Thursday, December 30, 2010

செல்போனுக்கு மனது இருந்தால் பேசும்(கதறும்) வார்த்தைகள் (நகைச்சுவை)


மனிதனுக்கு மனசுன்னு ஒன்று உண்டு.(அப்படினு நாம நம்புறோம்) அப்பிடிப்பட்ட மனிதர்கள் தாங்கள் உயிராக நினைச்சுக்கிட்டிருக்கிற செல்போனுக்கு(Cell Phone) ஒரு மனசு இருந்தால்..அப்படி இருந்து அது ஒரு மனிதனிடம்.. மனம் விட்டு பேசினால் எப்படி இருக்கும்! என்ற நினைப்போடு படிக்கவும்

டி.டீங்க....டி.டீங்க....டி.டீங்க.. (மெசேஜ் ஒன்று வருகிறது.)

செல்போன் : என்னடா இது நிம்மதியா தூங்கவுடுறாங்களா.. அர்த்த ராத்திரியில யாருக்கு என்ன கொள்ளை போகுதுதோ தெரியல.. இந்த நேரத்துல என்ன மெசேஜ் வேண்டியிருக்கு? இப்ப இவன் எழுந்து பார்ப்பான். அப்புறம் விடிய விடிய சாட்தான். என்ன பொழப்புடா இது! ஆஹா எந்திரிசிட்டான்யா..எந்திரிசிட்டான்யா என்னை கையில் எடுத்துட்டானே... ஆஹா வொய்ப்தான் மெசேஜ் அனுப்பியிருக்கா!! இன்னும் கல்யாணமே ஆகல, அதுக்குள்ள லவ்வரு நம்பர "வொய்ப்ன்னு ஸ்டோர் பண்ணி வச்சிருக்கான். ஆமா என்ன அனுப்பியிருக்கா..?

"செல்லம் தூங்கிட்டியாடா?"

செல்போன் :அடிப்பாவி அர்த்தராத்திரி இரண்டு மணிக்கு தூங்காம மெகா சீரியலா பார்த்துகிட்டிருப்பாங்க! நல்ல கேள்விடா

ஆஹா பதில் அனுப்ப தொடங்கிட்டாண்யா தொடங்கிட்டாண் நம்மல இனி தூங்கவுடமாட்டாங்கயா

"ஆமா செல்லம் இப்ப தான் தூங்கினேன். நீ தான் கனவுல வந்த. இரண்டு பேரும் ஆஸ்திரேலியாவில் டூயட் பாடிக்கிட்டிருந்தோம்."

செல்போன்:டேய்,சத்தியமா சொல்லுடா உன் கனவில் அவளாடா வந்தா! காபி கடையிலிருந்து டாஸ்மார்க் வரை கடன் சொல்லி வாங்கின கடைக்காரர்கள் ,வாடகை வீட்டுகாரன்தானடா வந்தாரு! ஏன்டா என்னையும் பொய் சொல்ல வைக்குற.

.

டி.டீங்க....டி.டீங்க....டி.டீங்க...

செல்போன்:பதில் வந்துடுச்சுடா. அவ இவனுக்கு மேல படுத்துவாளே, என்ன சொல்லியிருக்கா!

"உன் கனவுல நான் என்ன கலர் டிரெஸ் போட்டிருந்தேன்?"

செல்போன் :ஆமாடி, இதுதான் இப்போ ரொம்ப முக்கியம்! என்ன டிரெஸ் போட்டிருந்த, பவுடர், உதட்டு சாயம் சரியா இருந்திச்சா!எல்லாம் வரிசையா கேளுங்க

" செல்லம், நீயும் நானும் வொய்ட் டிரெஸ் போட்டிருந்தோம். நீ தேவதை மாதிரி இருந்த.."

செல்போன்:டேய் நீ தேவதைய முன்னப் பின்ன பாத்திருக்கியாடா! வொய்ட் டிரெஸ்ல ரெண்டு பேரும் பேய் மாதிரி இருந்திருப்பீங்கடா!

