அண்டர் கிரெவுண்ட பார்க்கிங் - அற்புத ஐடியா
UK - வில் உள்ள Cardock என்ற கம்பெனியின் அற்புத ஐடியா உலகின் நெரிசல் மிகுந்த நகரங்களுக்கு இது ஒரு வரப் பிரசாதம். இடப் பற்றாக்குறை , பாதுகாப்பாக வைக்க வேண்டுமென்பவர்களுக்கு மிகவும் கை கொடுக்கும் அற்புத ஐடியா.ஓன்றுக்கு மேல ஓன்றாக காரை நிப்பாட்டலாம். இது எலக்ரானிக் ஹைராலிக் சிஸ்டம் மூலம் இயக்கப்படுகிறது. இதில் உள்ள கார் நிறுத்து ப்ளாட்பாரம் மேலும் கீழும் செல்லுமாறு அமைக்கபட்டுள்ளது. இது 3 டன் வெயிட் தாங்கும் திறன் படைத்தது. ஓன்றுக்கு மேற்பட்ட கார் வைத்தவர்களூக்கு வரப்பிரசாதம். லண்டனில் பல வசதி படைத்த வீடுகளில் இது வடிவமைக்கபட்டு நடை முறையில் உள்ளது.
இதற்கான படங்களை கீழே காணலாம். அது எப்படி இயங்குகிறது என்பதை பார்க்க கீழேயுள்ள விடியோ க்ளிப்பை பார்க்கவும்.
என்னிடம் ஒரு காரும் வேனும் உள்ளது ஆனால் ஒரு கார் காராஜ்தான் உள்ளது. அதை இங்குள்ள அமெரிக்க மக்கள் போல ஸ்டோரும் போலதான் யூஸ் பண்ணுகிறேன். அதனால் இடப் பற்றாக்குறையால் காரை என் வீட்டில் உள்ள டிரைவ்வேயில் தான் நிறுத்துகிறேன். அதனால் வசதி படைத்த தமிழ்பதிவாளர்கள் உதவினால் அவர்கள் பெயரை அந்த காராஜுக்கு சூட்டி உபயம் என்று அவர்கள் பெயரை கொட்டை எழுத்தில் போடுகிறேன். அப்படி உங்களால் முடியவில்லை என்றால் முன்னால் அமைச்சர் ராசாவிடம் சொல்லி ஏற்பாடு செய்யுங்கள் அவர் அடித்த பணத்தையும் அதில் ஒளித்து வைக்க அனுமதி வழங்குகிறேன்.
புதுமையான தகவல் நண்பரே பகிர்வுக்கு நன்றி . கார் திருடர்கள் இது போன்ற இடங்களில் இருந்து திருடுவது சாத்தியமற்ற ஒன்று . அருமை .
ReplyDelete