுக்க முடியாது என்று சொல்லிக் கொண்டிருகிறார். இவருக்கு இப்போ குடும்பத் தலைவரிடம் நல்ல நட்பு மட்டும் உள்ளது. குடும்பத் தலைவர் போன் செய்து இந்த இடத்திற்கு வா என்று சொன்னாள் தவறாமல் வந்து விடுவார்.
ஆசைத் திருடர்.: இந்த திருடரைவிட இவர் அப்பாவிற்கு இவரைத் பெரியத் திருடனாக்கி விட வேண்டும் என்ற ஆசை. தனியாக குழு அமைக்கலாம அல்லது பெரிய குழுக்கள் கூட சேர்ந்து விடலாமா என்று தூங்காமல் குழம்பிக் கொண்டிருக்கிறார்.
இது போல பல சிறிய திருடர்கள் உள்ளனர்..
இந்த திருடர்களூக்கு எல்லாம் வரும் ஆண்டில் போட்டி உள்ளது. அதில் ஒரு குழுவை ஹிரோவாக தேர்ந்து எடுக்கும் பொறுப்பு நமது தமிழக மக்களிடம் கொடுக்கபட்டு உள்ளது.
யார் பெரிய திருடன் என்பது அடுத்த ஆண்டுதான் தெரியவரும்.
இதை படிக்கும் உங்களுக்கு எந்த திருடர் குழு வெற்றி பெறும் என்பது பற்றி ஐடியா ஏதும் இருந்தால் எனக்கு பின்னூட்டம் போடவும். அல்லது நீங்கள் எந்த திருடர் குழுவுக்கு ஓட்டு போடுவிர்கள் என்பதை தெரிவிக்கவும்.
பதிவு திருடர்கள் :பதிவுலகில் பதிவுகளை திருடுபவர்களை இந்த லிஸ்டில் சேர்க்கவில்லை. அதற்காக அவர்கள் வருத்தபட வேண்டாம்
இங்கே இணைக்க பட்டுள்ள படங்களூக்கும் இந்த திருடர் குழுக்களுக்கும் எந்த சம்பந்தம் இல்லை.....ஹீ ஹீ,,,,,ஹீ சும்மா அழகுக்குதான் போட்டுள்ளேன். என்ன இவங்க எல்லாம் அழகாக இருக்காங்களா? சொல்லுங்களேன்.....
அருவாள் சுத்தி திருடர்கள். இவர்கள் தங்களை திருடர்கள் என்று அறிவித்து கொண்டவர்கள். ஒன்றுக்கும் உதவாது குழு இது. //
ReplyDeleteஅவ்வ்வ்வ்வ்வமானப்படுத்திட்டீங்களே.. வழியே இல்லையா?..
யாரி பெரிய திருடன் என்பது அடுத்த ஆண்டுதான் தெரியவரும். //
ReplyDeleteவாழ்க திருடர்ஸ்..& திருடர்ஸை வாழ வைக்கும் மக்கள்ஸ்..
எப்பா?!!!!!!!!!!
ReplyDeleteஅழகா பிரிச்சு கடைசில படத்துக்கு பதிவுக்கும் சம்மந்தமில்லைன்னு சொல்லிட்டீங்களே....
நாங்களும் நம்பிட்டோம்
செம சேட்டை!!! :)
ReplyDeleteஅருவா சுத்தி.... மனசை மட்டும் கொள்ளை அடிக்கும் திருடர்.... இரண்டையுமே ரொம்ப ரசித்தேன்.. :)
தொடர்ந்து எழுதுங்கள் நண்பா... நானும் உங்களைத் தொடர்வதில் மகிழ்ச்சி கொள்கிறேன்.. :)