செல்லம் நீ இன்னைக்கி வழக்கத்தை விட ரொம்ப அழகா இருந்தடி!

செல்போன்:ஆமாம் இன்னிக்கிதான் அவதலைக்கு குளிச்சா அதனலாதான் ஏதோ பாக்க அழகா இருக்கிற மாதிரி இருக்கா அவ மாதத்திற்கு ஒரு முறை தலைக்கு குளிப்பாங்கிறது உனக்கு இன்னும் தெரியாதடா டேய் ஸ்டாப் பண்ணுங்கடா வாயில ஏதாவது வரப் போகுது.

அவ என்னமோ அடிக்க ஆரம்பிச்சுட்டாலே இன்னிக்கு சிவராத்திரிதான் நமக்கு

டி.டீங்க....டி.டீங்க....டி.டீங்க..

நீங்க கூடத்தான் இன்று ரஜினி மாதிரி அழகா இருந்தீங்க..

செல்போன்:பாத்தியா உனக்கு வயசு ஆயிடுத்துன்னு சொல்லாம சொல்லுராடா உனக்கு எங்க இது எல்லாம் புரியப் போதுடா அது மட்டுமல்லாமல் நீ இரவல் வாங்கி போட்ட டிரெஸ் அவளூக்கு எங்க தெரியப் போகுதுடா. ஏண்டா உங்களுக்கு இப்படி பொய் சொல்லுரத தவிர வேறு ஏதும் தெரியாதா?

இவன் என்ன டைப் பண்ண ஆரம்பிச்சுட்டான்

டி.டீங்க....டி.டீங்க....டி.டீங்க..

நன்றி செல்லம். எனக்கு ஒரு நாள் உன் கையால சமைச்சு சாப்பிடனும் ஆசை. எனக்கு சமைச்சு போடுவியா செல்லம்?

செல்போன்:டேய் ஏன்டா இந்த விபரீத ஆசை. அவ சமைச்சா பத்திய சாப்பாடு சாப்பிட்ட மாதிரி இருக்குமடா உப்பு உரப்பு புளிப்பு ஒன்னும் இருக்காதுடா ஏனா அவளுக்கு சமைக்க தெரியாதுடா

டி.டீங்க....டி.டீங்க....டி.டீங்க.

செல்போன்:அவ ஏதோ பதில் அனுப்பி இருக்காளே என்னனு பார்ப்போம் தூக்கம் போனது போச்சி இந்த கண்ராவிய பார்த்து தொலைக்க வேண்டியிருக்கிறது

கண்ணா கண்டிப்பா ஒரு நாள் உங்களுக்கு சமைச்சு போடுறேன்.

செல்போன்:பாரு அவ புத்திசாலிடா ஒரு நாள் மட்டும்தான் சமைச்சு போடுவேன் என்று இப்போதே கூறிவிட்டாள்.அது மட்டும்மல்ல அந்த சாப்பாட்டை சாப்பிட்ட பிறகு உனக்கு சாப்பாடு என்றாலே பிடிக்காமல் போய்யிடும்டா அதுக்கு அப்புறம் சாப்பிடனும் ஆசை வந்தா ஹோட்டல் சாப்பாட்டுக்கு ரெடியாகிக்கோ

"டேய் என்செல்ல புருஷா.. எனக்கு தூக்கம் வர மாட்டீங்குதடா! நா என்ன பண்ணடா நாயே?

"

செல்போன்:ஆங்.. நல்லா வாயில வருது. ஏதாவது சொல்லிப்புடுவேன். உடம்பு, கீடம்புபேல்லாம் வலிக்குதுடா சாமி! பேயெல்லாம் பிஸியா அலையற நேரத்துல என்னடா ரொமான்ஸ் வேண்டிக் கிடக்கு.. அடங்குங்கடா!அடங்குங்கடா!

"என் பேரை மந்திரம் மாதிரி சொல்லிக்கிட்டே கண்ணை மூடி தியானம் பண்ணு. அப்படியே தூங்கிடுவ! அப்புறமா உன் கனவுல வந்து உன்னை நான் தாலாட்டுவேன். உம்ம்ம்ம்ம்மா!"

செல்போன்:அடச்சீ.. தூ.. எச்சி எச்சி! உம்மான்னு அடிச்சா போதாதாடா.. அந்த இழவை எனக்கு வேற கொடுக்கணுமா, கருமம் கருமம். ஆமா என்ன சொன்ன உன் பேரை மந்திரம் மாதிரி சொல்லணுமா, உனக்கே இது ஓவராத் தெரியல. மவனே அதெல்லாம் சொன்னா தூக்கம் வராதுடா, உன்னால அப்பங்கிட்ட செறுப்பு அடிதாண்டா கிடைச்சதுன்னு மெசஜ்தாண்டா வரும் லூசுப்பயல! இதுக்கு அந்த மடச்சி என்ன அனுப்புறான்னு பார்ப்போம்.

" ஏய், எனக்கு உன் பேரைச் சொன்னா தூக்கம் வரல, வெட்கம் வெட்கமா வருது!"

செல்போன்:எனக்கு வேதனை வேதனையா வருதுடா. எப்படா தூங்குவீங்க! தினமும் இதே தலை வேதனையாப் போச்சு! 'கண்ணை படைத்து பெண்ணை படைத்த இறைவனை விட செல்லைப் படைத்து இலவச எஸ்.எம்.எஸ்ஸை படைத்த மனுசன் தான் கொடியவன்'


போன ஜென்மத்துல ஆந்தையா இருந்துருப்பாங்க போல!

"செல்லம், என்னை உனக்கு எவ்வளவு பிடிக்கும்?"

" நம்ம தமிழக அமைச்சர் ராஜா பண்ண ஸ்பெக்ட்ரம் ஊழலைவிட அதிகமாப் பிடிக்கும். என்னை உனக்கு எவ்வளவுடா பிடிக்கும்?"

செல்போன்:கடன்காரி, உதாரணம் சொல்ல வேற விஷயமே கிடைக்கலையா, நம்மாளு என்ன சொல்லுறான்னு பார்ப்போம்.

" .முதல் ப்ளாக், முதல் பதிவு, முதல் கமெண்ட்ஸ் முதல் செல், முதல் காதல்... இதையெல்லாம் யாராவது எவ்வளவு பிடிக்கும்னு அளந்து சொல்ல முடியுமாடி! நீதான் என் முதல் காதல்"

செல்போன்:டேய் அளக்காதடா! நீ அண்ட புழுகு பண்றேடா ரெண்டு மாசத்துக்கு முன்னாடி இன்னொரு நம்பருக்கும் இதே மெசேஜைத் தான நீ அனுப்புன. அதை அதுக்குள்ள மறந்துட்டியாடா ...நடத்து,நடத்து ! எனக்கு மட்டும் உண்மையை அனுப்புற சக்தி இருந்தா மவனே செத்தடா நீ!

(சிறிது நேரம் கழித்து, அந்த இளைஞன் இருபதாவது முறையாக குட்நைட் சொல்லிவிட்டு 'சாட்'டை முடிக்கிறான்.)

செல்போன்:முடிச்சிட்டாங்களா! என்னது இவன் திருப்பி எதோ நோண்டுறான். ஓ.. என்னை எழுப்பச் சொல்லி அலாரம் வக்கப் போறானா.. எத்தனை மணிக்கு? அடப்பாவி உலகத்துலயே பகல் பன்னிரெண்டு மணிக்கு அலாரம் வைச்சு எந்திரிக்கிற ஒரே ஜீவராசி நீதாண்டா! அதுவரைக்கும் 'வொய்ப்' திருப்பி 'சாட்'டுக்கு வராம இருந்தா சரிதான்.

(காலை பதினொரு மணி..)

செல்போன்:அட என்னமோ குறுகுறுங்குதே.. ஓ எதோ ரிமைன்டர் செட் பண்ணி வச்சிருக்கான்.

" இன்று திங்கள்கிழமை குளிக்க வேண்டும்."

செல்போன்:அட நாத்தம் புடிச்சவனே! ரிமைன்டர் சிஸ்டத்தை கண்டுபிடிச்சவருக்கு இந்த விஷயம்

தெரிஞ்சா 'ஏன்டா இப்படி ஒரு சிஸ்டத்தைக் கண்டுபிடிச்சோம்'னு தன்னைத் தானே அடிச்சுக்குவான்.விட்டா எதுக்கெல்லாம் ரிமைன்டர் வைப்பிங்கடா ! டேய் எவ்வளவு நேரம் தாண்டா கத்துறது. தொண்டை வலிக்குது.எழுந்திரிச்சுத் தொலைடாண்டா நாத்தம் பிடிச்சவனே. அடப்பாவி ரிமைன்டரை ஆப் பண்ணிட்டு தூங்க ஆரம்பிச்சுட்டானே! அப்ப இன்னிக்கும் குளிக்க மாட்டான் போல!

டேய் நீ குளிக்க வேண்டாம்டா! டேய் என்னை கொஞ்சமாவது கவனிடா....எனக்கு தீனி போடுடா. பேட்டரில சார்ஜ் தீரப்போதுடா! சார்ஜ்ர்ல போடுறா! டேய் உன்னைதாண்டா இவன் காதுல எங்க விழப்போகுது. சோம்பேறி!

(அரை மணி நேரம் கழித்து, இன்கம்மிங் கால் வருகிறது.)

'ஆசையினாலே மணம்...ஒஹோ அஞ்சுது கெஞ்சுது தினம்..'(ரிங்க்டோன் ஒலிக்கிறது)

செல்போன்:அவனவன் என்னன்னமோ லேட்டஸ்ட் டோன் வைச்சு அசத்திக்கிட்டிருக்கான். கஞ்சப் பய! ரிங்டோனைப் பாரு. ஆசையினாலே மணம்...ஒஹோ அஞ்சுது கெஞ்சுது தினமுனுட்டு. டேய் போனை எடுடா, யாரோ கூப்பிடுறாங்க! அப்பாடா எந்திரிச்சிட்டான்யா....எந்திரிச்சிட்டான்யா

"ஹலோ.. ஆங்.. குட் மார்னிங் சார்.. கண்டிப்பா..சார் இன்னிக்கு கண்டிப்பா முடிச்சி கொடுத்திரலாம் சார்.. இல்ல சார்.. ஆமா சார கொஞ்சம் பிஸி தான்சார்.. ஒரு மீட்டிங்ல இருக்கேன்.. ப்ளீஸ் அப்புறமா பேசலாம் சார். ஓ.கே சார் நன்றி சார்......

செல்போன்:தலையெழுத்து இவன் பண்ணுற கூத்துக்கெல்லாம் நாமளும் உடந்தையா இருக்க வேண்டியிருக்கே! மணி பன்னிரெண்டு ஆக இன்னும் 5 செகண்டுதான் இருக்கு.

அலாரமா அலறக்கூட என் உடம்புல சக்தியே இல்ல! நீ தூங்கிக்கிட்டே இரு.

நானும் தூ..ங்.....கு.......

(செல் சார்ஜ் இல்லாமல் டெட் ஆகிவிட்டது.)

எனக்கு இமெயிலில் வந்த சிறிய ஜோக்கை அழகிய சிற்பம் போல அழகாக எனது பாணியில் வடித்து கொடுத்துள்ளேன். பிடித்தால் படித்து ரசித்து கமெண்ட்ஸ் போடவும் . உங்களுக்கு பிடிக்கவில்லை என்றால் உங்கள் லேப் டாப்பை குப்பை தொட்டியில் தூக்கி போட்டு வேறு உருப்படியான வேலையை பார்க்க்கவும் அதுவும் இல்லையென்றால் சீரியல் பார்த்து அழுது கொண்டிருக்கவும்.

எனது தமிழை படித்து உங்களுக்கு இங்கிலீஷ் மறந்து போக கூடாது என்பதால் நான் படித்து வயிரு குலுங்க சிரித்த ஜோக்கை உங்களுக்கு அப்படியே தந்துள்ளேன்.

Jackson was moving towards California. On his way to the city, he stopped at a local market and went to the washroom. The first stall was taken, so he went in the second stall.

Soon, he heard a voice from the next stall... "Hi there, how is it going?"

That was okay, but Jackson was not a person to strike conversations with strangers in washrooms on the side of the road.

He did not know what to say, but he awkwardly said, "Not bad..."

Then the voice said: "So, what are you doing?"

Jackson thought that a bit weird, but said, "Well, I'm going back to California..."

Then, he heard the person say: "Look I'll call you back. Every time I ask you a question, this idiot in the next stall answers me."



எனது இணைய நண்பர்களூக்கும் , சக தமிழ் ப்ளாக்கர்& பதிவாளர்களூக்கும் எனது பதிவுகளை வந்து படித்து விட்டு கமெண்ட்ஸ் போடாமல் போகிறவர்களுக்கும் மற்றும் Anonymous -க வந்து கமெண்ட்ஸ் போடுபவர்களுக்கும் எனது இதயங்கனிந்த (2011) புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்

இந்த இனிய நன்நாளில் நீங்கள் ஆசைப்பட்ட, நம்பிக்கையுடன் எதிர்பார்த்த & இறைவனிடம் வேண்டிய எல்லாம் உங்களூக்கு வருகிற புத்தாண்டில் கிடைக்க வேண்டுமென்று மனதார வாழ்த்துவதுடன் மட்டும்மல்லாமல் இறைவனிடமும் வேண்டிக்கொள்கிறேன். வாழ்க வளமுடன்

அன்புடன்,

3 comments:

  1. பதிவு அருமை. இனிய அகிலத்துப் புத்தாண்டு வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  2. wow...அட்டகாசமான பதிவு!! ரொம்பவே நகைச்சுவையா அழகான சிற்பமாக செதுக்கி இருக்கீங்க..ரொம்ப மெனக்கெட்டு இருக்கீங்க...ரொம்ப நல்லா வந்திருக்கு இந்த போஸ்ட்...அந்த பழங்களையும் நான் எடுத்துகிட்டேன்..நன்றி..:))) Happy Newyear:)))

    ReplyDelete
  3. அரசியல்வாதிகள், ரஜினி புகைப்படம் காலத்துக்கு ஏற்றார்போல் உள்ளது இரசித்தேன்.

    ReplyDelete

நான் அறிவு ஜீவி அல்ல ஒரு சாதாரணமான் மனிதன் தான்.இங்கு நான் பதியும் பதிவுகளில் உள்ள கருத்துகள் "மிகவும் சரி"யென்று சொல்லமாட்டேன் அது அன்றைய மனநிலையில் என் மனதில் எழும் கருத்துகளே...அதனால் உங்களது மனசுலபட்ட மாற்று கருத்துகளை தாராளமாக பகிரலாம். ஆனால் தேவையற்ற, வரம்புமீரிய, அநாகரிகமான வார்த்தைகளாலும் பதிவிற்கு சம்பந்தமில்லாமல் கருத்துக்கள் சொல்லப்பட்டால் எந்த வித பதில் விளக்கமின்றி அந்த கருத்து டெலீட் செய்யப்படும்.